இது புதிதுபயோஸ்கோப் விமர்சனம்
பதினான்கு வருடங்களுக்கு முன் “வெங்காயம் (2011)” எனும் படத்தை இயக்கியிருந்தார் சங்ககிரி ராச்குமார். இயக்குநர் சேரனின் முயற்சியால், அப்படம் மீண்டும் 2012 இல் மறுபடியும் வெளியானது. வெங்காயம் படத்தை எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் எப்படி எடுத்தார் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார் ராச்குமார் சங்ககிரி. ஜோதிடத்தையும், நரபலி சடங்கையும் மிகக் காத்திரமாக சாடிய படம் வெங்காயம். அப்படத்தில் தன்னைத்தான் வில்லனாகச் சித்தரிக்கிறார்கள் என அறியும் செல்வாக்கான ஜோதிடர், ராச்குமாரின் படப்பிடிப்பை நிறுத்த முயற்சி செய்வதோடு, படம் வெளியாகக் கூடாதென்பதற்காகவும் […]














