32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4023 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 46)
Zee 5 இல் ரகு தாத்தா | செப்டம்பர் 13 முதல் OTT

Zee 5 இல் ரகு தாத்தா | செப்டம்பர் 13 முதல்

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ரகு தாத்தா திரைப்படம், இந்தித் திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப் பேசும் படைப்பாகும். சுமன் குமார் இயக்கத்தில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகுதாத்தா, ZEE5 இல், செப்டம்பர் 13 , 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது. ரகு தாத்தா தமிழிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும் காணக் கிடைக்கும். நடிகை கீர்த்தி சுரேஷ், “பெண் சுதந்திரத்தை நம்பும் கயல்விழியின் கதாபாத்திரத்தில் நடித்த ‘ரகுதாத்தா’ திரைப்படம் என் மனதுக்கு நெருக்கமான சிறப்பான பயணமாக […]

09/09/2024 Dinesh R
கோலி சோடா ரைசிங் | விஜய் மில்டன் | ட்ரெய்லர் OTT

கோலி சோடா ரைசிங் | விஜய் மில்டன் | ட்ரெய்லர்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘கோலி சோடா ரைசிங்’ வெப் சீரிஸினை, செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய சந்தையில் ஒரு டிரக்கில் உணவகத்தை அமைப்பதற்காகத் திரும்பும் நான்கு சிறுவர்களின் கதாபாத்திரங்களை ட்ரெய்லர் காட்டுகிறது. தற்போது புத்திசாலி இளைஞர்களாக வளர்ந்துள்ள சிறுவர்கள், இம்முறை வாடகை இடத்தில் வியாபாரம் செய்யாமல், சொந்தமாக ஒரு கடையை அமைக்கத் தீர்மானிக்கின்றனர். நடிகரும் இயக்குநருமான சேரன் முன்னாள் […]

09/09/2024 Dinesh R
ஷிவ ராஜ்குமார் வெளியிட்ட ‘சுப்ரமணியா’ போஸ்டர் அயல் சினிமா

ஷிவ ராஜ்குமார் வெளியிட்ட ‘சுப்ரமணியா’ போஸ்டர்

பிரபல வில்லன் நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக இயக்குநராகக் களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். விநாயக […]

09/09/2024 Dinesh R
Yours Sincerely RAAM | ரமேஷ் அரவிந்த் & கோல்டன் ஸ்டார் அயல் சினிமா

Yours Sincerely RAAM | ரமேஷ் அரவிந்த் & கோல்டன் ஸ்டார்

கன்னடத் திரையுலகில் ரசிகர்களின் அபிமானத்திற்குரிய நட்சத்திரங்களான ‘மிஸ்டர் பர்ஃபெக்ட்’ ரமேஷ் அரவிந்த் மற்றும் ‘கோல்டன் ஸ்டார்’ கணேஷ் ஆகிய இருவரும் முதன்முறையாக ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கௌரி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரூ கவுடா பாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கத்தில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. உற்சாகம் நிறைந்த இந்த விழாவில் நடிகையும் தொகுப்பாளருமான ஜானகி ராயலா கிளாப் அடிக்க, இயக்குநர் விக்யாத்தின் மனைவி சுவாதி விக்யாத் கேமராவை ஆன் செய்ய, முதல் காட்சி […]

09/09/2024 Dinesh R
அறிமுகமாகிறார் ஜூனியர் பாலய்யா | நந்தமூரி மோக்ஷக்ஞ்யா அயல் சினிமா

அறிமுகமாகிறார் ஜூனியர் பாலய்யா | நந்தமூரி மோக்ஷக்ஞ்யா

நந்தமூரி குடும்பத்தின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, நந்தமூரி தாரக ராமராவின் பேரனும், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமூரி மோக்ஷக்ஞ்யா, பரபரப்பான பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில், பிரம்மாண்ட திரைப்படத்தில் அறிமுகமாகிறார். பிரசாந்த் வர்மாவின், ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸின் (பிவிசியு) ஒரு பகுதியாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை, லெஜண்ட் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து, தனது SLV சினிமாஸின் சார்பில் சுதாகர் செருக்குரி மிகப்பெரிய அளவில் தயாரிக்கிறார். எம் தேஜஸ்வினி நந்தமூரி இப்படத்தை வழங்குகிறார். நமது புராணங்களில் உள்ள ஒரு […]

09/09/2024 Dinesh R
நிவின் பாலி | ஜோடிக்கப்பட்ட பாலியல் புகாருக்கு எதிராக வழக்கு அயல் சினிமா

நிவின் பாலி | ஜோடிக்கப்பட்ட பாலியல் புகாருக்கு எதிராக வழக்கு

நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன், அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த ‘பார்மா’ எனும் இணைய […]

09/09/2024 Dinesh R
தலைவெட்டியான் பாளையம் | செப்டம்பர் 20 தேதி முதல் OTT

தலைவெட்டியான் பாளையம் | செப்டம்பர் 20 தேதி முதல்

எட்டு அத்தியாயங்கள் அடங்கிய இந்தத் தொடர், அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி, பால் ராஜ் ஆகிய தலை சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். பால குமாரன் முருகேசன் எழுத்தில், நாகா இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடரை ‘தி வைரல் ஃபீவர் (TVF)’ நிறுவனம் தயாரித்திருக்கிறது. ‘தலைவெட்டியான் பாளையம்’, இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் செப்டம்பர் 20 அன்று […]

09/09/2024 Dinesh R
நானி | Hunter’s Command | HIT: The 3rd Case Teaser

நானி | Hunter’s Command | HIT: The 3rd Case

நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்களில், ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான, சூர்யா’ஸ் சாட்டர்டே திரைப்படம் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டராக வெற்றி பெற்றுள்ளது. ஹாட்ரிக் பிளாக்பஸ்டர்களைத் தந்திருக்கும் நானி, அடுத்ததாக அவரது 32 ஆவது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்குத் தயாராகிறார். நானியின் பாத்திரத்தைப் பற்றிய ஸ்னீக் பீக் மூலம், அவரது அடுத்த படமான ஹிட் கேஸ் 3 பட அறிவிப்பு, செப்டம்பர் 5 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. […]

09/09/2024 Dinesh R
“லப்பர் பந்து: ஆக்ரோஷ கிராமத்து இளைஞனாக நான்” – ஹரிஷ் கல்யாண் இது புதிது

“லப்பர் பந்து: ஆக்ரோஷ கிராமத்து இளைஞனாக நான்” – ஹரிஷ் கல்யாண்

பார்க்கிங் படத்தைப் போல் ஒரு அசத்தலான கதையம்சத்துடன் உருவாகியுள்ள ‘லப்பர் பந்து’ படத்தில் இதுவரை ஹரிஷ் கல்யாண் நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தைத் தமிழரசன் பச்சமுத்து இயக்கி உள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் லப்பர் பந்து படத்தைத் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாக அ. வெங்கடேஷ் இணைந்துள்ளார். இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்க கதாநாயகிகளாக ‘வதந்தி’ சீரிஸ் புகழ் சஞ்சனா, சுவாசிகா விஜய் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் காளி வெங்கட், […]

09/09/2024 Dinesh R
The GOAT விமர்சனம் இது புதிது

The GOAT விமர்சனம்

The Greatest Of All the Time – எல்லாக் காலத்திலும் மிகச் சிறந்தவர். Goat of the SATS (Special Anti Terrorism Squad) என்றழைக்கப்படும் நாயகன், பயங்கரவாதத்திற்கான எதிரான நடவடிக்கைகளில் மிகச் சிறப்பாகச் செயற்படுகிறார் எனப் பொருள் கொள்ளலாம். ‘இனி நடிக்கப் போவதில்லை’ என்ற விஜயின் முடிவிற்குப் பிறகு வந்த படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கு எகிறியிருந்தது. இரண்டு விஜய் இணைந்து கலக்கும் டீசர் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தது. […]

06/09/2024 Dinesh R
ஜீவன் நீயே | மார்டின் படப்பாடல் Songs

ஜீவன் நீயே | மார்டின் படப்பாடல்

மார்டின் படத்தின் முதல் சிங்கிளான “ஜீவன் நீயே” பாடல் வெளியாகியுள்ளது. ஆக்ரா, ஜோத்பூர், காஷ்மீர், பாதாமி போன்ற இந்தியாவின் மிக மிக முக்கியமான இடங்களில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், சத்யா ஹெக்டேயின் ஒளிப்பதிவில், கண்களுக்கு விருந்தாக உள்ளது. இம்ரான் சர்தாரியாவின் அற்புதமான நடன இயக்கத்தில், இந்தப் பாடலில், காதலின் சாரத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைப்பில், ஐந்து மொழிகளிலும் இசை ரசிகர்களை, மயக்கும்படி இந்தப் பாடல் அமைந்துள்ளது. பாடலாசிரியர் விவேகாவின் அருமையான […]

04/09/2024 Dinesh R
அத்வே – VFX பிரம்மாண்டத்தில் சுப்ரமண்யா அயல் சினிமா

அத்வே – VFX பிரம்மாண்டத்தில் சுப்ரமண்யா

பிரபல நடிகரும் டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாகக் களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி, அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். தயாரிப்பு நிறுவனம் “சுப்ரமண்யா” படத்தின் […]

04/09/2024 Dinesh R
GOAT – தேவரா | ஹம்சினி என்டர்டெயின்மென்ட் சினிமா

GOAT – தேவரா | ஹம்சினி என்டர்டெயின்மென்ட்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக அட்வான்ஸ் புக்கிங் உட்பட பல சாதனைகளைப் படைத்து வருகிறது. அமெரிக்காவின் முன்னணி பட வெளியீட்டு நிறுவனம் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட். தென்னிந்திய மொழியின் முன்னணி ஹீரோக்களின் பிரம்மாண்ட திரைப்படங்கள் அனைத்தையும் […]

03/09/2024 Dinesh R
மார்டின் | பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம் – 13 மொழிகளில் தயார் இது புதிது

மார்டின் | பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம் – 13 மொழிகளில் தயார்

வாசவி என்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் மார்டின் ஆகும். வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், […]

03/09/2024 Dinesh R
BRB | எதிர்காலத்தில் நடக்கும் பில்லா ரங்கா பாட்ஷா அயல் சினிமா

BRB | எதிர்காலத்தில் நடக்கும் பில்லா ரங்கா பாட்ஷா

பாட்ஷா கிச்சா சுதீப், மிகப் பெரிய பாராட்டையும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற விக்ராந்த் ரோணா படத்திற்குப் பிறகு இயக்குநர் அனுப் பண்டாரியுடன் மீண்டும் கைகோர்க்கிறார். இப்படத்தை பிளாக்பஸ்டர் ஹனுமான் படத் தயாரிப்பாளர்களான கே. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி ஆகியோர் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். கிச்சா சுதீப்பின் பிறந்தநாளில் ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு, “பில்லா ரங்கா பாட்ஷா” படத்தின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் கதையை அறிமுகப்படுத்தும், ஒரு […]

02/09/2024 Dinesh R