காணொளிகள்Dinesh R
செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.
காணொளிகள்
என்னோடு விளையாடு – குதிரைப் பந்தயமும் சூதாட்டமும்
ரொமான்டிக் த்ரில்லர் வகைமையைச் சேர்ந்த ‘என்னோடு விளையாடு’ திரைப்படம், கெளதம் வாசுதேவ் மேனன் பாணியில் ‘ஸ்டலிஷான லவ்’ படமாக வந்துள்ளது எனச் சிலாகித்தார் படத்தின் எடிட்டர் கோபிகிருஷ்ணா. இவர், ‘வழக்கு எண்:18/9’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ போன்ற படங்களுக்குப் படத்தொகுப்பாளராக இருந்துள்ளார். இரண்டு லவ் ட்ராக், ஒரு சேஸிங் (chasing) ட்ராக் கொண்ட இப்படம், ‘தனி ஒருவன்’ போல் சுவாரசியமாக உள்ளதென நம்பிக்கையோடு தெரிவித்தார். படத்தில், பரத் – கதிர் என படத்தில் இரண்டு கதாநாயகன்கள். பரத்திற்கு […]

மீண்டும் வுல்வெரின்
அகாதெமி விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட ஹ்யூ ஜாக்மேன் மீண்டுமொரு முறையும், இறுதியாகவும் வுல்வெரின் வேடத்தில் தோன்றுகிறார். லோகன் என்ற இப்படத்தை, முந்தைய ‘தி வுல்வெரின்’ படத்தை இயக்கியிருந்த ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கியுள்ளார். 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ப்ரையன் சிங்கரின் எக்ஸ்-மேன் (X-Men) படத்தில் தான் முதல் முறையாக ஹ்யூ ஜாக்மேன், வுல்வெரின் வேடத்தில் தோன்றிக் கலக்கியிருந்தார். இப்பொழுது ஒன்பதாவது முறையாக, அதே வேடத்தில் இப்படத்தில் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளிவந்த அந்தத் தொடர் படங்களில் எல்லாம், வுல்வெரினின் அதிசய சக்திகள் மட்டுமே பறைசாற்றப்பட்டன. […]

கலக்கப் போகும் கவண்
சவால், காதல், அவமானம், மீண்டெழுதல், கொண்டாட்டம் என மனிதனின் வாழ்வில் நிகழும் அத்தனையையும் தொடும் சுவாரசியமாகப் படமாக இருக்கும் “கவண்”. இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக நடிக்கவுள்ளார். மேலும், விஜய் சேதுபதியுடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று டி.ராஜேந்தரும் நடித்துள்ளார். அவரது அடுக்குமொழி வசனமும், அடங்காத நடிப்பும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கப் போகிறது. டி.ஆர் – விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் அரங்கை அதிரவைக்கப் போகின்றதாம். விஜய் […]

கவண் – ஸ்டில்ஸ்
” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

மதியால் வெல் – ட்ரெய்லர்

ரசிகர்களைச் சுமக்கும் வேதாளம்
இது வேதாளம் சொல்லும் கதை எனும் படத்தில் பல விசேஷங்கள் உண்டு. முதலாவதாக, க்ரெக் புரிட்ஜ் எனும் வெள்ளைக்கார வ்ரெஸ்ட்லர் ஸ்டன்ட் மாஸ்டராகப் படத்தில் பணியாற்றுவதோடு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார். முதல்முறையாக புரிட்ஜைப் பார்க்கும்போது, க்ரெக் தன் குழுவினருடன் உண்மையாகவே மல்யுத்தம் செய்வதாக நினைத்துள்ளார் இயக்குநர் ரதீந்தரன். புரிட்ஜ் உருவாக்கிய வ்ரெஸ்ட்லிங் டெக்னிக்களைக் கொண்டு, ‘ட்ரையல் ஆஃப் பிளட் (Trial of blood)’ எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார் ரதீந்தரன். நான்கு வருடங்களாகவே முழு நீள ஆக்ஷன் […]

இது வேதாளம் சொல்லும் கதை – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்
” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

சிIII விமர்சனம்
சிங்கம் மூன்றாம் பாகத்தின் தலைப்பு செல்லமாகச் சுருங்கி “சி3” ஆகிவிட்டது. ஆந்திரக் கமிஷ்னர் கொல்லப்படுகிறார். புலனாய்வு செய்ய தமிழகத்தில் இருந்து டி.சி.பி. துரைசிங்கம் ஆந்திர அரசால் அழைக்கப்படுகிறார். கமிஷ்னரைக் கொன்றவர்களை நூல் பிடித்துப் போனால், ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பெரும் வில்லன் கிளம்புகிறார். பணம் சம்பாதிக்கும் போதையில் தெரிந்தே தவறு செய்யும் வில்லனை துரைசிங்கம் எப்படி வேட்டையாடுகிறார் என்பதுதான் படத்தின் கதை. அப்படியொரு வேகம் கதையின் நகர்வில். இடையில், சம்பந்தமில்லாமல் சூரி செய்யும் அசட்டுக் காமெடிகளால் நியாயமாகப் […]

23 ஆளுமைகள் கொண்ட ஹாலிவுட் ‘அந்நியன்’

விடலபசங்க – ஸ்டில்ஸ்
” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

காஸி – நீர்மூழ்கி போர்க் கப்பலின் கதை
காஸி – ஒரு போர்க்களத் திரைப்படமாக உருவாகியுள்ளது. பிப்ரவரி மாத வெளியீடாக வரவுள்ள இப்படத்தில் ராணா டகுபதி,டாப்ஸி பன்னு, நாசர்,கே.கே.மேனன்,அதுல் குல்கர்னி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மறைந்த பழம்பெரும் நடிகரான ஓம்பூரி நடித்த கடைசி திரைப்படம் இது தான் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். மிகப் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சங்கல்ப் இயக்கியுள்ளார். யாராலும் வீழ்த்த முடியாத நீர் முழ்கிக் கப்பலான PNS காஸியைப் பற்றி மிக ஆழமாகப் பேசும் […]

இவன் நல்ல சிவா
பல வெற்றி படங்களைத் தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்து பிரம்மாண்டமாகத் தயாரித்திடுக்கும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 88 வது படம் இது. “இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்குள் ஈகோ யுத்தம் நடக்கிறது. இரண்டு அதிகாரிகளுக்குள் உண்டான மோதலில் நுழைந்து லாபம் பார்க்க நினைக்கிறான் சமூக விரோதி ஒருவன். அவனது எண்ணம் நிறைவேறியதா? இல்லையா? என்பது பரபரப்பான திரைக்கதை! ராகவா லாரன்ஸ் இதுவரை ஏற்றிராத போலீஸ் […]

போகன் விமர்சனம்
தனி ஒருவன் வெற்றி ஜோடியான அரவிந்த் சாமி – ஜெயம் ரவி மீண்டும் இணைகிறார் என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்குப் பிரதான காரணம். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். ‘போகன்’ என்றால் புலன்களால் பெறும் இன்பத்தை அனுபவிப்பவன் எனப் பொருள் கொள்ளலாம். அப்படி, வாழ்விலுள்ள ராஜ சுகம் அனைத்தையும் அனுபவிக்கும் பெரும் இச்சையுடைய போகனாக அரவிந்த் சாமி கலக்கியுள்ளார். தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ள, ஆய கலைகளில் 52வது கலையான ‘பரகாயப் பிரவேசம்’ எனும் […]

நவீன உலகத்தின் நன்னெறி
ஜனவரி 30, 2017 அன்று, மூன்றாம் ஆண்டு திரு. S.V.நரசிம்மன் நினைவுப் பேருரை விழாவை மயிலாப்பூரிலுள்ள ‘பாரதீய வித்யா பவன்’ ஏற்பாடு செய்திருந்தது. ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற கருத்தியலையும், ‘உயர்ந்த சிந்தனைகள் எல்லாப் பக்கங்களில் இருந்தும் நம்மிடம் வரட்டும்’ என்ற குறிக்கோளும் உடையது பாரதீய வித்யா பவன். தங்கள் கருத்தியலையும் குறிக்கோளையும் பிரதிபலிக்குமாறு விருந்தினர்களைத் தேர்வு செய்திருந்தனர். அவர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசராகப் பணி புரிந்தவரான மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் திரு.M.K.நாராயணனும், புகழ்பெற்ற புத்த […]
