முந்தைய நாளின் தொடர்ச்சியாக ஆரம்பித்தது நாள். நான் ஏன் இந்த வெற்றிக்குத் தகுதியானவன்? டாஸ்கில் லாஸ் தன் வாதத்தை எடுத்து வைத்தார்.
லாஸ்லியாவுக்கு ஆர்மி இருப்பது அவருக்கே தெரிந்திருக்கிறது. அதுவே அவருக்கு அதீத தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு. கவின் சொன்ன மாதிரி, தான் இரண்டு தடவை நாமினேட் ஆகியும் வெளியே போகவில்லை. ‘சோ அப்ப நான் சரியாத்தான் இருக்கேன்’ என விவாதம் செய்தார். சாக்ஷி எலிமினேட் ஆன நேரத்தில், லாஸ் – கவின் இரண்டு பேரும் நாமினேஷனில் இருந்தார்கள். மூன்று பேரில் சாக்ஷியை மக்கள் வெளியே அனுப்பினதால், அவங்க பக்கம் தப்பில்லை என முடிவுக்கு வந்து விட்டார். இதை லாஸ் யோசிக்க வாய்ப்பில்லை. கண்டிப்பாக கவினோட பேசித்தான் இது லாஸுக்குத் தெரிந்திருக்கும். அதனால் தான் கமல் சொல்லியும், ஹவுஸ்மேட்ஸ் சொல்லியும் எதையும் கேட்காமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரண்டு பேரும் அவர்கள் விருப்பத்திற்கு நடந்து கொள்கிறார்கள்.
இதில் ஒரு விஷயத்தை இரண்டு பேருமே மறந்து விட்டனர். சரி, தப்பு இதைத் தாண்டி மக்களுக்கு பிடித்தவர், பிடிக்காதவர்கள் என்று தான் யோசிக்கவேண்டும். சாக்ஷி வெளியே போன போது ஜீரோ ஓட்டு வாங்கிக் கொண்டு போகவில்லை. லாஸ், கவினை விடக் குறைவான ஓட்டு வாங்கினதால் வெளியே போனார். அடுத்த நாமினேஷனில் தர்ஷன், கவின், லாஸ் என மூன்று பேர் இருந்தால் தர்சன் தான் சேவ் ஆவார். ஏனெனில் மற்ற இரண்டு பேரையும் விட தர்ஷனைத்தான் அதிக பேருக்குப் பிடிக்கும். இந்த விஷயம் அவத்கள் எவிக்சனில் வெளியே போகும் போது தான் தெரியும்.
ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது என லாஸ்க்கு யாராவது சொன்னால் தேவலை. கையைக் காலை ஆட்டி ஆட்டி ஓர் இடத்தில் நிற்காமல் பேசிக் கொண்டே இருந்தார். மதுவோட சண்டையை இப்ப வரைக்கும் நினைவு வைத்துக் கொண்டு, அதையே திருப்பித் திருப்பிப் பேசிக் கொண்டிருப்பது எரிச்சல் தான் வருகிறது. தன் க்ளோஸ் ப்ரெண்ட் அபிராமி வெளியே போனதுக்கு முகின் மேல கோபமே இல்லை. ஆனால் ஆண்களை தப்பாகச் சொன்னதால், மது மேலே கோபம் கொண்டார். அப்பொழுது எதுவும் பேசாமல் இருந்ததால் சேரன் மேலும் கோபமாம். வாட் தி டக்கு!!
சேரப்பாவை நாமினேட் செய்துவிட்டு, உட்கார்ந்து அழுது கொண்டிருந்த போது, ‘இனி அடுத்த வாரங்களில் எங்களையும் நாமினேட் செய்யணும். அப்ப என்ன செய்வ?’ எனக் கேட்டதுக்கு, சுற்றி வளைத்து ஏதேதோ பேசி நேரடியாகப் பதிலே சொல்லவில்லை.
இங்கே இருக்கிற ஒவ்வொரு கேரக்டரும் நம் குடும்பத்தில் இருக்கற நபர்களைப் பிரதிபலிக்கும் என சேரன் உறுதியாக நம்புகிறார். கமலும் அடிக்கடி கொடுக்கும் விளக்கம் தான் இது. நம்ம ரியல் லைஃபில் ஒருத்தரே வேற வேற சூழ்நிலைகளில் வேற வேற கேரக்டராக வெளிப்படுவோம். ஓர் இடத்தில சின்ன குழந்தை மாதிரி அழுது அடம் பிடிக்கற நாமளே தான், இன்னொரு இடத்யில் மற்றவர்களுக்கு ஆறுதலாக அட்வைஸ் கொடுத்துக் கொண்டும் இருப்போம். தன்னோட பேச்சில் அதை அழகாக விளக்கினார் சேரன்.
மறுபடியும் மதுவோட பிரச்சினை பறரியே கேள்வி வந்தது. “ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கு. மதுவுக்கு பிடிவாதம் அதிகம். அதனால் அந்தச் சூழ்நிலையில் சொல்லாமல், வெளியே வந்த உடனே, ‘நீ செஞ்சது தப்பு’ன்னு நான் சொன்னது இங்க ரெக்கார்ட் ஆகிருக்கு. இதை எங்கிட்ட கேட்டே தெரிஞ்சுட்டிருக்கலாம்” என சேரன் கொடுத்த விளக்கமும் அட்டகாசம்.
இந்த கவின் மேல ஓரளவுக்கு வெறுப்பு இருந்தாலும், நேற்று தான் தான் அது உச்சத்துக்கு போய்விட்டது. கவின் ஒரு அசிஸ்டென்ட் இயக்குநராம். இத்தனை நாள் இதைப் பற்றிச் சொன்னதாக எனக்கு ஞாபகமே இல்லை. அதையும் சேரன் தான் சொல்லிக் காட்டினார்.
‘நீங்க ஒரு டைரக்டர்ன்னு ரெண்டு மூனு தடவை சொல்லிருக்கீங்க’ என கவினிடம் கேட்ட கேள்விக்கு, சாண்டி கவின் இரண்டு பேரையும் நேரடியாகத் தாக்கிக் கொடுத்த பதில் ஆசம். வந்த முதல் நாளில் இருந்து சாண்டிக்குச் சேரனைப் பிடிக்கவில்லை. கவின் அவர் கூடச் சேர்ந்ததுக்கு அப்புறம், இரண்டு பேரும் சேர்ந்து கிண்டல் செய்தார்கள் என நான் ஏற்கெனவே கணித்து எழுதியிருந்தேன். அது நேற்று சேரன் வாயால் உண்மையென வெளியே வந்துவிட்டது.
எவ்வளவு ஆற்றாமையோடு இருந்துள்ளாரென நேற்று பேசும் போது தான் தெரிந்தது. ‘நான் ரொம்ப ஹர்ட் ஆகிருக்கேன். ‘என்னை நேரடியா புறக்கணிச்சது ரொம்பக் கஷ்டமா இருந்தது. அதனால உங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் ஒரு டைரக்டர்ன்னு ரிமைண்ட் செய்ய வேண்டியிருந்தது. ஆனா வீட்டுல இருக்கற மத்தவங்க யாருமே இந்தப் புகாரை சொன்னதே கிடையாது’ என நம்பிக்கையோடு பேசினதும் கவினிடம் பதிலே இல்லை.
ஒரு அசிஸ்டென்ட் இயக்குநர், சேரன் மாதிரியான ஒரு லெஜெண்ட்ரி இயக்குநரோட 60 நாளாக ஒரே இடத்தில் இருக்கிற சந்தர்ப்பம் கிடைத்தும், அதை முழுதாக வேஸ்ட் பண்ணிக் கொண்டிருப்பாரென என்னால் நம்பவே முடியவில்லை. சேரனிடம் கற்றுக் கொள்ள ஒன்றுமே இல்லையா? அவரோட தாட் ப்ராசஸ் எப்படி இருக்கு, எப்படி இருந்தது, அவர் கற்றுக் கொண்ட விஷயங்கள், சந்தித்த பிரச்சினைகள், எப்படி வெளியே வந்தார், இப்படி எத்தனையோ விஷயங்களைத் தெரிந்து கொண்டு இருக்கலாமே! உண்மையிலேயே ஒரு பேஷனோட இருக்கிற்ந்வாக இருந்தால் அதை தான் செய்திருப்பார். ஏனெனில் கவின் வெளியே இருந்தால் சேரன் பக்கத்தில் உட்கார்ந்து பேசக்கூட முடியாது. எவ்வளவு பெரிய வாய்ப்பை மிஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
‘எங்கிட்ட வந்து அண்ணே, இந்த சீனை எப்படி எடுத்தீங்க? இதுக்கு எப்படி யோசிச்சீங்கன்னு ஒரு தடவை கூட நீ எங்கிட்ட வந்து கேக்கல’ என சேரன் சொன்ன போது அந்த வலியை நானும் உணர்ந்தேன். சேரனின் பார்வையில் இருந்து யோசித்தோம் என்றால், ஏற்கெனவே தோல்வியின் பிடியில் இருக்கும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒருவர், தனது திறமை புறக்கணிக்கப்படும் போது யாராக இருந்தாலும் ஆடிப் போய்விடுவார்கள். அதுவும் கவின், சாண்டி செய்த மாதிரி அப்பட்டமான புறக்கணிப்பும், அவமானப்படுத்துவதும் தொடர்ந்து நடந்தால் இந்நேரம் உடைந்து போயிருப்பார்கள்.
ஆனால் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொண்டு இதிலிருந்து இன்னும் வலிமையாகத் தன்னை மீட்டெடுத்திருக்கிறார் சேரன். இரு வாரங்களுக்கு முன் இருந்த சேரனுக்கும், நேற்று பேசிய சேரனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது கண்கூடு.
இப்போ இருக்கிற இளைய தலைமுறையிடம் ஒரு பிரச்சினை இருக்கு. நாம் லெஜண்ட்ஸ் என சொல்கிறவர்களை லெஃப்ட் ஹாண்ட்ல டீல் செய்கிறார்கால். யாரை வேண்டும் என்றால்ஜ்ம் கலாய்க்கலாம் என்கிற எண்ணம் தான் அதிகமாக இருக்கு. ‘அப்படி நீ என்ன செஞ்சுட்ட?’எனப் போகிற போக்கில் கேட்டுவிட்டு போகிறார்கள்.
‘எனக்கு சாரிங்கிற வார்த்தையில் நம்பிக்கையே இல்லை’ என ஆரம்பித்த வனிதாவைப் பார்த்து பரிதாபம் தான் வந்தது. ஆனால் நான் தப்பே செய்யலை என்றும், அப்படியே யாராவது சொன்னாலும், நான் ஏன் அப்படி செய்தேன் என அதற்குக் காரணங்களைச் சொல்லி தன் தப்பை நியாயப்படுத்துகின்றவங்களுக்கு ‘சாரி’ என்கிற வார்த்தை தேவையில்லை தானே! தான் யாரையுமே ஹர்ட் பண்ணியதில்லை எனச் சொல்கிறார் வனிதா. முற்றிலுமாக வேறு ஓர் உலகத்தில் இருக்கிறார்.
சேரன் ஏதோ கேட்க வர, மணி அடித்துவிட்டது.
நாள் 65
லான் ஏரியாவையே முழுவதுமாக மாற்றி வைத்திருந்தனர். ஒரே இரவில் இந்த மாற்றங்கள். கமல், கன்டஸ்டென்ட்கள், டெக்னிக்கல் டீம், கிரியேட்டிவ் டீம், வொர்க்கர்ஸ் என நாம் பார்க்கிற ஒரு மணி நேரத்துக்குப் பின்னாடி எத்தனை உழைப்பு இருக்கு? எவ்வளவு பெரிய வணிகம் இருக்கு என நினைத்துப் பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கு.
கிராமத்து செட் போட்டது. அந்த அட்மாஸ்ஃபியர் கொண்டு வர்றது எல்லாம் ஓக்கே. ஆனால் கிராமத்யில் இருக்கிறவர்கள் இப்படித்தான் இருப்பாங்க, அவங்க கஷ்டப்படறாங்க என ஓவராக ரொமான்டிசைஸ் பண்ணி ஜல்லி அடிக்கறது தான் எரிச்சலாக இருக்கு.
பொம்மலாட்டக் கலைஞரை அறிமுகம் செய்தது; அவரின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது. பயிற்சி கொடுத்த வரைக்கும் விஜய் டிவிக்கு ஒரு ஷொட்டு கொடுக்கலாம்.
ஆனால் ஹவுஸ்மேட்ஸ் அதைச் செய்வாங்க எனச் சொன்னதுக்கு ஒரு குட்டு. இருந்தும் சாண்டி டீம் அதைச் சிறப்பாகச் செய்தார்கள்.
இன்றும் அதே டாஸ்க் தான் போல! நம்மை வனிதா தான் காப்பாற்ற வேண்டும்.