Shadow

Tag: KSK Selva

“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்

“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்

அரசியல், சமூகம், சினிமா, திரைச் செய்தி
ராஜ்கிரண் என்றழைக்கபடும் J. மொஹைதீன் அப்துல் காதர், ‘கறுப்பர் கூட்டம்’ யூ-ட்யூப் சேனல் வெளியிட்ட கந்த சஷ்டி கவசம் குறித்த ஆபாசமான காணொளியைக் கண்டித்துள்ளார். “ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம். முருகப்பெருமானை நம்புவோர்க்கு, "கந்தர் சஷ்டி கவசம்" என்பது ஒரு பாதுகாப்பு அரண். இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்துவரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன. இறைவனை நம்பாதோர்க்கு, ‘நம்பாமை’ என்பது அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு, ‘நம்புதல்’ என்பது அவர்களின் சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான் மேன்மையானது. தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது மிகவும் கீழ்மையானது. இந்தக் கொடிய கொரோனா காலகட்டத்தில், நோயோடும், நோய் பயத்தோடும், பொருளாதாரச் ச...
மும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு

மும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு

சமூகம்
உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விஷயமும் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. தேர்வுக்கு எப்படி தயாராவது? இப்போதிருக்கும் இறுக்கமான மனநிலையில் தேர்வை எப்படி எதிர்கொள்வது? இப்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மனச்சிக்கலில் இருந்தார்கள். இந்நிலையில் மாணவர்களின் இறுக்கத்தைப் போக்கும் விதமாக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவித்து மாணவர்களின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் கொடுத்தார். இந்நிலையில் தமிழ்நாட்டைப் போலவே மும்பைத் தேர்வு மையத்தில் பதிவு செய்த தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 மும்பை மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும் படி, மகாராஷ்டிரா அம்மா பேரவை செயலாளர் திரு.ராஜேந்திர ராஜன் மாண்புமிகு தமிழக முதல்வரு...
பேரழகி ஐ.எஸ்.ஓ விமர்சனம்

பேரழகி ஐ.எஸ்.ஓ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இளமையையும், பேரழகையும் தரும் சித்தரின் சூட்சும ஃபார்முலா, அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு கார்ப்ரேட் நிறுவனத்திடம் சிக்குகிறது. அந்நிறுவனம், ஆதரவற்ற முதியவர்கள் மீது அந்த ஃபார்முலாவைப் பரிசோதித்துப் பார்க்கின்றனர். அவர்களிடம் சிக்கும் சச்சுவின் மேல் அம்மருந்து பிரயோகிக்கப்பட, சச்சு தன் பேத்தி ஷில்பா மஞ்சுநாத் போல் உருமாறிவிடுகிறார். உருவ ஒற்றுமை ஏற்படுத்தும் குழப்பத்தை நகைச்சுவையாகவும், கார்ப்ரேட் கம்பெனியின் தகிடுதத்தத்தை சீரியசாகவும் படம் சொல்லியுள்ளது. 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாக நடித்துள்ளார். பேத்தி காதலைச் சொல்லிவிட, பாட்டியோ முறைப்பைக் காட்ட, விஜய் தவிக்கும் காட்சிகள் நன்றாக உள்ளன. ஷில்பா மஞ்சுநாதின் அப்பாவாக லிவிங்ஸ்டன் நடித்துள்ளார். அவரது அம்மாவான சச்சுவை, லிவிங்ஸ்டனின் மனைவி சாடை பேசி விட, சச்சு கோபித்துக் கொண்டு வெளியேறி கா...
பேரழகி ஐ.எஸ்.ஓ – சயின்ஸ் ஃபிக்ஷன் படம்

பேரழகி ஐ.எஸ்.ஓ – சயின்ஸ் ஃபிக்ஷன் படம்

சினிமா, திரைச் செய்தி
'பேரழகி ஐ.எஸ்.ஓ ' எனும் படத்தைக் கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ளார். 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகை சச்சு, இயக்குநர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 'நாகேஷ் திரையரங்கம்' புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார். படத்தினைப் பற்றி பேரழகி ஐ.எஸ்.ஓ படத்தின் இயக்குநர் விஜயன் கூறியதாவது, "பேரழகி ஐ.எஸ்.ஓ ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம். சீரியஸாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உ...
மனுஷங்கடா விமர்சனம்

மனுஷங்கடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் முடிவில், "நாங்களும் மனிதர்கள் தான்டா!" என்று கையறு நிலையில் இடுகாட்டில் அழுது புரண்டு அரற்றுகிறார் கோலப்பன். பரியேறும் பெருமாள் படத்தினைத் தொடர்ந்து, தலித்கள் அனுபவிக்கும் கொடுமையை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் பேசுகிறது 'மனுஷங்கடா' திரைப்படம். இந்தப் படம் முடிந்து வெளிவந்ததும், இரண்டு பேர் பேசிக் கொண்டது. "இன்னுமா இப்படிலாம் இருக்கு? என்னமோ படம் எடுக்கிறாங்க!" என்று அலுத்துக் கொண்டார் ஒருவர். அவருடன் வந்த நண்பர், "இன்னும் எங்க கிராமத்தில் இப்படித்தான்ங்க. வேட்டியைக் கூட மடிச்சுக் கட்டக்கூடாது" என்றார். பூனை கண்ணை மூடிக் கொண்டு, உலகம் இருட்டாகிவிட்டது என நினைத்துக் கொள்ளுமாம். அது போல், சமூகம் என்பது தனக்குத் தெரிந்த நான்கு சுவர்கள் மட்டுமே என்ற அறியாமையில் மக்கள் உழல்கின்றனர். அவர்களிடம் உண்மையைக் கொண்டு செல்ல, இது போன்ற படங்கள் மிகவும் அவசியமாகிறது. வழக்கமான திரைப்படம் போலன்...
செந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2

செந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2

சினிமா, திரைத் துளி
கழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பைக் கவனிக்கிறார். மூணாறில் படமாக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் நேற்று முதல் படத்தின் டப்பிங் தொடங்கியது. செந்நாய் வேட்டை பற்றிய படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது....
திரு.குரல் படத்தில் இயக்குநர் மகேந்திரனுடன் நடிக்கும் கிருஷ்ணா

திரு.குரல் படத்தில் இயக்குநர் மகேந்திரனுடன் நடிக்கும் கிருஷ்ணா

சினிமா, திரைத் துளி
அறிமுக இயக்குநர் பிரபு என்பவர் இயக்கும் "திரு. குரல்" என்ற படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 20 முதல் படப்பிடிப்புத் துவங்குகிறது. கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம். சி.எஸ் இசையமைக்கிறார். ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். >> கலை - தியாகராஜன் >> சண்டை - ஹரி >> நடனம் - ஸ்ரீ க்ரிஷ் >> விநியோகம் (உலகமெங்கும்) - சிங்காரவேலன்...
28 நாட்களில் முடிந்த கழுகு – 2

28 நாட்களில் முடிந்த கழுகு – 2

சினிமா, திரைத் துளி
கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் கிருஷ்ணா நடிக்கும் கழுகு - 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. 30 நாட்களில் வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பை முடிப்பதாக உறுதி கூறிய இயக்குநர் சத்யசிவா, 28 நாட்களில் மொத்த வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பையும் இன்று முடித்துக் கொடுத்துள்ளார். 4 கோடியில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் வியாபாரம் 7 கோடியைத் தாண்டும் என சினிமா வட்டாரத்தினாரால நம்பப்படுகிறது. பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் துவங்க இருக்கிறது. படத்தை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடத் தயாரிப்பாளர் சிங்காரவேலன் முடிவெடுத்துள்ளார். முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து நூறு நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்புப் பணிகளையும் முடித்து படத்தை வெளியிடவுள்ளது, தற்போதைய தமிழ் சினிமா சூழலில் மிகப் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது....
தலைப்பிலுமா சென்சாரின் தலையீடு? – கோபத்தில் வாராகி

தலைப்பிலுமா சென்சாரின் தலையீடு? – கோபத்தில் வாராகி

சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் சார்பில் நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் 'சிவா மனசுல புஷ்பா'. ‘இந்தப் படத்தின் தலைப்பைத் தூக்குங்கள்’ எனக் கூறித் தயாரிப்பாளரும் இயக்குநருமான வாராகியை அதிரவைத்துள்ளனர் சென்சார் அதிகாரிகள். இந்தப் பிரச்சனையைப் பொதுவெளிக்குக் கொண்டு செல்வதற்காகவும், சென்சார் அதிகாரிகளின் எதேச்சதிகார போக்கை வெட்டவெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காவும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் வாராகி. "நான் எடுத்துள்ளது அரசியல் காதல் படம். சம கால நிகழ்வுகளைக் கற்பனை கலந்து படமாக்கி இருக்கிறேன். படம் ஓடக்கூடிய மொத்த நேரமே 1 மணி 45 நிமிடங்கள் தான். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்துட்டு இரண்டரை மணி நேரம் விவாதிச்சிட்டு சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்கச் சொன்னார்கள். நான் அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டதால் டில்லியில் உள்ள சேர்மனுக்கு அ...
ஐல – ஹாரர் த்ரில்லர் படம்

ஐல – ஹாரர் த்ரில்லர் படம்

சினிமா, திரைத் துளி
சினிமாவைப் பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்களாகத்தான் இருக்கும். மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத் தருவதால் அறிமுக இயக்குநர்கள் கூட ஹாரர் பக்கமே கவனத்தைத் திருப்புகின்றனர். அந்த வகையில் அறிமுக இயக்குநர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி. ரியங்கா ஃபிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு. தம்பி உன்னி கிருஷ்ணன் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர், ஜே.ரவீந்திரன் சுவிஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர். தற்சமயம் இருவரும் ஃப்ரான்ஸ், சுவிஸ் & இந்தியாவில் Resort and Restaurant நடத்தி வருகிறார்கள். திரு. தம்பி உன்னிகிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி, ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி நடிகர்களை வைத்து தமிழ், மலைய...
சென்னையில் வாட்டர் வேர்ல்ட்

சென்னையில் வாட்டர் வேர்ல்ட்

சமூகம்
சென்னையைப் பொறுத்தவரை கோடை விடுமுறை என்றாலே தீவுத்திடலில் பிரமாண்டமாக நடைபெறும் இந்திய சுற்றுலா பொருட்காட்சி தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அந்த வகையில் சென்னையின் இந்த வருட கோடை விடுமுறை கொண்டாட்டமாக அமைய இருப்பது, ஏப்-27 ல் தொடங்கி ஜூன்-4 ஆம் தேதிவரை நடைபெற இருக்கும் 44வது இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அமைந்திருக்கும் 'வாட்டர் வேர்ல்ட் (Water World)' ஆகத்தான் இருக்கும். வழக்கமான ஜெயன்ட் வீல் மற்றும் அது சார்ந்த கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல் இந்த முறை, வாடிக்கையாளர்களுக்கு சலுகை தரும் விஷயமாக சத்யா எலெக்ட்ரானிக்ஸின் மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் மேளாவும் நடைபெற இருக்கிறது. இந்த முறை கோடையின் தீமாக (Theme) நீர் உலகம் (Water World) இருக்கும். ஆகையால் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக ராட்சஷ நீர்வீழ்ச்சி இருக்கும் என்பதில் ஐயமில்லை. நிஜ ந...
6 அத்தியாயம் விமர்சனம்

6 அத்தியாயம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆறு இயக்குநர்களின் குறும்படங்களை தொகுத்து '6 அத்தியாயம்' என்று ஒரே படமாக இணைத்துள்ளனர். அமானுஷ்யம் தான் இந்த ஆறு படங்களையும் இணைக்கும் கண்ணி. பொதுவாக இப்படி இணைக்கப்படும் படங்கள், ஒரு குறும்படம் முடிந்த பின் இன்னொன்று எனத் தொடங்கும். ஆனால், எல்லாப் படத்தின் க்ளைமேக்ஸையும் கடைசி அரை மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டியுள்ளனர். இந்தப் பரீட்சார்த்த பாணி உலக அளவில் இதுவே முதல் முறை என்பது படத்தின் தலையாய சிறப்பு. 1. சூப்பர் ஹீரோ இயக்கம் - கேபிள் சங்கர் தன்னை சூப்பர் ஹீரோவாக ஒருவன் கருதுகிறான். அவனது வீட்டினரோ அவனுக்கு மனநலக் கோளாறு உள்ளதாக நினைக்கின்றனர். அதனால் அவனை மனநல மருத்துவரிடம் அழைத்து வந்து விடுகின்றனர். அவருக்கும் மனநல மருத்துவருக்கும் நடக்கும் உரையாடலே படத்தின் கதை. 2. இது தொடரும் இயக்கம் - சங்கர் தியாகராஜன் சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த ஒருவனைப் பேய்கள் எப்படிப...
6 அத்தியாயம் எப்படியிருக்கு?

6 அத்தியாயம் எப்படியிருக்கு?

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் பாரதிராஜா: தெளிவான சிந்தனை. சரியான திட்டமிடல், புதிய வகை கதை சொல்லல் என தமிழ்சினிமாவைப் புது தளத்திற்கு அழைத்துச் செல்லும் இந்த 6 அத்தியாயம். இயக்குநர் ஏ.வெங்கடேஷ்: ரொம்பவே வித்தியாசமான முயற்சி. 6 கதைகளின் முடிவும் ஆச்சரியபடுத்துகின்றன. நிச்சயம் வெற்றி பெறும். 6 இயக்குநர்களுக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் அறிவழகன்: இந்தப் படத்தில் கையாளப்பட்ட திரைக்கதை யுக்தி பார்வையாளர்களின் துடிப்பை இறுதிவரை பரபரப்பாகவே வைத்திருக்கும். அதுவே இதன் வெற்றி! இயக்குநர் ரவிகுமார்: இந்த ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு திறமையான 6 இயக்குநர்கள் மற்றும் நிறைய இளம் டெக்னிசியன்களை அறிமுகவாவதே இதன் சிறப்பு. இயக்குநர் தாமிரா: ஒரே படத்தில் பலவித வண்ணங்கள் பலவித சுவைகள் உங்களைச் சுவாரசப்படுத்தும். இயக்குநர் மீராகதிரவன்: ஆறு இயக்குநர்களின் பார்வையில் ஆறுவிதமான பேய்கள் பற்றிய அலசல் தமிழ்சினிமா கண்டிராத...
ஆறாம் திணை – ஃப்ளாஷ்-பேக் இல்லா பேய்ப்படம்

ஆறாம் திணை – ஃப்ளாஷ்-பேக் இல்லா பேய்ப்படம்

சினிமா, திரைச் செய்தி
லக்கி ஸ்டார் எனும் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது 'நான் கடவுள்' ராஜேந்திரனுக்கு. பேய்ப்படமான 'ஆறாம் திணை' படத்தின் நாயகனும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. MRKVS சினி மீடியா சார்பாக ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. பேய்களுக்கும் லாஜிக் உண்டு என்ற கருவோடு, முதல்முறையாகப் பேய்களுக்கு ஃப்ளாஷ்-பேக்கும் வைக்காமல் கதையைக் கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் ஈரோடு அருண்.சி. 'ஆறாம் திணை'க்கு, பேயும் பேய் சார்ந்த இடமும் எனக் கேப்ஷன் அளித்துள்னர்.  கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார்.  முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். ராஜ் கே .சோழன் இசையமைத்துள்ளார். “பேய் உண்மையிலேயே இருக்கு. பணப்பேய், பதவிப்பேய், காமப்பேய், மதப்பேய், ஜாதிப்பேய் என இப்படிப் பல பேய்கள் நமக்குள்ளேயே...