32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 152)
எழுமின் – முதல் தற்காப்பு கலை திரைப்படம் சினிமா

எழுமின் – முதல் தற்காப்பு கலை திரைப்படம்

ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின். தமிழில் வரும் முதல் தற்காப்பு கலை திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் […]

12/10/2018 Dinesh R
கூத்தன் விமர்சனம் சினிமா

கூத்தன் விமர்சனம்

கூத்து என்பது வசனம், பாட்டு, அடவுகள் போன்றவற்றைக் கொண்டு நடிக்கும் நாட்டார் கலை. அந்தக் கலையைக் கற்றுத் தேர்ந்தவரைக் கூத்தன் என்றழைப்பார்கள். கலைகளின் தோற்றுவாய் எனக் கருதப்படும் சிவனுக்கும் அப்பெயர் வழங்கப்படுகிறது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை, நடிப்பிலும் நடனத்திலும் பேராவலுள்ள நாயகனைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாயகன் வசிக்கும் ஃப்லிம் நகரில், சினிமா கனவுகளோடு 35 குடும்பங்கள் வாழ்கின்றன. அதன் உரிமையாளர் அந்த நகரை விற்க முற்படுவதால், ஃப்லிம் நகர்வாசிகள் அவ்விடத்தை வாங்க முயற்சி செய்கின்றனர். நாயகிகளின் […]

12/10/2018 Dinesh R
ஆண் தேவதை விமர்சனம் சினிமா

ஆண் தேவதை விமர்சனம்

முன்னாள் பத்திரிகையாளரான இயக்குநர் தாமிரா, இயக்குநர் இமயத்தையும் சிகரத்தையும் ஒன்றாக நடிக்க வைத்து ரெட்டச்சுழி எனும் படத்தை 2010 இல் எடுத்தவர். எட்டு வருடங்களுக்குப் பிறகு அவர் தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார். சிறகுகள் உதிர வெண்ணிற இறக்கைகள் மேகத்தினூடே பறக்க, ஆண் தேவதை என்ற பெயர் திரையில் வருகிறது. படத்தின் தொடக்கமே, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் பற்றிய சமுத்திரக்கனியின் விளக்கத்தோடு, “தீதும் நன்றும் கற்றுத் தருவோம்”என படம் தொடங்குவது சிறப்பு. அந்தச் சிறப்பு, […]

12/10/2018 Dinesh R
பூவரசம் பீப்பீ – சில்லு கருப்பட்டி சினிமா

பூவரசம் பீப்பீ – சில்லு கருப்பட்டி

திரையுலகில் தற்போது அன்த்தாலஜி (anthology) என்று அழைக்கப்படும் ‘குறும்படங்களின் திரட்டு’ பிரபலமாகி வருகிறது. ‘பூவரசம் பீப்பீ ‘ என்ற படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் தற்போது இயக்கி வரும் ‘சில்லு கருப்பட்டி’ திரைப்படம் இந்த வகையைச் சேர்ந்தது. சமுத்திரக்கனி, சுனைனா ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை டிவைன் ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் வெள்ளினேனி தயாரிக்கிறார். தனது முதற்படமான ‘பூவரசம்பூ பீப்பீ’ முலம் திரையுலகினர் கவனத்தை மட்டுமின்றி, ரசிகர்கள் கவனத்தையும் பெருமளவு கவர்ந்த இயக்குநர் ஹலீதா ஷமீம் […]

10/10/2018 Dinesh R
ஐரா – இரட்டை வேடத்தில் நயன் சினிமா

ஐரா – இரட்டை வேடத்தில் நயன்

தொடர்ந்து தன்னுடைய தோற்ற பொலிவாலும், சீரிய நடிப்பு திறமையினாலும் திரை வர்த்தகத்தில் மட்டுமன்றி, ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையைச் செலுத்தி வரும் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான “ஐரா” படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அறம் படத்தைத் தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன் கதை, வசனம் எழுதி இயக்குகிறார். […]

10/10/2018 Dinesh R
தாதா 87 இயக்குநரின் அடுத்த படம் சினிமா

தாதா 87 இயக்குநரின் அடுத்த படம்

சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் “தாதா 87” படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். “தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது ஏ எஃப் எஃப் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, நடிகர் அம்சன் நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார். தல அஜித்தின் தீவிர ரசிகராகவும், கல்லூரியின் சூப்பர் சினியராகவும் அம்சன் நடிக்கின்றார். மற்ற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் […]

09/10/2018 Dinesh R
கூல் சுரேஷின் ‘சித்திரமே சொல்லடி’ சினிமா

கூல் சுரேஷின் ‘சித்திரமே சொல்லடி’

‘சித்திரமே சொல்லடி’ எனுன் திரைப்படத்தை, எம்.ஜி.எம் ப்ரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் கௌரி சங்கர் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தில் கூல் சுரேஷ் கதாநாயகனாகவும், கோபிகா நாயர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் தெனாலி, மகாநதி சங்கர், தேனி முருகன், விஜய் கணேசன், சுமதி, அஞ்சலி டேவி, அப்சர் மற்றும் பெரெரொ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஒளிப்பதிவை மகி பாலனும், ஒலிப்பதிவை ஆதிஷ் உத்ரியனும் செய்துள்ளனர். துப்பறியும் பாணியில் உருவாக்கபட்டுள்ள இப்படம் சென்னை, ஏலகிரி மற்றும் பாண்டிசேரி […]

09/10/2018 Dinesh R
வெனம் விமர்சனம் அயல் சினிமா

வெனம் விமர்சனம்

உலகம் வாழத் தகுதியற்ற கிரகம் என நம்புகிறார் லைஃப் ஃபெளண்டேஷனின் கார்ல்டன் ட்ரேக். சமீபமாய் ஹாலிவுட் வில்லன்கள் அனைவரையுமே இந்த பயம் ஆட்டுவிக்கிறது. அவர்களை இரு சாரராகப் பிரிக்கலாம். முதல் வகையினர், மக்கள் தொகையைப் பாதியாகக் குறைத்துவிட்டால், பூமி பழையபடி பூத்துக் குலங்கத் தொடங்கிவிடும் என நம்புவர்கள். இன்னொரு சாரார், மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு பூமியை விட்டே போய்விடுவது என நம்புவர்கள். கார்ல்டன் ட்ரேக், இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்த வில்லன். சரி, பூமியை விட்டு […]

08/10/2018 Dinesh R
ராட்சசன் விமர்சனம் சினிமா

ராட்சசன் விமர்சனம்

கொலை என்று பதற்றத்துடன் கடந்து விட முடியாத அளவுக்கு, மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு பள்ளி மாணவிகள் ஒவ்வொருவராகக் கொலை செய்யப்படுகின்றனர். குலை நடுங்க வைக்கும் கொலைகள் அவை. புராணங்களில், வரும் ராட்சஷர்கள் யாரும் சைக்கோக்கள் கிடையாது. இதில் வரும் சைக்கோவைச் சித்தரிக்க, ராட்சசன் எனும் சொல் சரியயானதுதானா என்பது ஐயமே! சைக்கோவை எஸ்.ஐ. அருண் எவ்வாறு பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. த்ரில்லர் ரசிகர்களுக்குச் செமயான விருந்தளிக்கும் படம். ஆனால் அதே அளவு நடுக்கத்தையும் […]

06/10/2018 Dinesh R
நோட்டா விமர்சனம் சினிமா

நோட்டா விமர்சனம்

ஷான் கருப்புசாமியின் வெட்டாட்டம் நாவல் அப்படியே படமாக ஆனந்த் ஷங்கரால் எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வினோதன் தனது மகன் வருணிடம் முதலமைச்சர் பதவியை, இரண்டு வாரத்திற்குக் கைமாற்றிவிட்டு தன் மீது நீதிமன்றதிலுள்ள வழக்கைச் சந்திக்கத் தயாராகிறார். வழக்கின் தீர்ப்பு வினோதனுக்குப் பாதகமாகி விட, வருண் முதலமைச்சர் பதவியில் நீடிக்குமாறு ஆகிவிடுகிறது. சொந்த கட்சி ஆட்களின் அத்துமீறல், இயற்கைச் சீற்றம், குடும்பத்தின் மீதான உயிர் அச்சுறுத்தல் என வருண் தனக்கு முன்னுள்ள சவால்களை எல்லாம் எப்படிச் சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் […]

06/10/2018 Dinesh R
பரியேறும் பெருமாள்: எங்கள் வீட்டு நிலவு சினிமா

பரியேறும் பெருமாள்: எங்கள் வீட்டு நிலவு

தமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் “பரியேறும் பெருமாள். உலகெங்கும் வெற்றிநடை போட்டு வரும் இப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும் நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான காட்சிகளும் தான். சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாகப் பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது,“இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் […]

04/10/2018 Dinesh R
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ‘கூல் ஸ்கல்ப்டிங்’ மருத்துவம்

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ‘கூல் ஸ்கல்ப்டிங்’

உடல் எடையை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் செல்களை உறையவைத்து, உடலமைப்பை விரும்பியப்படி செதுக்கும் ‘கூல்ஸ்கல்ப்டிங் ’ என்ற புதிய அறுவை சிகிச்சையற்ற மருத்துவத் தொழில்நுட்பம் சென்னையில் அமைந்திருக்கும் ஜீ கிளினிக்கில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார். அப்பொழுது ஜீ கிளினிக்கின் நிர்வாக இயக்குநரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் வி.சேதுராமன், உடற்பயிற்சி ஆலோசகர் அஜித் ஷெட்டி, ஊட்டச்சத்து நிபுணர் வீணா சேகர் , அலர்கான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து […]

04/10/2018 Dinesh R