32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 155)
மரகதக்காடு – சமரசமில்லாப் படம் சினிமா

மரகதக்காடு – சமரசமில்லாப் படம்

கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களைத் தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய 19-வது தயாரிப்பாக, உருவாகியிருக்கும் படம் தான் ‘மரகதக்காடு’. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அஜய், ரஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மங்களேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் […]

09/09/2018 Dinesh R
வஞ்சகர் உலகம் விமர்சனம் சினிமா

வஞ்சகர் உலகம் விமர்சனம்

வஞ்சகர் சூழ் உலகிற்கு, சமூகத்தின் சில பிற்போக்குத்தனமான பார்வைகளும், பகுத்தறிவற்ற நம்பிக்கைகளும், காலாவதியான சட்டங்களுமே காரணமாக அமைகின்றன என்பது மிகவும் துரதிர்ஷ்டம். காலமாற்றமும் அதற்குத் தோதான சட்டங்களும், சக மனிதன் மீதான பார்வையை, மேலும் கரிசனத்துடனும் நட்புடனும் மாற்றும் என நம்புவோமாக! படம் மெதுவான தாள லயத்தில் பயணிக்கிறது. இந்த லயத்திற்கு, இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் என்பது மிக நீண்ட நேரமாய்த் தோற்றமளிக்கிறது. போதைப்பொருள், மணி லாண்டரிங் போன்ற சட்டவிரோத செயல்களை நிழலில் இருந்து […]

07/09/2018 Dinesh R
மிஸ்டர் பீனின் ஜானி இங்கிலீஷ் 3 அயல் சினிமா

மிஸ்டர் பீனின் ஜானி இங்கிலீஷ் 3

மிஸ்டர் பீனைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இறவா நகைச்சுவைக் கதாபாத்திரத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ரோவன் அட்கின்சனே அதில் நடித்திருப்பார். 1990 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பட்ட தொடரான மிஸ்டன் பீன் (Mr. Bean), இன்று வரையும் ரசிக்கப்படும் மிகப் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி. மிஸ்டர் பீன் பாணியிலேயே, ஜேம்ஸ் பாண்aட் படங்களைப் பகடி செய்து 2003 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளிவந்த படம் “ஜானி இங்கிலீஷ்”. அதன் அடுத்த […]

07/09/2018 Dinesh R
தொட்ரா விமர்சனம் சினிமா

தொட்ரா விமர்சனம்

தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு சம்பவங்களை ஒன்றாக இணைத்து ஒரே படமாக எடுத்துள்ளதாக விளம்பரப் பதாகைகள் தெரிவிக்கின்றன. மேலும் ஆணவக் கொலையை மையப்படுத்திய படமும் கூட! ஆணவக்கொலை சம்பந்தமான இரண்டு சம்பவங்களையும் திரையில் பதியப்படவேண்டும் என்ற எண்ணத்திற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம். படத்தின் தொடக்கமே உடுமலைப்பேட்டையில் ஷங்கர் கொலை செய்யப்பட்டது போன்ற காட்சியமைப்புடன் தொடங்குகிறது. கதாபாத்திரத்தின் பெயரும் ஷங்கரே! ஆனால், அவரது காதலியின் பெயர் திவ்யா. அதாவது, கதாநாயகிக்குத் தர்மபுரி இளவரசனின் காதலி பெயரை வைத்துள்ளார் இயக்குநர். நாயகியின் அண்ணன் […]

07/09/2018 Dinesh R
நட்பைப் பிரதானப்படுத்தும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ சினிமா

நட்பைப் பிரதானப்படுத்தும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’

ஒரு காவலனுக்கும், சாதாரண மனிதனுக்கும் இடைப்பட்ட உறவு – காவல்துறை உங்கள் நண்பன்! ‘நமது உணர்வுகள் தான் நம் வாழ்வை வழிநடத்தும் சக்திகளாக இருக்கின்றன’ என்ற ஒரு புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. அது மறுக்க முடியாத உண்மை. உணர்வுகள் தான் நம் வாழ்வில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கின்றன. அதனால் தான் அத்தகைய திரைப்படங்கள் பார்வையாளர்களை எப்போதும் கவர்ந்திழுக்கின்றன. ‘மோ’ என்ற திகில் திரைப்படம் மற்றும் ‘அதிமேதாவிகள்’ என்ற காமெடித் திரைப்படத்தைத் தொடர்ந்து இப்போது ஒரு எமோஷனல் […]

05/09/2018 Dinesh R
ரவி மரியா – ‘காட்டேரி’ படத்தின் மூன்றாவது கதாநாயகி சினிமா

ரவி மரியா – ‘காட்டேரி’ படத்தின் மூன்றாவது கதாநாயகி

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் த்ரில்லரக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான் விஜய், ரவிமரியா, மைம் கோபி, லொள்ளு சபா மனோகர் […]

04/09/2018 Dinesh R
46 – சட்டவிரோதமாய் நடக்கும் பைக் ரேஸ் பற்றிய படம் சினிமா

46 – சட்டவிரோதமாய் நடக்கும் பைக் ரேஸ் பற்றிய படம்

விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா மற்றும் புலி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் T.R.பாலா. மேலும் 25க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர் தற்போது ’46’ என்கிற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார். இந்தப் படத்தில் ‘காத்திருப்போர் பட்டியல்’ படத்தில் நடித்த சச்சின் மணியும், பீச்சாங்கை படத்தில் நடித்த கார்த்திக்கும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். புதுமுகங்களான மீனாட்சி, நவினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, முக்கிய வேடங்களில் கலக்கப்போவது யாரு புகழ் […]

04/09/2018 Dinesh R
கூத்தன் – இசை வெளியீட்டு விழா சினிமா

கூத்தன் – இசை வெளியீட்டு விழா

நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மென்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் படத்தின் பெயர் “கூத்தன்”. இப்படத்தில், அறிமுக நாயகன் ராஜ்குமார் , அறிமுக நாயகிகள் ஸ்ரீஜிதா, சோனல், கிரா, ஆகியோர் நடித்தள்ளனர். இவர்களுடன், பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா,கவிதாலயா கிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திரையுலகப்பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 3 அன்று […]

04/09/2018 Dinesh R