32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 109)
கர்ணன் கொடையாளியா ? ஆன்‌மிகம்

கர்ணன் கொடையாளியா ?

(Image Courtesy: Quora.com) கர்ணனின் வீரம் மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம் வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம் பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம் பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம் கர்ணன் படத்தில் வரும் பாடல். இப்படி கர்ணனின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து வரும் நிறைய கதைகள் உண்டு. புறக்கதைகளை விடுத்துவிட்டு, பாரதத்தில் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கும் முன்பு கொடை, வள்ளல் தன்மை என்றால் என்ன? அதை முதலில் வரையறுத்துவிடலாம். கொடை என்றால் […]

21/07/2020 Dinesh R
அறத்தைப் பரிகசிக்கும் ஒற்றைச் செருப்பின் அபாய அரசியல் கட்டுரை

அறத்தைப் பரிகசிக்கும் ஒற்றைச் செருப்பின் அபாய அரசியல்

‘ஒன் மேன் ஷோ’வாய் ஒரு திரைப்படத்தில் தான் மட்டுமே திரையில் தெரியவேண்டும் என்பது பார்த்திபனின் பல்லாண்டு கனவு. திறன்மிகு தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியோடு, அக்கனவை ஒத்த செருப்பு சைஸ் -7 என்ற நேர்த்தியானதொரு படத்தின் மூலம் நனவாக்கிக் கொண்டுள்ளார். எழுதி, தயாரித்து, இயக்கி, ஒற்றை ஆளாய் நடித்ததன் மூலம், ஒத்த செருப்பு படத்தை, ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ‘ஏஷியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகியவற்றில் சாதனையாக இடம்பெற வைத்துவிட்டார் பார்த்திபன். அதி அற்புத முயற்சி, தொழில்நுட்ப […]

20/07/2020 Dinesh R
“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண் அரசியல்

“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்

ராஜ்கிரண் என்றழைக்கபடும் J. மொஹைதீன் அப்துல் காதர், ‘கறுப்பர் கூட்டம்’ யூ-ட்யூப் சேனல் வெளியிட்ட கந்த சஷ்டி கவசம் குறித்த ஆபாசமான காணொளியைக் கண்டித்துள்ளார். “ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம். முருகப்பெருமானை நம்புவோர்க்கு, “கந்தர் சஷ்டி கவசம்” என்பது ஒரு பாதுகாப்பு அரண். இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்துவரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன. இறைவனை நம்பாதோர்க்கு, ‘நம்பாமை’ என்பது அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு, […]

15/07/2020 Dinesh R
Portrait of a Lady on Fire விமர்சனம் அயல் சினிமா

Portrait of a Lady on Fire விமர்சனம்

மனிதனுக்கு சுதந்திரமும், கலையும் எவ்வளவு முக்கியமானவை என்பதைப் படம் ஒரு கவிதையாக உணர்த்துகிறது. கான்ஸ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகள் (2019) பெற்றது உட்பட, பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது இந்த ஃப்ரெஞ்ச் மொழிப்படம். ஒரு பெண் இயக்குநரின் படம், கான்ஸ்-இன் Queer Palm விருதினைப் பெறுவது இதுவே முதல்முறையாகும். கோமாட்டி ஹெலூயிஸை ஓவியமாக வரைய, பிரட்டானி தீவுக்கூட்டங்களில் உள்ள ஒரு தீவு ஒன்றுக்கு வரவழைக்கப்படுகிறாள் ஓவியை மரியேன். அந்த ஓவியத்தை மிலனிலுள்ள கோமான் ஒருவனுக்கு அனுப்பித் […]

15/07/2020 Dinesh R
கர்ணனின் வீரம் ஆன்‌மிகம்

கர்ணனின் வீரம்

(Image Courtesy: Quora.com) முந்தைய பகுதி: கர்ணன் துரியோதனன் நட்பு மாவீரன் என்றால் ஏதோ சில தருணங்களில் மட்டும் நல்ல வித்தைகளைக் காட்டிவிட்டு, அல்லது வீரத்தைக் காட்டிவிடுவது அன்று. உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம். பெரும்பாலோர் கூறுவது கர்ணன் துரோணரிடம் பாடம் பயிலச் சென்ற போது அவனை குலம் காட்டி துரோணர் மறுத்தார் என்பது. எவ்வளவு அப்பட்டமான பொய்? கர்ணன் துரோணாச்சாரியாரின் மாணவர்களில் ஒருவன். துரோணர் வேண்டிய குருதட்சணை, துருபதனைச் சிறையெடுத்தலாகும். கவனிக்க, கர்ணன் இங்கே துரோணரின் மாணவனாக, […]

05/07/2020 Dinesh R
கர்ணன் துரியோதனன் நட்பு ஆன்‌மிகம்

கர்ணன் துரியோதனன் நட்பு

(Image Courtesy: news.indiatimes.com) முதல் பகுதி: “அடிமைக்கு ஏன் மேலாடை?” – கர்ணன் எத்தனை வகையான பாரதங்கள்? ஜைமினி பாரதம் கன்னட பாரத கதாமஞ்சரி பீல் மஹாபாரதம் இந்தோனேஷிய மஹாபாரதம் ஜைன பாரதம் வில்லிபாரதம் என இன்னும் பலவகையில் பரவி இருக்கின்றன. இவை அந்தந்தப் பிராந்திய சூழலுக்கேற்றாற்போல எழுதியவர்களால் கற்பனைக்குட்படுத்தப் பட்டு எழுதப் பட்டிருக்கின்றன. இப்படியானவற்றில் கர்ணனை அதிசூரனாக, வள்ளலாக எல்லாம் காட்டிய பெருமை தென்னிந்திய வகை பாரதங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பிறந்தான் கர்ணன்! – […]

05/07/2020 Dinesh R
“அடிமைக்கு ஏன் மேலாடை?” – கர்ணன் ஆன்‌மிகம்

“அடிமைக்கு ஏன் மேலாடை?” – கர்ணன்

(Image Courtesy: https://detechter.com/) கர்ணனைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள பிம்பத்திற்கு, சிவாஜி கணேசன் நடிப்பில் 1964 இல் வெளிவந்த “கர்ணன்” திரைப்படமே முக்கிய காரணம். அந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டது போல்தான் இதிகாசங்களும், காவியங்களும் கர்ணனை அடையாளப்படுத்துகின்றதா எனப் பார்ப்போம். பெற்றவர் பிள்ளையை வீதியில் விட்டெறிந்தால் குற்றம் உடையோர் குழந்தைகளா? பெற்ற மக்கள் சுற்றமும் அற்றுச் சுயமதிப்பும் விட்டனரே! அர்ப்பணம் செய்தோம் அவர்க்கு. என்ற வெண்பாவுடன் ஆரம்பிக்கும் படம். கர்ணன் தேர்த்தட்டில் சாய்ந்திருக்க, கிருஷ்ணன் அந்தணனாய் […]

05/07/2020 Dinesh R
சூஃபியும் சுஜாதயும் விமர்சனம் OTT

சூஃபியும் சுஜாதயும் விமர்சனம்

ஒரு சூஃபிக்கும், சுஜாதா எனும் வாய் பேசா முடியாத பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. “சூஃபிகள், ஆடவும் பாடவும் தெரிந்த துறவிகள்” என்பார் சுஜாதாவின் பாட்டி. சூஃபியை, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராகப் பார்ப்பார் சுஜாதாவின் அப்பா. உண்மையில், சூஃபிகள் மதங்களைக் கடந்தவர்கள். சூஃபிகளை, இறைச் சிந்தனையில் வாழும் ஞானிகள் என்று சொல்லலாம். பொதுவாகத் துறவு மனநிலை கொண்டவர்களாக இருப்பார்களே அன்றி, கட்டாயமாகத் துறவியாக இருந்தே ஆகவேண்டிய கட்டாயமில்லை. மதத்தை மீறிக் கலைகளின் வாயிலாக இறைவனின் ஏகத்துவத்தை விசாலப்படுத்துவதே சூஃபிகளின் […]

04/07/2020 Dinesh R
மும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு சமூகம்

மும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு

உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விஷயமும் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. தேர்வுக்கு எப்படி தயாராவது? இப்போதிருக்கும் இறுக்கமான மனநிலையில் தேர்வை எப்படி எதிர்கொள்வது? இப்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மனச்சிக்கலில் இருந்தார்கள். இந்நிலையில் மாணவர்களின் இறுக்கத்தைப் போக்கும் விதமாக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவித்து மாணவர்களின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் […]

02/07/2020 Dinesh R
பெண்குயின் விமர்சனம் OTT

பெண்குயின் விமர்சனம்

ரிதம் எனும் பெண்ணின் மகன் காணாமல் போய், ஆறு வருடங்களுக்குப் பின் கிடைக்கின்றான். அவனை யார் கடத்தினார்கள், அந்தச் சிறுவனுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரிந்து கொள்ள ரிதம் நினைக்கிறார். அவரால் அதைத் தெரிந்து கொள்ள முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. “ஓப்பன் பண்ணா, காட்டுக்கு நடுவுல ‘மதர் ஆஃப் நேச்சர்’ சிலை. ஒரு கருப்பு நாய், தத்தித் தத்தி நடக்கும் சின்ன பையன், சிலைக்குப் பின்னாடியிருந்து மஞ்சள் நிறக் குடையில் சார்லி சாப்ளின் முகமூடி அணிந்த […]

20/06/2020 Dinesh R
காஃப்காவினால் அல்ல! புத்தகம்

காஃப்காவினால் அல்ல!

ஃபிரான்ஸ் காஃப்கா எனும் எழுத்தாளர் செக்கோஸ்லேவேக்கியா நாட்டில் பிறந்த ஒரு ஜெர்மானிய யூதர். உலகின் மிகவும் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் காஃப்கா உயிருடன் வாழ்ந்த காலம் நாற்பத்தியோரு வருடங்களேயானாலும், அந்தக் குறுகிய காலத்தினுள் அவர் இலக்கியத்தில் புரிந்துள்ள சாதனை மகத்தானது என்கிறார்கள். இவர் எழுதிய ‘The Metamorphosis’s (உருமாற்றம்) என்கிற கதை மிகவும் பிரபலமான கதை.ஒரு மனிதன் திடீரென ஒருநாள் ஒரு பூச்சியாக மாறி விடுதான விசேஷ கற்பனை. காஃப்காவைப் படித்தவர்கள் தமிழ் நாட்டில் அதிகம் […]

16/06/2020 Dinesh R
ஜெ. அன்பழகன் – கொரோனா காலத்து வரலாற்று நாயகன் சமூகம்

ஜெ. அன்பழகன் – கொரோனா காலத்து வரலாற்று நாயகன்

தன்னுடைய தந்தை பழக்கடை ஜெயராமனைப் போலவே சென்னை மாநகரில் திராவிட முன்னேற்ற கழகத்திற்குக் கிடைத்த பெரும் செயல் வீரர் மறைந்த சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன். தென்சென்னையில் கிட்டு சிட்டாகப் பறந்து கொண்டிருந்த காலம் வரையிலும், அடக்கி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர் கிட்டுவின் மரணத்திற்குப் பிறகே லைம்லைட்டுக்கு வந்தார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தவரை ஓய்விலேயே சில வருடங்கள் இருக்கும்படி பணித்து, பின்பு, ‘மருத்துவர் சான்றிதழ் கொடுத்தால்தான் களப்பணியில் உன்னை இறக்குவேன்’ என்று […]

10/06/2020 Dinesh R
அம்மா மூவி அசோசியேஷனின் கொரோனா நிவாரண உதவி மற்றவை

அம்மா மூவி அசோசியேஷனின் கொரோனா நிவாரண உதவி

கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமுலுக்கு வந்து எண்பது நாட்களைக் கடந்துவிட்டது. இதன் காரணமாகத் திரைப்படத்துறை வேலைவாய்ப்பை நம்பி உள்ள தொழிலாளர்கள் வருவாய் இன்றித் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் புதிய படங்களை விற்பனை செய்வதற்குத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு இணைப்புப் பாலமாக இருந்து கோடிக்கணக்கான வியாபாரங்கள் முடிவதற்குக் காரணமாக உள்ள மீடியேட்டர்கள் உறுப்பினர்களாக உள்ள அம்மா மூவி அசோசியேசன் தங்கள் உறுப்பினர்களைப் பாதுகாக்கும் […]

09/06/2020 Dinesh R
தங்க ஒரு… – கிருஷ்ணன் நம்பி கதை

தங்க ஒரு… – கிருஷ்ணன் நம்பி

அன்புள்ள செல்லா, உன் கடிதம் கிடைத்தது. என்ன செய்யச் சொல்லுகிறாய்? முயற்சியில் ஒன்றும் குறையில்லைknambi . ஒவ்வொரு நாள் மாலையும், மந்தைவெளி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் என்று வேகமாக அலையத்தான் செய்கிறேன். மோட்டார்காரனுக்குக் காசு கொடுத்துக் கட்டி வராது என்று விளக்கெண்ணை வேறு வாங்கி வைத்திருக்கிறேன் காலில் போட்டுத் தேக்க. என் காலைப் பிடித்துவிட நீயும் இங்கு உடனே வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் என்ன செய்யச் சொல்லுகிறாய், செல்லா, முப்பது ரூபாய்க்கு மேல் போகவும் […]

08/06/2020 Dinesh R
கல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி சமூகம்

கல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி

கொரோனா தொற்றுக் காரணமாக அரசு ஊரடங்கை அறிவித்த பின் அடித்தட்டு மக்கள் தான் வழக்கம் போல் இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள். இருக்க இடம், பார்க்க வேலை, உண்ண உணவு என எதுவுமற்ற நிலையில் இருக்கும் மக்களுக்கு அரசின் கல்வித்துறை தற்போது ஆன்லைன் கல்வி மூலமாக ஏழைகளின் கல்விக்கே வேட்டு வைத்துள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் தொடர்விடுமுறை காரணமாகப் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு ஆன்லைன் வழியில் கற்றுத்தர அறிவுறுத்தி இருக்கிறது. ஆனாலும் ஸ்மார்ட் ஃபோனோ, லேப்டாப் வசதியோ […]

04/06/2020 Dinesh R