TeaserDinesh R
செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.
Teaser
சின்ன மாப்பிள்ளை 1995 டூ கொலையுதிர் காலம் 2017
நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தை இயக்குகிறார் சக்ரி டோலெட்டி. இவர், ‘ உன்னை போல் ஒருவன்’ படமும், ‘பில்லா 2’ படமும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ‘பூஜா என்டர்டைன்மெண்ட் & பிலிம்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம் இயக்குகிறது. வட இந்தியத் திரையுலகில், குறிப்பாக ஹிந்தித் திரையுலகின் தயாரிப்புத் துறையில் மிகப் பெரிய ஜாம்பவனாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் வாசு பக்னானி அவர்களின் நிறுவனம் அது. “சினிமா மீது எனக்குக் காதல் ஏற்பட முக்கிய காரணம், தமிழில் […]

டோரா விமர்சனம்
கால் டேக்சி நிறுவனம் தொடங்குவதற்காக நயன்தாரா பழைய மாடல் கார் ஒன்றை வாங்குகிறார். அக்காரினுள் குடி கொண்டிருக்கும் டோரா எனும் நாயின் ஆவி சிலரைப் பழிவாங்குகிறது. அவர்கள் யார், அவர்களை நாய் ஏன் எப்படிப் பழிவாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை. பவளக்கொடியாக நயன்தாரா நடித்துள்ளார். தூங்கி எழுந்தாலும் சரி, கொலையைப் பார்த்து மிரண்டு ஓடி வந்தாலும் சரி, முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை, பளீச்சோ பளீச்சென இருக்கிறார். நாயகன் இல்லாததால் டூயட்டும் இல்லை ஆடைக்குறைப்பும் இல்லை. […]

கவண் விமர்சனம்
சமமற்ற இருவருக்குள் நடக்கும் சண்டைக்கு, பைபிளில் வரும் கோலியத், டேவிட் கதையை உதாரணம் காட்டுவார்கள். சிறுவனான டேவிட் உண்டிவில் கொண்டு ஆஜானபாகு கோலியத்தை வீழ்த்திவிடுவான். அப்படி, வில்லன் ஆகாஷ்தீப்பின் கார்பொரேட் டி.வி. நிறுவனமான ஜென் 1-ஐத் தகர்க்கிறார் முத்தமிழ் டி.வி. நிருபரான விஜய்சேதுபதி. படத்தின் சர்ப்ரைஸ் விஷயமென்றால், அது பவர் ஸ்டார் வரும் காட்சிதான். முதல் முறையாக, அவர் தோன்றும் காட்சியொன்று ரசிக்கும்படியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அவர் பேசும் வசனமும் துணை புரிந்துள்ளது. எழுத்தாளர்கள் சுபா […]

திட்டம் போட்டு திருடுற கூட்டம் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஸ்பைடர்-மேன்: கமிங் ஹோம் – ட்ரெய்லர்

வில்லனாகிறார் வின் டீசல்
பால் வாக்கருக்கு விடையளித்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7, பெரும் வசூலை ஈட்டிய வெற்றிப்படமாக அமைந்தது. அத்தொடரின் எட்டாவது பாகத்தில், நாயகர்களில் ஒருவரான வின் டீசல் வில்லனாகிறார். ஒரு மனிதனுக்கு குடும்பம் மிக அவசியம் எனக் கொள்கையுடைய டொமினிக் டொரெட்டோ எனும் கதாபாத்திரத்தில் வருபவர் வின் டீசல். கார் சேஸ்களைத் தவிர்த்து, எல்லாப் பாகத்திலும் குடும்பத்தை ஒருங்கிணைப்பதிலே கவனம் செலுத்துவார். அவரைக் குடும்பத்தில் இருந்து பிரித்து சார்லிஸ் தெரான், குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கிறார். எப்படி அவரது குடும்பம் […]

பாம்புசட்டை – சமூகத்தின் மகிழ்ச்சி!
சமீபத்தில் வெளியான பாம்புசட்டை திரைப்படம், ரசிகர்களிடயே வரவேற்பையும் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறது. எளிய மக்களின் கதை, விளிம்புநிலை மக்களின் கதை, யதார்த்தமான கதை, வசனங்கள் அபாரம் எனக் கொண்டாடப்பட்டாலும் தாமதமான வெளியீடு, வெளியீட்டுப் பிரச்சினை என ஒரு போராட்டத்திற்குப் பின்பே தன் முதல் திரைப்படம் மக்கள் பார்வைக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்கிறார் இயக்குநர் ஆடம் தாசன். இயக்குநர் ஷங்கருடன் எந்திரன், அந்நியன், சிவாஜி படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஆடம் தாசனுக்கு பாம்புசட்டை, இயக்குநராக முதல் திரைப்படம். […]

குக்கூ மாளவிகா – ராஜதந்திரம் வீரா
‘குக்கூ‘ படம் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கவர்ந்து சென்றவர் மாளவிகா நாயர். தெலுங்குத் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் இருக்கும் இவர், தற்போது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விநியோக துறையில் நிலையான வெற்றியைத் தழுவி வரும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ் தயாரிக்கும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன் (குறும்பட மற்றும் விளம்பரப் பட இயக்குநர்) இயக்குகின்றார். ‘ராஜதந்திரம்’ புகழ் வீரா […]

சிரிக்கச் செய்வார் ஆனந்த்ராஜ்
அருள்நிதி – மஹிமா நம்பியார் நடிக்கும் திரைப்படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக நடிகர்கள் அஜ்மலும் ஆனந்தராஜும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்து, விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி அன்று ஆரம்பமாக இருக்கின்றது. “ஆனந்தராஜ் சாரின் கதாபாத்திரம் எங்கள் படத்தின் கதைக்கு மேலும் பலம் […]

பாம்புசட்டை விமர்சனம்
வளர்ச்சிக்காக பாம்பு தன் தோலை (சட்டையை) உரித்துக் கொள்ளும். அதே போல், தேவையின் பொருட்டு நல்லவன் எனும் சட்டையைக் கழட்ட நிர்பந்திக்கப்படுகிறான் நாயகன். நாயகன் தன் சட்டையை உரித்துக் கொள்கிறானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலாளியாக சார்லி நடித்துள்ளார். ஒரே ஒரு சோற்றுப் பருக்கையைக் கீழே சிந்திவிடும் தனது இளைய மகளிடம், ‘அரிசியைக் குப்பைக்குப் போக விடலாமா?’ என அவர் நீண்ட தர்க்கத்துடன் கேட்கும் கேள்விக்குத் திரையரங்கில் கரவொலி எழுகிறது. சமீபமாய் […]

லைஃப் விமர்சனம்
பூமிக்கு வெளியில் வாழும் உயிரினம் ஒன்றைச் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். ஓர் அணு உயிரியான அதைக் கண்டுபிடித்ததன் மூலம் மகத்தானதொரு பெருமிதத்தில் உள்ளது ஆறு பேர் கொண்ட அக்குழு. அவ்வுயிரி அசைந்து தன் இருப்பைக் காட்டியவுடன் தான் படத்தின் பெயரே போடுகிறார்கள். ஒளி புகும்தன்மையோடு மிக அழகாய் இருந்த அந்த ஓர் அணு உயிரி, தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு பல்லணு உயிரியாக வளர்கிறது. அதிபுத்திசாலியாய்ப் பரிணமிக்கும் அந்த உயிரால் என்னென்ன […]

8 தோட்டாக்கள் – ட்ரெய்லர்

தாயம் விமர்சனம்
எட்டுப் பேர் நேர்முகத் தேர்விற்காக ஓர் அறையில் கூடுகின்றனர். ஒரு மணி நேரம் நடக்கும் அத்தேர்வின் முடிவில், ஒருவர் தான் உயிருடன் வெளியேற முடியும். அந்த ஒருவர் யார் என்பதே தாயம் படத்தின் கதை. பகடை உருட்டும் பொழுது, தாயம் விழ ஓர் அதிர்ஷ்டம் தேவை. எட்டுப் பேரில் யாருக்கு அந்த அதிர்ஷ்டம் என்பதே படத்தின் தலைப்புக்குப் பொருள். சஸ்பென்ஸ் த்ரில்லரில் யார், ஏன் என்ற கேள்வியைக் கடைசி வரை தக்க வைப்பது ஒரு கலை. ஆனால், […]

புரூஸ் லீ விமர்சனம்
நாயகனின் பெயர் ஜெமினி கணேசன். பயங்கரமான பயந்தாங்கொள்ளி. திரையில் ஒரிஜினல் புரூஸ் லீ நடித்த படம் பார்த்தால் மட்டும் சிறுவன் ஜெமினி கணேசனுக்கு லேசாகத் தைரியம் வர மாதிரி இருக்கே ‘அடடே..!’ என அவனது அம்மா புரூஸ் லீ எனப் பெயர் அழைக்கிறார். ஆனாலும் நாயகனுக்கு தைரியம் மட்டும் வந்தபாடில்லை. புரூஸ் லீக்கு தைரியம் வராவிட்டால் என்ன? சரோஜா தேவி மீது காதல் வந்து விடுகிறது. முகத்திற்கு பெளடர் போட்டுக் கொண்டு பாடல்களுக்கு நடனமாடும் சரோஜா இல்லை, […]