32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 110)
மற்றபடி மனிதர்கள் – வெ.த. புகழேந்தி கட்டுரை

மற்றபடி மனிதர்கள் – வெ.த. புகழேந்தி

அன்ன சத்திரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பதுதான் இந்த நாவலின் அடிநாதம். எத்தனை பேர் இந்த நாவலை படித்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இந்தப் புத்தகம் கிடைத்ததே என் கிராமத்து ஊரிலுள்ள அந்தக் குட்டி நூலகத்தின் மூலமாய்த்தான். அங்கே ஒரு நாள் க்ரைம் கதைகளைத் தேடித் தேடிக் களைத்துப் போய், விதியே என்று நொந்த படியே கையில் கிடைத்த ஒரு புத்தகத்தை எடுத்து வீட்டுக்கு […]

15/05/2020 Dinesh R
தப்பட் விமர்சனம் அயல் சினிமா

தப்பட் விமர்சனம்

பலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’ என்றால் “அறை (slap)” என்று பொருள். ‘ஆர்டிகிள் 15’ எனும் அதி அற்புதமான படத்தை இயக்கிய அனுபவ் சின்ஹாவின் படம். அதுவும் குடும்ப வன்முறையைப் (Domestic violence) பற்றிய படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது. மாமியார் கொடுமை, வரதட்சணைக்காகத் துன்புறுத்தப்படுவது, வசை மாரி பொழிதல், கையை நீட்டி அடித்தல் என்ற […]

08/05/2020 Dinesh R
பெர்முடா | நாவல் விமர்சனம் கட்டுரை

பெர்முடா | நாவல் விமர்சனம்

கேபிள் சங்கரின் பெர்முடா நாவல், மூன்று ஜோடிகளின் பொருந்தாக் காமத்தைப் பற்றிப் பேசுகிறது. மூன்று ஜோடிகளிலுமே ஆண் மூத்தவராகவும், பெண் இளையவராகவும் உள்ளார். பெர்முடா எனும் தலைப்பினை ஒரு குறியீட்டுப் பெயராகக் கொள்ளலாம். பொருந்தாக் காமம் எனும் கவர்ச்சியான ஈர்ப்பில் அந்த ஜோடிகள் சிக்குகின்றனர். அந்தப் பொல்லாத ஈர்ப்பு அவர்களைத் தன்னுள் இழுத்துப் புதைத்துக் கொள்கிறதா அல்லது அந்த ஈர்ப்பிலிருந்து லாகவமாய் வெளியேறி விடுகின்றனரா என்பதுதான் நாவல். பொருந்தாக் காமத்திற்குத் தொல்காப்பியர் சூட்டும் பெயர் “பெருந்திணை.” அதை மேலும் […]

28/04/2020 Dinesh R
Extraction விமர்சனம் OTT

Extraction விமர்சனம்

இந்திய போதைக் கடத்தல் மன்னன் சிறையில் அடைபட்டிருக்க, அவனது மகன் ஓவி மஹாஜனைக் கடத்தி விடுகிறான் பங்களாதேஷ் கடத்தல் மன்னன் அமிர். ஓவியைப் பணயத் தொகை தராமல் விடுவிக்க, ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு கூலிப்படை பங்களாதேஷ் தலைநகரம் டாக்காவில் இறங்குகிறது. அடைபட்ட பையனை, ஆஸ்திரேலியக் கூலிப்படையைச் சேர்ந்த நாயகன் டைலர் வெளியில் கொண்டு வந்த பிறகு, ஆஸ்திரேலியக் குழு யாரோ ஒருவனால் தாக்கப்படுகிறது. மறுபுறம், ஓவியை மீட்டுக் கொல்ல, அமிரின் ஆட்களும், பங்களாதேஷ் இராணுவமும் டாக்காவை முழுவதும் மூடித் […]

26/04/2020 Dinesh R
The Insult (2017) விமர்சனம் அயல் சினிமா

The Insult (2017) விமர்சனம்

“மனிதன் மகத்தான சல்லிப்பயல்” என்பது எழுத்தாளர் ஜி.நாகராஜனுடைய புகழ்பெற்ற வாசகம். யாராவது சாலையில் விழுந்து கடுமையான காயம்பட்டால், “நல்ல அடி” என்போம் இல்லையா? அது போல ‘மகத்தான சல்லிப்பயல்’ என்கிறார். நம் எல்லோருடைய மனதிலும் ஈகோ எனும் பெட்ரோலில் தோய்ந்த பஞ்சுப்பொதி ஈரத்துடனே இருக்கிறது. அந்த பெட்ரோல் பஞ்சுப்பொதி பற்றிக்கொண்டு எரிய அவமானம் அல்லது புறக்கணிப்பு எனும் சிறு-தீப்பொறி கூடத் தேவையில்லை, அந்த தீப்பொறியின் வெம்மையே கூடப் போதுமானதாக இருக்கிறது. அப்படிப் பற்றும் தீ, தன்னையும் எரித்து, […]

25/04/2020 Dinesh R
Birbal Trilogy: Case 1 Finding Vajramuni விமர்சனம் அயல் சினிமா

Birbal Trilogy: Case 1 Finding Vajramuni விமர்சனம்

சமீபமாகக் கன்னடத்தில் வெளிவந்த சிறந்த இன்வஸ்டிகேடிவ் த்ரில்லர் என தைரியமாக இப்படத்தினைச் சொல்லலாம். கடைசி வரைக்கும் யார் உண்மையான கொலையாளி எனத் தீர்மானிக்க முடியாமல் யோசிக்க வைப்பதிலேயே இயக்குநர் வெற்றி பெற்றுவிடுகிறார். ஒரு கொலை நடக்கிறது, அதனைப் பற்றிச் சொன்னவன் தான் குற்றவாளி என காவல்துறையினர் கைது செய்கின்றனர். நீதிமன்றத்தில் தீர்ப்பாகி எட்டு வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளி வருகிறான். இதனிடையில் ஒரு சட்ட நிறுவனம் சமுதாயத்தில் நற்பெயர் எடுக்க வேண்டி, ஏழை மக்களது வழக்குகளை […]

25/04/2020 Dinesh R
Babel (2006) விமர்சனம் அயல் சினிமா

Babel (2006) விமர்சனம்

புகழ் பெற்ற மெக்ஸிக்கன் இயக்குநர்,அலெக்சாண்ட்ரோ கான்சல்ஸ் இனாரிட்டு (Alejandro Iñárritu) தயாரித்து, இயக்கிய திரைப்படம். இதே இயக்குநர், “மரணம்” என்ற தீமை மையமாக கொண்டு இயக்கிய ‘அமரோஸ் ஃபெரோஸ்’, ’21 கிராம்ஸ்’ ஆகிய படங்களின் தொடர்ச்சி ட்ரையாலஜியாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. பேபல் படம் ஹைப்பர்-லிங்க் திரைக்கதையைக் கொண்டது. அதாவது, சம்மந்தமே இல்லாத நாலைந்து கிளைக் கதைகளை க்ளைமாக்ஸில் ஏதோ ஒரு வகையில் லிங்க் செய்து ஒற்றைக்கதையாக மாற்றும் திரைக்கதை வடிவத்தை ஹைப்பர்-லிங்க் என்பார்கள். போன வருடம் தமிழில் […]

25/04/2020 Dinesh R
அம்மாவின் மரணம் | நூல் விமர்சனம் கட்டுரை

அம்மாவின் மரணம் | நூல் விமர்சனம்

அண்ணாதுரை படத்தில் கோதண்டம் பாத்திரத்திற்கு அற்புதமான ஜீவனை அளித்திருப்பார் பத்திரிகையாளரும் நடிகருமான சு. செந்தில் குமரன். அவர், தனது அம்மாவின் மரணத்தைத் தாங்க முடியாதவராகத் தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ள, அம்மாவின் நினைவாக 67 கவிதைகளை இயற்றியுள்ளார். மரணித்த பொழுது அவரது அம்மாவின் வயது 67. பெண்ணென்றால் பேயென்றே விண்ணதிரச் சொன்ன பட்டினத்தான் அன்னையென்ற உறவை மட்டும் அள்ளிக்கொண்டான் – ஆங்கே அழுதழுது புரண்டபடி கொள்ளி வைத்தான். அப்படிப் பட்டினாத்தானே மூழ்கிய பாசத்தாய்ப் பெருங்கடலைத் தன்னால் எப்படி நீந்திக் […]

22/04/2020 Dinesh R
Untraceable (2008) விமர்சனம் அயல் சினிமா

Untraceable (2008) விமர்சனம்

கடந்த ஒரு வாரம் பத்து நாட்களாக, ஃபேஸ்புக்கில் பெரியாரியம், பெண்ணியம், பாலியல் சுதந்திரம் குறித்து இரண்டு முற்போக்கு குழுக்கள் விவாதம் செய்து வருகின்றன. பரஸ்பரம் குற்றம் சாட்டியும் வருகின்றன. சில அந்தரங்கப் பேச்சுகள், வீடியோக்கள் என விவாதம் தனிப்பட்ட தாக்குதலைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த இரண்டு குழு பற்றியும் எனக்குப் பெரிய அக்கறை இல்லை. ஆனால், அவர்கள் இருவரும் தந்தை பெரியாரைத் தனது துணைக்குக் கூப்பிட்டுக் கொள்கிறார்கள். அது தான் வருத்தம். பாவம் பெரியார். இந்த […]

22/04/2020 Dinesh R
The tale of the Princess Kaguya (2013) விமர்சனம் அயல் சினிமா

The tale of the Princess Kaguya (2013) விமர்சனம்

ஜப்பான் நாட்டுப்புறக் கதை ஒன்றை அழகான அனிமே (Anime – Japanese animation) படமாக உருவாக்கியுள்ளார் இசாவோ டகஹாட்டா (Isao Takahata). இது அவர் இயக்கிய கடைசிப்படமும் ஆகும். சிறிய வயதில் அவர் படித்த, ‘ஒரு முங்கீல் வெட்டியின் கதை’ என்ற நாட்டுப்புறக் கதைக்கு அனிமேஷன் உருவம் கொடுக்க வேண்டுமென்பது அவரது ஆசை. சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக அனிமேஷன் துறையில், கதாசிரியராகத் தயாரிப்பாளராக இயக்குநராகப் பணியாற்றிய டகஹாட்டா, தனது இளம் வயது கனவிற்கு அவரது 78 […]

22/04/2020 Dinesh R
தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம் அயல் சினிமா

தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம்

‘திருட்டுப்பொருளும் சாட்சியும்’ என்பதே தலைப்பின் பொருள். ஆங்கிலத்தில், Angle in Details என்று சொல்லுவார்கள். மிக எளிமையான விஷயத்தைக் காட்சிப்படுத்துவது, அதனைப் புரிந்துகொள்வதில் விரிவாக ஆழம் செல்லச் செல்ல தெய்வீகம் வெளிப்படுகிறது. எளிமையே பிரம்மாண்டம். அதனைக் காணவும் மற்றவருக்கு அதே அனுபவத்தைக் கடத்தவும் சற்றே பெரிய கண்கள் தேவைப்படுகிறது. அது தனிக் கலை. இந்தக் கலை பெரும்பாலான கேரள திரைப்படக் கலைஞர்களுக்குப் பிறப்பிலேயே வாய்த்திருக்கிறது எனலாம். மிக மிக எளிமையான கதையை கூட மனதில் நீங்காமல் இருப்பது […]

22/04/2020 Dinesh R
தி ஆஃப்ரிக்கன் டாக்டர் விமர்சனம் அயல் சினிமா

தி ஆஃப்ரிக்கன் டாக்டர் விமர்சனம்

ஆதரிக்க யாருமில்லாத அநாதையான காங்கோ நாட்டைச் சேர்ந்த கருப்பரான சியோலோ ஜன்டோகோ, தனது கடினமான உழைப்பால், ஃபிரான்ஸில் மருத்துவப் படிப்பை முடிக்கிறார். காங்கோவின் சர்வாதிகாரியான மொபட்டூவிற்கு பெர்ஸ்னல் மருத்துவராகப் பணிபுரிய வாய்ப்புக் கிடைக்கிறது. ஊழலில் திளைக்கும் ரத்த வரலாறு கொண்ட ஜனாதிபதியிடம் பணி புரிய விரும்பாமல், ஃபிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெறுவதற்காக, மார்லி-கோமான்ட் எனும் கிராமத்தில் மருத்துவராகப் பணிபுரியச் சம்மதம் தெரிவிக்கிறார். ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் குடியேறப் போகிறோம் எனத் தவறுதலாக நினைத்துவிடும் சியோலோவின் குடும்பத்திற்கு, சதா […]

21/04/2020 Dinesh R
The Sum of All Fears விமர்சனம் அயல் சினிமா

The Sum of All Fears விமர்சனம்

ஜேக் ரையன் என்பவர் ஜேம்ஸ் பாண்ட், ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போல ஒரு சாகசகார ஸ்பெஷல் ஏஜென்ட் கதாபாத்திரம். டாம் க்ளென்ஸி எனும் எழுத்தாளர் படைத்த கற்பனை கதாபாத்திரம் இது. கதைப்படி, ஜேக் ரையன், அமெரிக்காவின் உளவுத்துறையில் டேட்டா அனலிஸ்ட்டாக வேலை செய்பவன். உலகெங்கும் நடக்கும் அசாதாரணச் செயற்பாடுகளைக் கண்காணித்து அது குறித்து அரசாங்கத்துக்கு ரிப்போர்ட் அளிக்கும் வேலை. ஆனால், இவனுக்கு டெரரான ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. அமெரிக்காவின் மெரைன் (கடல் சார்ந்த) ராணுவத்தில் பணியாற்றி, விபத்தால் முதுகுதண்டு உடைந்து […]

21/04/2020 Dinesh R
எவரு விமர்சனம் அயல் சினிமா

எவரு விமர்சனம்

இன்ட்டரொகேஷன் அடிப்படையில் அமைந்த நல்ல க்ரைம் த்ரில்லர். நாலு வருஷத்துக்கு முன்னாடி வெளிவந்த The Invisible Guest எனும் ஸ்பானியப் படத்தின் தெலுங்குப் பதிப்பு. எல்லாப் பதில்களும் கேள்விக்கு உட்படுத்தப்படும் (All answers shall be questioned) என்பது தான் இந்தப் படத்தின் டேக் லைன். போன வருடத்தில் தெலுங்கில் வெளிவந்த மிகச் சிறந்த படம் என்ற விருதைப் பெற்ற திரைப்படம்.  சமீரா மிகப்பெரிய தொழிலதிபர். அவர்  கோத்தகிரியில் ஒரு ரிசார்ட்டில் டிஎஸ்பி அஷோக் தன்னைக் கற்பழித்ததால் […]

20/04/2020 Dinesh R
உண்ட – மலையாளப் பட விமர்சனம் அயல் சினிமா

உண்ட – மலையாளப் பட விமர்சனம்

எங்கள் வீட்டில் எப்பொழுதும் அரைகிலோ வேர்கடலை இருக்கும். என் மனைவி வேர்கடலையை வறுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்திருப்பார். எனக்கு அவ்வப்பொழுது அதுதான் நொறுக்குத்தீனி. இப்பொழுது கொரோனாவால் லாக்-டவுன்க்கு ஆளான பிறகு வீட்டிலேயே இருப்பதால் வறுத்த வேர்கடலையை தினமும் ஒரு பிடி சாப்பிட்டு வந்தேன். திடீரென, வேர்கடலை தீர்ந்து போனது. எங்கள் ஏரியாவில் நான்கு நாட்களாக பல கடைகளில் கேட்டும் வேர்கடலை மட்டும் கிடைக்கவே இல்லை. இப்பொழுது சட்னி அரைக்கக்கூட வேர்கடலை கிடைக்கவில்லை. இது போல் தான் […]

19/04/2020 Dinesh R