Shadow

Tag: ரஜினி

தர்பார் விமர்சனம்

தர்பார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முருகதாஸ் இயக்கியிருந்தாலும், இது ரஜினி படமாக மட்டுமே உள்ளது. ரஜினி படம், ரஜினி படமாக இல்லாமல் இருந்தால்தான் ஏமாற்றமளிக்கும். ரஜினி எனர்ஜியாக, ஸ்டைலாக, அழகாகத் தெரிகிறார் திரையில். தர்பார் என்பது அரசவையைக் குறிக்கும். தனது தர்பாருக்கு உட்பட்ட மும்பையைக் காவல் பரிபாலனம் செய்யும் ஐபிஎஸ் அதிகாரியான ஆதித்யா அருணாச்சலத்தின் மகள் கொல்லப்படுகிறார். மரணத்தால் மிகுந்த மனச்சோர்வில் உழலுகிறார். யாரால் அவர் மகள் கொல்லப்பட்டார் என்று கண்டுபிடிப்பதும், எவ்வாறு தன் மகளின் மரணத்திற்குக் காரணமானவரைப் பழிவாங்கினார் என்பதும்தான் படத்தின் கதை. இப்படத்திற்கு, என்கவுன்ட்டர் என்ற தலைப்பு தான் பொருத்தமாய் இருந்திருக்கும். என்கவுன்ட்டரை ஆதரிக்கும் ஆபத்தான போலீஸ் கருவைத் தொட்டுள்ளார் முருகதாஸ். லில்லி எனும் பாத்திரத்தில் நயன்தாரா தோன்றியுள்ளார். உண்மையில் இது நாயகியே தேவையில்லாத படம். நயன்தாரா வரும் காட்சி...
‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
ஏவிஎம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் "அந்த நாள்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டார்.கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், "அந்த நாள்" படம் வெற்றி பெறவும் வாழ்த்து கூறினார். அந்த நிகழ்ச்சியில் ஏவி.எம்.சரவணன், இயக்குநர் S.P.முத்துராமன், கதாநாயகன் ஆர்யன் ஷாம், திருமதி அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குநர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் R. ரகுநந்தன் தயாரிக்கிறார். ...
பார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள்

பார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள்

சினிமா, திரைத் துளி
உலகத் திரைப்பட சாதனை முயற்சியாக ராதாகிருஷ்ணன் பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒத்த செருப்பு படத்துக்கு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு குவிந்து வருகிறது. ரசிகர்களுக்கு நெருக்கமான ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி ஆமீர்கான், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால் மற்றும் கே.ஜி.எஃப். யாஷ் ஆகியோரும், இப்படத்தைத் தயாரித்து இயக்கியதுடன், தனியொரு மனிதனாகத் தோன்றி, முழுப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கும் பார்த்திபனின் வானளாவிய சாதனையை வாயார வாழ்த்திப் புகழ்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘பார்த்திபனின் அபாரமான இந்த முயற்சி, உலக அளவில் அங்கீகாரம் பெற வேண்டும். எனவே சப்-டைட்டிலுடன் படத்தை ஆஸ்கார் விருது தேர்வுக்கு அனுப்ப வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசன் தன் வாழ்த்துச் செய்தியில், ‘ஏற்கெனவே ஒற்றைப் பாத்திரமாகப்...
முள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்

முள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்

சினிமா
மகேந்திரனுக்குப் புனைவுகளைப் பற்றிய நுண்மையானதொரு புரிதல் இருந்தது. அதைப் பார்வையாளனை உள்ளிழுக்கும் விதமாகத் திரைமொழியாக மாற்றும் வித்தை இயல்பாக அமைந்திருந்தது. புதுமைப்பித்தனிடமிருந்து அவர் உந்துதல் பெற்று உதிரிபூக்கள் எழுதினார் என்பது ஒன்றே அவருடைய படைப்பூக்கத்தின் மேன்மைக்கு சான்று. உதிரி பூக்கள் தமிழ் சினிமாவிற்கான அடையாளத்தில் ஒன்று. அவருக்கு மிகச் சிறப்பான திரைமொழி ஞானம் இருந்தது. அது அவருக்கு இயல்பாக அமைந்திருந்தது. ‪‘முள்ளும் மலரும்’ குறுநாவலாக பரிசு பெற்ற படைப்பு. ஆனால் மகேந்திரனின் திரைக்கதை அமைப்பில் அது இன்னமும் சில உச்சங்களைக் கண்டது. ‬ காளிக்குத் தன்னுடைய மேலதிகாரி மீது தீராத எரிச்சல். அவர் பேசும் இறுக்கமான சட்டதிட்டங்கள் அவனுடைய சாதாரண வாழ்க்கையைக் குறையுள்ளதாகக் காட்டுகிறது. ஆனால் அந்த அதிகாரியும் காளியின் தங்கையும் ஒருவர்பால் ஒருவர் ஈர்ப்புக் கொள்கிறார்கள். இதை சாதா...
பேட்ட விமர்சனம்

பேட்ட விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ட்ரெய்லரில் பார்த்த அதே இளமையான துள்ளலான ஸ்டைலான ரஜினியைத் திரையில் கொண்டு வந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். எதற்கும் காத்திருக்காமல் படம் நேரடியாக ஒரு மாஸ் ஃபைட் சீனில் இருந்து தொடங்குகிறது. ரஜினிஃபை பண்ணப்பட்ட படத்தில் ரஜினி எது செய்தாலும் அழகாக உள்ளது. திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில் படத்தின் முதற்பாதி ஒரு வண்ணக்கவிதையாய்க் கண்ணைக் கவர்கிறது. திணிக்கப்படாமல், அதே சமயம் வசனங்களில் அரசியலையும் கொண்டு வந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஹாஸ்டலில் ரேகிங் நடக்கும்பொழுது, அதை நிறுத்தும் ரஜினி, 'புதுசா வர்றவங்களை வர விடாமல் இப்படித்தான் ஓரம் கட்டி வைப்பீங்களா?' என சீனியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்பது போல் வரும் வசனம் ஓர் உதாரணம். அனைவரும் பார்க்க விரும்பிய ரஜினியைத் திரையில் கொண்டு வந்த கார்த்திக் சுப்புராஜ், கதையில் அதிகம் மெனக்கெடவில்லை. ஒரு பழி வாங்கும் கதையை எந்தப் பெரிய திருப்பமும் இல...
இது ரசிகர்களின் பேட்ட

இது ரசிகர்களின் பேட்ட

சினிமா, திரை விமர்சனம்
தீபாவளி பொங்கலுக்கான காத்திருப்புகள் மறைந்து போயிருந்த போதிலும், பட்டாசுகளும் பொங்கப்பொடியும் நினைவுகளின் தூசிக்கு அடியில் உறங்கிப் போயிருந்தாலும் எப்போதுமே குறையாமல் இருப்பது ரஜினி பட ரிலீஸ் மட்டுமே. லிங்கா, கோச்சடையான் மழுங்கி, கபாலி நல்லா இருக்கா இல்லையா என்று மழுப்பி காலா நல்லா இல்லன்னு சொன்னா இந்துத்துவா ஆகிருமோன்னு குழம்பி, 2.0 தலைவா 'உன்னால டயலாக்க ஒழுங்கா பேச முடியல தலைவா, இனி நடிப்பு வேணாம்' எனப் பரிதாபம் கொள்ளச்செய்த நிலையிலும், "பேட்ட பேட்ட" என்ற பரபரப்பு உச்சத்திற்குச் சென்றிருந்தது என்றால் அதற்கு ஒரே காரணம் ரஜினி. எப்போதுமே ஜெயிக்கிற குதிரை அது. அந்தக் குதிரையை சரியான களத்தில் விட்டால் எப்படியிருக்கும் என்பதை செய்து காட்டி இருக்கிறது பேட்ட. படம் ஆரம்பித்ததில் இருந்தே ரஜினியிசம் தான். 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!' என்ற முதல் வசனத்தில் இருந்து, 'இந்த ஆட்டம் போதுமா கொழந்த?' ...
திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்

திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்

சினிமா, புத்தகம்
'திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் தொல்காப்பியன். "சரிகமபதநி" எனும் ஏழு ஸ்வரங்களைப் போல 7 தலைப்புகளில் தொல்காப்பியன், தன் மேன்மைத் தமிழில் , அவருடைய உளவியல் பார்வையைப் படரவிட்டு, சமூகம், கலை, பண்பாடு ஆகிய மூன்றையும் ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்தி மிகச் சிறந்த ஆய்வுப் புத்தகத்தைப் பொருத்தமான நேரத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புத்தகம் ஒரு 'சினிமா அறிவியல் (Cinema Science)' புத்தகம் என்ற வகைப்பாட்டில் முதன்மைப்படுத்தி வைக்கலாம். ஓர் எழுத்தாளன் எழுத்துக்களை எப்படிக் கோர்த்து எழுதவேண்டும் என்பதற்கு இந்தப் புத்தகமே சரியான முன்னுதாரணம். முனைவர் பட்டம் பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்ட புத்தகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு அற்புதமான செய்திகளைத் தாங்கி நிற்கிறது. சினிமாவைப் பற்றிய புரிதலும் ஆர்வமும், அதன் மீது கொண்ட காதலும் வெறியும், ஒரு சே...
2.0 விமர்சனம்

2.0 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு படத்திற்கான பட்ஜெட் 500 கோடி என்பது வருங்காலங்களில் சகஜமாகக்கூடும். ஆனால், தற்பொழுது, இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக அந்த மைல்கல்லைத் தமிழ் சினிமா தொட்டுள்ளது என்பது மிகப் பெருமைக்குரிய அசாதாரணமான நிகழ்வு. சூப்பர் ஸ்டாராகிய ரஜினி மட்டுமே இதற்கு முழுக்க முழுக்கக் காரணம். அசாதாரணத்தைச் சாத்தியமாக்கிய லைக்கா ப்ரொடெக்‌ஷன்ஸ்க்கே எல்லாப் புகழும்! படம் திகட்டத் திகட்ட விஷுவல் விருந்தை அளிக்கிறது. திரையை விட்டுச் சீறி வரும் ரஜினியின் தோட்டாகளைக் காணக் கண்டிப்பாகப் படத்தை 3டி-இல் பார்க்கவேண்டும். டைட்டில் கார்டிலேயே, பார்வையாளர்களை 3டி தொழில்நுட்பம் பிரம்மிக்க வைத்துவிடுகிறது. பெரிய பூர்வாங்க பில்டப்கள் இல்லாமல், கதைக்குள் உடனடியாகச் சென்று விடுகிறது படம். சென்னையைச் சுற்றி 200 கி.மீ.இல் உள்ள செல்ஃபோன்கள் எல்லாம் பறந்து மாயமாகின்றன. அது ஏன், எப்படி, யாரால் நிகழ்கிறது என்பதும், அதை வசீகரன...
2.0 எனும் அதி பிரம்மாண்டம்

2.0 எனும் அதி பிரம்மாண்டம்

சினிமா, திரைச் செய்தி
300 கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படம், 550 கோடிக்கு நீண்டுவிட்டது என்கிறார் ரஜினி. ஆனாலும், படம் அதனை வசூலித்துவிடும் என்கிறார் ரஜினி மிக நம்பிக்கையுடன். படத்தொகுப்பாளர் ஆண்டனி, மூன்று முறை எடிட்டிங் செய்துள்ளார். ஒன்று, அனிமேஷன் வடிவிலான ப்ரீ-விஷுவலைசேஷன்; இரண்டு, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல்; மூன்றாவது, விஷுவல் எஃபெக்ட்ஸ்களுடன் என மொத்தம் மூன்று முறை முழுப் படத்தையும் தொகுத்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அப்படியே! படம் தொடங்கும் முன் ஒருமுறை, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல் மற்றொரு முறை, தற்போது, அட்டகாசமான விஷுவல் எஃபெக்ட்ஸ்களுக்கு ஈடு செய்யும் வகையில் இசையமைத்து வருகிறார். உலகத்திலேயே முதல் முறையாக, செளண்ட் டிசைனிங்கில் 4டி (4D - SRL) தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தியுள்ளார் ரசூல் பூக்குட்டி. உபயோகப்படுத்தியுள்ளார் என்பதை விட, உருவாக்கியுள்ளார் என்பதே சரி. தங்களது புதிய பரிமாணத்திற்...
காலா நிகழ்த்தும் வண்ணக்கோலங்கள்

காலா நிகழ்த்தும் வண்ணக்கோலங்கள்

சினிமா
என்னுடைய அண்மைக்கால கொள்கையில் ஒன்றாக, இயன்றளவு கேளிக்கைக்குக் குறைவாகப் பணம் செலவழிப்பது என்று எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். விலையில்லாமலே எவ்வளவோ சிறந்த புத்தகங்களும், நல்ல எழுத்துகளும், தரமான ஆவணப்படங்களும் காணக் கிடைக்கின்ற இக்காலத்தில், ஏனோ நாம் peer pressure-இல் அதிக பணம் செலவழித்து, புதிய படங்களைப் பார்க்க ஓடுகிறோம். அதுவும் ரஜினிகாந்த் போன்ற செல்வாக்கான, பெரும் ஆளுமைகள் நடித்த திரைப்படம் என்றால் நம் ஆவல் கட்டுக்கடங்காமல் பெருகி விடுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் 'காலா' திரைப்படத்தைப் பற்றி நிறைய எதிர்பார்ப்புகள் பெருகி வர, திரைப்படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித்தின் பேட்டிகளும், முந்தைய படங்களும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. 'நான் திரைப்படம் எடுக்க வந்திருப்பதே, நான் நம்பும் கருத்தியலை, பொதுமக்களுக்கான வெளியில் பேசுவதற்காகத்தான்' என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். இத...
காலா விமர்சனம்

காலா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மும்பையின் மத்தியில் இருக்கும் தாராவி எனும் சேரிப்பகுதி கரிகாலனின் கோட்டையாக விளங்குகிறது. அதைத் தரைமட்டமாகிக் கட்டடங்களாக்குவது தான் அரசியல்வாதி ஹரி தாதாவின் 'ப்யூர் மும்பை' திட்டத்தின் நோக்கம். சாமானிய மக்களின் பாதுகாவலனாக விளங்கும் காலாவிற்கும், மும்பையின் மொத்த அதிகாரத்தையும் கைக்குள் கொண்டுள்ள ஹரி தாதாவிற்கும் நடக்கும் போர் தான் 'காலா'. ஆம், படத்தின் இடைவேளையின் பொழுது போர் தொடங்குகிறது. தாராவியின் சிஸ்டம் ஸ்தம்பிக்கிறது. காலா, மக்களை ஒருங்கிணைத்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகின்றார். அதில் சமூக விரோதிகள் என்ட்டரியாகி விடுகின்றனர். மக்கள் போராட்டத்தைப் போலீஸார் அடாவடியாகக் கலைக்கின்றனர். கருப்பு மலர்கிறது. சுபம். பில்டப் அளவிற்கு, காலா பாத்திரத்தை வலுவானதாய்ச் சித்தரிக்காததோடு, பில்டப்பே இன்றி ஹரி தாதா பாத்திரத்தை மிக அழகாகச் செதுக்கியுள்ளார் ரஞ்சித். ஹரி தாதாவாய் நானா படேகர் ப...