32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 15 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 15)
மை லார்ட் – எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறல் சினிமா

மை லார்ட் – எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறல்

சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மை லார்ட் (My Lord)’ எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்குப் பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்புப் பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி.ஆர்.பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்ற, நடனத்தை எம்.ஷெரீப்பும், சண்டைக் காட்சிகளை பி.சி. ஸ்டன்ட்டும் அமைக்கிறார்கள். அடித்தட்டு […]

02/02/2026 Dinesh R
சிறைக்குப் பின் ராவடி | L.K. அக்‌ஷய் குமார் சினிமா

சிறைக்குப் பின் ராவடி | L.K. அக்‌ஷய் குமார்

பஸில் ஜோசப், L.K. அக்‌ஷய் குமார் ஆகிய இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் ‘ராவடி’ எனும் திரைப்படம், மலையாளத்திலும் அதே பெயரில் தயாராகி வருவதுடன், இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராவடி’ எனும் திரைப்படத்தில், சிறை நாயகன் L.K . அக்‌ஷய் குமார், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், […]

27/01/2026 Dinesh R
மம்மூட்டி, மோகன்லால் நடிக்கும் ‘பேட்ரியாட்’ Movie Posters

மம்மூட்டி, மோகன்லால் நடிக்கும் ‘பேட்ரியாட்’

இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக இருக்கும் “பேட்ரியாட்” படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அட்டகாசமான போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பிரம்மாண்டமான படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போஸ்டரை, 40-க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த மல்டி-ஸ்டாரர் திரைப்படம், 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் தமிழ்ப் போஸ்டரை அட்லீயும், தெலுங்குப் போஸ்டரை […]

27/01/2026 Dinesh R
“LCU தொடரும்” – லோகேஷ் கனகராஜ் சினிமா

“LCU தொடரும்” – லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களையும் ஊடகவியலாளர்களையும் சந்தித்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ”ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஊடகங்களை ஏதேனும் ஒரு வகையில் சந்திப்பது என்னுடைய வழக்கம். கூலி படத்திற்குப் பிறகு, ஊடகங்களைச் சந்தித்துப் பேசவேண்டும் என நினைத்து, தற்போது தான் உங்களைச் சந்திக்கிறேன். சமூக […]

26/01/2026 Dinesh R
Fourth Floor – ஆரி அர்ஜுனன் நடிக்கும் த்ரில்லர் சினிமா

Fourth Floor – ஆரி அர்ஜுனன் நடிக்கும் த்ரில்லர்

மனோ க்ரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் LR சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் பரபரப்பான த்ரில்லராக உருவாகியுள்ள “ஃபோர்த் ஃப்ளோர்” எனும் திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சென்னையின் மையப்பகுதி ஒன்றில், ஒரு குடியிருப்பில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத த்ரில்லர் […]

25/01/2026 Dinesh R
ரெட்ட தல விமர்சனம் | Retta Thala review சினிமா

ரெட்ட தல விமர்சனம் | Retta Thala review

தமிழ் சினிமாவில், 30 ஆண்டுகளாகத் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கப் போராடி வருபவர் அருண் விஜய். அவ்வப்போது ஒரு பெரிய பிரேக் கிடைத்தாலும் அதைத் தக்க வைக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து சில படங்கள் அவருக்கு அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட அருண் விஜய்க்குத் தடம் படத்துக்குப் பிறகு ஒரு பெரிய பிரேக் கிடைக்கவில்லை. ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்ற புத்தரின் போதனையை மையக்கருத்தாக வைத்து உருவாகியிருக்கும் படம். சிறு வயதில் இருந்தே தங்களுக்கெனக் குடும்பம் என எதுவும் […]

26/12/2025 Dinesh R
Mission Santa: Yoyo to the Rescue விமர்சனம் அயல் சினிமா

Mission Santa: Yoyo to the Rescue விமர்சனம்

கிறிஸ்துமஸ் மேஜிக்கை நம்பும் யோயோ எனும் எல்ஃபின் (Elf) கதை இப்படம். இந்தியா, அமெரிக்கா, ஜெர்மன் என மூன்று நாட்டின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கூட்டாகத் தயாரித்துள்ளனர். சான்டா கிளாஸின் வொர்க்‌ஷாப்பிற்கு ஆர்வமுடன் செல்கிறான் யோயோ. ஆனால், அங்கே அவன் எதிர்பார்த்துச் சென்ற மேஜிக் ஏதுமில்லாமல், எல்லாம் இயந்திரத்தனமாய் மாறியுள்ளன. சான்டா அளிக்கும் பரிசுகளை ஆத்மார்த்தமாக உருவாக்கும் எல்ஃப்களுக்குப் பதில், பரிசுகளைப் பேக் (pack) செய்யும் ட்ரோன்களுக்கு ELF (Electronic Labour Force) எனப் பெயரிடப்பட்டு, ஒரு […]

24/12/2025 Dinesh R
The King Maker | இராம. வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் இது புதிது

The King Maker | இராம. வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம்

உள்ளங்கனி நெல்லிக்கனி போலிருந்த முதலமைச்சராகும் வாய்ப்பை எந்த முக சுளிப்புமில்லாமல் விட்டுக் கொடுக்கும் பண்பையெல்லாம் கதைகளில் மட்டுமே கேட்டிருக்கமுடியும். அந்தப் பண்பிற்குச் சொந்தக்காரரான ஆர்.எம்.வீ. (RMV) என்றறியப்படும் இராம. வீரப்பன் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, அவரது மகன் தங்கராஜ் தயாரிக்க, பின் சுப்பிரமணியம் இயக்கியுள்ளார். முப்பது மணி நேர ஃபூட்டேஜ்களைச் சுருக்கி 118 நிமிட ஆவணப்படமாகத் தொகுத்துள்ளனர். திராவிடச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, பத்திரிகையாளராக வாழ்வைத் தொடங்கித் தயாரிப்பாளராகப் பரிணமித்து, அரசியல்வாதியாக கோலேச்சிய அவரது நிறைவான வாழ்க்கையை நேர்த்தியாகக் […]

24/12/2025 Dinesh R
சிறை விமர்சனம் | Sirai review இது புதிது

சிறை விமர்சனம் | Sirai review

இந்த வருடத்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது சிறை திரைப்படம். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரியின் முதற்படத்திலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார். வேலூர் சிறையில் இருக்கும் அப்துல் ரெளஃப் எனும் கைதியை சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார் கதிரவன் எனும் போலீஸ் ஏட்டு. அந்தப் பயணத்தின் வாயிலாக, நீதித்துறையின் போதாமைகள், அழுத்தமான காதல் கதை, போலீஸார்க்கு நேரும் சங்கடம், கொம்பு முளைத்தது போல் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் போலீஸாரின் ஆணவப்போக்கு என அழுத்தமான […]

24/12/2025 Dinesh R
சிறை | வெளியீட்டுக்கு முன்பே காரைப் பரிசாக வாங்கிய இயக்குநர் சினிமா

சிறை | வெளியீட்டுக்கு முன்பே காரைப் பரிசாக வாங்கிய இயக்குநர்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” ஆகும். வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் […]

23/12/2025 Dinesh R
கொம்புசீவி விமர்சனம் | Kombuseevi review இது புதிது

கொம்புசீவி விமர்சனம் | Kombuseevi review

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன், கிட்டத்தட்ட 2015-இலேயே சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி விட்டார். ஆயினும் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமே 3 படங்கள் தான் நடித்திருக்கிறார். முதல் 3 படங்களிலுமே கடமைக்குத் தங்கள் கைக்கு அடக்கமாக இயக்குநர் ஒருவரைப் போட்டு இஷ்டத்துக்குப் படம் எடுத்ததன் விளைவாக இன்னுமே பெரிய பிரேக் கிடைக்காமல் வலம் வருகிறார். இப்போது தான் பொன்ராம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஒரு இயக்குநரிடம் கதை கேட்டு நடித்திருக்கிறார். ஆனால் அவர் கதை […]

20/12/2025 Dinesh R
பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ – Sun NXT-இல் வெளியாகிறது சினிமா

பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ – Sun NXT-இல் வெளியாகிறது

பார்வதி நாயர் நடிப்பில் வரும் ‘உன் பார்வையில்’ எனும் ஓர் அதிரடியான த்ரில்லர் படம், டிசம்பர் 19 அன்று, தென்னிந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான Sun NXT-இல் நேரடியாக வெளியாகிறது. இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் அசத்தியுள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையைத் தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகிற்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. தன்னுடைய வலுவான […]

13/12/2025 Dinesh R
“திறமையை ஊக்குவித்தால் எல்லோராலும் வெற்றி பெறமுடியும்” – காஸிமா | தி கேரம் குயின் சினிமா

“திறமையை ஊக்குவித்தால் எல்லோராலும் வெற்றி பெறமுடியும்” – காஸிமா | தி கேரம் குயின்

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6 ஆவது சர்வதேச கேரம் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஸிமாவின் வாழ்க்கை சரிதம் என்பது மிகுந்த வலி மிகுந்தது. மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து, ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டைச் சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டுப் போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஸிமா. இவரது […]

13/12/2025 Dinesh R
மகாசேனா விமர்சனம் | Mahasena review இது புதிது

மகாசேனா விமர்சனம் | Mahasena review

மகாசேனா என்பது யாளீஸ்வர் எனும் தெய்வத்தைக் குறிக்கும் திருநாமங்களில் ஒன்றெனப் படத்தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். யாளிமலையில் உள்ள குரங்கணி எனும் ஊரில், எவர் கண்ணுக்கும் தெரியாத ‘யாளீஸ்வரர் சிலை’ ஒன்று கோயிலில் இருப்பதாகக் கருதப்படுகிறது. சித்ரா பெளர்ணமியன்றே அச்சிலையைக் கண்களால் காண முடியும். அதை அபகரிக்க அடிவாரப்பகுதி மக்கள் மூவாயிரம் ஆண்டுகளாக முயற்சி செய்கின்றனர். குரங்கணியின் தலைவன் செங்குட்டுவன் அதைக் காப்பாற்ற நினைக்க, அதை அடைந்தே தீருவது எனும் தீவிரமான பிடிவாதத்துடன் உள்ளார் அடிவாரப்பகுதி தலைவி கங்கா. யாளி […]

12/12/2025 Dinesh R
அரசன் – கோவில்பட்டியில் வெற்றிமாறனும் சிலம்பரசனும் சினிமா

அரசன் – கோவில்பட்டியில் வெற்றிமாறனும் சிலம்பரசனும்

வெற்றிமாறன், சிலம்பரசன் டிஆர், கலைப்புலி S.தாணு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. வடசென்னை என்னும் வெற்றிப் படத்தின் பிரபலமான உலகத்திலிருந்து உருவாகும், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் கோவில்பட்டியில் தொடங்கிய அரசன் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதி வரை தொடரும். வெற்றிமாறனின் பாணியில் அரசன் படத்தில் உள்ள முக்கியமான காட்சிகளைக் குழுவினர் தற்போது படமாக்கி வருகின்றனர். விடுதலை படத்தின் […]

11/12/2025 Dinesh R