
டீசல் விமர்சனம் | Diesel review
பார்க்கிங், லப்பர் பந்து முதலிய வெற்றிப்படங்களை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'டீசல்' ஆகும். இயக்குநர் சண்முகம் முத்துசாமி கச்சா எண்ணெய் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான விஷயங்களை விவாத்துள்ளர்.
சென்னை கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவ கிராமங்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் சில விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. நாயகன் ஹரிஷ் கல்யாணும், அவரது வளர்ப்பு தந்தை சாய்குமாரும் கச்சா எண்ணெய் கடத்தல் தொழிலில் கிங்-பின்னாக இருக்கிறார்கள். அவர்களது ஆதிக்கத்தைப் பிடிக்காத இன்னொரு கோஷ்டி அந்தத் தொழிலைக் கைப்பற்ற காவலதிகாரி வினய் உதவியுடன் இயங்குகிறது. அதே நேரம் கார்ப்பரேட் முதலாளி ஒரு தனியார் துறைமுகம் ஒன்றை அமைக்க காய் நகர்த்துகிறார். இந்தச் சூழலில் மீனவர்கள் நிலை என்ன ஆனது, அவர்கள் வாழ்வாதாரம் என்ன ஆனது, கார்ப்பரேட் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதா போன்ற கேள்விகள...














