32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 146)
1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா சினிமா

1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா

எண்ணிக்கையை விட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் ஜீவா. “சங்கிலி புங்கிலி படமும், கலகலப்பு-2 படமும் வெற்றி பெற்று எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அதற்குப் பிறகு நிறைய கதைகள் கேட்டேன். அதில் சிறந்ததாக கொரில்லா, ஜிப்ஸி என இரண்டை மட்டும் தேர்வு செய்தேன். இந்த இரண்டு படங்களும் ரொம்பச் சிறப்பாக வந்திருக்கு. தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போ சூப்பர்குட் பிலிம்ஸ் 90வது படமாக SGF 90 படத்தில் நானும், […]

12/01/2019 Dinesh R
பேட்ட விமர்சனம் சினிமா

பேட்ட விமர்சனம்

ட்ரெய்லரில் பார்த்த அதே இளமையான துள்ளலான ஸ்டைலான ரஜினியைத் திரையில் கொண்டு வந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். எதற்கும் காத்திருக்காமல் படம் நேரடியாக ஒரு மாஸ் ஃபைட் சீனில் இருந்து தொடங்குகிறது. ரஜினிஃபை பண்ணப்பட்ட படத்தில் ரஜினி எது செய்தாலும் அழகாக உள்ளது. திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில் படத்தின் முதற்பாதி ஒரு வண்ணக்கவிதையாய்க் கண்ணைக் கவர்கிறது. திணிக்கப்படாமல், அதே சமயம் வசனங்களில் அரசியலையும் கொண்டு வந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஹாஸ்டலில் ரேகிங் நடக்கும்பொழுது, அதை நிறுத்தும் ரஜினி, ‘புதுசா வர்றவங்களை […]

10/01/2019 Dinesh R
விஸ்வாசம் விமர்சனம் சினிமா

விஸ்வாசம் விமர்சனம்

எவருக்கு எவர் மீது விசுவாசம் எனத் தெரியவில்லை. நான்காவது முறையாகத் தொடர்ந்து இணைகின்றனர் இயக்குநர் சிவாவும், அஜித்குமாரும். தனது மனைவி நிரஞ்சனா சொன்ன ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, 10 வருடங்களாக தன் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து வாழ்கிறார் தூக்குதுரை. மகளின் உயிருக்கு ஆபத்தெனத் தெரிந்து, அதிலிருந்து மகள் ஸ்வேதாவைப் பாதுகாக்க களமிறங்குகிறார் தூக்குதுரை. ஸ்வேதாவிற்கு யாரால் ஏன் ஆபத்து என்பதும், அதிலிருந்து எப்படி தன் மகளை மீட்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. வீரம் படத்தின் 2.0 என்றே […]

10/01/2019 Dinesh R
இது ரசிகர்களின் பேட்ட சினிமா

இது ரசிகர்களின் பேட்ட

தீபாவளி பொங்கலுக்கான காத்திருப்புகள் மறைந்து போயிருந்த போதிலும், பட்டாசுகளும் பொங்கப்பொடியும் நினைவுகளின் தூசிக்கு அடியில் உறங்கிப் போயிருந்தாலும் எப்போதுமே குறையாமல் இருப்பது ரஜினி பட ரிலீஸ் மட்டுமே. லிங்கா, கோச்சடையான் மழுங்கி, கபாலி நல்லா இருக்கா இல்லையா என்று மழுப்பி காலா நல்லா இல்லன்னு சொன்னா இந்துத்துவா ஆகிருமோன்னு குழம்பி, 2.0 தலைவா ‘உன்னால டயலாக்க ஒழுங்கா பேச முடியல தலைவா, இனி நடிப்பு வேணாம்’ எனப் பரிதாபம் கொள்ளச்செய்த நிலையிலும், “பேட்ட பேட்ட” என்ற பரபரப்பு […]

10/01/2019 Dinesh R
சிகை விமர்சனம் சினிமா

சிகை விமர்சனம்

ZEE5 எனும் செயலியில் படம் நேரடியாக வெளியாகிறது. திரையரங்கு வெளியீட்டுக்கு வெளியே மாற்று வழிகளை நோக்கி தமிழ் சினிமா நகர்வது ஆரோக்கியமான விஷயம். நெட்ஃப்ளிக்ஸில் பிரகாஷ்ராஜ் நடித்த ‘சில சமயங்களில்’ படம் வெளியானதும் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்று. பிரசாத் ஒரு பிம்ப் (Pimp). சந்தோஷ் எனும் இளைஞனுக்கு நிம்மி எனும் பெண்ணை அனுப்பி வைக்கிறான். போன நிம்மி விடிந்த பிறகும் திரும்பி வராததோடு, அவளைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என பதற்றம் ஆகிறான் பிரசாத். சந்தோஷின் வீட்டில் […]

10/01/2019 Dinesh R
நியூரோ அப்டேட் 2019 மருத்துவம்

நியூரோ அப்டேட் 2019

சென்னையின் நரம்பியல் நிபுணர்கள் இணைந்து மெட்ராஸ் நியூரோ ட்ரஸ்டை 1993 ஆம் ஆண்டு, பேராசிரியர் அர்ஜுன்தாஸ் தலைமையில் தொடங்கினர். இதன் பிரதான நோக்கம், மேற்படிப்பு படிப்பவர்களுக்கும், நரம்பியல் துறையில் பணி புரிபவர்களுக்கும் துறை சார்ந்த முன்னேற்றத்தை அறிய தந்து உதவுவதுதான். தேசிய மற்றும் சர்வதேச அளவில், CME நிகழ்ச்சிகளை நடத்தி, நியூரோ சயின்ஸ் துறையின் தொடர் முன்னேற்றத்தையும், சமீப சாதனையையும் அதன் உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து வருகின்றனர். கல்வி நிறுவனங்கள் நவீன கருவிகள் உதவுகிறது நியூரோ ட்ரஸ்ட். கால்கை […]

07/01/2019 Dinesh R
தமிழில் தெலுங்கு ‘உஷாரு’ சினிமா

தமிழில் தெலுங்கு ‘உஷாரு’

திரையுலகிற்கு எப்பொழுதுமே பிராணவாயுவாக இருப்பது புது முகங்களை வைத்து எடுக்கப்படும் படங்களே! ஜிக் ஜாக் இல்லாமல் யதார்த்த படைப்புகளே சினிமாவின் சக்சஸ் பார்முலா. அந்த வகையில் தெலுங்கில் புதுமுகங்கள் நடித்து சமீபத்தில் வெளியான படம் “உஷாரு”. உஷாரு என்றால் தமிழில் புத்துணர்வு என்று பொருள்படும். சமீபத்தில் வெளியான இந்தப் படம் ஆந்திராவில் கொண்டாடப்படுகிறது. சுமார் 3.50 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் சுமார் 20 கோடி வசூலை எட்டும் என்பது தெலுங்குத் திரையுலகின் வசூல் கணக்கு. இந்தப் படத்தைத் […]

05/01/2019 Dinesh R
புத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும் மருத்துவம்

புத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும்

புத்தி இம்மர்ஷன் (Buddhi Immersion) ஒருங்கிணைத்த “ப்ராப்ளம் சைல்ட் (Problem Child)” என்ற கருத்தரங்கை ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். ஆளுநர், “இந்திய மக்கள் தொகையில் சுமார் 39% இருக்கும் 50 கோடி குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவது மிக முக்கியமான செயலாகும். பல திட்டங்களை வகுத்து முனைந்து முன்னெடுத்தாலும், பேறுகால மற்றும் குழந்தைகளின் ஊட்டக்குறைவு, தொற்று நோய்கள் போன்ற பிரச்சனைகள் இந்தியாவின் மனசாட்சியை இன்னும் உலுக்கிக் கொண்டே தான் உள்ளன. சமூகத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் […]

31/12/2018 Dinesh R
அடங்க மறு விமர்சனம் சினிமா

அடங்க மறு விமர்சனம்

நேர்மையான அதிகாரியாகப் பணி புரிய நினைக்கும் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷ், தன் உயரதிகாரிகளால் பணிந்து போகச் சொல்லி அடக்கப்படுகிறார். அதையும் மீறி, அவர் நேர்மையாக இருக்க முயல்வதால் அவரது குடும்பத்தையே இழக்கிறார். அதன் பிறகாவது சுபாஷ் அடங்குவான் என நினைத்தவர்களுக்கு, சுபாஷ் கொடுக்கும் பதிலடி தான் படம். பழிவாங்கும் கதை என ஒரு வரியில் சுருக்கலாம். எனினும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்யப் பயப்படவேண்டும் என்பதுதான் படத்தின் தீம். சகல வித்தைகளையும் கரைத்துக் குடித்த ஒரு ஹை-டெக் […]

23/12/2018 Dinesh R
சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம் சினிமா

சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

ஒரு ஜாலியான படம், அதைத் தொடர்ந்து ஒரு சீரியசான படமென்று தனக்கொரு பாணியை உருவாக்கி வருகிறார் விஷ்ணு விஷால். ராட்சசன் எனும் த்ரில்லர் படத்தைத் தொடர்ந்து, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஸ்டைலில் முழு நீள நகைச்சுவை படமாக, அவரது நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளிவந்துள்ளது. எந்த வம்புதும்புக்கும் போகாத மாaணிக்கமாக வாழ்பவர் கான்ஸ்டபிள் சத்யமூர்த்தி. தான் பிறவி எடுத்ததே, காவல்நிலையத்தில் உள்ள சக காவலதிகாரிகளுக்கு உணவு வாங்கிவரத்தான் என்று கடமையில் கண்ணுமாய்க் கருத்துமாய் இருப்பார். அவர் […]

23/12/2018 Dinesh R
கனா விமர்சனம் சினிமா

கனா விமர்சனம்

மகளிர் மட்டைப்பந்து (கிரிக்கெட்) பற்றிய முதற்படம். பாடலாசிரியராகவும் பாடகராகவும் பேர் பெற்ற அருண்ராஜா காமராஜா இயக்கிய முதற்படம். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதற்படம். இப்படி பல முதல் ‘கனா’க்கள் திரை கண்டுள்ளது. “விளையாட்டைச் சீரியஸா பார்க்கிற நம்ம ஊர்ல, விவாசயத்தை விளையாட்டா கூடப் பார்க்க மாட்டேங்கிறாங்க” என்றொரு வசனம் உண்டு படத்தில். அதுதான் படத்தின் கதை. விவாசயமும், கிரிக்கெட்டும் முருகேசனின் இரு கண்கள். தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட முருகேசனின் மகள் கெளசல்யா, தந்தையை மகிழ்விக்கும் […]

23/12/2018 Dinesh R