32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 134)
சிபிராஜ் வசமானது ‘வால்டர்’ சினிமா

சிபிராஜ் வசமானது ‘வால்டர்’

சிபிராஜின் தந்தை சத்யராஜ் அவரது திரை வாழ்வில் மறக்க முடியாத படமான ‘வால்டர் வெற்றிவேல்’ படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் சிபிராஜின் படத்துக்கு, வால்டர் என்ற தலைப்பு கிடைக்க பிரச்சனை நிலவி வந்தது. தற்போது அத்தகைய பிரச்சினைகள் நீங்கி, சிபிராஜின் படத்திற்கு ‘வால்டர்’ என்ற தலைப்பு கிடைத்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. தலைப்பின் உரிமையை மாற்றிக் கொடுக்க முழு மனதுடன் சம்மதித்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குக் கடிதம் அளித்துள்ளார் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் […]

19/06/2019 Dinesh R
ராக்கெட்ரி: குற்றமற்ற மாதவனும், பக்கபலமான சிம்ரனும் சினிமா

ராக்கெட்ரி: குற்றமற்ற மாதவனும், பக்கபலமான சிம்ரனும்

பார்த்தாலே பரவசம் (2001), கன்னத்தில் முத்தமிட்டால் (2002) ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் மாதவனும், சிம்ரனும். இந்தப் படங்கள் அவர்களை வெறும் ஜாலியான காதல் ஜோடிகளாக மட்டும் காட்டவில்லை, மாறாக சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருந்தனர். காதலை பலப்படுத்துவதே இத்தகைய சோதனைகள்தானே! சோதனைகள் மற்றும் இன்னல்கள் கடினமான இருந்தால் தான் உறவு, அழகாகவும் வலுவானதாகவும் இருக்கும். மீண்டும் அத்தகைய சோதனையான, அழகான, வலுவான ஜோடிகளாக, 17 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு […]

19/06/2019 Dinesh R
பிரேக்கிங் நியூஸ் – சூப்பர் ஹீரோவாகிறார் ஜெய் சினிமா

பிரேக்கிங் நியூஸ் – சூப்பர் ஹீரோவாகிறார் ஜெய்

ஜெய், பானு ஸ்ரீ, தேவ் கில் மற்றும் ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் “பிரேக்கிங் நியூஸ்” படப்பிடிப்பு வேகமாய் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஹை-லைட், ‘சூப்பர் ஹீரோ ஃபேண்டஸி’ படம் என்பதைப் படக்குழு உறுதிப்படுத்திகின்றனர். படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இது குறித்து கூறும்போது, “இந்தப் படம் ஜீவன் என்ற ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை. தொழில் மற்றும் குடும்பத்தினருடனான தனிப்பட்ட […]

19/06/2019 Dinesh R
‘வித்தியசமான கதாபாத்திரம் என்றால் நடிப்பேன்’ – இயக்குநர் சுசீந்திரன் சினிமா

‘வித்தியசமான கதாபாத்திரம் என்றால் நடிப்பேன்’ – இயக்குநர் சுசீந்திரன்

சுட்டுப்பிடிக்க உத்தரவு எனும் படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகி இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். அவ்வனுபவத்தைப் பற்றிப் பேசிய சுசீந்திரன், ” ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு யாரைத் தேர்வு செய்யலாம் என்ற விவாதத்தில் மிஷ்கின் எனது பெயரைக் கூறியிருக்கிறார். உடனே விக்ராந்த் என்னைத் தொடர்பு கொண்டு என்னை நடிக்க அழைத்தார். இயக்குநர் என் கதாபாத்திரத்தைக் கூறியதும் வழக்கமான பாத்திரமாக இல்லாததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில் எனக்கு ஓடுவது மட்டுமே சவாலாக இருந்தது. இருப்பினும், இயக்குநர் […]

19/06/2019 Dinesh R
ரோகிணி – மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் சினிமா

ரோகிணி – மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்

பிக் பாஸ் சீசன் – 1 புகழ் ஆரவ் நடிக்க, ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ எனும் படத்தை இயக்குகிறார் இயக்குநர் சரண். இப்படத்தில், டாம்பீகமான லேடி டானாக ராதிகா சரத்குமார், பட்டாளம் சுந்தரிபாய் எனும் மிரட்டலான பாத்திரத்தில் நடிக்க, ரோகிணியோ காது கேட்காத வாய் பேச முடியாத பாத்திரத்தில் நடித்துள்ளார். ரோகிணி ஏற்று நடித்திருக்கும் லதாம்மா பாத்திரத்தைப் பற்றி இயக்குநர் சரண் குறிப்பிடுகையில், “ரோகிணி, ஆகச் சிறந்த நடிகைகளில் இவருக்கு ஒரு தனித்துவமான இடம் எப்போதும் உண்டு! […]

18/06/2019 Dinesh R
கூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம் சினிமா

கூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்

4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசினார். “காமெடியை எப்படிக் கொடுப்பது […]

18/06/2019 Dinesh R
கிழக்கு கடற்கரை சாலையில் – 10 திரைகளுடன் பிவிஆர் சினிமாஸ் சினிமா

கிழக்கு கடற்கரை சாலையில் – 10 திரைகளுடன் பிவிஆர் சினிமாஸ்

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உயர்தர திரையரங்கு நிறுவனமான பிவிஆர் சினிமாஸ் உத்தண்டியில் உள்ள ஒரு மாலில் அதன் 10 திரைகள் கொண்ட ஒரு புதிய மல்டிப்ளெக்ஸைத் திறந்திருக்கிறது. வாடிக்கையாளர் மைய அணுகுமுறையின் விரிவாக்கமாக, இந்தப் புதிய மல்டிப்ளெக்ஸில் குழந்தைகளுக்கென்றே பிரத்தியேகமாக PVR Play House என்ற ஒரு புதிய திரையரங்கை வடிவமைத்திருக்கிறது. சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை கண்டிராத ஆடம்பர அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த மல்டிப்ளெக்ஸ். இந்த […]

18/06/2019 Dinesh R
தும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம் சினிமா

தும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம்

ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தும்பா’. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் மிகப் […]

18/06/2019 Dinesh R
கதிர், சூரி கலந்த சர்பத் சினிமா

கதிர், சூரி கலந்த சர்பத்

7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் ‘சர்பத்’. அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில், ‘சர்பத்’ படத்தின் நாயகனாகப் பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு  முதல்முறையாக  சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா  அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள். நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா ஃபேமிலி என்டெர்டெயின்மென்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் […]

17/06/2019 Dinesh R
‘ஒழுக்கம் வேண்டும் விஷால்!’ – அருண்பாண்டியன் சாடல் சினிமா

‘ஒழுக்கம் வேண்டும் விஷால்!’ – அருண்பாண்டியன் சாடல்

சினிமா உலகில் சிறிய படம், பெரிய படம் என்ற வேறுபாடு நட்சத்திரங்களையும் பட்ஜெட்டையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டி படத்தின் வெற்றியைப் படத்தின் தரம் தான் தீர்மானிக்கிறது. அப்படியொரு தரமான படமாக தெளலத் படத்தைத் தயாரித்து இருக்கிறார் M.B.முகம்மது அலி. சக்தி சிவன் எழுதி இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி நடித்துள்ளார். படத்தின்  இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழு உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகரும் […]

17/06/2019 Dinesh R
7-0: உலகக்கோப்பையில் தொடரும் இந்தியாவின் வெற்றி சமூகம்

7-0: உலகக்கோப்பையில் தொடரும் இந்தியாவின் வெற்றி

இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே ரசிகர்களுக்கு இனம் புரியாத உற்சாகமும் மகிழ்ச்சியும் வந்துவிடும். அதுவும் உலகக்கோப்பைப் போட்டி என்றால் இந்திய ரசிகர்களுக்கு டபுள் தமாகா தான்! இரு அணிகளுக்குள்ளும், இது வரை நடந்த உலகக்கோப்பை போட்டிகள் அனைத்திலும் இந்தியாவே வென்றிருக்கிறது. இம்முறையாவது வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பாகிஸ்தானும், வெற்றியைத் தொடர வேண்டும் என்று இந்தியாவும் களம் கண்டனர். ஆஸிக்கு எதிராக போட்டியில் காயமடைந்த ஷிகார் தவான், மூன்று வார ஓய்வில் இருப்பதால் அவருக்குப் பதிலாக […]

17/06/2019 Dinesh R
சிறகு விரித்த அரோல் கரோலியின் இசை சினிமா

சிறகு விரித்த அரோல் கரோலியின் இசை

பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் நிவாஸ் ஆதித்தன், “என்னுடைய ஃபிலிம் கேரியரில் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இதற்கு மேல் இப்படியொரு படம் அமையுமான்னு தெரியல. இந்தப் படம் வெளிவந்த பின் எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது” என்றார். […]

15/06/2019 Dinesh R
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம் சினிமா

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்

யூ-ட்யூபில் பிரான்க் வீடியோ செய்யும் சிவாவிடமும் விக்கியிடமும், ஜிப்பா போட்ட ஒரு பணக்காரர் மூன்று டாஸ்குகளை முடித்தால், அவர்கள் எதிர்பார்க்கும் பணத்தைக் கொடுத்துக் கோடீஸ்வரர் ஆக்குகிறேன் என வாக்கு கொடுக்கிறார். அந்த மூன்று டாஸ்க்கள் என்ன, அதை எப்படி அவர்கள் முடிக்கின்றனரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை. ‘ப்ளாக் ஷீப்’ யூ-ட்யூப் சேனலில் இருந்து சினிமாவிற்கு வந்துள்ள படக்குழு. படத்திலும் அதன் தொடர்ச்சியாக, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என்ற யூ-ட்யூப் சேனல் நடத்துபவர்களாக பிரதான கதாபாத்திரம் இருவரையும் வடிவமைத்துள்ளனர். படத்தின் […]

14/06/2019 Dinesh R
சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம் சினிமா

சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்

கொள்ளையர்கள் வங்கியைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓட, அவர்களை விரட்டுகின்றனர் கோவைக் காவல்துறையினர். கொள்ளையர்கள் R.S.புரத்திற்குள் நுழைய, அந்த ஏரியாவிற்குள் யாரும் உள்ளே செல்ல முடியாமலும், உள்ளிருப்பவர்கள் வெளியே வரமுடியாதளவும் சுற்றி வளைக்கிறது காவல்துறை. காவல்துறையின் பிடியில் குற்றவாளிகள் சிக்கினரா என்பதுதான் படத்தின் கதை. கொள்ளையர்கள் பணத்தைத் திருடும் வங்கி, ஒரு மாலின் (mall) மாடியில் இருக்கிறது. நான்கு பேரில் ஒருவன் கூட, வாகனத்தில் தப்பியோடத் தயார் நிலையில் காத்திருக்காமல் ஏன் அப்படியொரு சொதப்பலான திட்டத்தைத் தீட்டினர் எனத் […]

14/06/2019 Dinesh R