Shadow

Tag: Thiraivimarsanam in Tamil

ராயன் விமர்சனம்

ராயன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
D50 எனும் தனது ஐம்பதாவது படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இது இயக்குநராக அவருக்கு இரண்டாம் படம் என்பது குறிப்பிடத்தக்கது. காத்தவராயன், முத்துவேல்ராயன், மாணிக்கவேல்ராயன் என ராயன் சகோதரர்கள் மூவர். அவர்களுக்கு துர்கா எனும் தங்கை பிறக்கிறாள். அவள் கைக்குழந்தையாக இருக்கும்போதே, அவளைத் தூக்கிக் கொண்டு ராயன் சகோதரர்கள் சென்னை வந்துவிடுகின்றனர். வளர்ந்ததும், குடிகாரரான முத்துவேல்ராயனால் ஒரு பெரும்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. அதை ஒன்றாகச் சேர்ந்து எதிர்கொள்ளும் ராயன் சகோதரர்கள், ஒரு கட்டத்தில், கதையில் எதிர்பாராத திருப்பமும், அதிர்ச்சி மதிப்பீடும் வேண்டுமெனக் கருதி தொலைந்து போகிறார்கள். படம் தொடங்கி இடைவேளை வரை நறுக்கு தெறித்தாற்போல் உள்ளது. ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருக்கும் ராயன் சகோதரர்களின் வாழ்க்கை, அந்த வாழ்விடம், முத்துவேல்ராயனுக்கும் மேகலாவுக்கும் இடையேயான காதல் என முதற்பாதி கச்சித...
கருடன் விமர்சனம்

கருடன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நீதியா, விசுவாசமா என்பதற்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு விசுவாசமான வேலைக்காரனின் தடுமாற்றமும் தடமாற்றமும் தான் இந்த கருடன். நாயகனுடன் இருந்து கொண்டே தீங்கிற்கு துணை போன துரோகிகளைத் தமிழ் சினிமா வால்டர் வெற்றிவேல் திரைப்படத்திற்கு முன்பிருந்தே பார்த்து வருகிறது. ஆக, கதையாக இது பழைய ஃபார்முலா கதை தான். ஆனால் அந்த தீங்கிற்கு துணை போகுமளவிற்கு அவர்கள் துரோகிகள் ஆகும் அந்த மனமாற்றத்திற்கான திரைக்கதை தான் இந்த கருடனை கருட சேவைக்குரியவனாக மாற்றுகிறது. மீண்டும் பழைய ஃபார்முலா தான். மனிதனுக்கு வரக்கூடாத மூணு ஆசை மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று ரஜினி பேசும் அந்த வசனங்கள், அதே மாடுலேஷனுடன் நம்மில் பலருக்கு இன்றும் நினைவில் இருக்கும். இந்த மூன்று ஆசைகளில் எதுவும் மனிதனுக்கு வந்துவிடக் கூடாது என்று இவர் சொல்ல, இந்த மூன்று ஆசைகளுமே முந்தியடித்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தூபம் போடுகிறது. த...
இங்க நான் தான் கிங்கு விமர்சனம்

இங்க நான் தான் கிங்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வெற்றிவேல், ஜமீன் வீட்டில் பெண் எடுக்கிறார். தான் சம்பந்தம் செய்யவுள்ளது திவாலான ஜமீன் எனத் தெரியாமல், கல்யாணம் முடிந்ததும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். ஏமாற்றத்துடனே தன் வாழ்க்கையைத் தொடரும் வெற்றிவேலின் வீட்டில், சென்னைக்கு வெடிகுண்டு வைக்க வரும் பயங்கரவாதி ஒருவன் எதிர்பாராதவிதமாக இறந்து விடுகிறான். பிறகு என்னானது என்பதே படத்தின் கதை. ஜமீன் விஜயகுமாராகத் தம்பி ராமையா அறிமுகமானதில் இருந்து படத்தின் கலகலப்பு இரட்டிப்பாகிறது. படத்தினைத் தாங்கும் கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியுள்ளார். அவரது மகனாக நடித்துள்ள பாலசரவணன், சிற்சில காட்சிகளில் மட்டும் அசத்தியுள்ளார். ஆளுநர் அலுவலகத்தில், சந்தானம் சமாளிக்கும் பொழுது, குழப்பத்துடன் தரும் ரியாக்ஷங்களில் ரசிக்க வைக்கிறார். வெற்றிவேலின் மனைவி தேன்மொழி பாத்திரத்தில், பிரியாலயா நாயகியாக அறிமுகமாகியுள...
படிக்காத பக்கங்கள் விமர்சனம்

படிக்காத பக்கங்கள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பாகப் பார்த்தால் கதை சொல்ல வரும் கருத்து, பெரிய பெரிய குற்றங்கள் நடக்கும் போது, அவை தொடர்பான செய்திகள் கண்ணைக் கவரும் வகையில் பெரிய எழுத்துக்களில் தலைப்புச் செய்தியாக வரும். அதே குற்றங்கள் தொடர்பான வழக்கு விசாரணையும், குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் ஜாமீன் தொடர்பான செய்திகளும், அவர்களின் விடுதலை தொடர்பான செய்திகளும் கண்ணில் படாத குட்டிச் செய்திகளாக பத்திரிக்கையில் வெளியாகும். பெரும்பாலும் நாம் இந்தக் குட்டிச் செய்திகளை படிக்காமல் கடந்து விடுவோம் அல்லது தவறவிட்டு விடுவோம். அவை தான் படிக்காத பக்கங்கள். தலைப்பும் அது சொல்ல வரும் கருத்தும் ஓகே. ஆனால் அது கதையோடு எந்த வகையில் தொடர்புடையதாக இருக்கிறது என்று கேட்டால் கதைக்கும் அதற்கும் தொடர்பே இல்லை என்பது போல் தான் இருக்கிறது. படத்தின் கதை என்னவென்றால் நடிகை ”ஸ்ரீஜா”-வாகவே நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த் படப்பிடிப்பிற்காக சேலம் ஏற்காடு பக...
ரோமியோ விமர்சனம்

ரோமியோ விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முதல் நாளே விவாகரத்து கேட்கும் மனைவியை, ஆறு மாதத்திற்குள் காதலித்து 'கரெக்ட்' செய்து விட நினைக்கிறார் நாயகன். மனைவியின் மனதை வென்றாரா இல்லையா என்பதே படத்தின் கதை. ‘தி லவ் பார் (TLB)’-இல் மேனேஜராகப் பணிபுரிகிறார் யோகி பாபு. விஜய் ஆண்டனி ரோமியோவாக மாற ஆலோசனை சொல்லும் பாத்திரத்தை நிறைவாகச் செய்திருந்தாலும், நகைச்சுவைக்குப் பெரிய பங்களிப்பு அளிக்கவில்லை. நடிகையாக வேண்டும் என்ற கனவை மட்டுமே சுமக்கும் பாத்திரத்தில் மிர்னாலினி ரவி நடித்துள்ளார். தன் நடிப்புத்திறமையின் மீது நம்பிக்கையாக இருப்பதை விட, ஃபோனில் வரும் அநாமதேய அழைப்பின் பாசிட்டிவ் வார்த்தைகளைப் பெரிதும் நம்பியுள்ளார். இப்படி ஏனோதானோவென்று இல்லாமல், நாயகியின் கதாபாத்திர வார்ப்பில் கவனம் செலுத்தியிருந்தால் அருமையாக இருந்திருக்கும். இப்படத்தினை விட, மெலிதான கருவாக இருந்தாலும், கதாபாத்திர வார்ப்பில் கவனம் செலுத்தியதால் பிரேமலு ரீனா தனித...
மைதான் விமர்சனம்

மைதான் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தலைப்பையொட்டிப் படத்தின் 90 சதவிகிதத்திற்கு மேலான காட்சிகள் கால்பந்து மைதானத்திலேயே நடக்கின்றன. ஃபின்லாந்தில் நடக்கும் 1952 ஹெல்ஸின்கி ஒலிம்பிக்ஸில் தொடங்கும் படம், 1962 இல் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடக்கும் ஆசியப் போட்டிகளில் படம் முடிகிறது. இந்தப் பத்து ஆண்டுகளில், கால்பந்து பயிற்றுநர் (Football Coach) சையத் அப்துல் ரஹீமின் தலைமையில் இந்தியக் கால்பந்து அணி மேற்கொண்ட பயணத்தை உணர்ச்சிப்பூர்வமாகத் திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் அமித் ரவிந்தர்நாத் ஷர்மா. யுகோஸ்லோவியாவுடனான படுதோல்விக்குப் பின், இந்தியக் கால்பந்து அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் சமயத்தில், அதை மீட்டெடுக்கும் பொறுப்பை ஏற்கிறார் S.A.ரஹீம். செகந்திராபாத்தின் குடிசைப் பகுதியில் இருந்து துளசிதாஸ் பலராமனையும், கல்கட்டாவிலிருந்து பிரதீப் குமார் பேனர்ஜியையும் தேர்ந்தெடுக்கிறார். பலமான இந்திய அணியை உருவாக்க...
கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் விமர்சனம்

கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் நேசம் முரளி. அரசியல்வாதியின் மகன் ஒருவன் பெண்களிய எல்லாம் கடத்தி மானபங்கப்படுத்தி, தொடர் சித்திரவதை செய்து வருகிறான். IAS பயிற்சி வகுப்பிலுள்ள மாணவனை, ஒரு பெண் காவல்துறை அதிகாரி கைது செய்கிறார். ப்ளேடு பக்கிரி எனும் ரெளடியின் பெயரில் அவனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார். அந்த மாணவனை அவ்வதிகாரி ஏன் கைது செய்கிறார், அந்த மாணவன் எப்படித் தப்பிக்கிறான் என்பதும்; படுபாதக செயல்களில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதி மகனுக்கும், அப்பெண் காவலதிகாரிக்கும், மாணவனுக்கும் என்ன சம்பந்தம் என்பதுமே படத்தின் கதை. தன் மேலதிகாரியை ஒருதலையாகக் காதலிக்கும் பாத்திரத்தில் கஞ்சா கருப்பு நடித்துள்ளார். அவர் நகைச்சுவை என்ற பெயரில் செய்யும் சேட்டையைப் பொறுத்துக் கொள்ள பிரம்ம பிரயத்தனம் செய்யவேண்டியுள்ளது. வையாபுரியும் அவர் பங்குக்கு நை...
ஒரு தவறு செய்தால் விமர்சனம்

ஒரு தவறு செய்தால் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘எங்க வீட்டுப் பிள்ளை’ எனும் படத்தில், 1965 இல் கவிஞர் வாலியால் எழுதப்பட்ட ‘நான் ஆணையிட்டால்’ பாடலில் வரும் ஒரு வரியைப் படத்திற்குத் தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர் மணி தமோதரன். பாடலில் அடுத்த வரியான, ‘அதைத் தெரிந்து செய்தால்’ என்ற வரியையும் சேர்த்தே, கதையின் ஓட்டத்தை உருவாக்கியுள்ளார். திரைத்துறையில் உள்ள நண்பர்கள் மூவர்க்கு, தங்கியிருக்கும் அறையைக் காலி செய்யவேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. பிறரின் தேவையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், சுலபமாகச் சம்பாதிக்கலாமென பாடத்தைக் கோயம்பேடு மார்க்கெட்டில் கற்கின்றனர். தொழில்நுட்பம் தெரிந்த இளம்பெண் ஒருவரது துணையுடன், கே.கே.நகரில் நடக்கும் தேர்தலைப் பயன்படுத்திப் பெரும்பணம் பார்க்க நினைக்கிறார்கள். ஓர் அழகான ஃப்ளாஷ்-பேக் காட்சியில், தன் பள்ளிக்காதலை நினைவுகூருகிறான் நாயகன். அந்த மான்டேஜஸ்க்கு, டி.ஆர். குரலில் ஒரு நெடுங்கவிதை ஒலிக்கப்படுகிறது....
பூமர் அங்கிள் விமர்சனம்

பூமர் அங்கிள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நல்லதொரு சூப்பர் ஹீரோ ஸ்பூஃப் படத்திற்கு முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ஸ்வதேஷ் MS. சேஷு, பழைய ஜோக் தங்கதுரை, KPY பாலா, ரோபோ ஷங்கர், யோகிபாபு ஆகியோர் 90’ஸ் கிட்ஸ். இதில், யோகிபாபுவிற்கு மட்டும் கல்யாணமாகிவிட, அவரால் கல்யாணமாகாமல் இருக்கும் மற்றவர்கள், யோகிபாபுவைப் பழிவாங்க அவரது மாளிகைக்குள் களமிறங்குகின்றனர். மாளிகைக்குள் நடக்கும் கலாட்டாவே படத்தின்கதை. யோகிபாபுவின் மனைவி ரஷ்ய உளவாளி. யோகி பாபுவின் தந்தையான மதன் பாப் கண்டுபிடித்த ஆயுதங்களைத் திருடுவதே அவரது நோக்கம். மதன் பாப் கண்டுபிடித்த சில ஆயுதங்களை அமெரிக்க அரசு திருடி ஸ்பைடர் மேன், ஹல்க், தோர் ஆகியோரை உருவாக்கிவிட்டனராம். படம் பார்க்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் ரசிகர்கள் நிலைமை தான் அந்தோ பரிதாபம். நகைச்சுவையாகவோ, கலகலப்பாகவோ கூடக் கொண்டு போகாமல், சகிக்கமுடியாதளவு கடியை ஏற்படுத்தும் மிகவும் சிரத்தையற்ற திரைக்கதையை எழுதி...
நேற்று இந்த நேரம் விமர்சனம்

நேற்று இந்த நேரம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நாயகனும் நாயகியும் மூன்றாண்டுகளாகக் காதலிப்பதைக் கொண்டாட நினைக்கின்றனர். மேலும், கல்லூரி வாழ்க்கை முடிவதாலும், நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் என இளைஞர்கள் எழுவர் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலாக்கு வந்த இடத்தில் நாயகன் காணாமல் போகிறார். நாயகனுக்கு என்னானது என்ற புலனாய்வு விசாரணையே படத்தின் கதை. ‘ராஷோமோன் (1950)’ எனும் ஜப்பானியத் திரைப்படப் பாணியில், கதாபாத்திரங்கள் அனைவரும் காணாமல் போன நாயகனைப் பற்றிச் சொல்கின்றனர். நாயகனைப் பற்றிய விவரணை நண்பர்களின் பார்வையிலிருந்து விரிகிறது. அந்த விவரணையில், நாயகன், எதிர் நாயகனாக மெல்ல மாற்றம் பெறுகிறான். காணாமல் போன நாயகனே கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், மேலும் ஒரு நண்பன் காணாமல் போகிறான். ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், செல்வா, பாலா ஆகியோர் நடித்துள்ளனர். கெவின். N இசையமைக்...
கா – The Forest விமர்சனம்

கா – The Forest விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கா என்றால் காடு அல்லது கானகம் என்பதாகப் பொருளென உருவகப்படுத்தியுள்ளனர். ஆனால், 'கா' என்றால் காத்தல் என்று பொருள் கொள்ளலாமே அன்றி காடு எனக் கொள்ளலாகாது. ஆதியும் காடே, அந்தமும் காடே என்ற பாடல் வரிகளுடன் அடர்ந்த காட்டின் அட்டகாசமான விஷுவல்ஸுடன் படம் தொடங்குகிறது. கடுகுபாறை வனக்காவல் நிலையத்தின் அருகே முகாமிட்டுள்ளார் காட்டுயிர் ஒளிப்படக்கலைஞரான வெண்பா சுப்பையா. மதி என்ற பயந்த சுபாவிக்கு அவரது தந்தையின் வேலை கிடைத்து, கடுகுபாறை வனக்காவல் நிலையத்தில் பணியில் சேருகிறார். அரசியல் பேசி வில்லங்கத்தை உண்டாக்கும் ஓர் இளம்பெண்ணைக் கொலை செய்ய, அம்மலை வனப்பகுதிக்கு வருகிறார் விக்டர் மகாதேவன். இந்த மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணைகிறது. மதி பாறையிடுக்கில் கீழே சகதியில் விழுந்து, மேலே வெளிச்சத்தைப் பார்ப்பது மஞ்ஞுமள் பாய்ஸில் வரும் காட்சி போலவே உள்ளது. விழுந்து கிடக்கும் இடத்தில் இருந்து மேலே வர இயல...
Hot Spot விமர்சனம்

Hot Spot விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் ஒருவன், தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாவும் தயாரிப்பாளருமான K.J.பாலமணி மார்பனிடம் கதையைச் சொல்கிறான். மொத்தம் நான்கு கதைகளைச் சொல்கிறான். அவனுக்குப் படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததா, அவனது காதலை அந்தத் தயாரிப்பாளர் அங்கீகரித்தாரா என்பதுதான் படத்தின் கதை. Happy Married Life, Golden Rules, தக்காளி சட்னி, Fame Game என மொத்தம் 4 கதைகள். முதல் மூன்று கதைகளும் கலகலப்பாகச் செல்ல, கடைசிக்கதை மட்டும் மனதைக் கனக்கச் செய்யும் கதையாக முயன்று சமூகத்துக்குக் கருத்து சொல்லியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். ஒரு பெண், ஆணுக்குத் தாலி கட்டினால்? ஆண், சமையலறையில் சிறைப்பட்டால்? ஆண், மாமனாரின் ஏச்சுபேச்சுக்கும் ஆளானால்? ஆண், நண்பர்களைப் பார்க்கச் செல்ல மாமனாரின் அனுமதியை எதிர்பார்க்க நேர்ந்தால்? இதுதான் Happy Married Life-இன் கதை. ஆதித்யா பாஸ்கரின் அதிர்ச்சியாகும் பாவ...
இடி மின்னல் காதல் விமர்சனம்

இடி மின்னல் காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஹரனும் ஜனனியும் காதலிக்கின்றனர்; காரில் செல்லும் பொழுது, ரித்தீஷ் ஜெயினை மோதிவிடுகின்றனர். ரித்தீஷ் ஜெயினின் மகன் அபிஷேக் ஜெயினிற்கு ஆதரவாக அப்பகுதியில் வசிக்கும் விபச்சாரி துணை நிற்கிறாள். ரித்தீஷ் வாங்கிய கடனிற்காக அபிஷேக்கைக் கவர நினைக்கிறான் வல்லநாட்டு அருள்பாண்டியன். இவர்தான் இடி; அபிஷேக்தான் மின்னல்; ஹரனும் ஜனனியும்தான் காதல். இடைவேளையில், மூன்று திரைச்சட்டகங்களாகப் பிரித்துப் படத்தின் தலைப்பைப் போடுகிறார்கள். மனநலத்தைப் பேணுவதன் அவசியம் குறித்த படம் என்று படக்குழு சொல்லியிருந்தனர். அபிஷேக்கிற்கு, 'இருமன ஒழுங்கின்மை (Bipolar Disorder)' இருப்பதாக நாயகன் கண்டுபிடிக்கிறார். நாயகன் சைக்காலஜி படித்தவர் எனச் சொல்லப்படுகிறது. அவ்வுழுங்கின்மை வாய்க்கப்பெற்றால் மனம் இரண்டு வெவ்வேறு உணர்ச்சிகளின் எல்லைக்கு ஊஞ்சல் போல் (swing) போய் வந்து கொண்டிருக்கும். ஆனால், சில காட்சிகளில் அபிஷேக்கின் கண்...
ரெபல் விமர்சனம்

ரெபல் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மூணாரின் நெற்றிக்குடி எஸ்டேட்டைச் சேர்ந்த கதிர் பாலக்காட்டுக் கல்லூரிக்குப் படிக்கச் செல்கிறார். கல்லூரியிலுள்ள மலையாளிகள் தமிழர்களை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள். கதிர் கலக்கக்காரராக உருமாறி புரட்சி செய்கிறார். படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, நாயகன் கதிர் புரட்சி தான் தீர்வு எனக் கலகம் செய்வது, செங்கொடி ஏந்திய LDP கட்சியின் SFY எனும் மாணவர் சங்கத்தை எதிர்த்தும் போராடுகிறார். வசனங்களில் கம்யூனிஸ்ட் என்றே விளிக்கிறார்கள். நாயகன் எதிர்க்கும் இன்னொரு கொடி, நீல வண்ணத்தில் இருக்கும் UDP கட்சியின் KSQ எனும் மாணவர் சங்கமாகும். காங்கிரஸ் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் தவிர்த்துள்ளனர். கொடி இங்குப் பிரச்சனையில்லை, அதை யார் பிடித்துள்ளார் என்பதைப் பொறுத்தே சிக்கல் என்கிறார் கல்லூரி விரிவுரையாளர் உதயகுமாராக வரும் கருணாஸ். நாயகன் கதிர் உருவாக்கும் TSP (தமிழ் ஸ்டூடன்ட்ஸ் பார்ட்டி)-இன் கொடி, கருப...
Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம்

Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கானின் ஆளுகைக்கு உட்பட்ட ஹைதராபாத் மாகாணத்தில் ஏற்பட்ட நிர்வாகக் குழப்பங்களையும், அதன் விளைவாக ஹிந்துக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அரசு பயங்கரவாதத்தையும் பற்றிப் பேசுகிறது இப்படம். மிர் ஒஸ்மான் அலி கானை யோசிக்கவிடாமல், எப்படி காஸிம் ரஸ்வி, ரஸாக்கர் ஆயுதப்படையை உருவாக்கி ஹைதராபாத் மாகாணத்து மக்கள் மீது வரிச் சுமையையும், ஹிந்து மத சடங்குகளையும் திருவிழாக்களையும் பொதுவில் கொண்டாடத் தடையையும் விதித்தார் என்பதே படத்தின் திரைக்கதை. பாஜகவைச் சார்ந்த குடூர் நாராயண ரெட்டி, இப்படத்தை சுமார் 40 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்துள்ளார். முதல் பாதி முழுவதுமே, காணச் சகியாக் காட்சிகளாகவே உள்ளன. ஊரைக் கொளுத்துவது, பெண்களைப் பலாத்காரம் செய்வது, எதிர்ப்பவர்களைக் கொல்வது என ரஸாக்கர்களின் கொடுமையை விரிவாகக் காட்டுகின்றனர். வரலாற்றைத் தெர...