
பிக் பாஸ் 3: நாள் 96 – பட்டாம்பூச்சியாய் லாஸ்
முந்தைய நாளில், 'நான் வீட்டுக்கு போகணும்' என லாஸ் அழ, எல்லோரும் உட்கார்ந்து சமாதானபடுத்தினர். இரண்டு நாளைக்கு முன்னாடி கவினிடம், 'இன்னும் கொஞ்ச நாள் தானே!' என அடவைஸ் பண்ணினார். 'அந்த அட்வைஸ் உனக்குக் கிடையாதா? நீயே இப்படி செய்யலாமா?' என முகின் கேட்க, ஷெரினும் வந்து சமாதானப்படுத்த, கொஞ்சம் நார்மலுக்கு வந்தார் லாஸ்.
9.30 மணிக்கு திடீர் என பாட்டு போட, 'வரப்போறது ஐஸ்வர்யா தான்' என தர்ஷன் அடுத்த நொடியே சொன்னார். மிகத் தெளிவாகத் தான் இருக்கார்.
சென்ற சீசனின் சர்வாதிகாரி ஐஸ்வர்யா உள்ளே நுழைந்தார். கமல் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால், "ஒரு ட்ரெஸ்ஸு போட்டிருந்தா. அய்யோ அத்த நீ பார்க்கணுமே! முத்தி போன பைத்தியம் தன் ட்ரஸ்லாம் தானே கிழிச்சுக்குமே அப்டி இருந்தது."
ஐஸ்வர்யாவும், "அலேகா" என்ற தன் படத்தின், போஸ்டரை ரிலீஸ் பண்ணினார். அதற்கப்புறம் உரை வேற!
ஐஸு வந்ததற்காக ஒரு டாஸ்க். இரவு 10 மணிக்கு டாஸ்க...