
கட்ஸ் விமர்சனம் | Guts review
ஒரு திருநங்கை அரசு அலுவலரைக் கொன்ற கார்ப்பரேட் முதலாளியைக் கைது செய்கிறார் காவல்துறை அதிகாரி ரங்கராஜ். அவ்வழக்கில் இருந்து மிகச் சுலபமாக வெளியில் வரும் வில்லன், ரங்கராஜின் கர்ப்பவதி மனைவியான அனுவைக் கொல்கிறான். கோபத்தில் ரங்கராஜும் வில்லனைக் கொன்று விட, காவல்துறையும், வில்லனின் ஆட்களும் நாயகனைத் தேடுகின்றனர். மகளுடன் தலைமறைவாகித் தனது பூர்வீக ஊரில் தஞ்சமடைகிறார் ரங்கராஜ். அவரது அப்பாவுக்கும், வில்லனின் அப்பாவுக்கும் உள்ள தீர்க்கப்படாத சிக்கலொன்றும் சேர்ந்து நாயகனைத் துரத்துகிறது. அச்சிக்கல் என்னவென்றும், அதிலிருந்து ரங்கராஜ் எப்படி வெளிவருகிறார் என்பதும்தான் படத்தின் கதை.
இடைவேளை வரை ஒரு கதையும், அதன் பின் வேறொரு கதையுமாகத் திரைக்கதை பயணிக்கிறது. ஆசிரமத்தில் வளரும் நேர்மையான காவலதிகாரி, ஆசிரமத்திலேயே ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் அவரது காதல் கதை என படத்தின் முதற்பாதி ரசிக்க வைக்கி...
















