32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 111)
வாத்துகள் – இயற்கையின் பெருங்கொடை கட்டுரை

வாத்துகள் – இயற்கையின் பெருங்கொடை

நீரிலும், நிலத்திலும் வாழும் பறவை இனம் இந்த மல்லார்ட் வாத்துகள். பனிக்காலத்தில் உறைந்த குளங்களின் மேல் வழுக்கிக் கொண்டு நடந்து செல்வதும், கூட்டமாக நெருங்கி நின்று பனிக்காற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதும், சில பறவைகள் தெற்கு நோக்கிப் பறந்து போவதுமாய்க் கடும் குளிர், பனி, வெயில், மழையிலிருந்து இவர்களின் வாழ்க்கை முழுவதற்கும் அதன் இறக்கைகளே கவசங்களாக இருக்கிறது. ஆறுகள், ஏரி, குளங்களென நீர்நிலைகள் தோறும் இவற்றைக் காண முடிகிறது. பல வண்ணங்களில் பெண் வாத்துகளைக் கவரும் வண்ணம் வசீகரமாக […]

15/04/2020 Dinesh R
ஜோசஃப் – விமர்சனம் அயல் சினிமா

ஜோசஃப் – விமர்சனம்

இந்தப் படம், கடந்த நான்கைந்து வருடங்களில் நான் பார்த்த மிகச் சிறந்த க்ரைம் த்ரில்லர் படம். இந்தப் படத்தில் இரண்டு லேயர்கள் உள்ளன. ஒன்று க்ரைம் இன்வெஸ்டிகேஷன். மற்றொன்று மிக எமோஷனலான குடும்ப உறவுகள் மீதான சென்ட்டிமென்ட். இரண்டையும் சிறப்பாக பேலன்ஸ் செய்து நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது ஜோசஃப். ஜோசஃப், ரிடையர்ட் போலீஸ் அதிகாரி. அவரது இன்வெஸ்டிகேஷன் திறமைக்காக அவரைத் தொடந்து போலீஸ் டிபார்ட்மென்ட் பயன்படுத்தி வருகிறது. முதல் காட்சியில் மிக அநாயாசமாக அந்த வயதான […]

15/04/2020 Dinesh R
நான் இனி நீ.. நீ இனி நான் | ஜெகன் சேட் – நூல் விமர்சனம் கட்டுரை

நான் இனி நீ.. நீ இனி நான் | ஜெகன் சேட் – நூல் விமர்சனம்

குறுநாவல் என்று கூடச் சொல்ல முடியாத ஒரு நெடுங்கதை. ரோலர்கோஸ்டர் போல் விறுவிறுவென ஓடும் 90’ஸ் கிட் ஒருவரின் காதல் கதை. முதல் வரியிலேயே, தான் பார்த்த பெண்ணின் அழகு பற்றிய பிரமிப்பில் இருந்து தொடங்குகிறது ஜெயராமனின் காதல் கதை. பேச்சுமொழியில், தனக்கு நெருங்கிய ஒருவரிடம் ஜெயராமன் கதை சொல்வது போல் எழுதியுள்ளார் ஜெகன் சேட். ஒருவரின் காதல் கதையை, அவர் வாயாலேயே கேட்பதுதான் எத்தனை சுவாரசியம்? இயக்குநர் ராஜேஷின் (ஒரு கல் ஒரு கண்ணாடி) ஆரம்பக் […]

15/04/2020 Dinesh R
எழுதாப் பயணம் – ஒரு போராட்ட வீரரின் கள அறிக்கை கட்டுரை

எழுதாப் பயணம் – ஒரு போராட்ட வீரரின் கள அறிக்கை

ஒரு ஆட்டிசக் குழந்தையின் அம்மாவாக, சிறப்புக் குழந்தைகளின் ஆசிரியையாக, தனது அனுபவங்களை அழகாகத் தொகுத்து, ‘எழுதாப் பயணம்’ எனும் நூலை எழுதியுள்ளார் லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன். இந்நூலின் சிறப்பம்சம், எவருக்கும் புரியும்படியாக எழுதப்பட்டுள்ள ரொம்ப எளிமையான மொழிநடையே ஆகும். சமூகத்தில், ஆட்டிசம் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை. அது ஏற்படுவதற்கு முன்பாகவே, அதை வைத்துச் சம்பாதிக்க சிலர் தொடங்கிவிட்டனர். நம் மக்களின் அறியாமை மேல உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில், ஆட்டிசத்துக்குத் தீர்வு உண்டு என மக்களை நம்ப […]

14/04/2020 Dinesh R
செத்தும் ஆயிரம் பொன் விமர்சனம் OTT

செத்தும் ஆயிரம் பொன் விமர்சனம்

ஏப்ரல் 1 அன்று, நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள படம். சிறு வயதிலேயே ஊரை விட்டுப் போய்விடும் மீரா, தன் பாட்டி கிருஷ்ணவேனியைப் பார்க்க வேண்டாவெறுப்பாக ஆப்பனூர் எனும் கிராமத்திற்கு வருகிறாள். அவர்கள் உறவுக்குள் என்ன சிக்கல், அது எப்படி நகர்கிறது என்பதுதான் படத்தின் கதை. என்றாலும், ஒருவரின் மரணத்தை ஆப்பனூர் மக்கள் எப்படி அணுகுகின்றனர் என்பது கதையோடு பின்னிப் பிணைந்த இழையாக வருகிறது. இந்த இழை தான் படத்தின் தனித்துவத்திற்கும் சிறப்பிற்கும் காரணம். ஜில் ஜங் ஜக் […]

08/04/2020 Dinesh R
ஸ்பெஷல் ஆப்ஸ் – விமர்சனம் சினிமா

ஸ்பெஷல் ஆப்ஸ் – விமர்சனம்

டிசம்பர் 13, 2001இல், பார்லியமென்ட்டில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்டவனைப் பத்தொன்பது வருடங்களாகத் தேடி வருகிறார் ரா (RAW) அதிகாரியான ஹிம்மத் சிங். சிறப்பு ஆப்ரேஷன் எனப் பொருள்படும் வகையில், ‘ஸ்பெஷல் ஆப்ஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸை, பிரபல ஹிந்திப் பட இயக்குநரான நீரஜ் பாண்டேவின் ‘ஃப்ரைடே ஸ்டோரிடெல்லர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், நீரஜ், இயக்குநர் ஷிவம் நாயருடன் இணைந்து இயக்கியும் உள்ளார். இந்தியாவில் நடப்பதை ஷிவம் நாயரும், வெளிநாடுகளில் நடக்கும் பகுதிகளை […]

07/04/2020 Dinesh R
1982 – லெபனான் திரைப்படம் அயல் சினிமா

1982 – லெபனான் திரைப்படம்

ஜூன் 1982. விஸாம் எனும் பள்ளி மாணவன், எப்படியாவது தன் காதலை ஜோனாவிடம் சொல்லி விடவேண்டுமென நினைக்கின்றான். ஆனால், அச்சமயம் பலத்த வெடிச்சத்தம் கேட்கிறது. எல்லாமே தலைக்கீழாய் மாறுகிறது. லெபனான் இளைஞர்கள் இராணுவத்தில் பெருமளவு சேர, லெபனான் மண்ணில் இஸ்ரேலும் சிரியாவும் மோதிக் கொள்கின்றன. பெரும்பாலான போர் படங்கள், குறிப்பாக அமெரிக்கத் திரைப்படங்கள், தங்கள் படை எப்படி போரில் வெற்றி ஈட்டியது என்பது பற்றியதாகவே இருக்கும். ‘தி பியானிஸ்ட்’ போன்ற வெகு சில விதிவிலக்குகளும் உண்டு. இதற்கு மாறாக […]

04/04/2020 Dinesh R
ட்ரான்ஸ் விமர்சனம் அயல் சினிமா

ட்ரான்ஸ் விமர்சனம்

Trance என்றால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் நினைவிழந்த நிலை. போதையூட்டப்பட்ட மயக்கநிலை என்றும் சொல்லலாம். மனிதன் கண்டுபிடித்த லாகிரி வஸ்துக்களிலேயே, “மதம் (religion)” தான் பயங்கர வசீகரமானதும், மிகக் கொடியதானதும் ஆகும். மதம் பிடித்த மனிதனின் பைத்தியக்காரத்தனம் எந்த எல்லைக்கும் செல்லும். அவர்களது உலகமே தனி. நவீன அறிவியலை மண்டியிடச் செய்யும் விஞ்ஞானச் செறிவு நிறைந்தது எங்கள் மதநூல் என உன்மத்தம் கொள்ளவைக்கும். அத்தகைய மதத்தின் மீதான ஒருவனது நம்பிக்கை, தன்னைக் […]

04/04/2020 Dinesh R
மனச்சுரங்கத்தை உழும் ‘கரும்புனல்’ புத்தகம்

மனச்சுரங்கத்தை உழும் ‘கரும்புனல்’

இந்தியாவின் அச்சுறுத்தும் முகத்தினைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் ராம்சுரேஷ். பீஹாரிலுள்ள கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் தான் கதையின் களம். 1995 இல் நடப்பதாகக் கதை நகர்கிறது. 35 அத்தியாயங்கள் உடைய நாவல் என்றாலும், எந்த அத்தியாயமும் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் உள்ளது. முன்னுரை, என்னுரை நீங்கலாக 214 பக்கங்கள் கொண்ட நாவலை ஒரே மூச்சில் படிக்க முடிவதுதான் ராம்சுரேஷ் எழுத்தின் சிறப்பு. நாவலின் சரளமான flow-க்குக் காரணம், அவரது நினைவோடைகளில் சாம்பல் படிவமாய்ப் படிந்திருந்த அனுபவங்களைத் […]

28/03/2020 Dinesh R
மது வடலாரா விமர்சனம் அயல் சினிமா

மது வடலாரா விமர்சனம்

நாயகனும், நாயகனின் நண்பனும் ஒரு ஆன்லைன் டெலிவெரி கம்பனியில் டெலிவெரி பாய்ஸாக வேலை செய்கிறார்கள். நாயகனின் நண்பன் கேஷ் ஆன் டெலிவெரி பண்ணும்போது கஸ்டமர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு நோட்டை மறைத்துவிட்டு, “சார் 500 ரூபாய் குறையுது, 100 ரூபாய் குறையுது” என ஏமாற்றிப் பணத்தை அபகரிப்பார். இதைப் பார்த்த நாயகனும் அதைப் போல முயற்சி செய்யப் போக, அவன் பல சிக்கல்களில் மாட்டுவதுதான் கதை. வித்தியாசமான மேக்கிங்கால் கவர்ந்துள்ளார் இயக்குநர். ஒரு கஸ்டமர். அதுவும் பாட்டி. […]

28/03/2020 Dinesh R
அய்யப்பனும் கோஷியும் விமர்சனம் அயல் சினிமா

அய்யப்பனும் கோஷியும் விமர்சனம்

‘மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’ என எழுத்தாளர் ஜி. நாகராஜன் ஒரு வரியில் சொன்னதை மூன்று மணி நேரத் திரைப்படமாகக் கண்முன்னால் விரிய வைத்திருக்கிறார் இயக்குநர் சச்சி. முன்னரே பிரித்வி, பிஜூ மேனன் கூட்டணியில் லட்சத்தீவின் பின்னணியில் அனார்க்கலி என்ற சுவாரஸ்யமான காதல் கதையைச் சொன்ன, ‘ட்ரைவிங் லைசென்ஸ்’ திரைப்படத்திற்குத் திரைக்கதை எழுதிய அதே சச்சிதான் இவர். உண்மையில் இது இரண்டு மனிதர்களுக்கு இடையிலான தனிப்பட்ட தன்முனைப்பு சார்ந்த போராட்டம் என்பதுபோல தோன்றினாலும் அதனூடே உண்மையில் அதிகாரம் […]

28/03/2020 Dinesh R
கொரோனா தொற்று: புற்றுநோய் பாதிப்பாளர்களுக்கான வழிகாட்டி மருத்துவம்

கொரோனா தொற்று: புற்றுநோய் பாதிப்பாளர்களுக்கான வழிகாட்டி

புற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் அனிதா ரமேஷ், புற்றுநோய் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் ஒரு கருத்தரங்கை நிகழ்த்தினார். “கொரோனா தொற்றுக் காலத்தில், சமூகத்தில் மருத்துவர்களான நமது பங்கு அளப்பரியது. அதிலும் குறிப்பாகப் புற்றுநோய் துறை மருத்துவர்களுக்கு, கூடுதல் பொறுப்பு உள்ளது. நாம், மத்திய மற்றும் மாவட்ட அரசுகள் வழிகாட்டுதல்களை அறிந்து கொண்டு, அது படி நடக்கவேண்டியது நம் கடமையாகும். கொரோனா யொற்றுக் காலத்தில், புற்றுநோய்க்கான சிகிச்சைகளை முன்னிலைப்படுத்தி இயங்க இயலாது. எனினும் நாம் நம் முக்கியத்துவத்தை உணர்ந்து, எளிதில் பாதிப்படையக் […]

25/03/2020 Dinesh R
பிளட்ஷாட் விமர்சனம் அயல் சினிமா

பிளட்ஷாட் விமர்சனம்

பிளட்ஷாட் என்பது வேலியன்ட் காமிக்ஸ் உருவாக்கிய ஒரு சூப்பர் ஹீரோவின் பெயர். ‘பிளட்ஷாட்’ எனும் பிராஜெக்ட்டை உருவாக்கும் RST நிறுவனம், இறந்துவிடும் ஒரு இராணுவ அதிகாரியான ரே கேரிசனுக்குச் செயற்கை உயிரூட்டி, உடலில் நேனைட்ஸ் (Nanites) –ஐச் செலுத்தி விடுகின்றனர். நேனைட்ஸ் அதி வேகத்தில் செயற்பட்டு, பழுதுபடும் உறுப்புகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவல்லது. ஆனால், ரைஸிங் ஸ்பிரிட் டெக்னாலஜியின் (RST) சி.ஈ.ஓ.வான டாக்டர் எமில் ஹார்டிங், பிளட்ஷாட்டை ஒரு ஆயுதமாக மட்டுமே உருவாக்குகிறார். மனதில் […]

15/03/2020 Dinesh R
தாராள பிரபு விமர்சனம் சினிமா

தாராள பிரபு விமர்சனம்

‘விக்கி டோனர்’ என 2012இல் வெளிவந்த ஹிந்திப் படத்தின் ரீமேக்காக இப்படம் வெளிவந்துள்ளது. ஜுஹி சதுர்வேதியின் கதையை, விவேக்கை உள்ளே கொண்டு வந்து மேலும் நகைச்சுவையாகப் படத்தை எடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து. ‘என்னது நீ ஸ்பேர்ம் டோனரா?’ என நாயகி கேட்கும் பொழுது கேவலமாகத் தெரியும் தொழில், விவேக் ஸ்பேர்ம் (விந்து) பற்றிப் பேசும்பொழுதெல்லாம் ரசிக்க முடிகிறது. படத்தின் நாயகனே விவேக் தான் எனச் சொல்லுமளவு, முதல் ஃப்ரேமில் இருந்து கடைசி வரை அதகளம் […]

13/03/2020 Dinesh R
கயிறு விமர்சனம் சினிமா

கயிறு விமர்சனம்

படத்திற்கு ‘பூம்பூம் மாடு’ என்றே தலைப்பிட்டிருக்கலாம். கந்தன் எனும் ஒரு பூம்பூம் மாட்டையும், சின்ராசு எனும் பூம்பூம் மாட்டுக்காரனையும் சுற்றியே கதை நகர்கிறது. கதையின் மையமான மாட்டை, நாயகன் கயிற்றில்தானே கட்டி வச்சிருப்பார்! ஆக, மாடு வாங்குவதை விட அதற்கு மூக்கணாங்கயிறு வாங்குவது முக்கியமென்ற உயரிய கருத்தை உணர்த்துவதாக படத்தின் தலைப்பைக் கொள்ளலாம். நன்றாக அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாட்டிடம், குறி கேட்பவர் கேள்விகளை முன்வைக்க, மாடு தலையாட்டுவதைக் கொண்டு பலன்கள் சொல்வர் பூம்பூம் மாட்டுக்காரர்கள். கோயில் திருவிழா […]

13/03/2020 Dinesh R