32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 141 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 141)
பத்ரி நாராயணனின் மாடி இசைக் கச்சேரி சினிமா

பத்ரி நாராயணனின் மாடி இசைக் கச்சேரி

சுதந்திரமான இசைக்கலைஞரும் ஒலி வடிவமைப்பாளரான பத்ரி நாராயணனின் எண்ணத்தில் உதித்த புதுமையான இசை முயற்சிதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி. அது என்ன மொட்டை மாடி இசைக் கச்சேரி? அதாவது மொட்டை மாடியில் சுமார் இருபது முப்பது இசைக் கலைஞர்களும் பாடகர்களும் ஒன்றிணைந்து பாடுவதுதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி. விளையாட்டுத்தனமாகச் சாதாரணமாகத் தொடங்கிய இந்த இசை ஆர்வலர்களின் புதிய முயற்சி, இன்று விஸ்வரூபமெடுத்து மாடிட்டோரியம் எப்.டி.எப்.எஸ். என்று வளர்ந்திருக்கிறது. தரமாக நிர்வகிக்கப்படும் அரங்கம், உலகத் தரம் […]

29/08/2019 Dinesh R
சல்மான் கான் – நட்புக்குத் தோள் கொடுத்த பயில்வான் சினிமா

சல்மான் கான் – நட்புக்குத் தோள் கொடுத்த பயில்வான்

பாலிவுட்டின் பேரரசன் சல்மான் கான் கிச்சா சுதீப்பின் பயில்வான் படத்தின் விளம்பரத்திற்குத் தோள் கொடுத்துள்ளார். பயில்வான் படத்தின் பாக்ஸர் கதாபாத்திர லுக்கை, தனது சுல்தான் படத்து கதாபாத்திர போஸைத் தந்து பயில்வான் படத்தைப் பிரபலப்படுத்தியுள்ளார் சல்மான் கான். சல்மான் கானுடன் தபாங் 3 படத்தில் திரையில் இணைந்து நடித்து வரும் கிச்சா சுதீப் இது பற்றிக் கூறியபோது, “சல்மான் கானின் இந்த நட்பு ரீதியிலான, தன்னலமற்ற அன்பு விலைமதிப்பற்றது. அவர் “பயில்வான்” படத்தைப் பிரபலப்படுத்தியது எங்களுக்கு மிகுந்த […]

28/08/2019 Dinesh R
மல்லி – ராஜா ராணி ஃபேன்டசி படம் சினிமா

மல்லி – ராஜா ராணி ஃபேன்டசி படம்

முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க, ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் ‘மல்லி’. ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மற்றும் டெலிஃபோன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு இவர்களுடன் வில்லனாக JVR நடித்துள்ளார். “பெற்றோரின் காதல் எதிர்ப்பிற்குப் பயந்து வீட்டை விட்டு ஓடிவரும் காதல் ஜோடி ஒரு காட்டு பங்களாவில் தங்குகிறார்கள். அவர்களுக்கு ஊரில் இருந்த நண்பர்கள் மூன்று பேர் அங்கு வந்து உதவி செய்து அவர்களை […]

28/08/2019 Dinesh R
“1000 கோடி சினிமா வர்த்தகம் முடக்கம்” – ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம் சினிமா

“1000 கோடி சினிமா வர்த்தகம் முடக்கம்” – ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்

‘தண்டகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ல்இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “சினிமா இன்று எப்படி இருக்கிறது? இன்று ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமமாக இருக்கிறது? அதை வெளியிடுவது எவ்வளவு சிரமமாக இருக்கிறது? இன்று எல்லாப் படங்களும் வெளியிட முடிகிறதா? பல புதிய பெரிய படங்கள் வெளியாகின்றன. சிறிய படங்கள் வெளியாகின்றன. வசூல் தான் வரமாட்டேன் என்கிறது. அண்ணா, கலைஞர், புரட்சித்தலைவர், அம்மா என்று பல சினிமா ஆளுமைகள் இருந்த துறை இது. […]

27/08/2019 Dinesh R
‘செளந்தர்யா: ஒரு அண்ணனின் நினைவுகள்’ – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சினிமா

‘செளந்தர்யா: ஒரு அண்ணனின் நினைவுகள்’ – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

‘தண்டகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், மேகா பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா, நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “இங்கே இயக்குநரைப் பற்றி நடிகை தீபா பேசும் போது அப்பா என்று அழைத்தார். அதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. உலகம் சினிமாவைப் பற்றி தவறாகப் பேசும் போது ஒரு […]

27/08/2019 Dinesh R
கோலா – காவல்துறை அதிகாரியின் ‘போதை தவிர்’ சினிமா

கோலா – காவல்துறை அதிகாரியின் ‘போதை தவிர்’

மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலா. ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மோத்தி.பா  எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது, விழாவில் பேசிய ஸ்டன்ட் மாஸ்டர்  ஜாக்குவார் தங்கம், “கோலா படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மோத்தி.பா அவர்களுக்கு மிகவும் நன்றி. ஏன் என்றால் அவர் தன் படத்தில் போதையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை கோலா படத்தில் சொல்லியிருக்கிறார். இந்தக் கஞ்சா தண்ணி போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவோர்கள் தான் […]

25/08/2019 Dinesh R
பயில்வான் – டீசர் Teaser

பயில்வான் – டீசர்

கிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின் செல்லப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் கிச்சா சுதீப் குஸ்தி வீரராக எதிரிகளை வேட்டையாடி மிரட்டுகிறார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனான திகழ்ந்த சுனில் ஷட்டி இப்படத்தில் சுதீப்பின் பயிற்சியாளராக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளை, ஸ்டன்ட் மாஸ்டர்கள் ராம்-லக்ஸ்மன், Dr.ரவி வெர்மா, லார்னல் ச்டோவல் (பாக்சிங்), A. விஜய்(குஸ்தி) ஆகியோர் இயக்கியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12-ஆம் […]

25/08/2019 Dinesh R
மெய் விமர்சனம் சினிமா

மெய் விமர்சனம்

மெய் – உடல். மனித உடலுறுப்புகளை இல்லீகலாக மருத்துவச் சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படுவதை மையப்படுத்திய மெடிக்கல் க்ரைம் வகை படம். அமெரிக்க மருத்துவரான அபினவ், தாயின் இழப்பை மறக்க இந்தியா வருகிறார். சென்னையில் நடக்கும் உடலுறுப்புக் குற்றக் குழுவின் வலையில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. நாயகனான நிக்கி சுந்தரம், டி.வி.எஸ். சுந்தரம் ஐயங்காரின் கொள்ளுப்பேரன் ஆவார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த நிக்கி சுந்தரம், முறையாகத் தமிழும் நடிப்பும் பயின்று இப்படத்தில் நடித்துள்ளார். இது […]

24/08/2019 Dinesh R
தி ஆங்ரி பேர்டஸ் மூவி 2 விமர்சனம் அயல் சினிமா

தி ஆங்ரி பேர்டஸ் மூவி 2 விமர்சனம்

எதிரிகளான பறவைகளும் பன்றிகளும் தங்கள் வேற்றுமைகளை மறந்து, பறவைத் தீவையும், பன்றித் தீவையும் அழிக்க நினைக்கும் கழுகுத் தீவின் ஜெட்டாவிடமிருந்து எப்படித் தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி முதற்பாகத்தையும் விட அதிக கலகலப்புக்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் துரோப் வேன் ஆர்மன். படம் கதையிலும், கலகலப்பிலும் மட்டும் கவனம் செலுத்தாமல், கதாபாத்திரங்களின் குண இயல்பையும் கணக்கில் கொண்டுள்ளதுதான் முதற்பாகத்தை விடவும் ஈர்க்கக் காரணம். ‘பறவைத் தீவைக் காக்கும் சூப்பர் ஹீரோ’வாக தான் […]

24/08/2019 Dinesh R
ஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன் சினிமா

ஹீரோவாகும் சீயான் விக்ரமின் தங்கை மகன் – அர்ஜூமன்

சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி சாருஹாசன், நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா, ஜனகராஜ் நடித்த தாதா 87 வெற்றிப்பட இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த படமாக நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் ‘பீட்ரூ’ முடிவடையும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தற்போது, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)’ என்ற நகைச்சுவை த்ரில்லர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிக்பாஸ் […]

23/08/2019 Dinesh R
பிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் சினிமா

பிக் பாஸும், ஏலியன்ஸும் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பான ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. ஆரி நாயகனாகவும், ஷாஷூவி பாலா நாயகியாகவும் நடித்துள்ள படத்தை கவிராஜ் இயக்கியுள்ளார். இயக்குநர் அமீர், “எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிப் பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். அவரை நான் பிரமிப்பாகப் பார்ப்பேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகைத் தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று […]

22/08/2019 Dinesh R
மீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் சினிமா

மீண்டும் களமிறங்கும் ராவுத்தர் பிலிம்ஸ் – எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்

ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பு ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. ஆரி நாயகனாகவும், ஷாஷூவி பாலா நாயகியாகவும் நடித்துள்ள படத்தை கவிராஜ் இயக்கியுள்ளார். அவ்விழாவில் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், ” ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கிறவன் பார்த்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும் இயக்குநரும் மெனக்கெட்டு முயற்சி […]

22/08/2019 Dinesh R
பக்ரீத் விமர்சனம் சினிமா

பக்ரீத் விமர்சனம்

பக்ரீத் கொண்டாட்டத்திற்காக ஒட்டகம் ஒன்றை வாங்குகிறார் மீஞ்சூர் பாய். அந்த தாய் ஒட்டகத்தோடு, குட்டி ஒட்டகமும் ஒட்டிக் கொண்டு வந்து விடுகிறது. குட்டியை என்ன செய்ய என பாய் யோசிக்கும் பொழுது, ரத்தினம் அதை தான் வளர்ப்பதாகச் சொல்லி வாங்கிக் கொள்கிறான். அந்த ராஜஸ்தான் ஒட்டகத்திற்கும், அதை அன்பாக வளர்க்கும் விவாசய பின்புலம் கொண்ட தமிழ்க் குடும்பத்திற்கும் இடையே உருவாகும் பிணைப்பும், அதைப் பிரிய நேரும் பொழுதும் எழும் துயரும் தான் படத்தின் மையக் கரு. பெட்டிக் […]

22/08/2019 Dinesh R
பார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள் சினிமா

பார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள்

உலகத் திரைப்பட சாதனை முயற்சியாக ராதாகிருஷ்ணன் பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒத்த செருப்பு படத்துக்கு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு குவிந்து வருகிறது. ரசிகர்களுக்கு நெருக்கமான ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி ஆமீர்கான், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால் மற்றும் கே.ஜி.எஃப். யாஷ் ஆகியோரும், இப்படத்தைத் தயாரித்து இயக்கியதுடன், தனியொரு மனிதனாகத் தோன்றி, முழுப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கும் பார்த்திபனின் வானளாவிய சாதனையை வாயார வாழ்த்திப் புகழ்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘பார்த்திபனின் அபாரமான […]

20/08/2019 Dinesh R