32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4026 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 193)
நவீன உலகத்தின் நன்னெறி ஆன்‌மிகம்

நவீன உலகத்தின் நன்னெறி

ஜனவரி 30, 2017 அன்று, மூன்றாம் ஆண்டு திரு. S.V.நரசிம்மன் நினைவுப் பேருரை விழாவை மயிலாப்பூரிலுள்ள ‘பாரதீய வித்யா பவன்’ ஏற்பாடு செய்திருந்தது. ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற கருத்தியலையும், ‘உயர்ந்த சிந்தனைகள் எல்லாப் பக்கங்களில் இருந்தும் நம்மிடம் வரட்டும்’ என்ற குறிக்கோளும் உடையது பாரதீய வித்யா பவன். தங்கள் கருத்தியலையும் குறிக்கோளையும் பிரதிபலிக்குமாறு விருந்தினர்களைத் தேர்வு செய்திருந்தனர். அவர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசராகப் பணி புரிந்தவரான மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் திரு.M.K.நாராயணனும், புகழ்பெற்ற புத்த […]

02/02/2017 Dinesh R
எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம் சினிமா

எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

ஒரு நண்பனுக்காக எந்தச் சிரமத்தையும் மேற்கொள்ளும் நண்பர்களைச் செல்லமாக ‘அடிமைகள்’ என்கிறார் இயக்குநர். அப்படி, ஐ.டி.யில் வேலை செய்யும் ஜெய்க்கு மூன்று அடிமைகள் உள்ளனர். அவர்கள், வங்கியில் கேஷியராக உள்ள கருணாகரன், ஷேர் ஆட்டோ ஓட்டும் காளி வெங்கட், கஸ்டமர் கேரில் வேலை செய்யும் நவீன் ஆகியோர் ஆவர். காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார் ஜெய். அவரைத் தேடித் தடுக்க முயற்சி செய்யும் அவரின் 3 அடிமைகளுமே அநாவசிய பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். அடிமைகளை […]

02/02/2017 Dinesh R
சீனப் பெருஞ்சுவரைத் தாக்கும் வினோத மிருகங்கள் அயல் சினிமா

சீனப் பெருஞ்சுவரைத் தாக்கும் வினோத மிருகங்கள்

வில்லியம் கெரினும், பெரோ டோவாரும் வெடிமருந்தினைத் தேடி சீனா வருகிறார்கள். வழியில் வினோத மிருகத்தினால் அவர்கள் குழு தாக்கப்பட வில்லியமும் பெரோவும் மட்டும் உயிர் தப்புகின்றனர். 5500 மைல்கள் நீளம் கொண்ட சீனப் பெருஞ்சுவரைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஜெனரல் ஷாவ், உயிர் தப்பிய ஐரோப்பியர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறார். தொடரும் சம்பவங்கள், வினோத மிருகங்களிற்கு எதிரான போரில் வில்லியமைத் தலைமை தாங்கச் செய்கிறது. வில்லியமாக ஹாலிவுட் நாயகன் மேட் டேமன் நடித்துள்ளார். ஆனால், […]

30/01/2017 Dinesh R
25 வகை திருஷ்டியும், தமிழகத்தை ஆண்டவர்களும் சினிமா

25 வகை திருஷ்டியும், தமிழகத்தை ஆண்டவர்களும்

சாயா படத்தில், நாயகி காயத்ரி ஒரே டேக்கில் நீண்ட பெரிய வசனத்தை படத்தில் இரண்டு இடத்தில் பேசி நடித்துள்ளார். ஒரு காட்சியில் நாயகன் வெளியூரிலிருந்து வருவார். அப்போது நாயகி அவரை வரவேற்று திருஷ்டி சுத்திப்போடுவார். கிட்டத்தட்ட இருபத்தைந்து வகையான திருஷ்டியை மூச்சுவிடாமல் ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார். இன்னொரு காட்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் பத்து முதல்வர்கள் பேர் சொல்ல வேண்டும் எனக் கேட்க, நாயகி காயத்ரி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை தமிழகத்தை […]

29/01/2017 Dinesh R
ஓர் இயக்குநரின் ஆசையும் நம்பிக்கையும் சினிமா

ஓர் இயக்குநரின் ஆசையும் நம்பிக்கையும்

“பைரவா படத்துடன் ‘சாயா’ படத்தை வெளியிடலாமென்று முடிவெடுத்துக் களமிறங்கினோம். நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல். பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும். அதற்கு எப்போ வழிபிறக்கும்னு தெரியலை. போதாக்குறைக்கு நம்ம வீட்டில் ஒரு இளைய தளபதி ரசிகர் இருக்கிறார். அவர், ‘எங்கள் தளபதி படம் வெளியாகும்போது நீங்கள் எப்படி வெளியிடலாம்?’ என ஒரே தகராறு. வீட்டிலேயே எதிர்ப்பிருந்தா எப்படி வெளியிடுறது? தள்ளிப்போட வேண்டியதாயிற்று. மறுபடியும் வெளியிட தேதி குறித்தபோது சல்லிக்கட்டு போராட்டம். ஒட்டுமொத்த […]

28/01/2017 Dinesh R
அசோக் அமிர்தராஜ் – ஐ.நா.வின் இந்திய நல்லெண்ணத் தூதர் சமூகம்

அசோக் அமிர்தராஜ் – ஐ.நா.வின் இந்திய நல்லெண்ணத் தூதர்

இந்தியாவில் நீடித்த வளர்ச்சி திட்டங்களுக்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக, பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரும், சர்வதேச விம்பிள்டன் டென்னிஸ் வீரருமான அசோக் அமிர்தராஜ் ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார். ஹைட் பார்க் எண்டர்டெய்ன்மெண்ட் குழுமத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கும் திரு. அமிர்தராஜ், ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தூதர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், இப்பெருமையினைப் பெறும் முதல் திரைப்படத் தயாரிப்பாளர் என்பதும் அவருக்குக் கிடைத்துள்ள கூடுதல் அங்கீகாரம். சென்னையில் பிறந்து, சர்வதே […]

27/01/2017 Dinesh R
அதே கண்கள் விமர்சனம் சினிமா

அதே கண்கள் விமர்சனம்

1967 இல், இயக்குநர் திரிலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் படம் “அதே கண்கள்”. அந்தப் படத்திற்கு மிகக் கச்சிதமாகத் தலைப்பு பொருந்தியது போல், இப்படத்திற்குப் பொருந்தவில்லை. ரெஸ்டாரன்ட் ஓனரான சமையல் கலைஞர் வருணுக்குத் தீபா மீது காதல் ஏற்படுகிறது. தீபாவிடம் காதலைச் சொன்ன அன்றே ஏற்படும் விபத்தில், கண் பார்வையை மீண்டும் பெறுகிறான் வருண். ஆனால், அவனது காதலி தீபா பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் போய் விடுகிறது. பின் என்னாகிறது […]

27/01/2017 Dinesh R
பலம் விமர்சனம் அயல் சினிமா

பலம் விமர்சனம்

காபில் என்ற ஹிந்தி வார்த்தைக்குத் ‘திறமையுள்ள’ அல்லது ‘சாதித்து முடிக்கக் கூடிய’ எனப் பொருள் கொள்ளலாம். தமிழில், ‘பலம்’ என்ற தலைப்பில் டப் செய்து வெளியிட்டுள்ளனர். ரோஹன் பாண்டியராஜ்க்கும், சுப்ரியாவுக்கும் கண் பார்வை இல்லையெனினும், முதல் சந்திப்பிலேயே சுப்ரியா மீது காதல் வயப்படுகிறார் ரோஹன். திருமணம் ஆன இரண்டாவது நாளே அவர்கள் வாழ்வின் போக்கையே இரண்டு நபர்கள் சீர்குலைக்கின்றனர். விவேகத்தையும் நம்பிக்கையையும் மட்டுமே துணையாகக் கொண்டு வாழும் ரோஹன், தன் வாழ்க்கையை அழித்தவர்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் […]

26/01/2017 Dinesh R
கதைகள் சொல்லும் சுண்டைக்காய் கட்டுரை

கதைகள் சொல்லும் சுண்டைக்காய்

ஏழு கடல், ஏழு மலை தாண்டியிருக்கும் வியாசபுரியை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும். அந்நாட்டில், கற்றல் என்பது கதைகளைப் படிப்பது மூலமாக மட்டுந்தானாம். அதாவது பள்ளிகளில் கதைகளை மட்டுமே சிலபஸாக உடைய நாடு அது. வாவ்! அந்நாட்டின் இளவரசன் ஒரு சாபம் காரணமாக சுண்டைக்காயாக மாறி, ஐந்தாம் வகுப்பு படிக்கும் தமிழகத்துச் சிறுவன் சூர்யா கையில் சிக்குகிறான். ‘சுண்டைக்காய் இளவரசன்’ எனும் சிறுவர் நாவலின் கதைக்கரு இதுதான். கதைக்குள் கதையென, சூர்யாவிற்கு இளவரசன் மூன்று மாயாஜாலக் கதைகளைச் சொல்கிறான். […]

25/01/2017 Dinesh R
பைரவா விமர்சனம் சினிமா

பைரவா விமர்சனம்

பொங்கலுக்கு ஒரு படம், நாயகன் விஜயின் கணக்கில் வரவு வைக்கவேண்டுமென்ற ஆவலில் உருவாகியுள்ள படம். தீமையை எதிர்த்து ஒற்றை ஆளாய்ப் போராடி, பைரவா வாகை சூடுவதுதான் படத்தின் கதை. வில்லனாகப்பட்டவர் கல்வித் தந்தை, நாயகி மருத்துவம் படிக்கும் மாணவி, விஜய் மாஸ் ஹீரோ என்பதை முதல் பாதியில் நீட்டி முழக்கியும், வில்லனை நாயகன் எப்படி வீழ்த்துகிறார் என்பதை இரண்டாம் பாதியிலும் சொல்லியுள்ளனர். சுவாரசியமோ, புதுமையோ, திருப்பமோ அற்ற திரைக்கதையின் நீளம் சற்றே அதிகம். விஜய் அழகாக, அசத்தலாக, […]

12/01/2017 Dinesh R