Shadow

Tag: Thiraivimarsanam in Tamil

SIR விமர்சனம்

SIR விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வாத்தியார் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானத்தின் தாத்தாவும் அப்பாவும் ஆசிரியராக இருந்தவர்கள். கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும், கல்வியே எல்லாத் தளைகளில் இருந்தும் விடுதலை அளிக்கும் என உயர்ந்த லட்சியத்துடன் 1950 களில், ஒரு பள்ளியைத் தொடங்குகிறார் சிவஞானத்தின் தாத்தா. அவர் விட்ட வேலையைச் சிரமேற்கொண்டு ஆத்மார்த்தமாக ஆசிரியப் பணியைச் செய்கிறார் சிவஞானத்தின் அப்பா. உயர்நிலைப்பள்ளியாக உயர்த்த அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வியர்த்தமாகிறது. தந்தை மற்றும் தாத்தாவின் கனவை அறியாத சிவஞானம், ஊரை விட்டு மாற்றலாகிச் சென்றுவிட நினைக்கிறார். தன் குடும்பம் எதற்காகப் போராடுகிறது என உணரும் சிவஞானம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் படத்தின் அடிநாதம். ஒருவரை ஒடுக்கித் தங்கள் ஆளுகைக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்றால், அவர்கள் மனதில் மூடநம்பிக்கைகளை விதைத்து, அவர்களுக்குக் கல்வியறிவு கிடைக்காமல் பார்த்துக் கொ...
வேட்டையன் விமர்சனம்

வேட்டையன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
"மன்னிக்கிறவன் மனுஷன். மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்."- அன்னலட்சுமி, சின்ன கோளாறுபட்டி விரைவான நீதியை அளிக்கும் அவசரத்தில், நிரபராதியை என்கவுன்ட்டர் செய்து விடுகிறார் காவல்துறை கண்காணிப்பாளர் அதியன். நீதிபதி சத்யதேவால், கொலை செய்யப்பட்டவன் நிரபராதி எனத் தெரிந்ததும், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் அதியன். ரஜினியிசத்தை மிக கிரேஸ்ஃபுல்லாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார் த.செ.ஞானவேல். எனினும் ஜெயிலரின் நீட்டித்த பதிப்போ எனும் தோற்றத்தை எழுப்புகிறது. படத்தை ரசிக்கும்படியாக மாற்றுவது 'பேட்டரி' பேட்ரிக்காக நடித்திருக்கும் ஃபஹத் ஃபாசில் மட்டுமே! ரஜினி போன்ற கரீஸ்மாட்டிக் ஹீரோவையும் சுலபமாக ஓரங்கட்டி விடுகிறார். 'அறிவு திருடனாகுறதுக்குத்தான் வேணும்; போலீஸாக வேணாம்' என அவர் எந்த வசனத்தைப் பேசினாலும் ரசிக்க வைக்கிறது. நீதிபதி சத்யதேவாக அமிதாப் பச்சனைப் படம் நெடுகே வரும் பாத்திரமாக...
கொட்டுக்காளி விமர்சனம்

கொட்டுக்காளி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கூழாங்கல் படத்தினை இயக்கிய P.S.வினோத்ராஜின் இரண்டாவது படம். முதற்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவா தயாரித்திருந்தனர்; இரண்டாவது படத்தை சிவகார்த்திகேயன் ப்ரொடகக்ஷன்ஸில் இயக்கியுள்ளார். வழக்கமான வணிக, மசாலா படங்களைத் தவிர்த்து பார்வையாளர்களின் சிந்தனையைக் கோரும் படங்களை எடுப்பதற்காகவே இயக்குநருக்கு பாராட்டுக்கள்.  கொட்டுக்காளி என்றால் அழுத்தமான பிடிவாதக்காரி எனப் பொருள் கொள்ளலாம். பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் மீனாவை சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர் மீனாவின் பெற்றோரும், பாண்டியின் குடும்பத்தினரும். மீனாவின் முறைமாமன் பாண்டி ஆவார். வீட்டிலிருந்து கிளம்பி சாமியாரின் இருப்பிடம் வரையிலான அவர்களது பயணமே இப்படம். ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், வினோத்ராஜின் படத்தில் ஒருநாள் நிகழும் சம்பவங்கள்தான் திரைக்கதையாக்கப்படுகிறது. அவரது முதற்படத்தைப் போலவே, இப்படமும் ஒரு பயணத்தை மையப...
வாழை விமர்சனம்

வாழை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வாழைத்தோட்டத்தில் வாழைத்தார்களை சுமை தூக்கப் போகும் சிறுவனின் பார்வையினின்று படம் பயணிக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், இப்படத்தில் தன் பால்யத்தைத் திரைச்சித்திரமாக்கியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த தன்வரலாற்றுப் படத்தை, நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். ஐந்து நாட்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்லும் சிவனணைந்தான்க்கும், அவனது தோழன் சேகருக்கும், வாரயிறுதி என்றாலே எட்டிக்காயைக் கசக்கிறது. காய் சுமத்தல் எனும் வேலைக்கு நிர்ப்பந்தப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர் அம்மாக்கள். ஒரு பகல் முழுவதும், வாழைத்தோட்டத்தில் இருந்து வாழைத்தார்களைச் சுமந்து, கால்வாய்கள் அடங்கிய வழுக்கும் வரப்பின் வழியாக லாரியில் கொண்டு போய் ஏற்றவேண்டும். பாரத்தால் கழுத்து ஒரு பக்கம் சாய்ந்தவண்ணமே இருக்கும் அச்சிறுவர்களுக்கு. அந்த சிறுவர்களின்...
சாலா விமர்சனம்

சாலா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விட்னெஸ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களைத் தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ளது. ஒரு பாருக்கான (Bar) போர் என்பதுதான் படத்திம் டேக்-லைன். படத்தின் ஒரு வரிக்கதையும் அதுவே! குணாக்கும் தங்கதுரைக்கும் இடையேயான தகராறில் ராயபுரம் பார்வதி பார் இழுத்து மூடப்படுகிறது. குணாவின் வளர்ப்புத் தம்பியான சாலா, பார்வதி பார் அண்ணனுக்குத்தான் என சபதம் எடுக்கிறார். இருபத்து மூன்று வருடங்களிற்குப் பிறகு, பார்வதி பார் ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் வென்றது குணாவா, தங்கதுரையா என்பதே படத்தின் முடிவு. தங்கதுரையாக சார்லஸ் வினோத் நடித்துள்ளார். வில்லனாக அவர் தோளை உயர்த்தி நிமிரும் கணங்களில் எல்லாம் சாலாவால் மூக்கு உடைப்படுகிறார். தனது உயிரைக் காப்பாற்றிய சாலா, தாஸ் என இரண்டு சிறுவர்களை எடுத்து வளர்க்கிறார் குணா. குணாவாக அருள்தாஸ் நடித்துள்ளார். அவரது ஆகிருதிக்குக் கொடுக்கப்படும் வழக்கமான பாத்திரத்தை நி...
போகுமிடம் வெகுதூரமில்லை விமர்சனம்

போகுமிடம் வெகுதூரமில்லை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அன்பே சிவம், மாநகரம், அயோத்தி முதலிய படங்கள் வரிசையில், சக மனிதனுக்கு ஒன்றெனில் உதவ முன்வரவேண்டும் என்ற கருத்துடன் வெளிவந்துள்ள படம். படத்தைத் தயாரித்த ஷார்க் பிக்சர்ஸ் சிவா கிளாரிக்கு வாழ்த்துகள். அமரர் ஊர்தி ஓட்டுநரான குமார், சென்னையில் இருந்து களக்காடு வரை ஒரு பெரியவரின் உடலை எடுத்துக் கொண்டு செல்கிறார். அடிக்கடி நின்றுவிடும் தனது வண்டியைத் தள்ளுவதற்காக நளினமூர்த்தியை ஏற்றிக் கொள்கிறார். வழியில் எதிர்பாராதவிதமாக ஒரு பயங்கரமான சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் குமார். அச்சிக்கலில் இருந்து அவர் மீண்டு பத்திரமாகக் களக்காடு சென்றடைந்தாரா இல்லையா என்பதே படத்தின் முடிவு. கூத்துக் கலைஞர் நளினமூர்த்தியாக கருணாஸ் கலக்கியுள்ளார். மிகச் சிறப்பான கதாபாத்திரத்தை அவருக்கு அளித்துள்ளார் இயக்குநர் மைக்கேல் K. ராஜா. கதையின் நாயகன் என்றே சொல்லலாம். நளினமூர்த்தியின் இம்சையைப் பொறுத்துக் கொள்வதும் சிரமம், மி...
வேதா விமர்சனம்

வேதா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
"சூத்திரர்கள் ஏன் காலில் உருவானார்கள்?" - கல்லூரி மாணவி வேதா. "அதான் பெரியய்யா சொன்னாரே! அதெல்லாம் சொர்க்கத்துல நிச்சயிக்கப்பட்டதுன்னு" - வேதாவின் அக்கா. "அப்புறம் ஏன் சட்டத்தைச் சொல்லித் தர்றாங்க? சமத்துவம்னு பேசுறாங்க?" ஆயிரம் ஏக்கருக்குச் சொந்தக்காரரும், நூற்றைம்பது கிராமங்களுக்குத் தலைவருமான பெரியய்யா என்றழைக்கப்படும் ஜிதேந்தர் பிரதாப் சிங் ஒரு மாமன்னன் போல் வலம் வருகிறார். எல்லாருக்கும் எல்லா வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும், அனைவரும் முன்னேற வேண்டும், ஆனால் மற்ற சமூகத்தினரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணமுடையவர். அதாவது கலப்புத் திருமணத்திற்கு எதிரானவர். வேதாவின் அண்ணன் மேல் சாதிப்பெண்ணைக் காதலித்து விட, பிரச்சனை பெரியய்யாவிடம் போகிறது. அசிங்கப்படுத்தி மிரட்டி அனுப்புகிறார், வேதாவின் அண்ணனோ காதலியுடன் வெளியேறிவிடுகிறார். கல்யாணம் செய்து வைக்கிறேன் என வரவழைத்து, வேதாவின் அக்காவை,...