Shadow

Tag: விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனியின் ‘கொலை’ – சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்

விஜய் ஆண்டனியின் ‘கொலை’ – சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்

சினிமா, திரைத் துளி
‘கோடியில் ஒருவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம், மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீண்டும் விஜய் ஆண்டனியுடன் கை கோர்க்கின்றன. ‘விடியும் முன்’ படத்தின் இயக்குநரான பாலாஜி கே. குமார் இயக்கும் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்திற்கு ‘கொலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இதுவரையிலும் நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார் மற்றும் சம்கித் போஹ்ரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘இறைவி’, ‘இறுதி சுற்று’, ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘விடியும் முன்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘மெரினா’ மற்றும் ‘நெற்றிக்கண்’ புகழ் கிரிஷ்...
கொலைகாரன் விமர்சனம்

கொலைகாரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நல்லதொரு த்ரில்லருக்கான நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக படத்தின் ட்ரெய்லர் அமைந்திருந்தது. அர்ஜுனும், விஜய் ஆண்டனியும் இணைந்திருக்கும் முதற்படம் என்பது எதிர்பார்ப்பைக் கூடுதலாக்கியது. ஒரு கொலை ஒன்று நடக்கிறது. ஒருவர் கொலைக்குப் பொறுப்பேற்று காவல்துறையில் சரணடைகிறார். அவர் தான் அந்தக் கொலையைப் பண்ணினாரா, ஏன் சரணடைந்தார் என்ற காவல்துறையின் விசாரணைதான் படத்தின் கதை. புலனாய்வு மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரி கார்த்திகேயனாக அர்ஜுன் நடித்துள்ளார். தான் தான் கொலையாளி என ஒருவர் சரணடைந்த பின்பும், வழக்கில் ஏதோ இடறுவதாக அதை நூல் பிடித்து முடிக்க நினைக்கும் அவரது தீவிரம் ரசிக்க வைக்கிறது. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும், அர்ஜுனின் பாத்திரமே முதன்மை நாயகனாக மனதில் பதிகிறது. சமய சந்தர்ப்பங்களால் நல்லவன் ஒருவன், ஒரு கொலையைச் செய்துவிட்டாலும், அவனைச் சட்டப்படி தண்டிப்பதா அல்லது மனசாட்சிபடி விட்டுவிடுவதா ...
திமிரு புடிச்சவன் விமர்சனம்

திமிரு புடிச்சவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விஜய் ஆண்டனி முதல் முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைக்கும் காவல்துறை அதிகாரியாக வருகிறார். ஆனால், ஒரு போலீஸ் படமாக இல்லாமல், 2018 இல் வந்த மிகச் சிறந்த பக்திப் படமென்ற புகழையே திமிரு புடிச்சவன் பெறும். படத்தில் விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தின் பெயர் முருகவேல். இயக்குநரின் பெயர் கணேஷா. நம்பியார் எனும் படத்தை இயக்கியவர். படத்தின் தொடக்கமே கொஞ்சம் அதிர வைக்கிறது. பிளேடைக் கொண்டு மிகக் கொடூரமான கொலை ஒன்றைப் புரிகிறார் விஜய் ஆண்டனியின் தம்பி. தனது தம்பி தான் அந்தக் கொலையைச் செய்தான் என்றும், மேலும் எட்டுக் கொலைகளைச் செய்துள்ளான் என்றும், அடுத்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணையும், ஒரு குழந்தையும் கொலை செய்ய உள்ளான் எனத் தெரிய வருகிறது விஜய் ஆண்டனிக்கு. நீதி, நேர்மை தவறாத நல்லவர், நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைக்கும் உத்தமரான எஸ்.ஐ. முருகவேல்...
காளி விமர்சனம்

காளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கனவு, அமெரிக்க மருத்துவர் பரத்திற்கு தினம் வருகிறது. தனது கனவிற்கும், தனது சிறு வயது இந்திய வாழ்க்கைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமென அதைக் கண்டுபிடிக்க, இந்தியா வருகிறார் பரத். அவரது கனவிற்கான புதிருக்கும், கடந்த கால வாழ்க்கை பற்றிய அவரது தேடலுக்கும் விடை கிடைத்ததா என்பதே படத்தின் முடிவு. படத்தின் தொடக்கமே எரிச்சலூட்டுவதாய் அமைகிறது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் சிறுநீரகம் தரும் டோனர் (Donor), ரத்தச் சம்பந்தமுள்ள உறவாக இருக்கவேண்டுமெனச் சொல்கிறார்கள். என்ன கொடுமை இது? படத்தின் க்ளைமேக்ஸிலும் இது போன்றதொரு லாஜிக்கை அழுத்தமாக வலியுறுத்துவது போல் ஒரு காட்சி வருகிறது. நாயகன் எடுத்து வளர்க்கப்படும் வளர்ப்பு மகன் என அவனது பெற்றோர்கள் நாயகனிடம் சொல்லவும், தாய் சென்ட்டிமென்ட்டிற்காகவும் திணிக்கப்பட்ட அந்தப் பிற்போக்குத்தனமான லாஜிக் மிகக் கொடூரம். முழுக்க முழுக்க அமெரிக்காவில் வளர்ந்...
அண்ணாதுரை விமர்சனம்

அண்ணாதுரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘அண்ணாதுரை’ எனும் தலைப்பு வைத்ததற்கு எந்தச் சிக்கலும் எழாதது அதிசயத்திலும் அதிசயம். ஆனாலும் உண்மை. அனைவரும் எதிலோ பிசியாக இருந்து விட்டதால், இந்தப் படத்துக்கு இலவச விளம்பரம் கிடைக்காமல் போய்விட்டது. அண்ணாதுரையும் தம்பிதுரையும் இரட்டையர்கள். விதி அவர்கள் வாழ்வைப் புரட்டிப் போட, தியாகத்தில் சிறந்தவர் யாரென்று இருவருக்குள் நடக்கும் போட்டிதான் படத்தின் கதை. விஜய் ஆண்டனி முதன்முறையாக இரட்டையர்களாகத் தோன்றியுள்ளார். தாடி இருந்தால் அண்ணன், இல்லாவிட்டால் தம்பி. போதையில் இருந்தால் அண்ணன், தெளிவாக இருந்தால் தம்பி. விஜய் ஆண்டனிக்கு அம்மா சமைத்துக் கொடுத்தால் அவர் அண்ணாதுரை, அம்மாவிற்கு விஜய் ஆண்டனி சமைத்துக் கொடுத்தால் அவர் தம்பிதுரை. படத்தின் தலைப்பு வரும் முன், வருகின்ற விஜய் ஆண்டனியின் அறிமுகம் மிக அட்டகாசமாய் உள்ளது. ஆனால் அந்தப் பூர்வாங்க பில்டப், அதோடு முடிந்து விடுவது துரதிர்ஷ்டம். யமன் படத்...
சைத்தான் விமர்சனம்

சைத்தான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பது தான் வெற்றியின் ரகசியம் என்பதில் நம்பிக்கை உள்ளவர் விஜய் ஆண்டனி. அதிலும், சுஜாதாவின் “ஆ” நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. அதிலும் எண்ணெய் ஊற்றுவது போல், 10 நிமிட படத்தையும் யூ-ட்யூபில் போட்டு மாஸ் காட்டினார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனிக்கு காதில் குரல்கள் கேட்கின்றன. தற்கொலை செய்து கொள்ளும்படியும், ஜெயலட்சுமியைக் கொல்லும்படியாகவும் கட்டளை இடுகிறது அக்குரல். இருந்தாற்போல் திடீரென அக்குரல்கள் கேட்கக் காரணம் என்னவென்றும், அது அவரது பூர்வஜென்மத்தைக் கிளறி எப்படி அலைக்கழிக்கிறது என்பதும்தான் படத்தின் கதை. குரல்கள் கேட்பதை ‘ஆ’ நாவலிலிருந்தும், அதற்கான காரணத்தை ‘லூசி’ படத்திலிருந்தும் தழுவி சைத்தானை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. சுஜாதாவின் ‘ஆ’ நாவலினின்று, மிகக் கச்சிதமான முதல் பாதியைத் தந்துள்ளா...
சக்காளி தக்காளி காலி – விஜய் ஆண்டனி

சக்காளி தக்காளி காலி – விஜய் ஆண்டனி

Songs, காணொளிகள், சினிமா, திரைத் துளி
'லைக்கா புரொடக்ஷன்ஸ்' - ராஜு மஹாலிங்கம் தயாரித்து வரும் 'எமன்' படத்தை இயக்கி வருகிறார் 'நான்' படப்புகழ் ஜீவா ஷங்கர். விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகி இருக்கும், "என் மேல கை வச்சா காலி" பாடலை ஹேமச்சந்திரா பாட, அண்ணாமலை மற்றும் சேட்டன் எம்.சி. (ராப்) ஆகியோர் பாடல் வரிகள் எழுதியுள்ளனர். என் மேல கை வச்சா காலி அந்துடும்டா உன்னோட தாலிஎன் மேல கை வச்சா காலி - மகனே அந்துடும்டா உன்னோட தாலி - கேளுமரம் செத்தா நாற்காலி நீ செத்தா இடம் காலி சக்காளி தக்காளி காலிஎன ஹிப் - ஹாப் பாணியில் ஆரம்பமாகிறது பாடல். கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி திருநெல்வேலியில் 'லைக்கா கோவை கிங்ஸ்' மற்றும் 'சேபாக் சூப்பர் கில்லிஸ் ' இடையே நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தின் போது வெளியிடப்பட்ட "என் மேல கை வச்சா காலி" பாடலானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ‘நாக்க.. முக்க’ போல் இத...
எம் மேல கைய வெச்சா காலி – ‘எமன்’ படப்பாடல்

எம் மேல கைய வெச்சா காலி – ‘எமன்’ படப்பாடல்

சினிமா, திரைத் துளி
விரைவில் வெளியாக இருக்கும் 'சைத்தான்’ படத்தைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘எமன்’. தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து, அதைத் திரைப்படங்களாக ரசிகர்களுக்கு வழங்கி வரும் 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த 'எமன்' படத்தை இயக்கி இருக்கிறார் 'நான்' பட இயக்குநர் ஜீவா ஷங்கர். 'எமன்' படத்திற்காக விஜய் ஆண்டனி இசையமைத்துப் பாடியிருக்கும் 'எம் மேல கைய வெச்சா காலி' என்னும் பாடலானது வருகின்ற செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கின்றது. 'லைக்கா கோவை கிங்ஸ்' - 'சேப்பாக் சூப்பர் கில்லிஸ்' அணிகளுக்கு இடையே செப்டம்பர் ஐந்தாம் தேதி திருநெல்வேலியில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டியின் போது, இந்த' எமன்' படத்தின் பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்....
நம்பியார் விமர்சனம்

நம்பியார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐ.ஏ.எஸ். படித்துக் கொண்டிருக்கும் ராமசந்திரன் தன் மனதின் எதிர்மறை எண்ணங்களுக்கு உருவம் கொடுத்து எம்.ஜி.ஆர். எனப் பெயரிடுகிறான். சதா சர்வ காலமும் தொந்தரவு செய்து குழப்பம் நம்பியாரை மீறி, ராமசந்திரன் தான் எண்ணியதை அடைகிறானா இல்லையா என்பதே படத்தின் கதை. குழப்பும் நெகடிவ் மனசாட்சியான நம்பியாராக நடித்துள்ளார் சந்தானம். நண்பனாக வந்து நாயகனைக் கலாய்ப்பதற்குப் பதில், மனசாட்சியாக வந்து கலாய்க்கிறார். சந்தானத்தின் பிம்பம் கண்ணாடியில் தெரியாதது; ராமசந்திரன் போட்டிருக்கும் அதே டீ-ஷர்ட்டை அணிந்திருப்பது; வாய் ஓயாமல் தொணத்தொணவென்று பேசிக் கொண்டிருப்பதென மனசாட்சியை நன்றாக வடிவமைத்திருக்கார்கள். ராமசந்திரனாக ஸ்ரீகாந்த்; சரோஜா தேவியாக சுனைனா. படத்தை ஸ்ரீகாந்தே தயாரித்தும் உள்ளார். கதாபாத்திரத்தை ரசித்து நடித்துள்ளார். உள்ளுக்குள் இருக்கும் நம்பியார் விழித்துக் கொள்ள, சந்தானத்தின் குரலில் குடித்து விட்டு ...
பிச்சைக்காரன் – சகுனமும்! திரைப்படத் தலைப்பும்?

பிச்சைக்காரன் – சகுனமும்! திரைப்படத் தலைப்பும்?

கட்டுரை, சமூகம், சினிமா, திரைச் செய்தி
பிச்சைக்காரன் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குநர் மோகன் ராஜா, “இந்தப் படத்தின் வெற்றி, தலைப்பு விஷயத்தில் தமிழ் சினிமாவுக்கு இருக்கும் மூட நம்பிக்கைகளை உடைத்துள்ளது. ‘தனி ஒருவன்’ என்ற தலைப்பு வச்சதுக்கு, “என்ன சார் தனி ஒருவன்னு வச்சிருக்கீங்க? படம் அவ்ளோதான்”எனச் சொன்னாங்க. தனியா ஒருவன்னா வச்சேன்; தனி ஒருவன்னுதான வச்சேன்! அதுக்கே பிச்சைக்காரன்னு தலைப்பு வச்சாப்ல என்னைப் பார்த்தாங்க. அப்ப பிச்சைக்காரன் வச்சதுக்கு அவங்களை எப்படிப் பார்த்திருப்பாங்க? ‘மாதவனுக்கு இதான் சார், இறுதிச்சுற்று. இனி அவருக்கு படமே வராது. தலைப்பே சரியில்லை’ன்னாங்க. இப்ப அந்த மூட நம்பிக்கைலாம் உடைஞ்சிடுச்சு. அப்படிச் சொல்லக் கூடாது. இனி இது போல தலைப்பு வைப்பாங்க. “அபசகுனம்” என்ற தலைப்புக்கு கவுன்சிலில் பத்து பேரு சண்டை போட்டாலும் போட்டுக்குவாங்க” என்றார். “நான் விஜய் ஆண்டனியிடம்...
பிச்சைக்காரன் விமர்சனம்

பிச்சைக்காரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோமாவில் இருக்கும் தனது தாய் மீள வேண்டுமென்பதற்காக, ஒரு மண்டலத்திற்கு தன் அடையாளத்தையும் கெளரவத்தையும் விட்டு பிச்சையெடுப்பதாக வேண்டுதல் வைக்கிறான் பணக்காரனான அருள். அந்த வேண்டுதல் நிறைவேறியதா இல்லையா என்பதுதான்பிச்சைக்காரனின் கதை. கஞ்சத்தனத்திற்குத் தனது நடிப்பால் புது இலக்கணம் வகுத்துள்ளார் முத்துராமன். பணத்தைக் கண்டதும் சொக்கித் தூங்குவதும், விரலென்ன உயிரே போனாலும் பைசா தர முடியாதென வாயில் அவராக துணியை அடைத்துக் கொள்வதும் செம காமெடி. முத்துராமனைப் போன்றே, எல்லாப் பாத்திர வடிவமைப்பிலும் இயக்குநர் சசி கவனமாக இருந்து படத்திற்குச் சுவாரசியத்தைக் கூட்டியுள்ளாரென்றே சொல்லவேண்டும். உதாரணம், முத்துராமனின் கார் ஓட்டுநராக வருபவரைச் சொல்லலாம். விஜய் ஆண்டனியின் அம்மாவாக தீபா ராமானுஜம் நடித்துள்ளார். உத்தம வில்லனில் பூஜா குமாரின் அம்மாவாகவும், பசங்க -2 இல் பிரின்சிபலாகவும், ரஜினிமுருகனில் சிவகார்த...
பிச்சைக்காரன் – நிச்சய வெற்றி.!

பிச்சைக்காரன் – நிச்சய வெற்றி.!

சினிமா, திரைத் துளி
“இந்தப் படம் ஹிட்டாகும் என்பதில் எள்ளளவும் எனக்கோ, விஜய் ஆண்டனிக்கோ சந்தேகமில்லை. முதல் நாள் முதல் இந்த நொடி வரை அதில் ரொம்ப தெளிவா இருக்கேன். ஆனால், விநியோகஸ்தர்கள் படம் பார்க்கும் பொழுது மட்டும், ‘என்ன சொல்வாங்களோ?’ எனக் கொஞ்சம் டென்ஷனா இருந்தது. அவங்க ஸ்க்ரீனிங் முடிந்ததும், கே.ஆர்.ஃப்லிம்ஸ் சரவணன் முகத்தைப் பார்த்தேன். சிரிச்சுட்டு இருந்தார். டென்ஷன் போய் மீண்டும் நம்பிக்கை வந்துடுச்சு” என்றார் பிச்சைக்காரன் படத்தின் இயக்குநர் சசி. “இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன். என்னை பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரத்தில் கேமராவில் இருந்து படம் பிடித்தார்கள். சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்தோம். அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டேன். ரொம்ப கொடுமையாக இருந்தது. மகனும் மருமகளும் துரத்தி விட்டதால் பிச்ச...
இந்தியா பாகிஸ்தான் விமர்சனம்

இந்தியா பாகிஸ்தான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விஜய் ஆண்டனியின் நடிப்பில் வரும் மூன்றாவது படம். முதலிரண்டு படங்கள் போலின்றி இம்முறை நகைச்சுவைக்கு மாறியுள்ளார். வக்கீல்களான கார்த்திக்கும் மெல்லினாவும் ஒரே வீட்டில் அலுவலகங்களை வாடகைக்கு எடுக்கின்றனர். எலியும் பூனையுமாக எதிரெதிர் துருவமாக நிற்கும் இவ்விருவரைக் குறிப்பிடத்தான் தலைப்பை இந்தியா பாகிஸ்தான் என வைத்துள்ளனர். படத்தில் காட்டமுத்துவான பசுபதி அறிமுகமானதும் படம் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. பசுபதி வரும் அனைத்துக் காட்சிகளுமே திரையரங்கு கலகலப்பாகிறது. முக்கியமாக, பத்து பேரை ஓடவிட்டு வெட்டி, ‘டெமோ’ செய்து காட்டும் காட்சியைச் சொல்லவேண்டும். அவரது எதிரணியில் மருதுவாக எம்.எஸ்.பாஸ்கரும், இடிச்சபுளியாக மனோபாலாவும் வருகின்றனர். ஆத்தாவின் அனுமதிக்காக சின் முத்திரை பிடித்து சிலையாகும் மருதுவுக்கு எப்படி எல்லாம் ஆத்தாவிடமிருந்து அனுமதி கிடைக்கிறது என்பவை ரசிக்க வைக்கிறது. தீனா தேவராஜனின் இச...