Shadow

சினிமா

பக்கிரி விமர்சனம்

பக்கிரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஃப்ரென்ச் எழுத்தாளர் ரொமைன் எழுதிய முதல் நாவலான, 'தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் ஹூ காட் ட்ராப்ட் இன் ஆன் இகியா வார்ட்ரோப் (The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe)' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். போன வருடம் ஃபிரான்ஸில் வெளியான இப்படம், 21 ஜூன் 2019 அன்று இந்தியா, யு.எஸ்.ஏ., கனடா, யு.கே., மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெளியாகிறது. 'பக்கிரி' என தமிழில் டப் செய்யப்பட்டு இப்படத்தை Y NOTX வெளியிடுகிறது. ஒரு ஹாலிவுட் படத்தில், அதுவும் பிரபலமான ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு திரைக்கதையில், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர் ஒருவர் நடித்திருப்பது, மிக முக்கியமான ஒரு மைல்கல் பாய்ச்சலாகவே கருதவேண்டும். ஃபகிர் என்ற சொல், உலக சுகங்களைத் துறந்து இறைஞ்சுண்டு வாழும் சூஃபி முஸ்லீம் பெரியவர்களைக் குறிப்பதாகும். காலப்போக்கில் இந்து ...
மோசடி விமர்சனம்

மோசடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நூறு கோடி ரூபாய் ஒரு மாதத்துக்குள் சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி கிருஷ்ணா எனும் இளைஞனுக்கு. இல்லையெனில் கிருஷ்ணாவின் மனைவி ராதாவைக் கொன்று விடுவார் அமைச்சர். கிருஷ்ணா பல வகையான மோசடிகள் செய்து பணத்தைச் சேர்க்க முயற்சி செய்கிறான். அவனால் தன் மனைவியைக் காப்பாற்ற முடிந்ததா என்பது தான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி, சதுரங்க வேட்டையை ஞாபகப்படுத்தும் விதமாக உள்ளது. முதலில் ஆசையை நன்றாகத் தூண்டிவிட்டு, அவர்களின் பணத்தைக் கறக்கிறான் கிருஷ்ணா. வயலில் புதையல் இருப்பதாக நம்ப வைத்து, அதை எடுக்கப் பூஜைக்கு அதற்கு பால் ஆமை தேவை எனச் சொல்லி பணம் பறக்கிறான். வெள்ளைப் பூனைக்கு கருப்பு டை அடித்து, கருப்பு வைரம் எனச் சொல்லி ஒரு நபரின் மூட நம்பிக்கையைக் காசாக்குகிறான். வலம்புரி சங்கின் விலை 20 கோடி பெறுமானம் என ஒருவரின் ஆசையைத் தூண்டி, 1 கோடிக்கு ஒரு சங்கை விக்கிறான். குறுக்கு வழியில் பணம் பார்க்க நினைக்கு...
யூஎஸ்ஏ நெட்வொர்க்ஸில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்

யூஎஸ்ஏ நெட்வொர்க்ஸில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்

சினிமா, திரைத் துளி
பாடகியும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ஓர் புதிய சிகரத்தை எட்டியுள்ளார். யூஎஸ்ஏ என்னும் பிரபல நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவர் ட்ரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான CIA-வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் பிளாக் ஆப்ஸ் புரோக்ராம் ஆன ட்ரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. ட்ரெட்ஸ்டோனில் பணி புரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அசாத்திய கொலையாளிகளாக, திறமை பெற்றவர்களாக மாற்றப்படுவர். இந்தத் தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி, நீரா பட்டேல் என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இக்கதாபாத்திரம் டெல்லியில் ஒரு ஹோட்டல் பணியாளராக வேலை பார்த்துக் கொண்டே மறைமுகமாகக் கொலையா...
ஏஞ்சலினா – சுசீந்திரனின் சஸ்பென்ஸ் த்ரில்லர்

ஏஞ்சலினா – சுசீந்திரனின் சஸ்பென்ஸ் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் சுசீந்திரனின் அடுத்து வரவிருக்கும் “ஏஞ்சலினா” திரைப்படம் நல்ல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஏனெனில் அவரது முந்தைய திரைப்படங்களில் ஒன்றான “ஆதலால் காதல் செய்வீர்” இதே மாதிரி வண்ணமயமான, இளமைத்தன்மையை கொண்ட அதே நேரத்தில், ஒரு அழுத்தமான கருத்தை அதன் முடிவில் கொண்டிருந்தது. சமீபத்தில் சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் நடித்ததற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குநர் சுசீந்திரன், இந்தப் படத்தை பற்றி கூறும்போது, "ஏஞ்சலினா அடிப்படையில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். படமே ஒரு விசாரணையில் தான் துவங்குகிறது. அதே சமயத்தில் இளைஞர்களின் கதாபாத்திரங்களை உள்ளடக்கிய கதையையும் இதில் நான் கலந்து சொல்லியிருக்கிறேன். இருப்பினும், படத்தின் மையக்கரு ஒரு பெண் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற சமூக விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண...
சிபிராஜ் வசமானது ‘வால்டர்’

சிபிராஜ் வசமானது ‘வால்டர்’

சினிமா, திரைத் துளி
சிபிராஜின் தந்தை சத்யராஜ் அவரது திரை வாழ்வில் மறக்க முடியாத படமான ‘வால்டர் வெற்றிவேல்’ படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் சிபிராஜின் படத்துக்கு, வால்டர் என்ற தலைப்பு கிடைக்க பிரச்சனை நிலவி வந்தது. தற்போது அத்தகைய பிரச்சினைகள் நீங்கி, சிபிராஜின் படத்திற்கு 'வால்டர்' என்ற தலைப்பு கிடைத்திருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. தலைப்பின் உரிமையை மாற்றிக் கொடுக்க முழு மனதுடன் சம்மதித்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குக் கடிதம் அளித்துள்ளார் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சிங்காரவேலன்.  இதைப் பற்றி தயாரிப்பாளர் பிரபு திலக், “சிபிராஜ் அவர்களின் தந்தை சத்யராஜ் சாரின் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் முக்கியத்துவம் காரணமாக இந்தப் படத்துக்கு 'வால்டர்' என்று பெயரிட விரும்பினோம். துரதிர்ஷ்டவசமாக, தலைப்பு தொடர்பான சில சிக்கல்களை நாங்கள்...
ராக்கெட்ரி: குற்றமற்ற மாதவனும், பக்கபலமான சிம்ரனும்

ராக்கெட்ரி: குற்றமற்ற மாதவனும், பக்கபலமான சிம்ரனும்

சினிமா, திரைத் துளி
பார்த்தாலே பரவசம் (2001), கன்னத்தில் முத்தமிட்டால் (2002) ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் மாதவனும், சிம்ரனும். இந்தப் படங்கள் அவர்களை வெறும் ஜாலியான காதல் ஜோடிகளாக மட்டும் காட்டவில்லை, மாறாக சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருந்தனர். காதலை பலப்படுத்துவதே இத்தகைய சோதனைகள்தானே! சோதனைகள் மற்றும் இன்னல்கள் கடினமான இருந்தால் தான் உறவு, அழகாகவும் வலுவானதாகவும் இருக்கும். மீண்டும் அத்தகைய சோதனையான, அழகான, வலுவான ஜோடிகளாக, 17 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு, பன்மொழி திரைப்படமான 'ராக்கெட்ரி' படத்தில் மாதவனும் சிம்ரனும் இணைகின்றனர். ராக்கெட்ரி, நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டதால், கதாநாயகனின் தனிப்பட்ட வாழ்க்கையோடு இயைந்த, மிகவும் தீவிரமான கதையம்சத்தைக் கொண்டுள்ளது. திரு மற்றும் திருமதி நம்பியாக மாதவன் மற்றும் சிம்ரன் ஜோட...
பிரேக்கிங் நியூஸ் – சூப்பர் ஹீரோவாகிறார் ஜெய்

பிரேக்கிங் நியூஸ் – சூப்பர் ஹீரோவாகிறார் ஜெய்

சினிமா, திரைத் துளி
ஜெய், பானு ஸ்ரீ, தேவ் கில் மற்றும் ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் “பிரேக்கிங் நியூஸ்” படப்பிடிப்பு வேகமாய் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஹை-லைட், ‘சூப்பர் ஹீரோ ஃபேண்டஸி’ படம் என்பதைப் படக்குழு உறுதிப்படுத்திகின்றனர். படத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இது குறித்து கூறும்போது, “இந்தப் படம் ஜீவன் என்ற ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை. தொழில் மற்றும் குடும்பத்தினருடனான தனிப்பட்ட வாழ்க்கை மிகச்சரியாகப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், அநீதிக்கு எதிராகத் தூண்டப்படும் அவரது நன்மை செய்யும் குணம் அவரைப் பிரச்சினையில் ஆழ்த்துகிறது. அவரை மிகவும் நேசிக்கும் அவரது மனைவி ஹரிபிரியா (பானு ஸ்ரீ) அவரைத் தன்னால் முடிந்த அளவுக்கு மாற்றுகிறார். ஆனால் அவரது மாறாத தன்மையால் அவரிடமிருந்து விலகுகிறார். அவரது சகாக்கள் மற்...
‘வித்தியசமான கதாபாத்திரம் என்றால் நடிப்பேன்’ – இயக்குநர் சுசீந்திரன்

‘வித்தியசமான கதாபாத்திரம் என்றால் நடிப்பேன்’ – இயக்குநர் சுசீந்திரன்

சினிமா, திரைத் துளி
சுட்டுப்பிடிக்க உத்தரவு எனும் படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகி இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். அவ்வனுபவத்தைப் பற்றிப் பேசிய சுசீந்திரன், " 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தில் என் கதாபாத்திரத்திற்கு யாரைத் தேர்வு செய்யலாம் என்ற விவாதத்தில் மிஷ்கின் எனது பெயரைக் கூறியிருக்கிறார். உடனே விக்ராந்த் என்னைத் தொடர்பு கொண்டு என்னை நடிக்க அழைத்தார். இயக்குநர் என் கதாபாத்திரத்தைக் கூறியதும் வழக்கமான பாத்திரமாக இல்லாததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில் எனக்கு ஓடுவது மட்டுமே சவாலாக இருந்தது. இருப்பினும், இயக்குநர் சொல்வதைச் செய்ய வேண்டுமென்ற மனநிலையோடு சென்றதால் நடித்து முடித்தேன். முதல் பாதி படம் பார்த்த என் குடும்பத்தார்கள் நடிப்பதில் நான் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டேனோ என்று நினைத்தார்கள். ஆனால், இரண்டாவது பாதி பார்த்துவிட்டு மகிழ்ச்சியடைந்தார்கள். எனக்கோ, எதுவொன்றைச் செய்தாலும் அதில...
ரோகிணி – மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்

ரோகிணி – மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்

சினிமா, திரைத் துளி, மற்றவை
பிக் பாஸ் சீசன் - 1 புகழ் ஆரவ் நடிக்க, 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.' எனும் படத்தை இயக்குகிறார் இயக்குநர் சரண். இப்படத்தில், டாம்பீகமான லேடி டானாக ராதிகா சரத்குமார், பட்டாளம் சுந்தரிபாய் எனும் மிரட்டலான பாத்திரத்தில் நடிக்க, ரோகிணியோ காது கேட்காத வாய் பேச முடியாத பாத்திரத்தில் நடித்துள்ளார். ரோகிணி ஏற்று நடித்திருக்கும் லதாம்மா பாத்திரத்தைப் பற்றி இயக்குநர் சரண் குறிப்பிடுகையில், "ரோகிணி, ஆகச் சிறந்த நடிகைகளில் இவருக்கு ஒரு தனித்துவமான இடம் எப்போதும் உண்டு! அவரிடம் கதையை விவரிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் அவர் தன்னை லதாம்மாவாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார். அவருடனான உரையாடல்கள், காட்சி விவரங்களைக் கூட அதன்பின் சைகை மொழியிலேயே என்னைச் சொல்லப் பணித்தார். கதாநாயகன் ஆரவ் மற்றும் புதுமுகம் விஹான் ஆகியோருடன் பயிற்சிப் பட்டறையாக அது விரிவடைந்தது. படப்பிடிப்பின் போது அம்மா உணவகத்தில் பணி புரி...
கூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்

கூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்

சினிமா, திரைச் செய்தி
4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு வாழ்த்தி பேசினார். "காமெடியை எப்படிக் கொடுப்பது என்பதை மிகவும் அறிந்த ஒரு இயக்குநர் சாம் ஆண்டன். யோகி பாபு இரவு பகலாகத் தூங்கக் கூட நேரமே இல்லாமல் கடுமையாக உழைத்து வருகிறார். அவருக்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தில் இந்தப் படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். அவருடைய 'முகம்' இந்தப் படத்தைக் காப்பாற்றும்" என்றார் நடிகர் மனோபாலா. ட்ரெய்லரில் ஒரு காட்சி வரும். 'என் முகம் என்ன...
கிழக்கு கடற்கரை சாலையில் – 10 திரைகளுடன் பிவிஆர் சினிமாஸ்

கிழக்கு கடற்கரை சாலையில் – 10 திரைகளுடன் பிவிஆர் சினிமாஸ்

சினிமா
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உயர்தர திரையரங்கு நிறுவனமான பிவிஆர் சினிமாஸ் உத்தண்டியில் உள்ள ஒரு மாலில் அதன் 10 திரைகள் கொண்ட ஒரு புதிய மல்டிப்ளெக்ஸைத் திறந்திருக்கிறது. வாடிக்கையாளர் மைய அணுகுமுறையின் விரிவாக்கமாக, இந்தப் புதிய மல்டிப்ளெக்ஸில் குழந்தைகளுக்கென்றே பிரத்தியேகமாக PVR Play House என்ற ஒரு புதிய திரையரங்கை வடிவமைத்திருக்கிறது. சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை கண்டிராத ஆடம்பர அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த மல்டிப்ளெக்ஸ். இந்த மல்டிப்ளெக்ஸ் உடன் சேர்த்து தமிழ்நாட்டில் 13 இடங்களில் 83 திரைகளும், தென்னிந்தியாவில் 43 இடங்களில் 268 திரைகளும் கொண்டு பிவிஆர் முதன்மையாக விளங்குகிறது. அழகிய கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த மல்டிப்ளெக்ஸ் 51,682 சதுர அடி பரப்பளவில் 1400 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில...
தும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம்

தும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம்

சினிமா, திரைச் செய்தி
ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தும்பா'. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் மிகப் பிரம்மாண்டமாக வெளியிடும். "நாங்கள் வசனம் எழுதும்போது, எந்தக் கதாபாத்திரத்தில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நான் எழுதிய வசனங்களை தர்ஷன், கீர்த்தி, தீனா எல்லோருமே அதன் சாராம்சம் குறையாமல் பேசியிருக்கிறார்கள். எங்கள் எல்லோருக்கும் இந்தப் படத்தின் மூலம் ஒரு புது முகவரி கிடைக்கும் என நம்புகிற...
கதிர், சூரி கலந்த சர்பத்

கதிர், சூரி கலந்த சர்பத்

சினிமா, திரைத் துளி
7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் 'சர்பத்'. அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில், 'சர்பத்' படத்தின் நாயகனாகப் பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு  முதல்முறையாக  சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா  அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள். நம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா ஃபேமிலி என்டெர்டெயின்மென்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பிரபாகரன். டெக்னிக்கல் டீமில் கேமிரா மேனாக இயக்குநரின் பெயரைக் கொண்ட பிரபாகரன் என்பவர் இணைந்து இருக்கிறார். படத்தொகுப்பாளராக பிரசன்னா ஜி கே இருக்கிறார். இசையமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இருக்கிறார். தரமணி, பேரன்பு உள்...
‘ஒழுக்கம் வேண்டும் விஷால்!’ – அருண்பாண்டியன் சாடல்

‘ஒழுக்கம் வேண்டும் விஷால்!’ – அருண்பாண்டியன் சாடல்

சினிமா, திரைச் செய்தி
சினிமா உலகில் சிறிய படம், பெரிய படம் என்ற வேறுபாடு நட்சத்திரங்களையும் பட்ஜெட்டையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டி படத்தின் வெற்றியைப் படத்தின் தரம் தான் தீர்மானிக்கிறது. அப்படியொரு தரமான படமாக தெளலத் படத்தைத் தயாரித்து இருக்கிறார் M.B.முகம்மது அலி. சக்தி சிவன் எழுதி இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி நடித்துள்ளார். படத்தின்  இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழு உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் பேசியதாவது, "பெரிய ஹீரோக்கள் நடித்த படம் மட்டும் பேசப்படும் சூழல் உள்ளது. சரியான கதையோடும் தரத்தோடும் நிறைய சின்னப்படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் வெளியில் வரவேண்டும். இந்தப் படத்தின் தலைப்பு டெளலத். டெளலத் என்றால் உருது மொழியில் செல்வம் என்று பொர...