Tag: Done Media

தங்கையின் கனவு நனவானது – நடிகர் சூர்யா
நடிகர் சிவகுமாரின் மகள் பிருந்தா, மிஸ்டர் சந்திரமெளலி படத்தில் பாடகராக அறிமுகமாகியுள்ளார்.
“என் தங்கை பிருந்தாவுக்கு குழந்தை பருவத்தில் இருந்தே பாடகி ஆவது கனவு. எங்கள் குடும்பத்தில் நான், கார்த்தி யாருமே சிபாரிசில் எதுவும் செய்ததில்லை. பிருந்தாவும் அவள் முயற்சியால் மட்டுமே இன்று பாடகி ஆகியிருக்கிறாள். என்னை இயக்குநர் வசந்த் அழைத்து ‘நேருக்கு நேர்’ படத்தில் நடிக்க வைத்தார். தம்பியை ஞானவேல்ராஜா தான், ‘நான் பார்த்துக்கிறேன்’ எனச் சொல்லி நாயகன் ஆக்கினார். அதே போல், பிருந்தாவிற்கும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அழைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்துள்ளார். அவர் எங்கப்பாக்கு மூத்த மகன் போல். அவருக்கு மிகவும் நன்றி” என்றார் நடிகர் சூர்யா.
“அந்தக் குடும்பத்தில் இருந்து இலட்சுமி சிவகுமாரும், ரஞ்சனி கார்த்தி, இரண்டு பேரும் தான் திரைத்துறைக்கு இன்னும் வரவில்லை. மற்றவர்கள் அனைவரும் வந்துட்டாங்க” என்றார் மிஸ்டர்...

அல்லு அர்ஜுனின் – என் பெயர் சூர்யா
ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு தயாரித்துள்ள படம் 'என் பெயர் சூர்யா - என் வீடு இந்தியா'. அல்லு அர்ஜுன், அனு இம்மானுவேல், அர்ஜுன், சரத்குமார், நதியா, பொமன் இரானி நடித்திருக்கின்றனர்.
"அல்லு அர்ஜுன் கேரியரில் இது ஒரு சிறந்த படம். இந்தப் படத்தைப் பார்த்தவுடன் என் பெயர் ஸ்ரீதர், என் வீடு இந்தியா என்று தான் சொல்லத் தோன்றியது. பாகுபலி, பாகமதி உட்பட தெலுங்குப் படங்களைத் தமிழ்நாட்டில் முழுமனதோடு வரவேற்ற அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. இந்தப் படத்துக்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார் தயாரிப்பாளர் ஸ்ரீதர் லகடபாடி.
"பாகுபலிக்குப் பிறகு இந்திய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் இந்தப் படத்தில் நான் வேலை செய்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தியாவுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கதாபாத்திரம் தான் நாயகன் அல்லு அர்ஜுன் கதாபாத்திரம்.
தளபதி ரஜினி சார், நடிகர் ...

சேரனின் ராஜாவுக்கு செக்
தமிழ்த் திரையுலகைச் சூழ்ந்திருந்த கருமேகங்கள் முற்றிலும் விலகி விட, நல்ல கதையம்சத்தோடு மிக வேகமாக உருவாகி வந்த "ராஜாவுக்கு செக்" படம் மீண்டும் பணிகளைத் துவக்கியுள்ளது. சேரன், நந்தனா வர்மா, சராயு மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, இர்ஃபான் ஆகியோர் நடிக்கிறார்கள்.
மலையாளத் திரைத்துறையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட் இந்தப் படத்தை, 'பல்லாட் கொக்கட் ஃபிலிம் ஹவுஸ்' சார்பில் தயாரிக்கிறார்கள். படத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளதாகச் சொல்கிறார்கள்.
"மலையாளத் திரையுலகில் கதை ரீதியாகவும், தரம் ரீதியாகவும் நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறோம். உலகம் முழுக்க தமிழ் சினிமாவின் பரவலும், வர்த்தகத்துக்கு நிறைய வாய்ப்புகளும், மிகுதியான திறமையாளர்களும் இருப்பதால் தமிழ் சினிமாவில் படம் எடுக்க காலடி எடுத்து வைத்திருக்கிறோம். ஒரு நடி...

இசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்
தனது இசையால் தமிழ் மனங்களைக் கொள்ளை கொண்ட இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
"நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின் கதாநாயகன் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவேர்கொண்டா. இளம் ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம். இப்போது அந்த திரைப்படத்துக்கான இசைக்கோர்ப்பு நடந்து வருகிறது. விரைவில் தலைப்பு பற்றிய முறையான தகவல் வரும். இந்தப் படத்தின் இயக்குநர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே ‘மரோ பிரபஞ்சம்’ என்ற குறும்படத்தில் பணியாற்றினோம்.
தமிழில் சசிகுமார் நடிக்கும் "நாடோடிகள் 2" , அதர்வா நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த, எஸ்.ஜே,சூர்யாவின் பெயரிடப்படாத ஒரு புதிய படம் என்று படங்கள் இருக்கிறது. மலையாளத்தில் ஏற்கனவே அறிமுகம் ஆகிவிட்டேன். தற்போது தெலுங்கிலும் அறிமுகமாவது எனக்கு மிகுந்த பெருமை. இசைக்கு எப்...

மிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை
எந்தத் தொழில் நமக்குச் சோர்வே தராததோ, அதுவே நமக்கான தொழிலாகும். அப்படியாக சினிமா தொழிலைக் கருதும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரியும் படம் தான் 'Mr.சந்திரமௌலி'.
சரியான திட்டமிடுதல் படத்தின் பாதி வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை உறுதியாக நம்பும் அணி இது. திரு இயக்கத்தில், கார்த்திக், கெளதம் கார்த்திக், வரலட்சுமி சரத்குமார், ரெஜினா கசண்டரா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'Mr.சந்திரமௌலி' முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதலோடு செயல்பட்டு வருகிறது. இந்தப் படத்தை BOFTA Media works India Private Limited சார்பில் 'Creative Entertainers and Distributors' நிறுவனம் தயாரிக்கின்றது.
இது குறித்து இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , ''படத்தின் எல்லாக் கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்...

சிவசக்தி – சென்னையின் ‘பாடி’யில் அதிநவீன திரையரங்கம்
சென்னையின் அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக, நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணைக் கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் எனக் காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்தத் திரையரங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் இளைஞர் அணி தலைவர் கோ.ப.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்துத் திறந்து வைத்தார்.
"அண்ணா நகருக்கும், பாடிக்கும் இடையில் சிறப்பான இடத்தில் அமைந்திருக்கிறது எங்களின் சிவசக்தி திரையரங்கம். அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான, தரமான, நிறைவான பொழுதுபோக்கினை நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் வகையில் இந்தத் திரையரங்கை – இரண்டு திரைகள் கொண்டதாக உருவாக்கியிருக்கிறோம். இளம் ரசிகர்கள் விரும்பும் வகையில் அனைத்து மொழி படங்கள...

துல்கருடன் நடிக்கும் ரக்க்ஷன்
துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்தில் ரக்க்ஷன் நடிக்கிறார். தொலைக்காட்சியிலிருந்து சினிமாவிற்குச் சென்றிருக்கும் புதுவரவு. இது இவர் நடிக்கும் முதல் படமாகும். இந்தப் படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிரான்சிஸ் கண்ணூக்கடன்.
தனக்குக் கிடைத்த முதல் பட வாய்ப்பு பற்றி, ''நடிப்பில் சாதிக்க வேண்டும் என்பது என்றுமே எனது கனவாகும். ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த வேளையில் தான் எனக்கு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இது போன்ற ஒரு மிகச் சிறப்பான கதையிலும் கதாபாத்திரத்திலும் நான் நடிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் படத்தில் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் நகைச்சுவை கலந்த சுவாரசியமான கதாபாத்திரமாகும். இந்த வாய்ப்பை எனக்கு தந்த இய...

லைக்காவின் கரு – ஸ்டில்ஸ்
" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]

அமலா பாலின் தொண்டு நிறுவனம்
பெரும்பாலான இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு நடிப்பது மட்டுமில்லாமல் இந்த இளைஞர்களை வழிப்படுத்தும் பொறுப்பும் உள்ளது. திரையைத் தாண்டி அவர்களது பொறுப்பு நீள்கிறது என்பதை நடிகை அமலா பால் தற்பொழுது நிரூபித்துள்ளார்.
கஷ்டப்படும் மக்களுக்குச் சேவை செய்வதற்காக, அமலா ஹோம் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் அமலா பால். இந்த நிறுவனம் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியைத் திரட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடவுள்ளது.
தனது தொண்டு நிறுவனம் குறித்து, ''அகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடைப்பேச்சுக்குத் தயார் செய்து கொண்டிருந்த பொழுது தான் சில முக்கியமான புள்ளிவிவரங்களை நான் கவனித்தேன். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் இதில் 70...

மதிப்பெண் இல்லாக் குழந்தைகள் நிகழ்ச்சி
சமீபத்தில் தமிழில் மிகப் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை 'கலர்ஸ் தமிழ்'. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் 'கலர்ஸ்' தொலைக்காட்சி தனது மிக வித்தியாசமான மற்றும் தரமான நிகழ்ச்சிகளுக்குப் பெயர் போனது.
'கலர்ஸ் தமிழ்' தொலைக்காட்சியில் படிப்பைத் தாண்டி வியக்கத்தக்க திறமைகளைக் கொண்ட குழந்தைகளை மையமாக வைத்து 'கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்' என்ற ஒரு ஷோவைத் தொடங்கியுள்ளனர்.
''தொலைக்காட்சியைக் கண்டு ரசிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை வளர்க்கும் வகையிலும், இதுவரை யாரும் காணாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தரவேண்டும் என்ற எண்ணமும் பொறுப்பும் எங்களிடம் இருந்தது. படிப்பைத் தாண்டி பல விஷயங்களும் திறமைகளும் நிறைய உள்ளது என்ற எங்களது எண்ணம் பலரால் வரவேற்கப்பட்டுள்ளது. திறமைகளுக்குப் பஞ்சமே இல்லாத மண் நம்முடையது. நங்கள் தேடிக் கண்டுபிடித்து இந்த ஷோவிற்கு கொண்டு வரும் திறமையான ...







