பிக் பாஸ் 3: நாள் 75 | ‘பயங்கரமா ஸ்கெட்ச் போடுவோம்’ – நரி விருது வென்ற சாண்டி
பாய்ஸ் அணி உள்ளே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கவின், மீசை, தாடி எல்லாம் ட்ரிம் பண்ணி சின்ன பையன் மாதிரி இருந்ததை அவரே கிண்டல் பண்ணிக் கொண்டார். சாண்டி ஸ்கூல் டாஸ்கிக் பேசின மாதிரி பேசினார். இந்த வீட்டில் சாரி கூடாது, சிரிக்கக் கூடாது, அழக்கூடாது என கவின் சொல்ல, 'மொத்தத்துல மனுசனாவே இருக்கக்கூடாது' என சாண்டி முடித்தது அல்டிமேட்.
ஷெரின் இப்பவும் அழுது கொண்டே இருக்க, தர்ஷன் சமாதானபடுத்த பேசினார். 'யாரோ சொல்றதை நீ ஏன் சீரிஸா எடுத்துக்கிற?' எனக் கேட்ட போது, 'அது யாரோ இல்ல, என் ப்ரெண்ட். நீ பேசினா எப்படி ஹர்ட் ஆவேனோ, அப்படித்தான் வனிதாவும்' எனச் சொன்னபோது, 'இவ்வளவு அழுகையிலேயும் எவ்வளவு தெளிவாகப் பேசுகிறார்' என ஆச்சரியமாக இருந்தது. ஒரு நண்பர் நம்மைத் தப்பாக பேசிட்டார் எனத் தெரிந்தால், 'அவன்லாம் ஒரு மனுசனா?' என அந்த நொடியிலேயே தூக்கிப் போடும் உலகத்தில், இம்புட்டு நல்ல மனசு ஷெரினுக்கு ஆகா...