Shadow

Tag: A.ஜான்

லப்பர் பந்து விமர்சனம்

லப்பர் பந்து விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வெற்றி என்பது இலக்குகளைத் தீர்மானித்து ஓடுவது அல்ல நான்கு பேருக்கு நன்மை பயக்கும் விதமான மாற்றத்துக்கு முன்னுரிமை தருவதென்ற மிக மெச்சூர்டான விஷயத்தைப் பேசியுள்ளது படம். கிரிக்கெட் மீதான ஈடுபாடு, ஈகோ, காதல், குடும்பம், உறவுகளுக்குள் உண்டான பிணைப்பு, ஈகோவைத் துறத்தல்,மென்னுணர்ச்சி (Sentiment), எமோஷன்ஸ், நட்பு, சாதி, சமூக நீதி என இப்படம் கலந்து கட்டி ஒரு பக்கா கமர்ஷியல் படமாக ரசிக்க வைக்கிறது. "கெத்து" என அழைக்கப்படும் 39 வயது நட்சத்திர பேட்ஸ்மேனை ஆஃப் சைடில் பந்து போட்டுத் தன்னால் அவுட்டாக்க முடியுமெனத் தன் நண்பனிடம் சொல்கிறான் நட்சத்திர ஆல்-ரவுண்டரான அன்பு. அதைக் கேட்டுவிடுகிறார் கெத்தின் நண்பன். சின்னதாய்த் தொடங்கும் இந்த மோதல், கெத்து - அன்புக்கிடையே பலமான ஈகோவாக வளர்ந்து விடுகிறது. கெத்தின் மகளைத்தான் தான் காதலிக்கிறோம் என அன்புவிற்குத் தெரிய வருகிறது. காதலா, மோதலா, கிரிக்கெட்டா, குடு...
லப்பர் பந்து: நகைச்சுவை – குணச்சித்திரம் | டி எஸ் கே

லப்பர் பந்து: நகைச்சுவை – குணச்சித்திரம் | டி எஸ் கே

சினிமா, திரைத் துளி
சின்னத்திரை காமெடி ரியாலிட்டி ஷோக்களில் நான்கு முறை டைட்டில் வென்றவர் டி.எஸ் கே. சின்னத்திரையின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சினிமாவிலும் பிசியான நகைச்சுவை நடிகராக நடித்து வரும் டிஎஸ்கே சமீப காலமாக வெப் சீரிஸ் பக்கமும் கவனத்தைத் திருப்பியுள்ளார். செப்டம்பர் 20 ஆம் தேதி ‘லப்பர் பந்து’ வெளியாகவுள்ள நிலையில் அந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், தனது அடுத்த படங்கள், வெப்சீரிஸ் குறித்தும், “’லப்பர் பந்து’ நான் நடிக்கும் 18 ஆவது படம். ஆனாலும் இந்தப் படத்தில் நடித்த போது இதுதான் எனது முதல் படம் என்பது போல உணர்ந்தேன். அந்த அளவிற்கு இந்தப் படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். மிகப்பெரிய அனுபவங்கள் கிடைத்தன. இயக்குநர் தமிழரசன் நடிப்பு குறித்து மெனக்கெட்டு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு?' ரியாலிட்டி ஷோவில் ஒரு டைட்டில் வின...
“லப்பர் பந்து: ஆக்ரோஷ கிராமத்து இளைஞனாக நான்” – ஹரிஷ் கல்யாண்

“லப்பர் பந்து: ஆக்ரோஷ கிராமத்து இளைஞனாக நான்” – ஹரிஷ் கல்யாண்

இது புதிது, சினிமா, திரைத் துளி
பார்க்கிங் படத்தைப் போல் ஒரு அசத்தலான கதையம்சத்துடன் உருவாகியுள்ள ‘லப்பர் பந்து’ படத்தில் இதுவரை ஹரிஷ் கல்யாண் நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தைத் தமிழரசன் பச்சமுத்து இயக்கி உள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் லப்பர் பந்து படத்தைத் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாக அ. வெங்கடேஷ் இணைந்துள்ளார். இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்க கதாநாயகிகளாக ‘வதந்தி’ சீரிஸ் புகழ் சஞ்சனா, சுவாசிகா விஜய் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் காளி வெங்கட், தேவதர்ஷினி, பாலசரவணன், டி எஸ்கே உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். வரும் செப்டம்பர் 20ஆம் தேதி ‘லப்பர் பந்து’ வெளியாகவுள்ளது. படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பகிர்ந்த நாயகன் ஹரிஷ் கல்யாண், “பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படம் பண்ணுவதற்காக பேசிக்கொண்டிருந்...
சதுரங்க விளையாட்டுடன் சமூக நீதியைப் பேசும் நாற்கரப்போர்

சதுரங்க விளையாட்டுடன் சமூக நீதியைப் பேசும் நாற்கரப்போர்

சினிமா, திரைச் செய்தி
V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’. இயக்குநர் ஸ்ரீவெற்றி இப்படத்தை இயக்குகிறார். ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இறுகப்பற்று படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கபாலி, பரியேறும் பெருமாள் புகழ் லிங்கேஷ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல மலையாள இயக்குநர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி, மற்றும் ஞானசேகரன் ஆகியோர் இப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்கள். சந்தோஷ் நாராயணனிடம் பல படங்களில் இணைந்து பணியாற்றிய தினேஷ் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரஞ்சித் சிகே என்பவர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கலை ஶ்ரீமன்ராகவன். பாடல்களை குக...
பூமர் அங்கிள் விமர்சனம்

பூமர் அங்கிள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நல்லதொரு சூப்பர் ஹீரோ ஸ்பூஃப் படத்திற்கு முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ஸ்வதேஷ் MS. சேஷு, பழைய ஜோக் தங்கதுரை, KPY பாலா, ரோபோ ஷங்கர், யோகிபாபு ஆகியோர் 90’ஸ் கிட்ஸ். இதில், யோகிபாபுவிற்கு மட்டும் கல்யாணமாகிவிட, அவரால் கல்யாணமாகாமல் இருக்கும் மற்றவர்கள், யோகிபாபுவைப் பழிவாங்க அவரது மாளிகைக்குள் களமிறங்குகின்றனர். மாளிகைக்குள் நடக்கும் கலாட்டாவே படத்தின்கதை. யோகிபாபுவின் மனைவி ரஷ்ய உளவாளி. யோகி பாபுவின் தந்தையான மதன் பாப் கண்டுபிடித்த ஆயுதங்களைத் திருடுவதே அவரது நோக்கம். மதன் பாப் கண்டுபிடித்த சில ஆயுதங்களை அமெரிக்க அரசு திருடி ஸ்பைடர் மேன், ஹல்க், தோர் ஆகியோரை உருவாக்கிவிட்டனராம். படம் பார்க்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் ரசிகர்கள் நிலைமை தான் அந்தோ பரிதாபம். நகைச்சுவையாகவோ, கலகலப்பாகவோ கூடக் கொண்டு போகாமல், சகிக்கமுடியாதளவு கடியை ஏற்படுத்தும் மிகவும் சிரத்தையற்ற திரைக்கதையை எழுதி...
‘ஈமெயில்’ திரைப்படம் – ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் த்ரில்லர்

‘ஈமெயில்’ திரைப்படம் – ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் த்ரில்லர்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’ ஆகும். இப்படத்தில் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தநிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநரும் நடிகருமான அமீர், நடிகர் மகத் ராகவேந்திரா, நடிகைகள் வசுந்தரா மற்றும் கோமல் சர்மா ஆகியோர் வெளியிட்டனர். ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையிலும், அதேசமயம் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லராகவும் உருவாகியுள்ள இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும்...
“நான் முதலில் பெரியாரிஸ்ட்; அதன் பிறகே நடிகன்” – சத்யராஜ்

“நான் முதலில் பெரியாரிஸ்ட்; அதன் பிறகே நடிகன்” – சத்யராஜ்

சினிமா, திரைச் செய்தி
ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி. ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்குத் திரும்பியுள்ளார். மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் பிரபல டோலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் டச்சு என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ள நில...
மஞ்சு வாரியார் இன் Mr. X

மஞ்சு வாரியார் இன் Mr. X

சினிமா, திரைத் துளி
பரபரப்பான படமாக உருவாகவுள்ள Mr. X படத்தில் எவர் க்ரீன் நாயகி மஞ்சு வாரியார் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிக்கும் மிகப் பிரம்மாண்ட படமான 'Mr. X' படத்தில் மஞ்சு வாரியார் இணைந்துள்ளார். முதல் படத்திலேயே கோலிவுட்டைத் தனது திரைக்கதை இயக்கத்தால் திரும்பிப் பார்க்க வைத்த எஃப்.ஐ.ஆர் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். Mr X படத்தின் நாயகியாக அனகா நடிக்கிறார். இப்படத்திற்காக நாயகர்கள் ஆர்யாவும், கவுதம் கார்த்திக்கும் உடற்கட்டை மெருகேற்றி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் ஆக்சன் காட்சிகளை அதிரடிக் காட்சிகளாக அமைக்க இருக்கிறார் ஸ்டன்ட் சில்வா. இப்படத்தின் பூஜை இன்று படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் பலர் பங்கேற்க மிகச் சிறப்பாக அரங்கேறியது. Mr. X தமிழ், தெலுங்க...
ரஞ்சனா நாச்சியார் – ஒரே நேரத்தில் 2 படங்களைத் தயாரிக்கும் நடிகை

ரஞ்சனா நாச்சியார் – ஒரே நேரத்தில் 2 படங்களைத் தயாரிக்கும் நடிகை

சினிமா, திரைத் துளி
'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'அண்ணாத்த', 'டைரி', 'நட்பே துணை' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரஞ்சனா நாச்சியார். ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா பாஸ்கர சேதுபதியின் பேத்தியான இவர் இயக்குனநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகள் ஆவார். பொறியியலில் எம்.எஸ்.சி, எம்.டெக். மற்றும் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) என மிகப் பெரிய படிப்புகளைப் படித்துவிட்டு, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் தமிழ்த் திரையுலகில் நுழைந்தவர் தான் ரஞ்சனா நாச்சியார். 'துப்பறிவாளன்' படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு நல்ல கதையம்சம் கொண்ட கதாபாத்திரம் உள்ள படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ரஜினிகாந்துடன் நடித்த 'அண்ணாத்த' மற்றும் அருள்நிதி நடித்த 'டைரி' ஆகிய படங்கள் இவரை இன்னும் அதிக அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தன. இந்த நிலையில் நடிப்பைத் தொடர்ந்து அடுத்ததாகத் தயாரிப்புத் துறையிலும் அடிய...
தண்டட்டி விமர்சனம்

தண்டட்டி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி பகுதியில் வசித்து வரும் 57 வயதான தங்கப் பொண்ணு என்னும் மூதாட்டி காணாமல் போகிறார். அவரைத் தேடும் புள்ளியில் தொடங்கும் கதை, அவரது இறப்பிற்குப் பின்னர் காணாமல் போகும் அவரது தண்டட்டியைத் தேடிக் கண்டடையும் புள்ளியில் நிறைவு பெறுகிறது. தங்கப் பொண்ணு ஏன் காணாமல் போகிறார், அவர் எப்படி இறந்து போகிறார், அவரது அடையாளங்களில் ஒன்றான தண்டட்டி எப்படித் திருடு போகிறது, அதைத் திருடியவர் யார், கண்டுபிடிப்பவர் யார் என்று பயணிக்கிறது திரைக்கதை. இந்தப் பயணத்திற்கு நடுவே அழகான வலி மிகுந்த இரண்டு குட்டி காதல் அத்தியாயங்களும் படத்தில் உண்டு. அவை தான் கதையின் மையப்பொருளான இந்த தண்டட்டி படத்திற்கு உயிர்நாடி. 57 வயது தங்கப் பொண்ணாக ரோகிணி. குறை சொல்ல முடியாத நிறைவான நடிப்பைக் கொடுப்பதில் தான் சீனியர் என்பதை நிரூபிக்கும் வகையில் செவ்வனே செய்திருக்கிறார். சிறு வயது ரோகிணி கதாபாத்திரத்தி...
தண்டட்டி – பாட்டிகளின் அட்டகாசம்

தண்டட்டி – பாட்டிகளின் அட்டகாசம்

சினிமா, திரைச் செய்தி
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டட்டி'. ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது. இயக...
தண்டட்டி – அப்பாத்தாக்களுக்குப் பேத்தியின் அன்பு முத்தம்

தண்டட்டி – அப்பாத்தாக்களுக்குப் பேத்தியின் அன்பு முத்தம்

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டட்டி'. ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது. இந்த...
கோடித்துணி – பெருமாள்முருகனின் கதை படமாகிறது

கோடித்துணி – பெருமாள்முருகனின் கதை படமாகிறது

சினிமா, திரைத் துளி
புகழ்பெற்ற தமிழாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்கிற சிறுகதை, திரைப்பட உருவாக்கம் பெறுகிறது. நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஞ்ஜோய் சாமுவேல் இப்படத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார். இந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட நிலையில், மார்ச் மாத இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன. தாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கே எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகப் படத்தின் ...
“காதல் நாயகனாக அமீர்” – இயக்குநர் சுப்பிரமணிய சிவா

“காதல் நாயகனாக அமீர்” – இயக்குநர் சுப்பிரமணிய சிவா

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார். கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் வெற்றிகரமாக மறு பிரேவசம் செய்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழு...
“பான் இந்தியா படமென்பது பைத்தியக்காரத்தனம்” – இயக்குநர் அமீர்

“பான் இந்தியா படமென்பது பைத்தியக்காரத்தனம்” – இயக்குநர் அமீர்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார். கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் வெற்றிகரமாக மறு பிரேவசம் செய்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழு...