32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4023 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 35)
BV Frames | களவும் காதலும் – ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் சினிமா

BV Frames | களவும் காதலும் – ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர்

பிவி ஃப்ரேம்ஸ் (BV Frames) நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. முன்னணி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இந்த புதிய திரைப்படத்திற்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துப் படக்குழுவினரை வாழ்த்தினார். இப்படத்தின் துவக்க விழாவில், தயாரிப்பாளர் தனஞ்செயன் கிளாப் போர்டு அடித்து இயக்குநர் சசி, கேமராவை ஆன் செய்து படக்குழுவிற்கு தங்கள் வாழ்த்துக்களைத் […]

03/03/2025 Dinesh R
பைரதி ரணகல் – தமிழிலும் மலையாளத்திலும் | SunNXT சினிமா

பைரதி ரணகல் – தமிழிலும் மலையாளத்திலும் | SunNXT

கீதா பிக்சர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் கீதா சிவராஜ்குமார் தயாரிப்பில், இயக்குநர் நாரதன் இயக்கத்தில், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில், வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ஆக்ஷன் அதிரடி திரைப்படமான “பைரதி ரணகல்” படம், இப்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் SunNXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது. பிரம்மாண்ட வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ப்ரீக்குவலாக உருவான படம் தான் “பைரதி ரணகல்”. மஃப்டி படம் தான் தமிழில் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் “பத்து தல” படமாக வெளியானது என்பது […]

02/03/2025 Dinesh R
The Indian In Me விமர்சனம் சினிமா

The Indian In Me விமர்சனம்

இது, 28 நிமிடங்கள் கால அளவு கொண்ட ஓர் ஆங்கிலோ-இந்தியக் குறும்படமாகும். மரணப்படுக்கையில் இருக்கும் ரிச்சர்ட் எனும் ஆங்கிலோ-இந்தியர், தனது பேரனின் இந்திய மனைவியான சாந்தியிடம் மன்னிப்பு கேட்கிறார். சாந்தி பதறிப் போய், ‘ஏன் பப்பா? நீங்க என்னிடம் எப்பவும் அன்பாகத்தானே நடந்துக்கிட்டீங்க?’ எனக் கேட்கிறார். தன்னை எப்பொழுதும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதும் ரிச்சர்ட், “அது என் குற்றவுணர்ச்சியால் அப்படி நடந்து கொண்டேன்” என்கிறார் எண்பது வயது ரிச்சர்ட். இந்தக் கதையில், ரிச்சர்ட், […]

02/03/2025 Dinesh R
“முழுமையான ரொமான்ட்டிக் திரைப்படம்” – ரியோ ராஜ் | ஸ்வீட் ஹார்ட் சினிமா

“முழுமையான ரொமான்ட்டிக் திரைப்படம்” – ரியோ ராஜ் | ஸ்வீட் ஹார்ட்

YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார், “’ஜோ’ படத்தின் பணிகள் நடைபெற்ற தருணத்திலேயே ரியோ ராஜிடம் இப்படத்தின் கதையைச் சொல்லிவிட்டேன். அவரும் அடுத்த படம் இதுதான் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ‘ஜோ’ படம் ஹிட்டான பிறகு ஏராளமான தயாரிப்பு […]

02/03/2025 Dinesh R
கிங்ஸ்டன் – நம்ம ஊரு பாட்டி சொன்ன கதை சினிமா

கிங்ஸ்டன் – நம்ம ஊரு பாட்டி சொன்ன கதை

ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் வெற்றிமாறன், ”ஜீ.வி. பிரகாஷ் குமார் சோர்வே […]

02/03/2025 Dinesh R
கிங்ஸ்டன் – பேரலல் யுனிவெர்ஸ் என்றால் என்ன? சினிமா

கிங்ஸ்டன் – பேரலல் யுனிவெர்ஸ் என்றால் என்ன?

ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் […]

02/03/2025 Dinesh R
கூரன் விமர்சனம் சினிமா

கூரன் விமர்சனம்

கூரன் என்றால் கூர்மையான அறிவை உடையவன் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், இப்படத்தில் கூர்மையான அறிவைக் கொண்டுள்லதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது ஒரு பெண் நாயாகும். தன் குட்டியைக் காரில் மோதிக் கொல்லுபவனுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது ஜான்சி எனும் நாய். நாயின் அந்த வேதனையைப் புரிந்து, நாயின் சார்பாக வழக்காடுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். நாய்க்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் கதை. கொஞ்சம் நம்ப முடியாத கதை என்றாலும், திரைக்கதையின் மூலமாகப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதை, […]

01/03/2025 Dinesh R
அகத்தியா விமர்சனம் சினிமா

அகத்தியா விமர்சனம்

திருவண்ணாமலையைச் சேர்ந்த அகத்தியன், ஒரு படத்தில், முதல்முறையாகக் கலை இயக்குநராகப் பணிபுரிய ஒப்பந்தமாகிறார். அதற்காகப் பாண்டியில் ஒரு வீட்டில், சொந்த செலவில் கடன் வாங்கி செட் போட்டுவிடுகிறார். ஆனால், படப்பிடிப்பே நடக்காமல் அப்படம் நின்றுவிடுகிறது. வாங்கிய கடனை அடைக்கவேண்டும் என்பதற்காக அவ்வீட்டை ‘பேய் பங்களா’வாக மாற்றுகிறார். அமானுஷ்யமான முறையில் அதுவும் தடைப்படுகிறது. அந்தப் பங்களாவில் நிகழும் அமானுஷ்யத்திற்கும் தனக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது என்பதை உணர்கிறான் அகத்தியா. மேலும், இரத்தப் புற்றுநோயில் பாதிக்கப்பட்ட தன் தாயின் உடல்நலக் […]

28/02/2025 Dinesh R
சப்தம் விமர்சனம் சினிமா

சப்தம் விமர்சனம்

ஓர் அமானுஷ்ய சக்தி, சத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. அதனால் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள, அவ்வாமானுஷ்யத்தைப் புலனாய்வு செய்ய புலனுக்கெட்டாத (Paranormal) மர்மத்தைக் கண்டுபிடிக்க, மும்பையில் இருந்து ரூபன் வைத்தியலிங்கம் மூணாருக்கு வரவைக்கப்படுகிறார். அந்தச் சத்தத்தின் பின்னாலுள்ள மர்மத்திற்கான பதிலே இப்படத்தின் கதையோட்டம். ஈரம் படத்திற்குப் பிறகு, ஆதி, இசையமைப்பாளர் தமன், இயக்குநர் அறிவழகன் ஒன்றிணைந்துள்ளனர். நீரை மையமாகக் கொண்டு ஈரத்தில் கலக்கியவர்கள், இதில் சத்தத்தைத் தொட்டுள்ளனர். ஒலியைப் பயன்படுத்தியிருக்கும் விதத்தில், தொழில்நுட்ப ரீதியாக இப்படம் […]

28/02/2025 Dinesh R
சுழல் – தி வோர்டெக்ஸ் 2 விமர்சனம் OTT

சுழல் – தி வோர்டெக்ஸ் 2 விமர்சனம்

முதல் சீசனின் தொடர்ச்சியாக, கதிரும், ஐஸ்வர்யா ராஜேஷும் இத்தொடரில் இடம்பெறுகின்றனர். சக்கரவர்த்தியாக வரும் கதிரும், கொலை குற்றவாளி நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷும், நீதிமன்ற விசாரணையில் உள்ளனர். இவ்விருவர் சார்பாகவும், மக்கள் நல வழக்குகளை எடுத்து சமூக நீதிக்காகப் போராடும் வக்கீல் செல்லப்பா வாதாடுகிறார். ஆனால் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, அவரது பண்ணை வீட்டில் கொல்லப்படுகிறார் செல்லப்பா. அவரது வளர்ப்பு மகனான சக்கரை எனும் சக்கரவர்த்தி, அக்கொலையைப் புலனாய்வு செய்ய நியமிக்கப்படுகிறார். சிறைக்குள் இருந்தவாறே, சக்கரைக்கு […]

28/02/2025 Dinesh R
ஹாலிவுட் நிறுவனத்தைக் கைப்பற்றிய இந்திய கன்நெக்ட் மீடியா சினிமா

ஹாலிவுட் நிறுவனத்தைக் கைப்பற்றிய இந்திய கன்நெக்ட் மீடியா

இளையராஜா பயோபிக்கைத் தயாரிக்கும் கன்நெக்ட் மீடியா நிறுவனம், ஹாலிவுட் நிறுவனமான மாப் சீன் நிறுவனத்தைக் கைப்பற்றியது.அவதார், ட்யூன், பாஸ்ட் & ஃப்யூரியஸ், ஜுராசிக் வேர்ல்ட், பார்பி, மற்றும் ‘ஏ கம்ப்ளீட் அன்நோன்’ ஆகிய ஹாலிவுட் வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்த MOB SCENE நிறுவனத்தைக் கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம். ஆசியாவின் வேகமாக வளர்ந்து வரும் மீடியா மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான கன்நெக்ட் மீடியா, ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான மார்க்கெட்டிங் ஏஜென்சியான மாப் சீனை தற்போது […]

26/02/2025 Dinesh R
வீரவணக்கம் | தமிழக – கேரளத்தின் சகோதரத்துவத்தைச் சொல்லும் படம் சினிமா

வீரவணக்கம் | தமிழக – கேரளத்தின் சகோதரத்துவத்தைச் சொல்லும் படம்

பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனியும் பரத்தும் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு – கேரளாவின் சகோதரத்துவத்தையும், இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் ‘வீரவணக்கம்’ ஆகும். பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் எழுதி இயக்கியுள்ள வீரவணக்கத்தில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா மற்றும் 2000 க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். பிரபல புரட்சிப் பாடகியும் […]

26/02/2025 Dinesh R
மர்மர் – தமிழின் முதல் Found Footage திரைப்படம் சினிமா

மர்மர் – தமிழின் முதல் Found Footage திரைப்படம்

தமிழ்த் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) ஹாரர் திரைப்படம் எனும் சாதனையை மர்மர் படைத்திருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. மர்மர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மர்மர் படத்தின் சிறப்பு ஒப்பனையாளர் செல்டன், “இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார். மிகவும் சவாலாக இருந்தது. இந்தப் படத்தில் வரும் உண்மை கதாபாத்திரத்தை […]

25/02/2025 Dinesh R
தனம் | 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்து Others

தனம் | 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்து

விஜய் டிவியில், வெளிவரவுள்ள நெடுந்தொடர் “தனம்” ஆகும். ஆட்டோ ஓட்டும் பெண்ணை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரியலை விளம்பரப்படுத்தும் விதமாக, 50 பெண் ஓட்டுநர்களை அழைத்து, அவர்களைப் பாராட்டி விருந்தளித்துள்ளனர் படக்குழுவினர். ஒரு குடும்பத்தில் திருமணமாகி வரும் புதுப்பெண், எதிர்பாராவிதமாக கணவனை இழந்த பின், அந்த மொத்தக் குடும்பத்தையும், ஆட்டோ ஓட்டி காப்பாற்றுகிறாள். மொத்தக் குடும்பத்தின் சுமைகளையும் தன் தோளில் சுமக்கிறாள். ஆட்டோ ஓட்டும் தனத்தை மையப்படுத்தி, இந்த சீரியலின் கதை பயணிக்கிறது. தனம் கதாப்பாத்திரத்திரத்தில் […]

24/02/2025 Dinesh R
மர்மர் | இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் சினிமா

மர்மர் | இயக்குநர் ஹேம்நாத் நாராயணன்

தமிழ்த் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) ஹாரர் திரைப்படம் எனும் சாதனையை மர்மர் படைத்திருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. மர்மர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், “மர்மர் தமிழ்த் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம். இதைப் பற்றி கொஞ்சம் விளக்கிக் கூறுகிறேன். உதாரணத்திற்கு ஒரு குண்டுவெடிப்பு […]

24/02/2025 Dinesh R