32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 145)
டிராகன் காதல் அயல் சினிமா

டிராகன் காதல்

யூனிவர்சல் பிக்சர்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டிரீம்வொர்க்ஸ் அனிமேஷன், “ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: தி ஹிட்டேன் வேர்ல்ட் (How to train your Dragon: The Hidden World) படத்தினை மார்ச் 22 அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது. ஹிக்கப், டூத்லெஸ் மற்றும் அவர்களது வழக்கத்திற்கு மாறான நட்பின் புதிய அவதாரமான – இந்த வரிசையின் மூன்றாவது பாகமான இது. உலகம் முழுவதும், பல்வேறு வயதினரின் இதயத்தைக் கொள்ளை கொண்டதாகும். இந்தியாவில், இத்திரைப்படம் மார்ச் 22 அன்று, 2டி, […]

09/02/2019 Dinesh R
பொதுநலன் கருதி விமர்சனம் சினிமா

பொதுநலன் கருதி விமர்சனம்

மக்களின் பொதுநலனில் அக்கறை உள்ளதால், கம்மியான வட்டிக்குப் பணம் தருகிறோம் எனத் தனக்குத் தொழில் கற்றுக் கொடுத்தவரைக் கொன்றுவிட்டுத் தொழிலுக்கு வருகிறார்கள் உத்திரமூர்த்தியும், பாபு சேட்டும். இருவரும் தங்களுக்கென ஓர் எல்லையை வகுத்துக் கொண்டாலும், வளரத் தொடங்கியதும் இருவரில் யார் பெரியவரென்ற போட்டியும் பொறாமையும் முளைவிடுகிறது. அவர்கள் தொழிலாலும், அவர்களுக்கிடையேயான போட்டியாலும், யார் யார் பாதிப்படைகிறார்கள் என்பதே படத்தின் கதை. உத்திரமூர்த்தியிடம் வேலை செய்யும் நெப்போலியனாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகன் என்று சொல்லக்கூடிய கதாபாத்திர […]

09/02/2019 Dinesh R
கலை சினிமாஸ் – இயக்குநர் விஜய் ஸ்ரீ சினிமா

கலை சினிமாஸ் – இயக்குநர் விஜய் ஸ்ரீ

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி நடிப்பில் “தாதா 87” படத்தை கலை சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. “தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது, கலை சினிமாஸ் நிறுவனத்தின் இரண்டாம் படத்தின் பூஜை, பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று நடைபெற்றது. வல்லக்கோட்டை முருகன் கோவிலில் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது. இப்படத்தை […]

06/02/2019 Dinesh R
கண்ணை நம்பாதே – க்ரைம் த்ரில்லர் சினிமா

கண்ணை நம்பாதே – க்ரைம் த்ரில்லர்

பிப்ரவரி 22ஆம் தேதி, சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகும் ‘கண்ணே கலைமானே’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் புதிய படமான ‘கண்ணை நம்பாதே’ பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று சம்பிரதாய எளிய சடங்குகளுடன் துவங்கியது. சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமான இந்தப் படத்தை “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். V.N. ரஞ்சித் குமார் படத்தைத் தயாரிக்கிறார். இயக்குநர் மு.மாறன் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையில் தனது முதல் படமான […]

06/02/2019 Dinesh R
போதை ஏறினால் புத்தி மாறும் சினிமா

போதை ஏறினால் புத்தி மாறும்

சில மனிதர்களின் வாழ்வில், போதை மயக்கம் முக்கிய பங்கினை வகிக்கிறது. அது அம்மனிதர்களின் நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் திசை திருப்புகிறது. இந்த மாதிரி விஷயங்களை தீவிரமாகப் பேசும் ஒரு படம் தான் ‘போதை ஏறி புத்தி மாறி’. ‘ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ்’ சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குநர் கே.ஆர்.சந்துரு இயக்குகிறார். பிரபலமான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே பி இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும் பணிபுரிகிறார்கள். படத்தின் தலைப்பே […]

05/02/2019 Dinesh R
சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ சினிமா

சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம் “மிஸ்டர் லோக்கல்”. “இந்தப் படத்துக்காக பல்வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் படத்தின் கதைக்கு “மிஸ்டர் லோக்கல்” என்கிற தலைப்பு தான் பொருத்தும் என்பது எங்கள் அனைவரின் ஏகோபித்தக் கருத்தாகும். எங்கள் கதாநாயகன் சிவகார்த்திகேயன் திரையில்தரும் சக்தி மிகவும் பாசிடிவ் ஆனது. அவரது எனர்ஜியைப் பார்க்கும் போது, அவருடன் போட்டிப் போடவேண்டும் என்கிற ஆசை ஒரு இயக்குநராக எழுந்தது. கதாநாயகி நயன்தாரா ஒரு அதிசயம். […]

04/02/2019 Dinesh R
இளையராஜா 75இல் எல்.கே.ஜி. ட்ரெய்லர் சினிமா

இளையராஜா 75இல் எல்.கே.ஜி. ட்ரெய்லர்

நகைச்சுவை யாரும் செய்து விட முடியும், ஆனால் அரசியல் நையாண்டிப் படங்களை எடுக்க நல்ல கதை தேவைப்படும். அப்போது தான் பெரிய அளவு பார்வையாளர்களைச் சென்றடையும். ஆர்.ஜே. பாலாஜியின் LKG படத்தின் சிங்கிள் பாடலான “எத்தனை காலம் தான்” பாடல் நம்பமுடியாத வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இது யூ-ட்யூப் பார்வைகள், சமூக ஊடகங்கள் தாண்டி ரேடியோ ஸ்டேஷன்களிலும் வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. நையாண்டியான விஷயங்களைக் கொண்டிருந்த இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. வெளியான சில […]

04/02/2019 Dinesh R
மேரி க்வீன் ஆஃப் ஸ்காட்ஸ் விமர்சனம் அயல் சினிமா

மேரி க்வீன் ஆஃப் ஸ்காட்ஸ் விமர்சனம்

‘Queen of Scots: The True Life of Mary Stuart’ என்ற ஜான் கை-யின் (John Guy) புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வரலாற்றுப்படம் இது. 15 வது வயதில் கல்யாணமாகி, 16 வது வயதில் தாய்நாடான ஃபிராண்ஸின் மகாராணியாகி, 18 வயதில் விதவையாகி, மறுமணம் செய்து கொள்ள விரும்பாமல் தனது தந்தை நாட்டிற்குத் திரும்பி, ஸ்காட்லாந்தின் ராணியாகப் பதவியேற்கிறார் மேரி ஸ்டூவர்ட். அவரது சகோதரி முறையுடைய மணமாகாத எலிசபெத் I, இங்கிலாந்தின் ராணியாக உள்ளார். […]

03/02/2019 Dinesh R
எஸ்கேப் ரூம் விமர்சனம் அயல் சினிமா

எஸ்கேப் ரூம் விமர்சனம்

தலைப்பைக் கொண்டே படத்தின் கதையைச் சுலபமாக யூகித்துவிடலாம். ஜோ, பென், அமாண்டா, மைக், ஜேசன், டேனி ஆகிய ஆறு பேரையும் ஒரு வீட்டில் அடைத்து வைக்கின்றனர். அங்கு ஒரு க்ளூ கிடைக்கும். அதை உபயோகித்துத் தப்பித்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் மரணம் உறுதி. அதிலிருந்து எத்தனை பேர் எப்படித் தப்பித்தார்கள் என்பதுதான் படத்தின் கதை. நெருப்பைக் கக்கும் ஓவனாக மாறும் அறை, உறைய வைக்கும் பனியைக் கொண்ட அறை, நழுவும் தரைத்தளத்தைக் கொண்ட அறை, விஷ வாயு பரவும் […]

03/02/2019 Dinesh R
நெஞ்சில் ஒரு ஓவியம் – காதல் கலந்த ஹாரர் படம் சினிமா

நெஞ்சில் ஒரு ஓவியம் – காதல் கலந்த ஹாரர் படம்

ஸ்ரீ விஷ்ணு பாதம் மூவி மேக்கர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் K.ஜோதிபிள்ளை, சுகுணா கந்தசாமி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “நெஞ்சில் ஒரு ஓவியம்”. கதாநாயகனாகத் தங்கரதம் படத்தில் நடித்த வெற்றி நடிக்கிறார். கதாநாயகியாக அக்ரிஷா நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக K.ஜோதிபிள்ளை நடித்துள்ளார். மற்றும் போண்டாமணி,ஜெயமணி, யூசுப், தளபதி தினேஷ், பாப்சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் K.ஜோதிபிள்ளை, “இது ஒரு காதல், செண்டிமெண்ட், காமெடி கலந்த ஹாரர் திரைப்படம். மூன்று […]

02/02/2019 Dinesh R
அதே விஜய் தேவரகொண்டா; ஆனால் வேற அர்ஜுன் ரெட்டி சினிமா

அதே விஜய் தேவரகொண்டா; ஆனால் வேற அர்ஜுன் ரெட்டி

ஜி.ஆர் வெங்கடேஷின் பாக்யா ஹோம்ஸ் வழங்க, பிஸினஸ்மேன், ஹலோ மற்றும் தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் படங்களைத் தயாரித்த ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி தயாரிக்கும் புதிய படம் “அர்ஜுன் ரெட்டி”. தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, தமிழில் நோட்டா படத்தின் மூலம் பிரபலமான விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தைப் பற்றி தயாரிப்பாளர் A.N.பாலாஜி, “தெலுங்கில் […]

02/02/2019 Dinesh R
சகா விமர்சனம் சினிமா

சகா விமர்சனம்

சகா என்றால் தோழன். பதின் பருவத்து இளம் குற்றவாளிகளின் நட்பை மையமாகக் கொண்டு கதையமைத்துள்ளார் இயக்குநர் முருகேஷ். சத்யாவும் கதிரும் நண்பர்கள். தெருவில் திரிந்த அவர்களை வளர்க்கும் திருநங்கையைக் கொன்றவனைக் கொன்று சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைபடுகின்றனர். சிறையில் ஏற்படும் பகையும் நட்பும் அவர்களை எங்குக்கொண்டு செல்கிறது என்பது தான் படத்தின் கதை. ஷபீரின் இசையில், ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்ற பாடல் மிகப் பிரபலம். இந்தப் படத்திற்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சரணும், ஆய்ராவும் […]

01/02/2019 Dinesh R
வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம் சினிமா

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

தெலுங்குத் திரையுலகத்தின் பவர் ஸ்டார் பவன் கல்யாண், சமந்தா நடிப்பில், 2013 இல் வெளிவந்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ எனும் படத்தின் மீள் உருவாக்கம் இந்தப்படம். ஆல்ரெடி பெரும் ஹிட்டடித்த நகைச்சுவை படம் சுந்தர்.சி கையில் கிடைத்தால்? ஆதித்யா ஸ்பெயினில் வாழும் பெரும்பணக்காரன். தாத்தாவின் வேண்டுகோளின்படி, தமிழ்நாட்டில் வசிக்கும் தனது அத்தையின் கோபத்தைத் தணிக்க, ஓட்டுநர் ராஜாவாய் அந்த வீட்டுக்குள் நுழைகிறான். தனது அத்தையைச் சமாதானம் செய்தானா இல்லையா என்பதே படத்தின் கதை. ஆதித்யாவாக எஸ்.டி.ஆர். தனுஷின் தயாரிப்பில் […]

01/02/2019 Dinesh R
பேரன்பு விமர்சனம் சினிமா

பேரன்பு விமர்சனம்

பனிமூட்டம் நிறைந்த அந்தப் பரிசல் பயணத்தில் மம்மூட்டி தன் கனத்த குரலில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்கள் என்று சொல்லி தனது கதையைச் சொல்லத் துவங்கி இயற்கை பேரன்பாலானது என்று முடிக்கும் போது உண்மையில் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று புலனாகிறது. மூளை முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பதின்ம வயது பெண்ணை தனி ஆளாக தகப்பனாக நின்று தாங்குகின்ற ஒரு மனிதனின் பெருங்கதை தான் பேரன்பு. ஒரு பதின்ம வயதுப் பெண்ணிற்கு அவளது மாதவிலக்கின்போது ‘பேட்’ மாற்றுவதிலிருந்து, […]

01/02/2019 Dinesh R