32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 136)
மீண்டும் மேக்ஸின் லூட்டி – தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் அயல் சினிமா

மீண்டும் மேக்ஸின் லூட்டி – தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்

‘இல்லுமினேஷ்ன் என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பில், 2016 இல் வெளிவந்த, தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் எனும் படம் மாபெரும் வெற்றி பெற்றது. செல்லப் பிராணிகள், தன்னை வளர்க்கும் குடும்பத்தினரோடு எப்படி உணர்வுபூர்வமாகக் கலந்து கொள்கின்றன என்பதுதான் இந்தப் பாகத்தின் பிரதான கரு. முதற்பாகத்தை இயக்கிய க்றிஸ் ரெனாட் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். வளர்ப்பவருடன் புது பண்ணை வீட்டிற்குச் செல்லும் மேக்ஸும், அவன் நண்பர்களும், தங்கள் பயத்தைக் கடந்து எப்படி ஹீரோவாகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. படத்திற்கு அலிக்சான்ட்ரூ […]

06/06/2019 Dinesh R
ஜீவன் நடிக்கும் அசரீரி சினிமா

ஜீவன் நடிக்கும் அசரீரி

அறிமுக இயக்குநர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் ‘அசரீரி’ எனும் அறிவியல் புனைவு படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, “டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராணக் குறிப்புகளைக் கூடத் தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன். இயக்குநர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் […]

04/06/2019 Dinesh R
எம்ஐபி: மென் இன் ப்ளாக் (2019) அயல் சினிமா

எம்ஐபி: மென் இன் ப்ளாக் (2019)

Men in Black (1997), Men in Black 2 (2002), Men in Black 3 (2012) ஆகிய மூன்றுமே வேற்றுக் கிரக உயிரினங்களுடன் நடக்கும் அதிரடி சண்டைக் காட்சிகளும் நகைச்சுவையும் ஒருங்கே அமையப்பெற்ற வெற்றித் திரைப்படங்கள். அதன் தொடர்ச்சியாக நான்காம் பாகமான Men in Black: International, ஜூன் 14 ஆம் ட்ஹேதி அன்று வெளியாகிறது. வில் ஸ்மித்தும், டாமி லீ ஜோன்ஸும் முதல் மூன்று பாகங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில், அவெஞ்சர்ஸ் புகழ் மார்வெல் […]

03/06/2019 Dinesh R
NGK விமர்சனம் சினிமா

NGK விமர்சனம்

இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் நந்தகோபால குமரனுக்கு உரக்கடை முதலாளிகளால் பிரச்சனை எழுகிறது. அச்சிக்கலில் இருந்து எம்.எல்.ஏ.வின் உதவியோடு தப்பித்த குமரன், அரசியல் எனும் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து, அதன் மூலம் நல்லது செய்ய நினைக்கிறான். அரசியலைச் சுத்தம் செய்தானா அல்லது அரசியலால் அசுத்தம் அடைந்தானா என்பதுதான் படத்தின் கதை. கட்சியின் அடிமட்ட தொண்டன் கிரியாக நடித்துள்ள பாலா சிங், கறை வேட்டியின் மகத்துவம் பற்றி குமரனுக்கு எடுக்கும் பாடம் மிகவும் அசத்தல். ‘செல்வராகவன் இஸ் பேக்’ […]

01/06/2019 Dinesh R
‘கடலைப் போட பொண்ணு வேணுமா?’ – யோகிபாபு சினிமா

‘கடலைப் போட பொண்ணு வேணுமா?’ – யோகிபாபு

R.G.மீடியா சார்பாக D.ராபின்சன் தயாரித்துள்ள “கடல போட ஒரு பொண்ணு வேணும்” எனும் படம். இப்படத்தை வேகமாக எடுத்து முடித்துள்ள இயக்குநர் ஆனந்த்ராஜன் படத்தைப் பற்றிக் கூறும்போது, “யோகிபாபுவின் இன்னொரு பரிணாமத்தை இந்தப் படம் காட்டும். யோகிபாபு செய்யும் தொழிலுக்கு இடது வலதாக இருக்கும் அடியாட்கள் அனைவரும் பெண்கள். அந்தப் பெண்களை அவர் கடலைப் போட்டு உஷார் பண்ணுவார். கடலைப்போட்டு கடலைப்போட்டு பெண்களை உஷார் செய்து ரவுடித் தொழில் செய்யும் அவரிடம் கடலைப்போட பெண் தேடும் ஹீரோ […]

30/05/2019 Dinesh R
சிம்புதேவனின் ‘கசட தபற’ சினிமா

சிம்புதேவனின் ‘கசட தபற’

‘கசட தபற’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் பார்த்ததும் அது ஆன்தாலஜி (Anthology) வகை படமாக இருக்குமோ என்ற எண்ணம் பரவலாக எழுந்தது. அதை மறுக்கும் இயக்குநர் சிம்புதேவன், “எங்கள் திரைப்படமானது இந்த வகையைச் சார்ந்ததாக இருக்காது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆன்தாலஜி என்பது ஒரு கதைக்கும் மற்றொன்றுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லாத சில சிறுகதைகளின் தொகுப்பு. ஆனால் கசட தபற ஒரு கதை, ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு படம்” என்றார். மேலும் படத்தைப் பற்றிக் கூறும்போது, […]

27/05/2019 Dinesh R
நீயா 2 விமர்சனம் சினிமா

நீயா 2 விமர்சனம்

கண்ணபிரான் நடனம் ஆடி காலாலே வீழ்த்திய நாகம் காளிங்கன். அந்த நாகம் மீண்டும் கண்ணனிடம் வரம் கேட்க, கண்ணபிரான் பகலில் மனித உருவாகவும் இரவில் பாம்பாகவும் திரிய வரம் கொடுக்கிறார். அப்படி இரு பொழுதுகளில் வெவ்வேறு உருவங்களோடு அலையும் அந்த நாகத்திற்குப் பெயர் இச்சாதாரி நாகம். அப்படியான இச்சாதாரி நாகம் தான் ராய் லட்சுமி. அவர் அப்படி ஆனதிற்கு ஒரு நாகத்தின் சாபமே காரணம். சென்ற ஜென்மத்தில் ஜெய்யோடு ஏற்பட்ட காதலை இந்த ஜென்மத்தில் அடைய அவர் […]

27/05/2019 Dinesh R
‘அன்ப்ரேக்கபிள்’ ட்ரைலாஜி – ஒரு பார்வை அயல் சினிமா

‘அன்ப்ரேக்கபிள்’ ட்ரைலாஜி – ஒரு பார்வை

இந்தப் படங்களின் இயக்குநரான மனோஜ் நைட் ஷ்யாமளன் நம்ம ஊர்க்காரர். பாண்டிச்சேரி – மாஹேவில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்தவர். 40களின் இறுதியில் இருக்கும் இவர், 25 வருஷத்துக்கும் மேலாக ஹாலிவுட்டில் இயங்கிவரும் மூத்த இயக்குநர். இவரோட ஃப்ளிம் கேரியர் நிறைய ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. மிகச் சிறந்த படத்தைத் தருவார். அடுத்து செம மொக்கையான படத்தையும் தருவார். கொஞ்சமும் யூகிக்க இயலாதபடி இருக்கும். ஆனால் இவரது அடையாளம் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை. 20 வருஷத்துக்கு முன்னாடி இவர் இயக்கிய […]

26/05/2019 Dinesh R
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – 90% நகைச்சுவை திரைப்படம் சினிமா

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – 90% நகைச்சுவை திரைப்படம்

கனா படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. அந்தப் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, “நாங்கள் கதை, திரைக்கதை எழுதும்போதே குடும்ப ரசிகர்களுக்கான படமாக ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’வைக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். இப்போது, சென்சாரில் நல்ல ஒரு சாதகமான முடிவு கிடைத்திருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை எங்களுக்கு மேலும் வலுவாக்குகிறது. படம் 90% நகைச்சுவையையும், ரசிக்கக் கூடிய […]

25/05/2019 Dinesh R
கொரில்லா – சேட்டைகளின் நாயகன் சினிமா

கொரில்லா – சேட்டைகளின் நாயகன்

கொரில்லா எனத் தலைப்பு வைத்திருந்தாலும், படத்தில் சேட்டை செய்வதோ ஒரு தாய்லாந்து சிம்பன்சி. உடையணியப் பிடிக்காத அந்த சிம்பன்சி, கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் உடையைக் களைந்து மொட்டை மாடிக்கு ஓடி விடுவோம். உடன் நடிக்கும் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோரைக் கடித்தும், தலைமுடியைப் பிடுங்கியும் படாதபாடுப்படுத்தியுள்ளது. இவ்வளவு சேட்டை செய்த சிம்பன்சியை நாங்கள் துன்புறத்தவில்லை என நடையாய் நடந்து, விலங்கு நல வாரியத்தைச் சமாதானப்படுத்தி சான்றிதழ் பெற்றுள்ளார் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா. ஒரு […]

25/05/2019 Dinesh R
மெட்ராஸை வரையறுக்கும் கன்னி மாடம் சினிமா

மெட்ராஸை வரையறுக்கும் கன்னி மாடம்

“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குநராகப் பரிணமிக்கிறார் நடிகர் போஸ் வெங்கட். போஸ் வெங்கட், “பிப்ரவரி 18ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி, மே 16 ஆம் தேதி முடித்தோம். இதில் மொத்த குழுவும் பங்கு பெற்ற 35 நாட்கள் மற்றும் கேமரா குழுவினர் மட்டும் பங்கு பெற்ற 7 நாட்களும் அடங்கும். தயாரிப்பாளர் ஹஷீர் அவர்களின் முழு ஆதரவு இல்லாவிட்டால், இது சாத்தியமல்ல. அவர் படைப்புச் சுதந்திரத்தில் தலையிடவே இல்லை. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை […]

24/05/2019 Dinesh R
‘செல்வராகவனின் 3 நொடி விதி’ – ரகுல் ப்ரீத் சிங் சினிமா

‘செல்வராகவனின் 3 நொடி விதி’ – ரகுல் ப்ரீத் சிங்

NGK படத்தில் செல்வராகவனின் இயக்கத்தில் அனுபவம் குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங், “செல்வராகவன் மற்ற இயக்குநர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிகொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பார். அதேபோல் கார் டிரைவர் போன்ற சிறிய பாத்திரத்திரத்தில் கூட அவரின் உடல்மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் […]

24/05/2019 Dinesh R
ஓவியாவ விட்டா யாரு விமர்சனம் சினிமா

ஓவியாவ விட்டா யாரு விமர்சனம்

சுயதொழிலில் ஈடுபட நினைக்கும் பட்டதாரி இளைஞன் சீனி தன் பணத்தைப் பறிகொடுக்கிறான். இங்கு நேர்மையாக இருந்தால் வேலைக்காவது என உணர்ந்து, மண்ணுளி பாம்பு, நவரத்தினக் கல், சஞ்சீவி வேர் என சதுரங்கவேட்டையில் ஈடுபடுகிறான். அவன் நேர்மையாகத் தொழிலில் ஈடுபட்டானா அல்லது சதுரங்க வேட்டையில் வேட்டையாடப்பட்டானா என்பதுதான் படத்தின் கதை. ‘சீனி’ என்ற தலைப்பில்தான் இப்படம் எடுத்து முடிக்கப்பட்டது. இந்தப் படத்தின் கதாநாயகியான ஓவியாவிற்கு, ‘பிக் பாஸ்’ சீசன் 1-இல் கிடைத்த எதிர்பாராத புகழின் காரணமாக ஓவியா எனத் […]

24/05/2019 Dinesh R
‘செல்வராகவன் இயக்கத்தில் நான்’ – சாய் பல்லவி சினிமா

‘செல்வராகவன் இயக்கத்தில் நான்’ – சாய் பல்லவி

NGK படத்தில் செல்வராகவனின் பட்டறையில் நடிக்கும் பொழுது கிடைத்த அனுபவத்தைக் குறித்து நடிகை சாய் பல்லவி, “முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே, ‘இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு  செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும்’ என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிகக் கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்துகொண்டேன். பொதுவாகப் படப்பிடிப்புத் தளங்களில் செல்ஃபோன் […]

24/05/2019 Dinesh R