32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 153)
’96 விமர்சனம் சினிமா

’96 விமர்சனம்

பத்தாம் வகுப்பில் மலரும் காதலை, K.ராமச்சந்திரனும் ஜானகி தேவியும் உணர்ந்தாலும், அதைப் பரஸ்பரம் சொல்லிக் கொள்ளும் முன்பு ஒரேடியாகப் பிரிந்து விடுகின்றனர். சரியாக 22 வருடங்களுக்குப் பின், ஓர் ஒருங்குகூடலில் சந்திக்கின்றனர். அவர்கள் சந்தித்துக் கொள்ளும் ஓரிரவு, காலத்தை உறைய வைத்து, இசையாயக் கரைந்து, அவர்களோடு பார்வையாளர்களையும் பின்னோக்கிக் கொண்டு சென்று விடுகிறது. மனதில் பதிந்துள்ள மிக மென்மையான பதின் காலத்து இனிய நினைவுப் பொக்கிஷங்களைக் கச்சிதமாக மீட்டுகிறார் கோவிந்த் வசந்தா. இசையால் என்னென்ன மாயம் செய்யமுடியும் […]

04/10/2018 Dinesh R
பரியேறும் பெருமாள் விமர்சனம் சினிமா

பரியேறும் பெருமாள் விமர்சனம்

‘சாதியும் மதமும் மனித குலத்திற்கு விரோதமானது’ என்ற வாசகத்துடன் படம் தொடங்குகிறது. இப்படத்தில், சாதி எப்படி மனித குலத்திற்கு விரோதமாகச் செயல்படுகிறதெனப் பரியேறும் பெருமாளின் வாழ்க்கையில் இருந்து சித்தரிக்கப்படுகிறது. கருப்புத் திரையில் வெள்ளையெழுத்துகளாக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர் போடும்பொழுதே சந்தோஷ் நாராயணன் ஒலிக்கத் தொடங்கிவிடுகிறார். படம் தொடங்கியவுடனே, “கருப்பி, அடி கருப்பி!” என்ற பாடலின் மூலமாக ஒரு வாழ்வியலுக்குத் தயார் செய்துவிடுகிறார். படத்தின் நாயகன் அவர்தான்! படத்தின் இசையும், ட்ரோன் மூலம் பறவைக் கோணத்தில் […]

28/09/2018 Dinesh R
செக்கச்சிவந்த வானம் விமர்சனம் சினிமா

செக்கச்சிவந்த வானம் விமர்சனம்

தொழிலதிபர், கல்வித் தந்தை, ரியல் எஸ்டேட் கிங், மணல் மாஃபியா எனப் பன்முகம் கொண்ட சேனாபதியின் குற்றவியல் சாம்ராஜ்ஜியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க, அவரது மூன்று மகன்களுக்குள் வாரிசுப் போட்டி நடக்கிறது. அதனால் சிந்தப்படும் ரத்தத்தால், சேனாபதி சாம்ராஜ்ஜியத்தின் பரந்து விரிந்த வானம் சிவக்கத் தொடங்குகிறது. போட்டிப் போட்டுக் கொண்டு சிவக்க வைத்துள்ளனர் அரவிந்த் சுவாமி, அருண் விஜய் சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோர். கதாபாத்திரங்கள் தேர்வு கனகச்சிதம் என்றால், அவர்களை அறிமுகப்படுத்திய விதத்திலும், மெல்ல கதைக்குள் […]

27/09/2018 Dinesh R
மகளிர் ஆளுமை விருதுகள் 2018 – வேல்ஸ் பல்கலைக்கழகம் சமூகம்

மகளிர் ஆளுமை விருதுகள் 2018 – வேல்ஸ் பல்கலைக்கழகம்

வேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கிய, “மகளிர் ஆளுமை விருதுகள் 2018” பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் செப். 25 அன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்மு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களையும், விருது பெறும் மகளிரையும் […]

26/09/2018 Dinesh R
ஈக்வலைஸர் 2 விமர்சனம் அயல் சினிமா

ஈக்வலைஸர் 2 விமர்சனம்

தன் கண்ணெதிரே தனக்குத் தெரிந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து மீட்டு, தவறைச் சரி செய்வதால் நாயகனுக்கு ஈக்வலைஸர் எனும் குறியீட்டுப் பெயரைத் தலைப்பாக வைத்துள்ளனர். முதல் பாகம் பார்த்தவர்கள், ராபர்ட் மெக்காலை நெருக்கமாக உணர்வார்கள். இல்லாவிட்டாலும் பாதகமில்லை. முந்தைய பாகம் போலின்றி, முதல் ஃப்ரேமிலேயே அதிரடி ஆக்ஷனை ஆரம்பித்து விடுகிறார் ராபர்ட் மெக்காலாக வரும் டென்செல் வாஷிங்டன். இஸ்தான்புல்லுக்குச் செல்லும் துருக்கி இரயில் ஓடும் மலைப்பாதை மிக அற்புதமான இயற்கை எழிலில் அமைந்துள்ளது. அந்த இயற்கையின் அமைதிக்கு […]

24/09/2018 Dinesh R
ஏகாந்தம் விமர்சனம் சினிமா

ஏகாந்தம் விமர்சனம்

சென்னையில் பணி புரிபவர் விவாந்த். கிராமத்தில் இருக்கும் தனது மாமன் மகளைக் காதலித்து வருகிறார். அத்தை மகன் மீது உயிரையே வைத்துள்ளார் நீரஜா. அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம், திடீரென நின்று விடுகிறது. அக்கல்யாணம் ஏன் எதற்காக நின்றது என்றும், அது குடும்பங்களுக்குள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்றும் கதை நீள்கிறது. கிராமத்துப் பண்பாட்டிற்கும், நகரத்து நாகரீகத்துக்கும் உள்ள ஏற்ற இறக்கங்களைச் சொல்ல முயற்சி செய்கிறது படம். கதைக்குள் செல்லாமல், முதல் பாதியில் படம் ஏற்படுத்தும் சலிப்பு […]

23/09/2018 Dinesh R
ராஜா ரங்குஸ்கி விமர்சனம் சினிமா

ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

கான்ஸ்டபிள் ராஜாக்கு எழுத்தாளர் ரங்குஸ்கி மீது பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. யாரோ ஒரு அநாமதேய தொலைப்பேசி அழைப்பாளர்க்கும் ரங்குஸ்கி மீது காதல். அந்த அநாமதேய தொலைப்பேசி அழைப்பாளர், ராஜாவை ஒரு கொலைக் குற்றத்தில் லாகவமாகக் கோர்த்து விட்டுவிடுகிறான். அதிலிருந்து ராஜாவும் ரங்குஸ்கியும் எப்படி மீண்டனர் என்பதுதான் படத்தின் கதை. எழுத்தாளர் சுஜாதாவிற்குப் படத்தை டெடிகேட் செய்துள்ளனர். ரங்குஸ்கி என்பது எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயரான ரங்கராஜனின் செல்ல வடிவம். நாயகி, சுஜாதாவின் தீவிர ரசிகை என்பதால் தனது புனைப்பெயராகச் […]

23/09/2018 Dinesh R
சாமி² விமர்சனம் சினிமா

சாமி² விமர்சனம்

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின், சாமி படத்தின் அடுத்த பாகமாக சாமி ஸ்கொயர் வந்துள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் ஒரு ஜம்ப் எடுத்து ஆறுச்சாமியின் வாரிசு, பெருமாள் பிச்சையின் வாரிசுகளை வேட்டையாடுவதுதான் படத்தின் கதை. ஆறுச்சாமியே வேட்டையாடி இருந்தால் அது சாமி 2 ஆக இருந்திருக்கும். ராம்சாமிக்குள், ஆறுச்சாமியின் ஆவி புகுந்து வேட்டையாடுவதால் படத்திற்கு சாமி ஸ்கொயர் என்ற குறியீட்டுப் பெயர் சாலப் பொருந்தும். சாமி படத்தின் பலம் அதன் வில்லனான கோட்டா ஸ்ரீநிவாச ராவ். அதிகாரத்தைத் […]

22/09/2018 Dinesh R
மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் இயக்கத்தில் ‘துப்பாக்கி முனை’ சினிமா

மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் இயக்கத்தில் ‘துப்பாக்கி முனை’

“சட்டத்தை இந்தச் சமூகம் கேடயமாகப் பயன்படுத்துகிறது. அனால் நான் வாளாகப் பயன்படுத்துகிறேன். முன்பு வறுமை குற்றவாளிகளை உருவாக்கியது. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது. தேசதந்தை காந்தியைச் சுட்ட துப்பாக்கி தவிர சமுயாதயத்திற்காகச் சந்தன மரமாய்த் தேய்ந்து தேய்ந்து மனம் வீசி கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை என்பது ஸ்பெசலிஸ்ட் பிர்லா போஸின் உறுதியான கருத்து. தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன, பெற்றது என்ன என்பதே […]

19/09/2018 Dinesh R
சிம்புக்கு ஜோடியாக ஃபேஷன் இளவரசி டயானா எரப்பா சினிமா

சிம்புக்கு ஜோடியாக ஃபேஷன் இளவரசி டயானா எரப்பா

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் “செக்கச்சிவந்த வானம்” படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை டயானா எரப்பா. கர்நாடகத்திலுள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். பின்பு 2012 இல், உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் எலைட் மாடல் லுக் போட்டியில் இந்திய நாட்டின் சார்பாகப் பங்கேற்றார். பின்பு கிங்ஃபிஷர் காலெண்டர் 2015 மற்றும் 2017, லாக்மே […]

15/09/2018 Dinesh R
வெனம் – யார் இந்த சூப்பர் ஹீரோ? அயல் சினிமா

வெனம் – யார் இந்த சூப்பர் ஹீரோ?

மார்வெல் காமிக்ஸில் அதி நாயகர்களுக்குப் பஞ்சம் கிடையாது. அப்படியொரு அதி நாயகனைத் திரையேற்றுகின்றனர் சோனி – மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் (Sony – Marvel Cinematic Universe). இது அவர்களது முதல் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதி நாயகன் வெனம் பாத்திரத்தின் பூர்வாங்கத்தை அறிய 2007 இல் வெளிவந்த ஸ்பைடேர்மேன் 3 படத்தினை நினைவுகூருவது அவசியம். அப்படத்தின் தொடக்கத்தில், நியூயார்க் நகரின் மத்திய பூங்காவில் ஒரு விண்கல் விழும். அதிலிருந்து ஊர்ந்து வரும் ஒரு வேற்றுக்கிரக உயிரி […]

15/09/2018 Dinesh R
யு டர்ன் விமர்சனம் சினிமா

யு டர்ன் விமர்சனம்

கன்னடத்தில், 2016 ஆம் ஆண்டு பவண் குமார் எழுதி இயக்கிய ‘யு டர்ன்’ எனும் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. 2017இல், மலையாளத்தில் ‘கேர்ஃபுல்’ என்ற பெயரில், இயக்குநர் V.K.பிரகாஷால் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பவண் குமாரே தமிழிலும், தெலுங்கிலும் இப்படத்தை மறு உருவாக்கம் செய்துள்ளார். வேளச்சேரி மேம்பாலத்தில், சாலையின் நடுவே உள்ள கற்களை நகர்த்திவிட்டு, விதிகளுக்குப் புறம்பாக யு எடுக்கும் வாகன ஓட்டிகளைப் பேட்டி எடுக்க முயல்கிறார் பயிற்சி நிருபரான ரட்சனா. […]

14/09/2018 Dinesh R
சீமராஜா விமர்சனம் சினிமா

சீமராஜா விமர்சனம்

“முத்து, அருணாச்சலம், லிங்காலாம் பார்த்திருக்கீங்களா பங்கு? அதுல வர்ற மாதிரி நான் பெரிய பணக்காரனாவும், ராஜ பரம்பரையாவும் வரணும்” – சிவகார்த்திகேயன் “வர வச்சுடலாம்.” – பொன்ராம் “எம்.ஜி.ஆர்., ராஜாவ நடிச்சு கத்திச்சண்டை போடுற படம்லாம் பார்த்திருக்கீங்க?” “ஓ.. பார்த்திருக்கேனே! சிறப்பா பண்ணிடலாம்.” “ஐய்யோ பங்கு! அப்படிலாம் பண்ணிடாதீங்க. ‘இவன் ஏதோ பிளான் பண்ணிட்டான்டா!’ என ஓட்டிடுவானுங்க மீம் பசங்க.” – சி.கா “அப்ப ரஜினி மட்டும் போதுங்கிறீங்களா? ராஜா கெட்டப் வேணுமா?” – பொ.ரா “கண்டிப்பா […]

14/09/2018 Dinesh R