32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4023 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 44)
நிரபராதியென அறிவிக்கப்பட்ட நிவின் பாலி அயல் சினிமா

நிரபராதியென அறிவிக்கப்பட்ட நிவின் பாலி

நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானதென்றும், அவர் நிரபராதியென்றும் தீர்ப்பளித்துள்ளனர். நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட நிவின் பாலி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முறையாக விடுவிக்கப்பட்டுள்ளார். […]

06/11/2024 Dinesh R
அமரன் விமர்சனம் இது புதிது

அமரன் விமர்சனம்

அமரன் என்றால் மரணமில்லாதவன் எனப் பொருள். வீரத்திற்காக அஷோக் சக்ரா விருது பெற்ற மேஜர் தெய்வத்திரு. முகுந்த் வரதராஜனை, தனது படத்தில் பாட்டுடைத் தலைவனாகயாக்கி, அமரனாக்கியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. ஆனால், படம் அமரத்துவம் எய்துவது இந்து ரெபேக்கா வர்கீஸாக நடித்திருக்கும் சாய் பல்லவியின் அதி அற்புதமான நடிப்பாலேயே! சின்ன சின்ன உணர்ச்சிகளையும், முகத்தில் அநாயாசமாகக் கொண்டு வந்து அமரனை ஒரு காதல் படமாக மாற்றிவிடுகிறார். படத்தின் முதற்பாதியின் கலகலப்பிற்கு உதவியுள்ளார் முகுந்த் வரதராஜனின் அம்மா கீதாவாக […]

01/11/2024 Dinesh R
ஆலன் விமர்சனம் இது புதிது

ஆலன் விமர்சனம்

ஆலன் என்பது சிவனின் நாமங்களில் ஒன்றாகும். காசியில் இருந்து கொண்டு தன்னை அறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தியாகுவைக் குறிக்கும் காரணப் பெயராக ஆலனைக் கொள்ளலாம். 3S பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு லோகோவே, சிவனின் ரூபங்களில் இருந்து சமஸ்கிருத ஓம் வடிவத்திற்கு மாறுகிறது. இறைவனைத் தன்னுள் தேடும் முயற்சியில் இருக்கும் வெற்றி, அதில் தோற்றாலும், அவரது தாத்தா விதைக்கும் எழுத்துக் கனவு மட்டும் சுடர் விட்டு எழுகிறது. மக்களோடு மக்களாய் வாழ காசியினின்று கிளம்பும் தியாகு, இருத்தலையும் இருத்தலின்மையையும் […]

19/10/2024 Dinesh R
SIR விமர்சனம் இது புதிது

SIR விமர்சனம்

வாத்தியார் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானத்தின் தாத்தாவும் அப்பாவும் ஆசிரியராக இருந்தவர்கள். கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும், கல்வியே எல்லாத் தளைகளில் இருந்தும் விடுதலை அளிக்கும் என உயர்ந்த லட்சியத்துடன் 1950 களில், ஒரு பள்ளியைத் தொடங்குகிறார் சிவஞானத்தின் தாத்தா. அவர் விட்ட வேலையைச் சிரமேற்கொண்டு ஆத்மார்த்தமாக ஆசிரியப் பணியைச் செய்கிறார் சிவஞானத்தின் அப்பா. உயர்நிலைப்பள்ளியாக உயர்த்த அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வியர்த்தமாகிறது. தந்தை மற்றும் தாத்தாவின் கனவை அறியாத சிவஞானம், ஊரை விட்டு மாற்றலாகிச் சென்றுவிட நினைக்கிறார். […]

18/10/2024 Dinesh R
வேட்டையன் விமர்சனம் இது புதிது

வேட்டையன் விமர்சனம்

“மன்னிக்கிறவன் மனுஷன். மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்.” – அன்னலட்சுமி, சின்ன கோளாறுபட்டி விரைவான நீதியை அளிக்கும் அவசரத்தில், நிரபராதியை என்கவுன்ட்டர் செய்து விடுகிறார் காவல்துறை கண்காணிப்பாளர் அதியன். நீதிபதி சத்யதேவால், கொலை செய்யப்பட்டவன் நிரபராதி எனத் தெரிந்ததும், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் அதியன். ரஜினியிசத்தை மிக கிரேஸ்ஃபுல்லாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார் த.செ.ஞானவேல். எனினும் ஜெயிலரின் நீட்டித்த பதிப்போ எனும் தோற்றத்தை எழுப்புகிறது. படத்தை ரசிக்கும்படியாக மாற்றுவது ‘பேட்டரி’ பேட்ரிக்காக நடித்திருக்கும் ஃபஹத் ஃபாசில் மட்டுமே! […]

12/10/2024 Dinesh R
சென்னையில் ஷரதோத்சவ் – இலையுதிர் கால திருவிழா 2024 இது புதிது

சென்னையில் ஷரதோத்சவ் – இலையுதிர் கால திருவிழா 2024

தென் மெட்ராஸ் கலாச்சார சங்கத்தின் (SMCA – South Madras Cultural Association) 46 ஆவது ஆண்டு இலையுதிர்கால விழாவான “ஷரதோத்சவ்”, அக்டோபர் 9 முதல் 13 வரை கொண்டாடப்படுகிறது. இதுவே சென்னையில் நிகழும் மிகப் பெரிய துர்கா பூஜை கொண்டாட்டமாகும். இந்த பிரம்மாண்டமான நிகழ்வை மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் தொடங்கி வைத்தார். SMCA இன் தலைவர் திரு. சுதீப் மித்ரா, “நாங்கள் துர்கா பூஜையை 46 ஆண்டுகளாகச் சென்னையில் கொண்டாடி வருகிறோம். […]

10/10/2024 Dinesh R
ஆலன் – ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை சினிமா

ஆலன் – ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ‘ஆலன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட, தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார். இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, ‘அருவி’ மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அறிமுக […]

07/10/2024 Dinesh R
நீல நிறச் சூரியன் விமர்சனம் சினிமா

நீல நிறச் சூரியன் விமர்சனம்

வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில், தகிப்பையும் தவிப்பையும் ஒரு கணமேனும் மனிதராகப்பட்ட ஒருவரும் அனுபவித்திருப்பார்கள். செய்யாத குற்றத்துக்குத் தண்டனை ஏற்கும் பொழுது, தனது உழைப்பைப் பிறர் திருடி ஆதாயம் அடையும் பொழுது, தகுதியற்றவர் முன் கைகட்டி நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் பொழுது என தகிப்பும் தவிப்பும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி ஏற்பட்டிருக்கும். அதில், உடலால் ஒரு பாலினமாகவும், மனதால் வேறு பாலினமாகவும் உணரும் ஒருவரது தகிப்பும் தவிப்பும் அடங்கும். ஒப்பீட்டளவில் இது மிகக் கொடுமையானது. அக்கொடுமை […]

05/10/2024 Dinesh R
SMCA | சென்னையில் பிரம்மாண்ட துர்கா பூஜை கொண்டாட்டம் சமூகம்

SMCA | சென்னையில் பிரம்மாண்ட துர்கா பூஜை கொண்டாட்டம்

மேற்கு வங்காளத்தைப் பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வசிப்பவர்கள் மிகப் பிரம்மாண்டமான முறையில் துர்கா பூஜையைக் கொண்டாடுகின்றனர். The Secret of religion lies not in theories but in practice; To be good and do good – that is the whole of religion. – Swami Vivekananda “சுவாமி விவேகானந்தரின் மேற்கோள்களை உண்மையாகவே உள்வாங்கி, இடையிடையே நடக்கும் பண்டிகைகளைத் தவிர, பொது அறக்கட்டளையாகப் பதிவுசெய்யப்பட்ட SMCA (South Madras Cultural […]

04/10/2024 Dinesh R
ஹிட்லர் விமர்சனம் இது புதிது

ஹிட்லர் விமர்சனம்

படைவீரன் (2018), வானம் கொட்டட்டும் (2020) ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் SA தனாவின் மூன்றாவது படம். ‘வானம் கொட்டட்டும்’ எனக் கதைக்குப் பொருந்தும் கவித்துவமான தலைப்பை வைத்தவர், இப்படத்திற்கு ‘ஹிட்லர்’ எனும் பொருந்தாத தலைப்பை வைத்திருக்கும் வாய்ப்புக் குறைவாகவுள்ளது. ‘பிச்சைக்காரன்’ எனும் எதிர் தலைப்பு ஈட்டிக் கொடுத்த வெற்றியினால் உந்தி, ‘சைத்தான் (2016)’, ‘எமன் (2016)’, ‘திமிரு பிடிச்சவன் (2018)’, ‘கொலைகாரன் (2019)’ என எதிர் தலைப்புகள் வைப்பதில் ஆர்வம் காட்டினார் விஜய் ஆண்டனி. அதன் […]

27/09/2024 Dinesh R
விஜய் சேதுபதி | பிக் பாஸ் சீசன் 8 – ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு Teaser

விஜய் சேதுபதி | பிக் பாஸ் சீசன் 8 – ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு

விஜய் டிவியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்குக் கோலாகலமாகத் துவங்குகிறது. சமீபத்தில் மிகப் புதுமையான முறையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில், மக்கள் முன்னிலையில் மக்கள் கைகளால் வெளியிடப்பட்ட இந்த பிக்பாஸ் சீசன் 8இன் அசத்தலான ப்ரோமோ, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ப்ரோமோவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் பற்றி, மக்கள் அறிவுரை சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டு, அசத்தலாகக் களமிறங்கும் விஜய் […]

24/09/2024 Dinesh R
தில் ராஜா – எந்தப் பிரச்சனை என்றாலும் எதிர்கொள்பவன் இது புதிது

தில் ராஜா – எந்தப் பிரச்சனை என்றாலும் எதிர்கொள்பவன்

கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம் “தில் ராஜா” ஆகும். வருகிற 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய அம்ரீஷ், “தில் ராஜா படத்தில் நான் நடித்த பாடல் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள், ஆனால் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை. படம் முடித்த பின்னர் ப்ரோமோஷனுக்கு மாஸாகப் […]

24/09/2024 Dinesh R
கடைசி உலகப்போர் விமர்சனம் இது புதிது

கடைசி உலகப்போர் விமர்சனம்

ஐ.நா.வில் இருந்து பிரியும் சீனாவும் ரஷ்யாவும், ‘ரிபப்ளிக் (O.N.O.R.)’ எனும் கூட்டமைப்பை உருவாக்கி, அமீரகம், இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம் முதலிய எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கிறது. ரிபப்ளிக்கில் இணையாத அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் மீது போர் தொடுக்கப்படுகிறது. இந்தியாவுடனான தொடர்பில் இருந்து தமிழ்நாடு பிரிக்கப்பட்டு அல்லலுகிறது. இலங்கையின் தனிப்படையினர் உதவியோடு, தமிழ்நாட்டை தன்வசத்திற்குக் கொண்டு வருகிறான் சீனன் ஒருவன். தமிழ்நாட்டு முதல்வர் நாசரை மிரட்டி தமிழ்நாட்டை ரிபப்ளிக்கில் சேர்த்துவிடுகிறான். நாயகன் தமிழ் எப்படித் திட்டமிட்டு […]

20/09/2024 Dinesh R
கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம் இது புதிது

கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்

மாமனிதன் படத்தின் நீட்சியாகவே உள்ளது. ஒரு ஆண், தன் குடும்பத்துக்காக எந்த எல்லைக்குச் செல்வான் என்று மீண்டுமொரு முறை அழுத்தமாகப் பதிந்துள்ளார் சீனு ராமசாமி. செல்லதுரையும், அவன் தங்கையும் நிராதரவாக ஆண்டிபட்டிக்கு வருகின்றனர். கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியசாமியின் ஆதரவில் வளர்கின்றனர். தன் தங்கைக்காகவே வாழுகிறான் செல்லதுரை. வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பமாக, செல்லதுரையின் தங்கை ஒருவனுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்; சிறு வயதில் தன்னை விட்டுச் சென்ற தாயைப் பார்க்கின்றான்; வேறொரு மணம் புரிந்து கொள்ளும் தந்தையும் அவனைத் […]

20/09/2024 Dinesh R
லப்பர் பந்து விமர்சனம் சினிமா

லப்பர் பந்து விமர்சனம்

வெற்றி என்பது இலக்குகளைத் தீர்மானித்து ஓடுவது அல்ல நான்கு பேருக்கு நன்மை பயக்கும் விதமான மாற்றத்துக்கு முன்னுரிமை தருவதென்ற மிக மெச்சூர்டான விஷயத்தைப் பேசியுள்ளது படம். கிரிக்கெட் மீதான ஈடுபாடு, ஈகோ, காதல், குடும்பம், உறவுகளுக்குள் உண்டான பிணைப்பு, ஈகோவைத் துறத்தல்,மென்னுணர்ச்சி (Sentiment), எமோஷன்ஸ், நட்பு, சாதி, சமூக நீதி என இப்படம் கலந்து கட்டி ஒரு பக்கா கமர்ஷியல் படமாக ரசிக்க வைக்கிறது. “கெத்து” என அழைக்கப்படும் 39 வயது நட்சத்திர பேட்ஸ்மேனை ஆஃப் சைடில் […]

20/09/2024 Dinesh R