
“விக்ரம்: 100% அளிக்கும் பர்ஃபெக்ஷனிஸ்ட்” – அஜய் ஞானமுத்து | கோப்ரா
‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 'கோப்ரா' படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் மற்றும் அவரது குழுவினர் மேடையில் பாடி, படத்தின் பாடல்களை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை உற்சாகமடையச் செய்தனர்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து, “நான் ‘ஏழாம் அறிவு’ படத்தில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றியபோது, அதன் தயாரிப்பாளரான உதயநிதி அவர்களிடமிருந்து தான், முதன் முதலில் ஊதியம் பெற்றேன். தற்போது ‘கோப்ரா’ படத்தை அவர் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தில் நாயகனான சீயான் விக்ரம் அவர்களைச் சந்தித்து கதையை விவரித்த போது, மௌனமாகக் கேட்டார். படப்பிடிப்புத் தளத்தில் நான்...















