32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

தினேஷ் ராம்

98 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 6 / 7
செய்திகள் வரிசை (பக்கம் 6)
ஒரு விஞ்ஞானியின் சீற்றம் கட்டுரை

ஒரு விஞ்ஞானியின் சீற்றம்

உலக விஞ்ஞானிகள், மாவட்ட ஆட்சியர், பத்திரிக்கை ஆசிரியர்கள் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. சகட்டு மேனிக்கு அனைவரையும் டா, டோய் என தான் உரிமையாக அழைப்பார். உப்பைக் கடலில் இருந்து எடுத்தால் தான் உலகத்தைக் காப்பாற்ற முடியும்; விழித்துக் கொள்ளுங்கள் என களப்பணியில் இருப்பவர். அவர் இந்த உலகிற்கு ஏதோ சொல்ல வர்றார் என தமிழ்ப் பேசும் நல்லுலகம் பயன்படுத்தும் கூகிள் பஸ்சின் மூலை முடுக்கெல்லாம் ஒரே பரபரப்பு. சமீபமாக வந்த ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் ஆழிப் […]

19/04/2011 Dinesh R
மாயப் புன்னகை கதை

மாயப் புன்னகை

தர்மம் தன் இயல்பை மறைத்து கோப வேடத்தினை அணியத் தெரியாமல் அணிந்தது போலிருந்தது. எதிரில் நிற்கும் தர்மனைப் பார்க்கவே கர்ணனுக்கு வேடிக்கையாக இருந்தது. பரிதாபமாகவும் இருந்தது. இன்றே சண்டையை முடித்து விடும் தீவிரத்துடன் தர்மர் தன்னுடன் போர் புரிய ஆயுத்தமாவது போல் கர்ணனுக்குத் தோன்றியது. ஆனால் கர்ணன் மனதில் அன்று ஏனோ இனம் புரியா சோர்வு. பதினாறே நாட்களில் கணக்கில்லா இழப்புகள். பீஷ்மர், துரோனர் போன்ற உத்தம மகா வீரர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அநாவசியமாக […]

18/03/2011 Dinesh R
கி.பி.5 கதை

கி.பி.5

கி.பி.4 கிருஷ்ணப்பிள்ளை, அவரது மனைவி, அவரது மருமகள் மூவரும் தொலைக்காட்சியில் ஆர்வமாக மதிய உணவினையும் மறந்து தொடர் ஒன்றினை பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களைத் தவிர, நான்காவதாக ஒருவரும் யாருக்கும் தெரியாமல் தொலைக்காட்சியைப் பார்த்தார். அது தொட்டிலில் இருந்த கிருஷ்ணப்பிள்ளையின் பேத்தி. கால்களால் நெம்பி நெம்பி தலையை மட்டும் வெளியில் நீட்டி பார்த்துக் கொண்டிருந்தது. கருவில் இருக்கும் பொழுதே அத்தொடரின் கதாநாயகியோட வேதனையும், போராட்டமும் குழந்தைக்குத் தெரியும். பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்த பொழுது கூட, அறையில் இருந்த தொலைக்காட்சியில் […]

24/02/2011 Dinesh R
கி.பி.3 கதை

கி.பி.3

கி.பி.2 மதர் தெரசாவின் சேவையை பாராட்டி செய்தி தாளில் ஒரு நினைவு கட்டுரை வெளிவந்திருந்தது. கிருஷ்ணப்பிள்ளை தமது வாழ்க்கையை அந்தப் புண்ணிய ஆத்மாவோடு ஒப்பிட்டுப் பார்த்தார். இதுவரை சமூகத்திற்கென ஒரு நல்லது கூட செய்ததில்லை என்ற உண்மை, பெரும் குற்ற உணர்ச்சியாக மாறி கிருஷ்ணப்பிள்ளையை போட்டு வாட்டியது. இனிமேல் தினமும் நாட்டிற்கோ, சமூகத்திற்கோ ஒரு நல்லதாவது செய்து விட வேண்டுமென சபதம் மேற்கொண்டார். அன்று மாலை காலார நடந்துக் கொண்டிருக்கும் பொழுது, சாலையோர மரத்தடியில் நோய்வாய்ப்பட்ட நொண்டி […]

24/02/2011 Dinesh R
கி.பி.2 கதை

கி.பி.2

கி.பி.1 எவ்வளவு முயன்றாலும் கிருஷ்ணப்பிள்ளைக்கு நாட்கள் திருப்திக்கரமாக நகர்வதாக இல்லை. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை எனினும், புத்தகம் உற்ற துணை என்று கேள்விப்பட்டிருக்கார். எப்படிப்பட்ட புத்தங்களைப் படிக்கலாம் என்று கிருஷ்ணப்பிள்ளை ஆழ்ந்து யோசித்து, தனது வயதிற்கு ஆன்மீக புத்தகம் தான் சரி என்று முடிவு செய்தார். வீட்டுப் பரணையிலிருந்து அவர் தந்தை உபயோகித்திருந்த ‘அத்வைதம்’ என்னும் புத்தகத்தை தூசி தட்டி எடுத்தார். அனைவரும் கடவுள் என்ற அத்வைத கொள்கை கிருஷ்ணப்பிள்ளைக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்தக் […]

24/02/2011 Dinesh R
சூது கவ்வும் கதை

சூது கவ்வும்

குருஷேத்ரப் போர் முடிந்து விட்டது. தர்மருக்கு முடி சூட்டி விட்டனர். ஆனால் அந்த வெற்றி அவரை நாளுக்கு நாள் சோர்வுடையச் செய்கிறது. இந்தப் பாழும் பதவிக்காக இத்தனை கொலைகள் என்று மனம் ஒடிகிறார். முன்பு தர்மர் துவளும் பொழுது எல்லாம் தன் தோளில் சாய்த்துக் கொண்டு ஆறுதல் சொல்ல விதுரர் இருந்தார். ஆனால் இன்று அவர் இல்லை. தர்மர் மனதில் அமைதியும் இல்லை. திசைகள் நான்கினையும் கலங்கிய கண்களோடு கைகூப்பி, ‘என் சிற்றப்பா அவ்விடம் உள்ளரா?’ என […]

18/11/2010 Dinesh R
மேற்கு கதை

மேற்கு

‘ஏன் நீ வேலைய விடக் கூடாதா?’ ஜான்சனிற்கு ஒன்றரை வயது இன்னும் முழுமையாக ஆகவில்லை, ஆனால் அவன் உடைத்த பொருட்களின் விலை ஒன்றை லட்சத்தை தாண்டியது. ஜெனிலியா இதற்காகவே அலுவலக விடுமுறையை ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்க வேண்டியதாகி விட்டது. ஜேம்ஸ் எவ்வளவோ சொல்லியும் ஜெனிலியா வேலையை விட சம்மதிக்கவில்லை.  “இனிமே நீ வேலைக்கு போலாம்.” அமெரிக்காவில் பிரபலமாகி வரும் ‘மிஸ்டர். மாம்’ கலாச்சாரத்திற்கு ஜேம்சும் மாறி விட்டான். கட்டாய ஓய்வினை வாங்கிக் கொண்டு ஜான்சனை நேருக்கு […]

02/11/2010 Dinesh R
கெளரி வீட்டு பஞ்சாங்கம் கதை

கெளரி வீட்டு பஞ்சாங்கம்

“எங்க வச்சேள்?” சோமு ஐயர் தன் வீட்டில் உள்ளவர்களிடம் ஆயிரம் தடவைக்கு மேல் இந்த கேள்வியை கேட்டு விட்டார். ஆனால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் ஊர் தலைவர் முருகேச முதலியாரிடம் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தார் ஐயர். இரண்டு நாட்களாக முருகேச முதலியார் ஐயர் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார். “நம்பிக்கிட்ட புதுசு வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன். புதன்கிழமை வந்துடும்” என்றார் ஐயர். “ஆனா.. பெளர்ணமி செவ்வாய்கிழமை தானே!” சில […]

22/10/2010 Dinesh R
திருடி – சவால் சிறுகதை கதை

திருடி – சவால் சிறுகதை

காமினி. எந்த தேவதைகளாலும் ஆசிர்வதிக்கப் படவில்லை. ஆனால் அனைத்து சாத்தான்களாலும் சபிக்கப்பட்டவள். அவளைப் பற்றி முதலில் கேள்விபடுபவர்கள் அப்படி தான் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் பார்த்து பழகினால் தான் தெரியும் காமினியே ஒரு தேவதை என்று. அப்படி காமினி ஒரு தேவதை என அவளை நம்ப வைக்க அவளின் தாத்தா பரந்தாமன் கடந்த ஐந்து வருடங்களாக முயன்று வருகிறார். ஆனால் கடந்த ஐந்த நாட்களாக அவர் மருத்துவமனையில் தன்னிலை இழந்து சிகிச்சை பெற்று வருகிறார். பரந்தாமன் மருத்துவமனைக்கு […]

14/10/2010 Dinesh R
அவன் கதை

அவன்

இராஜ வீதிக்காரர்கள் உண்மையிலேயே அப்படியொரு முடிவுக்கு வந்திருப்பார்கள் என நினைத்துப் பார்க்கவே அவனால் முடியவில்லை. அதை நினைக்க நினைக்க அவனுக்கு இரத்தம் கொதித்தது. வேறேதாவது காரணத்திற்காக இம்முடிவு எடுக்கப் பெற்றிருந்தால், அவனே முன்னின்று தலையைக் கொடுத்தாவது செய்து முடித்திருப்பான். “ஆயிரத்தி தொள்ளாயிரத்தி பதினொன்னு” என்று கண்களை மூடியவாறே எண்ணிக் கொண்டிருந்தான். தூக்கம் வருவதாக இல்லை. ‘பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த கீழ் வகுப்புப் பெண்ணை அவர்கள் வீதி வழியாக அழைத்து சென்றதற்காக கலெக்டர் ஆஷ் துரையை கொல்லப் […]

04/10/2010 Dinesh R
பூக்காரி கதை

பூக்காரி

“பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம்..” “ஆமாங்க” “தர்ம சம்ஸ்தா பனார்த்தாய சம்பவாமி யுகே!! யுகே!!” “சரி தானுங்க.” “என்ன சரி?” “நீங்க சொல்றதுங்க.” “நான் சொன்னதுக்கு அர்த்தம் தெரியுமா?” “தெரியாதுங்க.” “அப்புறம் ஏன் சரின்னு சொன்னே!!” “நீங்க எது சொன்னாலும் சரியா தான் இருக்குமுங்க.” “இது தான் நம்மகிட்ட இருக்கிற தவறான போக்கு. எதையும் கேள்வி கேட்கனும். எதுவா இருந்தாலும் தீர விசாரிக்கனும். அப்ப தான் நமக்கு நிறைய தெரிய வரும். இனிமே நீ கேள்வி நிறைய […]

08/06/2010 Dinesh R
காதல் செய்வீர்!! கவிதை

காதல் செய்வீர்!!

அன்பு என்பார் காதல் என்பார் ஆனந்தம் கொண்டே உவகை உறுவார் – பின் அல்லல் என்பார் கவலை என்பார் ஆத்திரம் கொண்டே அழுது தீர்ப்பார். கனவு என்பார் கவிதை என்பார் கடல் நீரும் இனிக்குது என்பார் – பின் காயம் என்பார் கசக்குது என்பார் கடுப்பில் நொந்து வலிக்குது என்பார். காம இச்சையில் கண்களும் இழப்பார் கண்டதும் வந்ததோ காதலே என்பார் – சிறிதும் தன்னை அறியவோ முயற்சியும் பேணார் தவறில் உழன்றேதம் கொள்கையும் மறப்பார். மையலில் […]

03/06/2010 Dinesh R
புதிர் கோணங்கள் கதை

புதிர் கோணங்கள்

ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்க, லிண்டா மட்டும் உறக்கம் வராமல் எதிர் வீட்டு மாடியைப் பார்த்தவாறு புகைத்துக் கொண்டிருந்தாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்த லிண்டா, தன் தாயையும் மூன்று வருடங்களுக்கு முன் இழந்திருந்தாள். யாருமற்ற மாளிகையில், சரியாக கண் தெரியாத வயதில் மூத்த வேலைக்காரியுடன் தனிக் காட்டு இளவரசியாக வாழ லிண்டா பழகிக் கொண்டாள். பிரபு குடும்பங்களுக்கு நிகரான பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசவள். போதா குறைக்கு கெளரவம் மிக்க அரசாங்க வேலையில் வேறு வீற்றிருந்தாள். […]

30/03/2010 Dinesh R
நல்ல கடவுள்!! கதை

நல்ல கடவுள்!!

“தாத்தா.. கால் வலிக்குது. எப்ப தாத்தா பஸ் வரும்?” “இதோ வந்துடும். போயிடலாம்” “போங்க தாத்தா. இதையே தான் ரொம்ப நேரமா சொல்றீங்க.” “சரி, நீ கடவுள்கிட்ட வேண்டிக்கோ. அவர் உடனே பஸ் அனுப்பி வைப்பார்” என்று நேரத்தைப் பார்த்துக் கொண்டே சிறுவனை சமாதானப்படுத்தினார். கண்களை மூடிய சிறுவன் தனக்கு தெரிந்த மழலை மொழி எல்லாம் பிரயோகித்து கடவுளை வேண்டிக் கொண்டிருக்கும் பொழுதே பேருந்தின் ஒலிப்பான் ஒலி கேட்டது. கண்களைத் தெரிந்த சிறுவன், “தாத்தா.. தாத்தா பஸ் […]

30/03/2010 Dinesh R
இப்படிக்கு விரக்தி கதை

இப்படிக்கு விரக்தி

இந்த உலகத்தில் யாருக்குமே என்னை பிடிக்கவில்லை. ஆனால் காதலின் மிகுதி காரணமாக நான் அனைவரையும் தழுவிக் கொள்கிறேன். இப்படி தான் திருவிழாவில் குச்சி ‘ஐஸ்’ வேண்டும் என அடம்பிடித்த ஏழு வயது தம்பியின் தலையை தட்டி அழைத்து சென்றான் பத்தாம் வகுப்பு படிக்கும் சிலம்பரசன். அந்த ஏழு வயது சிறுவன் தான் எத்தனை அழகு!! உடனே அவனது வதனத்தில் போய் குடியேறி விட்டேன். தம்பியின் மீது அதிக அக்கறை சிலம்பரசனுக்கு இல்லை எனினும் எனக்கு சிலம்பரசன் மீது […]

13/02/2010 Dinesh R