அயல் சினிமா

நெப்போலியன் விமர்சனம்
நெப்போலியனின் மொத்த வாழ்க்கையையும் மூன்று வார்த்தையில் அடக்கிவிடலாம். படம் முடியும்பொழுது, அவர் இறக்கும் முன் கடைசியாக உதிர்த்த வார்த்தைகளைத் திரையில் காட்டுகின்றனர். அவை, ஃபிரான்ஸ், படை (Army), ஜோசஃபின் ஆகும். அவர் மனதிற்கு மிகவும் நெருக்கமான இம்மூன்றும் தான் நெப்போலியனின் வாழ்க்கையும், இந்தப் படத்தின் திரைக்கதையும் ஆகும்.
இப்படம், நெப்போலியனை ஒரு காவிய நாயகனாகக் கொண்டாடவில்லை. மாறாக, அவரை ஒரு சக மனிதராகத் திரையில் முன்னிறுத்தி, ரிட்லி ஸ்காட் ஒரு காவிய படைப்பைக் கொடுத்துள்ளார். பிரபலமான ஆங்கிலக் கவிஞரான பைரான் பிரபு, நெப்போலியனை ஒரு ரொமான்ட்டிக் நாயகனாகவும், தனிமையில் சிக்கிய, இடருக்கு உள்ளான குறைப்பாடுள்ள மேதைமையாகப் பார்த்தார். கிட்டத்தட்ட ரிட்லி ஸ்காட்டின் இப்படமும் அதையே பிரதிபலிக்கிறது. போர்க்களத்தில் இருந்து, அவர் தன் மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்கள் மிகப் பிரபலம். போர்க்களத்தில், ...

தி மார்வெல்ஸ் விமர்சனம்
லிட்டில் வுட்ஸ் (2018), கேண்டிமேன் (2021) ஆகிய படங்களை இயக்கிய நியா டகோஸ்டாவின் மூன்றாவது படம், ‘தி மார்வெல்ஸ்’ ஆகும். நியா, மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸின் முதல் கறுப்பினப் பெண் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கேற்றாற்போல், படத்தில் மூன்று பெண் சூப்பர் ஹீரோக்கள் என்பது இன்னொரு சிறப்பம்சம்.
சூப்பர் ஹீரோ படமென்றால், ஒரு பலமான சூப்பர் வில்லன் வேண்டும். ஆனால் அதி சூப்பர் வில்லனான தானோஸைத் தடுக்க, அத்தனை சூப்பர் ஹீரோக்களும் இணைய வேண்டியதாகி இருந்தது. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் முடிவில், தானோஸ் ஒரு புன்னகையுடன், ‘என்னை விட சூப்பர் வில்லன் யாரிருக்கா?’ என ஒரு சொடுக்கில், மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் படங்களுக்கே உரிய கலகலப்பையும் சுவாரசியத்தையும் தன்னுடனேயே கொண்டு சென்றுவிட்டார். அதற்குப் பின்னான மார்வெலின் படங்கள், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ரகமாக உள்ளது. இணை பிரபஞ்சம், பன்னண்டம்,...

ஸ்கந்தா – தி அட்டாக்கர் விமர்சனம்
தலைப்பு வைப்பது ஒரு கலை. சிலர், தலைப்பில் கதைக் கருவைத் தொட்டுச் செல்வார்கள்; சிலர், முழுக்கதையையும் உணர்த்துவார்கள்; சிலர், சம்பந்தமே இல்லாமல் என்னத்தையாவது தலைப்பென வைப்பார்கள். படத்தின் விமர்சனத்தையே தலைப்பாக்கும் தைரியம், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 'சிம்ஹா', 'லெஜண்ட்', 'அகண்டா' முதலிய படங்களை இயக்கிய ஆக்ஷன் இயக்குநர் போயபட்டி ஸ்ரீனுவிற்கே உண்டு. படம், பார்வையாளர்களைக் கிஞ்சித்தும் கருணையின்றிச் சாவடி அடிக்கிறது. அதை நேர்மையாகத் தலைப்பிலேயே சுட்டிக் காட்டி, நேர்மை என்றால் 'ஹமாம்' சவர்க்காரம் மட்டுமில்லை, தானும் தானென உலகிற்கு எடுத்தியம்பியுள்ளார் ஸ்ரீனு.
இரண்டு வில்லன்களின் அறிமுகம் காட்டப்பட்டவுடன், ஆந்திரக் காரத்துடன் முழுச் சாப்பாடு விருந்து தயாரென நினைக்கையில், அது தொடங்குகிறது. அது என்றால் படத்தின் 'அட்டாக்' வெர்ஷன். ரெகுலராக ஜிம்முக்குப் போய் நன்றாக உடலை வளர்த்து வைத்திருக்கும் ஒரு...

மெகா157 – பிரம்மாண்ட ஃபேன்டஸி திரைப்படம்
தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைத் தனது ‘பிம்பிசாரா’ திரைப்படம் மூலம் பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் வசிஷ்டா இயக்குகிறார். UV கிரியேஷன்ஸின் வெற்றிகரமான பேனரின் கீழ் வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் மிகப் பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் #Mega157 திரைப்படம், சிரஞ்சீவியின் கேரியரில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்கும்.
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் மெகா மாஸ் யுனிவ...

இன்சிடியஸ்: தி ரெட் டோர் விமர்சனம்
இன்சிடியஸ் என்றால் கண்ணுக்குப் புலப்படாமல் பரவித் தீங்கு விளைவிக்கும் எனப் பொருள் கொள்ளலாம்.
இன்சிடியஸ் படத்தொடரில் மொத்தம் நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளன. ஐந்தாவது பாகமான இப்படம், 2011 இலும், 2013 இலும் வெளிவந்த முதலிரண்டு படங்களின் தொடர்ச்சியாகும். டால்டன் லாம்பேர்ட் எனும் சிறுவனுக்கு இயற்கையாகவே தன் ஸ்தூல உடலில் (Physical body) இருந்து சூட்சும உடலைப் (Astral body) பிரித்து, சூட்சுமப் பயணம் (Astral projection) வல்லமை இருக்கும். அப்படி அவன் தனது 10 ஆவது வயதில் சூட்சுமப் பயணம் மேற்கொள்ளும் பொழுது, சிவப்புக் கதவின் பின்னாலிருக்கும் தீய ஆவிகள் நிரம்பிய The Further எனும் இருண்மை வெளியில் சிக்கிக் கொள்கிறான் டால்டன். அவனது ஸ்தூல உடலைத் தீய சக்திகள் ஆக்கிரமிக்க முயல்கின்றனர். முதல் பாகத்தில், கோமாவில் இருக்கும் டால்டனுக்காக அவனது தந்தை ஜோஷ் லாம்பேர்ட் சூட்சுமப் பயணம் மேற்கொண்டு, இருண்மை வெளியி...

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ஏன் போர்ஸ்சி 911 கார்?
ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் பட இயக்குநர் ஸ்டீவன் கேப்பல் ஜூனியரைப் பெரு நாட்டில் படப்பிடிப்பின் போது சந்தித்து, ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தொடரின் முந்தைய இயக்குநரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான மைக்கேல் பே, ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளார்.
“ரோபோட்களின் எண்ணிக்கையை அதிகமாக்காதே! ஏனெனில் ரோபாட்களின் எண்ணிக்கை அதிகமானால் சமாளிக்க முடியாது. ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ரோபோட்களின் மீது கவனம் செலுத்துமாறு சொன்னார் மைக்கேல் பே” என்றார் இயக்குநர் ஸ்டீவன் கேப்பல் ஜூனியர். அப்படியும், புலி வடிவில் வரும் மேக்ஸிமல்ஸ் என்ன மாதிரியான ஸ்டன்ட்டில் ஈடுபட்டது என்ற குழப்பம் எழாமலில்லை.
‘ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ்’ படத்தில் வரும் அசத்தலான ஆட்டோபாட்டான மைரேஜை, முதலில் ஃபெராரி காராக வடிவமைக்கும் யோசனை இருந்தாகச் சொல்கிறார் தயாரிப்பாளர் மார்க் வஹ்ராடியன். பிறகு லம்போர்கினியாக வடிவம...

தி பிளாஷ் விமர்சனம்
டிசி (DC) என்றால் டார்க் காமிக்ஸ் என்றொரு பொதுவான அபிப்ராயம் உலகளாவில் நிலவியது. வொண்டர் வுமன் (2017), அக்வா மேன் (2018), ஷசாம் (2018) முதலிய படங்களின் மூலம் தங்களுக்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் போல் கலகலப்பான கொண்டாட்டத்தை அளிக்கக்கூடிய படம் எடுக்க முடியும் என நிரூபித்தனர். ‘தி பிளாஷ்’ படமும் அத்தகைய கொண்டாட்டத்திற்கு உறுதியளிக்கிறது.
பேரி ஆலன், ஒளியின் வேகத்தில் பயணிக்கும் தனது சக்தியைப் பயன்படுத்தி கடந்த காலத்திற்குள் செல்லமுடியுமென தற்செயலாகக் கண்டுபிடிக்கிறார். கடந்த காலத்திற்குள் சென்று, தனது தாயின் மரணத்தைத் தடுக்க முனைகிறார் பேரி ஆலன். ‘அது நடைமுறை சாத்தியமில்லா ஒன்று’ என பேட் மேன் எச்சரித்தும், ஸ்பீட் ஃபோர்ஸ் மூலமாகக் கடந்த காலத்திற்குள் விபரீதப் பயணத்தை மேற்கொள்கிறார் பேரி ஆலன்.
கடந்த காலத்தை மாற்றிவிட்டு, நிகழ்காலத்திற்கு வரும் வேளையில், ஸ்பீட் ஃபோர்ஸ்க்குள் நுழையும் ...

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் விமர்சனம்
தங்கள் உருவத்தை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்ட அதிநவீன ரோபாட்ஸ்க்கு ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் (உருமாறிகள்) எனப் பெயர். வாகனங்களாக உருவெடுக்கும் உருமாறிகளுக்குப் பெயர் ஆட்டோபாட்ஸ். இந்தப் படத்தொடரின், நாயகர்கள் இந்த ஆட்டோபாட்ஸே! இந்தப் பாகத்தில், உலகைக் காக்க ஆட்டோபாட்ஸ்களுடன் இணையும் புது உருமாறிகளாக மேக்ஸிமல்ஸ் அறிமுகமாகின்றனர். கொரில்லா, புலி, பறவை போன்ற மிருகங்களாக மாறும் ரோபாட்கள் அவை.
கிரகங்களை உண்டு கொழிக்கும் இருள் கடவுளான யுனிக்ரான், மேக்ஸிமல்ஸின் கிரகத்தை அழித்து உண்கிறது. யுனிக்ரான் கையில், ‘ட்ரான்ஸ்வார்ப்’ எனும் நவீன தொழில்நுட்பத் திறவுகோல் கிடைக்கக் கூடாதென மேக்ஸிமல்ஸ் அதை எடுத்துக் கொண்டு மறைகின்றனர். ட்ரான்ஸ்வார்ப் கிடைத்தால், காலத்தையும் தூரத்தையும் வளைத்து, பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும், எப்பொழுதும் வேண்டுமானாலும் செல்லக்கூடும்.
மேக்ஸிமல்ஸ், ட்ரான்ஸ்வார்பைப் பூமியில் கொண்டு ...

ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம்
(Universe – பிரபஞ்சம்; Multi-Verse – பன்னண்டம்; Spider-Verse – ஸ்பைடர் அண்டம்)
பன்னண்டத்தின் வெவ்வேறு பிரபஞ்சங்களில் இருந்து வரும் ஸ்பைடர் - மேன்களும், ஸ்பைடர் - வுமன்களும், தத்துக்குட்டி ஸ்பைடர்-மேனான மைல்ஸ் மொரால்ஸுடன் இணைந்து, வில்லன் கிங்பின்னின் கொலைடரை அழிப்பது, இத்தொடரின் முதற்பாகமான ‘ஸ்பைடர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்தின் கதையாகும்.
இந்தப் பாகத்தில், தன்னைக் காண வரும் க்வென் ஸ்டேசியுடன் இணைந்து பன்னண்டத்தின் பல பிராபஞ்சங்களுக்குள் ஊடுருவுகிறார் மைல்ஸ் மொரால்ஸ். பன்னண்டத்திலுள்ள பல ஸ்பைடர்-மேன்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஸ்பைடர் சொசைட்டிக்கும் செல்கிறார் மைல்ஸ் மொரால்ஸ். போன பாகத்தில், அழகான சின்னஞ்சிறு பன்றி ஸ்பைடர்-மேன் பூமிக்கு வரும். ஆனால், ஸ்பைடர் சொசைட்டியிலோ, ஆச்சரியமூட்டும் எண்ணிலடங்கா ஸ்பைடர்-மேன்கள் உள்ளனர். டைனோசர் ஸ்பைடர்-மேன். பூனை ஸ்பைடர்-மேன், குதிரை வ...

இண்டியானா ஜோன்ஸின் கடைசிப் பாகம்
ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான படத்தொடரின் இறுதிப் பாகமான ‘இன்ஸ்டால்மென்ட்டான ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ படம், அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் வெளியாகிறது.
புகழ்பெற்ற ஹீரோ ஹாரிசன் ஃபோர்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளராகத் திரும்புகிறார். பெரிய திரையில் அதிரடியான சாகசத்தைக் காணத் தயாராகுங்கள்.The man, the myth, the legend. Harrison Ford is back in and as #IndianaJones for one final adventure.#IndianaJones and the Dial of Destiny releases only in cinemas June 29 in English, Hindi, Tamil & Telugu. pic.twitter.com/a7sHCwD9xy
— Walt Disney Studios India (@DisneyStudiosIN) June 2, 2023This is what you've been waiting for India! Brace yourselves for one last adve...

“சொதப்பிடாத கரணு!” – ஸ்பைடர் மேன் ரசிகர்களால் மிரட்டப்பட்ட நடிகர்
ஒன்பது இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது ‘ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ திரைப்படம்.
இந்திய ஸ்பைடர் மேனான பவித்ர் பிரபாகருக்கு, நகைச்சுவை பாத்திரங்களில் தோன்றும் இந்திய-அமெரிக்க நடிகரான கரண் சோனி குரல் கொடுத்துள்ளார். மார்வெல் என்டர்டெயின்மென்ட் படங்களான டெட்பூல் (2016), டெட்பூல் 2 (2018) ஆகியவற்றில் டோபிண்டர் எனும் பாத்திரத்தில் நடித்திருப்பார். அத்தொடரின் அடுத்த பாகமான டெட்பூல் 3 (2024) படத்திலும் டோபிண்டர் பாத்திரத்தில் கரண் சோனி வருகிறார் என்பது குறிப்பித்தக்கது.
பவித்ர் பிரபாகருக்குக் குரல் கொடுத்த அனுபவத்தினைப் பகிர்ந்த கரண் சோனி, “ஒன்பது இந்திய மொழிகளில் ஸ்பைடர்-மேன் படம் டப் செய்யப்பட்டுள்ளது என்பது ரொம்பவே மகிழ்ச்சியைத் தருகிறது. ஏனெனில் நான் இந்தியாவில் வளர்ந்தவன். ஸ்பைடர்-மேன் மீதான இந்தியர்களின் காதலை நன்கு அறிவேன். இந்திய ஸ்பைடர் மேனுக்கு நான் குரல் தருகிறேன் ...

ஏலியன்ஸ் 2042 விமர்சனம்
பூமியைத் தாக்கி, அழித்து, தண்ணீரை உறிஞ்சும் ஆக்ரோஷமான பவர் ஃபுல்லான வேற்றுக்கிரகவாசிகளிடம் இருந்து பூமியைக் காப்பாற்றுகிறது சீனப்படை. எத்தனை வருடம்தான் அமெரிக்கர்களே உலகைக் காப்பாற்றுவார்கள்?
‘ஏலியன்’ எனும் படத்தை 1979இல் ரிட்லி ஸ்காட் இயக்கியிருந்தார். அதன் அடுத்த பாகத்தை, அவதார் படப்புகழ் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 1986 இல் ‘ஏலியன்ஸ்’ என்ற படத்தை எடுத்திருந்தார். ‘ஏலியன்ஸ் 3 (1992)’, ‘ஏலியன் ரீசரக்ஷன் (1997)’, ‘ப்ரோமிதியஸ் (2012)’, ‘ஏலியன் கோவெனன்ட் (2017)’ என படங்கள் வந்தன. அதில்லாமல், ‘ஏலியன் Vs பிரிடேட்டேர் (2004)’, ‘ஏலியன்ஸ் Vs பிரிடேட்டேர்: ரெக்வியம் (2007)’ என ஏலியன்ஸ்களை முன்னிலைப்படுத்தி மேலும் ஒரு தொடர் உருவானது.
நானூறு கோடி ரூபாயில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். எத்தனை முறை சுட்டாலும், இறக்காதவைகள். மூளையே தலையாக, அதில் ஏகத்திற்குக் கண்களும், வாயும் உடைய வினோதமான ஜந்துக்களாய...

பவித்ர் பிரபாகர் – சிலந்தியால் கடிப்படாத இந்திய ஸ்பைடர் மேன்
உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் ‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்திய ஸ்பைடர் மேனைக் காணும் ஆவலில் இந்திய ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்லனர். இப்படத்தில் முதல் இந்திய ஸ்பைடர் மேன் பவித்ர் பிரபாகர் அறிமுகமாகிறார். மேலும் அவருக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குரல் கொடுக்கிறார் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில்.
ஸ்பைடர் மேனின் அசல் இந்தியப் பதிப்பை, ஷரத் தேவராஜன், சுரேஷ் சீதாராமன், ஜீவன் ஜே. காங் ஆகியோரால் ‘ஸ்பைடர் மேன்: இந்தியா காமிக் புத்தக’த்தில் ஜனவரி 2005 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்திய ஸ்பைடர் மேன் முதல் முறையாகப் பெரிய திரையில் தோன்றுகிறார்.
மல்டிவெர்ஸில், பவித்ர் பிரபாகர் மற்ற ஸ்பைடர் மேன்களில் இருந்து எப்படி வித்தியாசமானவர் என்பதைத் தெளிவுப்படுத்தினார் இயக்குநர் கெம்ப் பவர்ஸ். அவர், “பவித்ரின் சக்திகள் மந்திரத்தி...

ஃபாஸ்ட் X விமர்சனம்
“குடும்பம் தான் எல்லாம்” எனும் இப்படத் தொடரில் வரும் வசனங்கள், மற்ற படங்களில் வரும் பாத்திரங்கள் ரெஃபரென்ஸாகப் பயன்படுத்தும் அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தந்தையின் மரணத்திற்காகப் பழிவாங்க நினைக்கும் வில்லன் டான்டே, ‘உனக்குக் குடும்பம்தானே எல்லாம்!’ என டொமினிக்கின் குடும்பத்தை நிர்மூலமாக்கத் திட்டங்கள் தீட்டுகிறார். அதற்காக ஒரு சதித்திட்டத்தைத் தீட்டி, ஏஜென்சி உதவி கேட்பதாக நம்ப வைத்து, ரோமில் நடக்கும் வெடி விபத்துக்கு டொமினிக்கின் குழுவைப் பொறுப்பாளியாக்கி விடுகிறார் டான்டே. ஏஜென்சி, டொமினிக்கையும் அவரது குழுவையும் கைது செய்ய உலகம் முழுக்கத் தேட, டான்டேவைத் தேடிச் செல்கிறார் டொமினிக்.
டான்டேவிற்கு, டொமினிக்கின் மகன் லிட்டில் B இருக்கும் இடம் தெரிந்துவிட, அச்சிறுவனைக் கொல்ல விரைகிறார் டான்டே. டொமினிக்கால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை.
படம் முழுக...



