Shadow

Tag: A.ஜான்

வரும் வெற்றி – ஷாம் இயக்கும் இசை ஆல்பம்

வரும் வெற்றி – ஷாம் இயக்கும் இசை ஆல்பம்

Teaser, காணொளிகள்
தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாகத் தனக்கென ஒரு நிலையான இடத்தைத் தக்க வைத்துப் பயணித்து வருபவர் நடிகர் ஷாம். தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, ‘வரும் வெற்றி’ என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஓர் இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம். S.I.R ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார்.  கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலைப் பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம். பிரபலமான டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. தொழில்நுட்பக் குழு:-இயக்கம் - ஷாம் ஒளிப்பதிவு - K.A.சக்திவேல் இசை - அம்ரீஷ் படத்தொகுப்பு - லாரன்ஸ் கிஷோர் நடனம் - ஸ்ரீதர...
இரவின் விழிகள் விமர்சனம் | Iravin Vizhikal review

இரவின் விழிகள் விமர்சனம் | Iravin Vizhikal review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பார்வையாளர்களை ஈர்க்கவும், அதன் மூலம் புகழ் பெறவும், எதையாவது கன்டென்ட்டாக்கி வீடியோ போட்டுத் தொடர்ந்து லைம்லைட்டிலேயே இருக்க நினைக்கும் யூட்யூபர், எக்ஸ், இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்களைச் சாடியுள்ளார். ஒரு விஷயத்தின் உண்மை நிலையைப் பற்றி எதுவும் அறியாமலே ஒரு கருத்தை மிக வலுவாகப் பொதுச் சமூகத்தில் விதைத்து விட முடிகிறது இந்த சோஷியல் மீடியா செலிபிரட்டிகளால். அதனால் தவறே இழைக்காதவர்கள் வீண் பழி சுமக்க வேண்டி வருகிறது. இத்தகையவர்களைத் தேடிக் கொல்கிறான் ஒரு சைக்கோ கொலைகாரன். அவன் முதலில் கொல்வது, பிளாக்மெயில் ஜர்னலிசம் செய்யும் சரக்கு சங்கர் என்பவரை. அந்த சைக்கோ கொலைகாரனிடம் யூட்யூபர்களான கர்ணாவும் ரேஷ்மாவும் சிக்கிக் கொள்கின்றனர். அவர்கள் தப்பித்தார்களா, ஏன் அவனை சைக்கோ கொலைகாரன் கொல்லத் துடிக்கிறான் என்பதற்குப் பதிலுடன் நிறைவுறுகிறது படம். படத்தின் முதற்பாதியைச் சகித்துக் கொள்ள ஓர் அசாத்திய திடம்...
வாடா கருப்பா – குகையில் சிக்கிய படக்குழுவினர் | இரவின் விழிகள்

வாடா கருப்பா – குகையில் சிக்கிய படக்குழுவினர் | இரவின் விழிகள்

சினிமா, திரைத் துளி
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’ ஆகும். இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவைக் கவனிக்க, ‘விடுதலை’ படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சண்டைப்...
கெவி விமர்சனம் | Gevi review

கெவி விமர்சனம் | Gevi review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கெவி என்றால் ஆழமான பள்ளத்தாக்கு எனப் பொருள். கொடைக்கானலுக்குக் கீழுள்ள ஒரு மலைப்பகுதியில், பாண்டிய தேசத்தைச் சேர்ந்த மக்கள் குடி புகுகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில், குளிர் பிரேதசங்களைத் தேடும் முயற்சியில், கெவி மக்களின் உதவியோடு கொடைக்கானலைக் கண்டடைகின்றனர் வெள்ளையர்கள். அவர்களின் வரவிற்குப் பிறகு, வெள்ளகெவி என்று அப்பகுதி அழைக்கப்படுகிறது. சாலை வசதியற்ற கெவியில் வாழும் மக்கள் மிகவும் துயருகின்றனர். ஓரிரவு, கொடி சுற்றிக் கொள்வதால் கர்ப்பிணியான மந்தாரை மிகவும் அவதியுறுகிறார். ஊரே ஒன்று கூடி, மந்தாரையை டோலியில் தூக்கிக் கொண்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குச் செல்கின்றனர். அதே இரவில், சாலை வசதி கேட்டுக் கோபப்பட்டான் என்பதற்காக மந்தாரையின் கணவனான மலையனைக் காவல்துறையினர் அடித்துக் கொல்ல முயற்சி செய்கின்றனர். அந்த இரவு எப்படி விடிகிறது என்பதுதான் படத்தின் முடிவு. படக்குழுவினர் மிரட்டியுள்ளன...
ஒளிப்பதிவில் உச்சம் தொடும் வேம்பு பட கேமரா மேன் குமரன்

ஒளிப்பதிவில் உச்சம் தொடும் வேம்பு பட கேமரா மேன் குமரன்

சினிமா, திரைச் செய்தி
அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது வேம்பு படம். மெட்ராஸ் (ஜானி) ஹரி கிருஷ்ணன் நாயகனாக நடிக்க, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். முக்கிய வேடங்களில் மாரிமுத்து, ஜெயராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இது உருவாகி, பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஒளிப்பதிவாளர் குமரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவருக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. தனது சினிமா பயணம் மற்றும் வேம்பு படம் குறித்து குமரன், “நான் கல்லூரியில் பி.டெக். படித்து முடிப்பதற்கு முன்பாகவே சினிமாவில் எனக்குப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துவிட்டது. மருதமலை படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வைத்தியிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அவருடன் மலையாளம், கன்னட மொழிகளி...
நிழற்குடை விமர்சனம் | Nizharkudai review

நிழற்குடை விமர்சனம் | Nizharkudai review

சினிமா, திரை விமர்சனம்
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும். நிழற்குடையின் அருமையோ வெயில், மழை என இரண்டிலும் தெரியும். நிழற்குடையை மனித உறவுகளுக்கான குறியீட்டுத் தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். நிரஞ்சனும் லான்சியும் காதலித்துக் கல்யாணம் செய்கிறார்கள். அவர்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால், தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு நிலா என்றொரு குழந்தை உள்ளது. இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தையைப் பார்த்துக் கொள்ள கேர்-டேக்கரை நியமிக்கிறார்கள். ஆனால் கேர்-டேக்கர் ஒத்து வராததால், ஆசிரமத்தில் இருந்து ஜோதிம்மாவை அழைத்து வருகின்றனர். திடீரென நிலா காணாமல் போகிறாள். பின் என்னாகிறது என்பதே படத்தின் கதை. இடைவேளையில் ஒரு பதைபதைப்பை ஏற்படுத்துவதற்காக தர்ஷன் சிவா கதாபாத்திரத்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளார். தொடக்கம் முதலே கதையோடு ஒட்டாமல், அந்தக் கதாபாத்திரத்தின் கனத்தை அதிகப்படுத்துமளவு நடிக்க முடியாமல் திணறியுள்ளார் தர...
அஸ்திரம் விமர்சனம் | Asthram review

அஸ்திரம் விமர்சனம் | Asthram review

சினிமா, திரை விமர்சனம்
அஸ்திரம் என்றால் ஆயுதம் எனப் பொருள்படும். அதுவும் இப்படத்தின் உபதலைப்பான சீக்ரெட் என்பதோடு பொருத்திப் பார்த்தால் 'ரகசிய ஆயுதம்' எனப் பொருள் வரும். ஊட்டியிலுள்ள பூங்காவில் ஒருவர் வயிற்றை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதே பாணியில் நிகழ்ந்த மரணங்களைத் துப்பு துலக்குகிறார் காவல்துறை அதிகாரி அகிலன். மரணித்தவர்கள் அனைத்தும் சதுரங்க விளையாட்டு வீரர்கள் என்ற துப்பினைத் தவிர, அகிலனில் புலனாய்வில் வேறெதுவும் அறிய முடியாமல் போகிறது. பின் ஒரு மருத்துவரின் உதவியோடு தற்கொலைகளுக்குப் பின்னுள்ள சூத்திரதாரியை அறிகின்றார் அகிலன். வில்லன்க்கு மெஸ்மர் எழுதிய 'சீக்ரெட்' எனும் புத்தகம் கிடைக்கிறது. அந்தப் புத்தகத்தின் உதவியால்தான் வில்லன் அசாதாரணமான சக்தியை அடைகிறான். கிட்டத்தட்ட ஏழாம் அறிவு டோங் லீயைப் போல்! மெஸ்மர், ஹிப்னாட்டிஸத்தின் தோற்றுவாய்க்குக் காரணமானவர் என்றாலும், மெஸ்மரிசம் என்பது ஒரு...
“FIR விட ரொம்பக் கடினமான படம்” – மனு ஆனந்த் | Mr. X

“FIR விட ரொம்பக் கடினமான படம்” – மனு ஆனந்த் | Mr. X

சினிமா, திரைச் செய்தி
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில், A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr. X)' ஆகும். வெற்றிப் படமான எப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார், அனகா, அதுல்யா ரவி, ரெய்ஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது. இயக்குநர் மனு ஆனந்த், “ஒரு இயக்குநருக்கு இரண்டாவது படம் கிடைக்க வேண்டும் என்றால் அந்த முதல் படம் வெற்றி அடைந்திருக்க வேண்டும். அப்படி ஒரு படத...
“சரத்குமார் நடித்த சிங்கிள் ஷாட்” – ஸ்டன்ட் சில்வா | Mr. X

“சரத்குமார் நடித்த சிங்கிள் ஷாட்” – ஸ்டன்ட் சில்வா | Mr. X

சினிமா, திரைச் செய்தி
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில், A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr. X)' ஆகும். வெற்றிப் படமான எப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார், அனகா, அதுல்யா ரவி, ரெய்ஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது. மஞ்சு வாரியர், “மிஸ்டர் எக்ஸ் படத்தைப் பொறுத்தவரை எனக்கு இன்ட்ரஸ்டிங்கான படம். அந்தப் படம் சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்குப் புதுசு தான். இயக்கு...
“ஹல்க் போல் பிரம்மாண்டமாகத் தெரிந்தார் ஆர்யா” – கெளதம் கார்த்திக் | Mr. X

“ஹல்க் போல் பிரம்மாண்டமாகத் தெரிந்தார் ஆர்யா” – கெளதம் கார்த்திக் | Mr. X

சினிமா, திரைச் செய்தி
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில், A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr. X)' ஆகும். வெற்றிப் படமான எப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார், அனகா, அதுல்யா ரவி, ரெய்ஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது. நடிகர் கெளதம் கார்த்திக், "இந்தப் படம் நான் எதிர்பார்த்ததை விட நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளை எப்படி வேண்டுமானாலும் கற்பனை...
“தம்பி கலக்கிட்டான்” – ஆர்யா | கெளதம் கார்த்திக் | Mr. X

“தம்பி கலக்கிட்டான்” – ஆர்யா | கெளதம் கார்த்திக் | Mr. X

சினிமா, திரைச் செய்தி
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில், A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr. X)' ஆகும். வெற்றிப் படமான எப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார், அனகா, அதுல்யா ரவி, ரெய்ஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் ஆர்யா, “இந்தப் படத்துக்கு என்னைச் சிபாரிசு செய்ததே தயாரிப்பாளர் S. லஷ்மன் குமார் தான். இந்தக் கதையைக் கேட்டுவிட்டு இது மி...
Mr. X | தொலைந்த ஏழு ப்ளூட்டோனியம் கேப்ஸ்யூல்ஸ்

Mr. X | தொலைந்த ஏழு ப்ளூட்டோனியம் கேப்ஸ்யூல்ஸ்

சினிமா, திரைச் செய்தி
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில், A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr. X)' ஆகும். வெற்றிப் படமான எப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார், அனகா, அதுல்யா ரவி, ரெய்ஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது. தயாரிப்பாளர் S.லஷ்மன் குமார், "இந்தப் படம் நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு படம். மனு ஆனந்த் எஃப்ஐஆர் படத்தை முடித்துவிட்டு இந...
வணங்கான் விமர்சனம்

வணங்கான் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஜெயமோகனின் 'அறம்' சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு கதையின் பெயர் வணங்கான் ஆகும். படத்திற்கும் அக்கதைக்கும் சம்பந்தமில்லை. தலைப்பை மட்டும் பயன்படுத்திக் கொள்ள ஜெயமோகனிடம் அனுமதி கேட்டுள்ளார் இயக்குநர் பாலா. காது கேளாத, வாய் பேச முடியாத நாயகன், எவர்க்கும் எதற்கும் வளைந்து கொடுக்காத, வணங்காத அப்பழுக்கற்ற நல்ல முரடன் என்பதால், வணங்கான் எனும் தலைப்பு படத்திற்குச் சாலப் பொருந்துகிறது. சுனாமியால் பெற்றோரை இழந்தவர்கள் கோட்டியும், அவனது தங்கை தேவியும். முரடனான கோட்டிக்கு, ஒரு காப்பகத்தில் வேலை வாங்கித் தரப்படுகிறது. அக்காப்பகத்தில், குளிக்கச் செல்லும் கண்பார்வையற்ற பெண்களை மூவர் ஒளிந்து நின்று ரசிக்கின்றனர். கொதித்தெழும் கோட்டி, வழக்கமாக பாலா முன்மொழியும் தர்மத்தைக் கடைப்பிடிக்கிறான். பாவம் செய்தவனை வதம் செய்துவிடுவதே அந்த தர்மம்! ஒரு படைப்பாளனாகக் குறைந்தபட்ச அறம் கூட இல்லாமல், படத்தின் முதற்பாதியி...
ராஜா கிளி விமர்சனம்

ராஜா கிளி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார் தம்பி ராமையா. அவரது மகன் உமாபதி இப்படத்தை இயக்கியுள்ளார். முருகப்பா சென்றாயர் எனும் கோடீஸ்வரத் தொழிலதிபரின் வாழ்வையும் உயர்வையும் வீழ்ச்சியையும் பற்றிப் பேசுகிறது படம். தெய்வானை எனும் மனைவி இருக்க, வள்ளிமலரை இரண்டாவது திருமணம் புரிந்து கொள்கிறார். பிறகு, விஷாகா என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொள்ள விழைகிறார். விஷாகாவின் கணவன் இறந்துவிட, கொலைப்பழி வந்து சேர, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுபவரின் வாழ்க்கை என்னானது என்பதே படத்தின் முடிவு. வள்ளிமலராக சுபா தேவராஜ் நடித்துள்ளார். அவரது கணவராக கொட்டாச்சி நடித்துள்ளர். அவர், முருகப்பா சென்றாயரிடம் ஒரு ‘பேக்கரி’ டீலிங் போட்டுக் கொள்கிறார். ‘கெதக்’கென்று இருக்கிறது. அதிலிருந்து மீள்வதற்குள், சிந்தாமணி எனும் பாத்திரத்தில் வரும் ரேஷ்மா பசுபலேட்டி மூலம் அடுத்த அதிர்ச்சியைத் தருகிறார். அடுத்து விஷாக...
லப்பர் பந்து விமர்சனம்

லப்பர் பந்து விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வெற்றி என்பது இலக்குகளைத் தீர்மானித்து ஓடுவது அல்ல நான்கு பேருக்கு நன்மை பயக்கும் விதமான மாற்றத்துக்கு முன்னுரிமை தருவதென்ற மிக மெச்சூர்டான விஷயத்தைப் பேசியுள்ளது படம். கிரிக்கெட் மீதான ஈடுபாடு, ஈகோ, காதல், குடும்பம், உறவுகளுக்குள் உண்டான பிணைப்பு, ஈகோவைத் துறத்தல்,மென்னுணர்ச்சி (Sentiment), எமோஷன்ஸ், நட்பு, சாதி, சமூக நீதி என இப்படம் கலந்து கட்டி ஒரு பக்கா கமர்ஷியல் படமாக ரசிக்க வைக்கிறது. "கெத்து" என அழைக்கப்படும் 39 வயது நட்சத்திர பேட்ஸ்மேனை ஆஃப் சைடில் பந்து போட்டுத் தன்னால் அவுட்டாக்க முடியுமெனத் தன் நண்பனிடம் சொல்கிறான் நட்சத்திர ஆல்-ரவுண்டரான அன்பு. அதைக் கேட்டுவிடுகிறார் கெத்தின் நண்பன். சின்னதாய்த் தொடங்கும் இந்த மோதல், கெத்து - அன்புக்கிடையே பலமான ஈகோவாக வளர்ந்து விடுகிறது. கெத்தின் மகளைத்தான் தான் காதலிக்கிறோம் என அன்புவிற்குத் தெரிய வருகிறது. காதலா, மோதலா, கிரிக்கெட்டா, குடும்...