TeaserDinesh R
செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.
Teaser
ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் – ட்ரெய்லர்

மாயன் – ஸ்டைலிஷான சிவன்
ஃபாக்ஸ் க்ரோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் படம் ‘மாயன்’. டத்தோ மோகன சுந்தரம் பேசுகையில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் மலேசியாவில் ‘வில்லவன்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் ஐயாய் (AIYAI) என்ற ஆங்கிலப்படத்தையும் தயாரித்திருக்கிறோம். என்னுடைய பெற்றோர்கள் பிறந்த மண் தமிழகத்திலுள்ள நாகப்பட்டினம். அதனால் தமிழ்நாட்டில் வந்து ஒரு தமிழ்ப் படத்தைத் […]

கோகோ மாக்கோ விமர்சனம்
96 நிமிடப் படம். தயாரிப்பாளரான அருண்காந்த் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதிப் பாடி இயக்கியதோடு இசையமைத்து, ஒலி வடிவமைப்பு, டப்பிங் இன்ஜினியரிங் செய்து, உடை வடிவமைத்து, கிராஃபிக் டிசைன், கோரியோகிராஃபி என 15 பிரிவில் பங்காற்றி நடித்துமுள்ளார். அருண்காந்திற்கு தனது இசை ஆல்பத்தை வீடியோ ஆல்பமாக மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ராம்குமாரும் தனுஷாவும் வேலன்டைன்ஸ் டே-க்கு ரோட் ட்ரிப் போக, ப்ளூட்டோவை அனுப்பி தனுஷாக்குத் தெரியாமல் வீடியோ ஆல்பத்திற்காகப் படம்பிடிக்கச் சொல்கின்றார் அருண்காந்த். ரோட் ட்ரிப் […]

சித்திரம் பேசுதடி 2 விமர்சனம்
2006 ஆம் ஆண்டு, மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான ‘சித்திரம் பேசுதடி’ படத்தினைத் தயாரித்தவர்கள் “உலா” எனும் படத்தை ஆறு வருடங்களுக்கு முன் தொடங்கினார்கள். 2013 இல், படத்தின் தயாரிப்பாளரான ஸ்ரீகாந்த் லக்ஷ்மன், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’க்காக விளையாடிய ட்வெயின் பிராவோவை, ஒரு பாடல் காட்சிக்காக ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. சாஜன் மாதவின் இசையில் ‘டல்மேனி டல்மேனி டகுல் காட்டுது’ என்ற பாடலிற்கு, வேட்டி கட்டிக் கொண்டு ட்வெயின் பிராவோ ஆடும் நடனம் நன்றாக இருக்கிறது. திரையில் உலா […]
வில்லியாக சோனாவின் புது அவதாரம்
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளின் காலம் சில வருடங்கள் மட்டும் தான். எவ்வளவு தான் கவர்ச்சி காட்டினாலும் ஒரு சில கவர்ச்சி நடிகைகளைத் தவிர மற்ற அனைவரும் காலப்போக்கில் மறைந்து போய்விட்டனர். ஆனால், நடிகை சோனாவோ சற்று வித்தியாசமானவர். குசேலன், பத்துக்கு பத்து உள்ளிட்ட பல படங்களில் படு கவர்ச்சியாக நடித்திருப்பார். சில படங்களில் நடிகர் வடிவேலு மற்றும் விவேக்குடன் ஜோடியாக நடித்து நகைச்சுவையும் செய்திருப்பார். சில காலமாக கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் ஒதுங்கி நல்ல வாய்ப்புக்காகக் […]

தில்லுக்கு துட்டு 2 விமர்சனம்
மாயாவிடம் யாராவது காதலைச் சொன்னால், அவர்களை அவளது தந்தை துர்மந்திரவாதியான கருடராஜா பட்டதாரி ஏவி விட்ட துஷ்ட சக்தி உண்டு இல்லை எனச் செய்துவிடுகிறது. சந்தானம் மாயாவிடம் காதலைச் சொல்ல, அந்தப் பேய் அவரையும் போட்டுப் புரட்டியெடுக்கிறது. சந்தானம் காதலில் எப்படி வெல்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஜில்.. ஜங்.. ஜக் படத்தில் பை எனும் பைந்தமிழாகக் காமெடியில் கலக்கியிருக்கும் பிபின், இப்படத்தில் துர்மந்திரவாதி கருடராஜ பட்டாதரியாக வருகிறார். அவர் முதலில் டெரராக அறிமுகமாகி, சந்தானம் அவரைச் […]

டிராகன் காதல்
யூனிவர்சல் பிக்சர்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டிரீம்வொர்க்ஸ் அனிமேஷன், “ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: தி ஹிட்டேன் வேர்ல்ட் (How to train your Dragon: The Hidden World) படத்தினை மார்ச் 22 அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது. ஹிக்கப், டூத்லெஸ் மற்றும் அவர்களது வழக்கத்திற்கு மாறான நட்பின் புதிய அவதாரமான – இந்த வரிசையின் மூன்றாவது பாகமான இது. உலகம் முழுவதும், பல்வேறு வயதினரின் இதயத்தைக் கொள்ளை கொண்டதாகும். இந்தியாவில், இத்திரைப்படம் மார்ச் 22 அன்று, 2டி, […]

பொதுநலன் கருதி விமர்சனம்
மக்களின் பொதுநலனில் அக்கறை உள்ளதால், கம்மியான வட்டிக்குப் பணம் தருகிறோம் எனத் தனக்குத் தொழில் கற்றுக் கொடுத்தவரைக் கொன்றுவிட்டுத் தொழிலுக்கு வருகிறார்கள் உத்திரமூர்த்தியும், பாபு சேட்டும். இருவரும் தங்களுக்கென ஓர் எல்லையை வகுத்துக் கொண்டாலும், வளரத் தொடங்கியதும் இருவரில் யார் பெரியவரென்ற போட்டியும் பொறாமையும் முளைவிடுகிறது. அவர்கள் தொழிலாலும், அவர்களுக்கிடையேயான போட்டியாலும், யார் யார் பாதிப்படைகிறார்கள் என்பதே படத்தின் கதை. உத்திரமூர்த்தியிடம் வேலை செய்யும் நெப்போலியனாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகன் என்று சொல்லக்கூடிய கதாபாத்திர […]

கலை சினிமாஸ் – இயக்குநர் விஜய் ஸ்ரீ
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி நடிப்பில் “தாதா 87” படத்தை கலை சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. “தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது, கலை சினிமாஸ் நிறுவனத்தின் இரண்டாம் படத்தின் பூஜை, பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று நடைபெற்றது. வல்லக்கோட்டை முருகன் கோவிலில் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது. இப்படத்தை […]

கண்ணை நம்பாதே – க்ரைம் த்ரில்லர்
பிப்ரவரி 22ஆம் தேதி, சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகும் ‘கண்ணே கலைமானே’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் புதிய படமான ‘கண்ணை நம்பாதே’ பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று சம்பிரதாய எளிய சடங்குகளுடன் துவங்கியது. சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமான இந்தப் படத்தை “இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். V.N. ரஞ்சித் குமார் படத்தைத் தயாரிக்கிறார். இயக்குநர் மு.மாறன் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையில் தனது முதல் படமான […]

போதை ஏறினால் புத்தி மாறும்
சில மனிதர்களின் வாழ்வில், போதை மயக்கம் முக்கிய பங்கினை வகிக்கிறது. அது அம்மனிதர்களின் நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் திசை திருப்புகிறது. இந்த மாதிரி விஷயங்களை தீவிரமாகப் பேசும் ஒரு படம் தான் ‘போதை ஏறி புத்தி மாறி’. ‘ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ்’ சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குநர் கே.ஆர்.சந்துரு இயக்குகிறார். பிரபலமான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே பி இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும் பணிபுரிகிறார்கள். படத்தின் தலைப்பே […]

சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம் “மிஸ்டர் லோக்கல்”. “இந்தப் படத்துக்காக பல்வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் படத்தின் கதைக்கு “மிஸ்டர் லோக்கல்” என்கிற தலைப்பு தான் பொருத்தும் என்பது எங்கள் அனைவரின் ஏகோபித்தக் கருத்தாகும். எங்கள் கதாநாயகன் சிவகார்த்திகேயன் திரையில்தரும் சக்தி மிகவும் பாசிடிவ் ஆனது. அவரது எனர்ஜியைப் பார்க்கும் போது, அவருடன் போட்டிப் போடவேண்டும் என்கிற ஆசை ஒரு இயக்குநராக எழுந்தது. கதாநாயகி நயன்தாரா ஒரு அதிசயம். […]

LKG -ட்ரெய்லர்

இளையராஜா 75இல் எல்.கே.ஜி. ட்ரெய்லர்
நகைச்சுவை யாரும் செய்து விட முடியும், ஆனால் அரசியல் நையாண்டிப் படங்களை எடுக்க நல்ல கதை தேவைப்படும். அப்போது தான் பெரிய அளவு பார்வையாளர்களைச் சென்றடையும். ஆர்.ஜே. பாலாஜியின் LKG படத்தின் சிங்கிள் பாடலான “எத்தனை காலம் தான்” பாடல் நம்பமுடியாத வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இது யூ-ட்யூப் பார்வைகள், சமூக ஊடகங்கள் தாண்டி ரேடியோ ஸ்டேஷன்களிலும் வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. நையாண்டியான விஷயங்களைக் கொண்டிருந்த இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. வெளியான சில […]
