Shadow

Tag: Thiyagu

காதல் காதல்தான் – ராம் கோபால் வர்மாவின் லெஸ்பியன் க்ரைம் த்ரில்லர்

காதல் காதல்தான் – ராம் கோபால் வர்மாவின் லெஸ்பியன் க்ரைம் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
இந்தியத் திரைப்பட வரலாற்றில் வியத்தகு மாற்றங்களைத் தந்த இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சமீபத்திய திரைப்படம் ‘காதல் காதல்தான்’. ஆண்களை வெறுக்கும் இரு பெண்களுக்குள் காதல் வர, ஓர் பாலின காதலைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப் படம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. Artsee Media / Rimpy Arts International இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தி மொழியில் தயாரான இப்படம் ஏப்ரல் 8 ஆம் தேதி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. தமிழ்ப் பதிப்பின் முன் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் ராம் கோபால் வர்மா, நாயகிகள் நைனா கங்குலி, அப்சரா ஆகியோர் மார்ச் 30 அன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். நாயகி நைனா கங்குலி, "ராம் கோபால் வர்மா சார், என் மீது நம்பிக்கை வைத்து என்னை தெலுங்குப் படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போது புதுமையான மு...
“இதழும் இதழும் இணையட்டுமே!” – இயக்குநர் ஆர்வா

“இதழும் இதழும் இணையட்டுமே!” – இயக்குநர் ஆர்வா

சினிமா
சன்னி லியோன், யோகி பாபு, ஜி.பி.முத்து, தர்ஷா குப்தா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கும், ”ஓ மை கோஸ்ட்” என்ற படத்தை VAU மீடியா எண்டர்டெயின்ட்மென்ட் & White Horse Studios இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் தற்பொழுது ’அப்பா காண்டம்’ என்னும் குறும்படத்தை இயக்கிய ஆர்வாவின் இயக்கத்தில் ”இதழும் இதழும் இணையட்டுமே” என்ற பெயரில் ஒரு வெப்சீரீஸைத் தயாரித்திருக்கிறார்கள். இந்த வெப் சீரிஸில் கதாநாயகனாக ’பிளாக் ஷீப்’ கலையரசன் தங்கவேல், ’விஜய் டிவி’ அர்ச்சனா குமார், நியூஸ் 18 காம்பியரர் முபாஷீர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இது ஒரு வித்தியாசமான, நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகி இருக்கிறது. இந்த ”இதழும் இதழும் இணையட்டுமே” வெப்சீரிஸின் கதை ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ”என்னடா.. ஒரு பெண், ஒரு ஆணிடம் இப்படி ஒரு விஷ...
நான்-ஸ்டாப் விருது வேட்டையில் ‘கோட்டா’ திரைப்படம்

நான்-ஸ்டாப் விருது வேட்டையில் ‘கோட்டா’ திரைப்படம்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் அமுதவாணனின் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் வெளியான கோட்டா திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளைக் குவித்தது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை சினிமா மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள பல பிரபலங்கள் வெளியிட்டிருந்தார்கள். அத்துடன் கோட்டா திரைப்படத்தின் பயணம் நின்று விடவில்லை. இன்றைய தேதி வரை சுமார் 64 சர்வதேச விருதுகளைக் குவித்துள்ளது. இதன் பிறகும் இன்னும் பல விருதுகளைக் குவிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதில் முக்கிய விருதாக டொரன்டோ தமிழ் சர்வதேசஹ்ட் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக விருதை வென்றுள்ளது. இந்நிலையில், மேலும் 16 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது....
இசையமைப்பாளரானார் பாடகி ஸ்வாகதா

இசையமைப்பாளரானார் பாடகி ஸ்வாகதா

Songs, காணொளிகள், சினிமா, திரைத் துளி
வார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு பாடல் உயிர் பெறுகிறது. அப்படி மயக்கும் குரலால் தமிழ்சினிமாவில் பல பாடல்களுக்கு உயிர் கொடுத்து பிரபலமான பாடகியாக வலம் வருபவர் பாடகி ஸ்வாகதா. அவரின் குரலில் காற்றின் மொழி படத்தில் 'டர்ட்டி பொண்டாட்டி', லட்சுமி படத்தில் 'ஆலா ஆலா'  பாடல்கள் உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடி இருக்கிறார். இப்போது வெளிவரவுள்ள பல படங்களிலும் பாடி இருக்கிறார். தற்போது அவருக்குள் இருக்கும் இன்னொரு பரிணாமமும் வெளிப்பட்டுள்ளது. இசையையும் வார்த்தைகளையும் உள்வாங்கி அற்புதமான குரலில் பாடல்களை வெளிப்படுத்தும் ஸ்வாகதா தற்போது ஒரு பாடலுக்கு இசையமைத்து, பாடி அந்தப் பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் அவரே தலைமை நாயகியாக நடிக்கவும் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரே, இசை, குரல், நடிப்பு என முழுப் பொறுப்பையும் ஏற்று "அடியாத்தே" என்ற இசை ஆல...
எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாகும் சாந்தினி

எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாகும் சாந்தினி

சினிமா
நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே! அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை சாந்தினிக்குத் தனி இடம் உண்டு. ஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு. ‘சித்து +2’ -இல் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, சமீபத்தில் வெளியான ராஜா ரங்குஸ்கி வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங்களை உயர்த்தியது. இவருக்கு நடிப்பில் நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்தது. இவரது நடிப்பைக் கண்டு வியந்த பாலாஜி சக்திவேல், இவரை அணுகி ஒரு கதை சொல்ல, அந்தக் கதை சாந்தினிக்கு மிகவும் ப...
வசீகரிக்கும் பாப் சிங்கர் ஹிதா

வசீகரிக்கும் பாப் சிங்கர் ஹிதா

சமூகம்
கலிஃபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் ஈர்த்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவரின் பூர்வீகம் கர்நாடகம் ஆகும். 14 வயதான இவருக்கு, முக்கியமாக இவரின் குரலுக்கு கலிஃபோர்னிய மக்கள் அடிமை என்றே சொல்லலாம். ஹிதாவின் பாடல்களை வலைதளத்தில் கண்டு ரசித்த குவியம் மீடியா ஒர்க்ஸ் யோகேந்திரன் ஹிதாவை அணுகி சென்னையில் ஒரு பாப் இசை நிகழ்ச்சி நடத்தி தருமாறு கோரிக்கை வைக்தார். அதை ஏற்றுக் கொண்டு, இவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையில் மகேந்திர சிட்டி பின்னால் உள்ள மகரிஷி ஸ்கூல் கிரெளண்டில் தனது நிகழ்ச்சியை “INSPIRED BY HITHA “ என்ற பெயரில் நடத்தினார். இந்தியாவிற்கு அறிமுகமில்லாத இவரை ரசிகர்கள் எப்படி ஏற்கப்போகிறார்கள் என்று பெரிய சந்தேகம் இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நுழைவு கட்டணம் கட்டி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலும் அவர...
வில்லியாக சோனாவின் புது அவதாரம்

வில்லியாக சோனாவின் புது அவதாரம்

சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளின் காலம் சில வருடங்கள் மட்டும் தான். எவ்வளவு தான் கவர்ச்சி காட்டினாலும் ஒரு சில கவர்ச்சி நடிகைகளைத் தவிர மற்ற அனைவரும் காலப்போக்கில் மறைந்து போய்விட்டனர். ஆனால், நடிகை சோனாவோ சற்று வித்தியாசமானவர். குசேலன், பத்துக்கு பத்து உள்ளிட்ட பல படங்களில் படு கவர்ச்சியாக நடித்திருப்பார். சில படங்களில் நடிகர் வடிவேலு மற்றும் விவேக்குடன் ஜோடியாக நடித்து நகைச்சுவையும் செய்திருப்பார். சில காலமாக கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் ஒதுங்கி நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த அவருக்கு மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் வரவே 'ஒப்பம்' போன்ற மலையாளப் படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் ஏற்று மலையாளத் திரையுலகில் நல்ல வரவேற்பைப் பெற்றார். மேலும் தமிழில் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த பொழுது ஸ்டார் குஞ்சுமோன் தயாரிப்பில் வி.விநாயக் நடிப்பில் அவதாரவேட்டை படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நட...
அப்பா காண்டம் – குழப்பத்திலிருந்து தெளிவு

அப்பா காண்டம் – குழப்பத்திலிருந்து தெளிவு

சினிமா, திரைத் துளி
யூட்யூப் திரைவிமர்சகர் ஜாக்கிசேகர் நடிப்பில் ஆர்வா இயக்கத்தில் சமீபத்தில் யூட்யூபில் வலையேற்றப்பட்ட அப்பா காண்டம் திரைப்படம் ஐந்து நாட்களில் 5 இலட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இயக்குநர் ஆர்வா-விற்கு இந்தக் குறும்படம் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்வா, இதற்கு முன் நிறைய தொலைகாட்சி தொடர்களில் பணிபுரிந்த அனுபவத்தின் வாயிலாக இந்தத் திரைப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கின்றார். இந்தத் திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் பிரபல திரைப்பட விமர்சகர் ஜாக்கிசேகரும் ஹரிஷ் ரவிச்சந்திரனும் நடித்துள்ளனர். இதில் மகனாக நடித்த ஹரிஷ் ரவிச்சந்திரன் சில குறும்படங்களில் நடித்தவர். அப்பாவாக நடித்த திரைவிமர்சகர் ஜாக்கிசேகர், 'சிகரம் தொடு' திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்து இருந்தாலும் முழு நீள குறும்படத்தில் பக்கம் பக்கமாக...
சாம் C.S. இசையில் பாடும் யுவன் ஷங்கர் ராஜா

சாம் C.S. இசையில் பாடும் யுவன் ஷங்கர் ராஜா

சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் ஒரு சிலரே! அந்த வரிசையில் சாம் C.S. மிகவும் முக்கியமானவர் . புரியாத புதிர், விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களைத் தொடர்ந்து இவர் இசையமைக்கும் படம் வஞ்சகர் உலகம். வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவரவிருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார். யுவனும் ஓகே சொல்ல அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனைp பாட வைத்துள்ளார். இப்பாடல் விரைவில் வெளிவரவுள்ளது....