Shadow

சினிமா

சகா விமர்சனம்

சகா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சகா என்றால் தோழன். பதின் பருவத்து இளம் குற்றவாளிகளின் நட்பை மையமாகக் கொண்டு கதையமைத்துள்ளார் இயக்குநர் முருகேஷ். சத்யாவும் கதிரும் நண்பர்கள். தெருவில் திரிந்த அவர்களை வளர்க்கும் திருநங்கையைக் கொன்றவனைக் கொன்று சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைபடுகின்றனர். சிறையில் ஏற்படும் பகையும் நட்பும் அவர்களை எங்குக்கொண்டு செல்கிறது என்பது தான் படத்தின் கதை. ஷபீரின் இசையில், 'யாயும் ஞாயும் யாராகியரோ' என்ற பாடல் மிகப் பிரபலம். இந்தப் படத்திற்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சரணும், ஆய்ராவும் அந்தப் பாடலில் மிக அழகாக உள்ளனர். ஆனால் அவர்களுக்குள்ளான காதல் நம்பும்படியாக இல்லை. ரெளடிகளிடம் இருந்து தப்பிக்கும் ஆய்ரா, தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளாமல், சரண் மீது காதல் வயப்படுகிறார். அதைச் சொல்லவும் செய்யாமல் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவ ஏற்றிருக்கும் பாத்திரத்தின் பெயர் ஆரோஹ...
வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தெலுங்குத் திரையுலகத்தின் பவர் ஸ்டார் பவன் கல்யாண், சமந்தா நடிப்பில், 2013 இல் வெளிவந்த 'அத்தாரின்டிகி தாரேதி' எனும் படத்தின் மீள் உருவாக்கம் இந்தப்படம். ஆல்ரெடி பெரும் ஹிட்டடித்த நகைச்சுவை படம் சுந்தர்.சி கையில் கிடைத்தால்? ஆதித்யா ஸ்பெயினில் வாழும் பெரும்பணக்காரன். தாத்தாவின் வேண்டுகோளின்படி, தமிழ்நாட்டில் வசிக்கும் தனது அத்தையின் கோபத்தைத் தணிக்க, ஓட்டுநர் ராஜாவாய் அந்த வீட்டுக்குள் நுழைகிறான். தனது அத்தையைச் சமாதானம் செய்தானா இல்லையா என்பதே படத்தின் கதை. ஆதித்யாவாக எஸ்.டி.ஆர். தனுஷின் தயாரிப்பில் வந்த காக்கா முட்டை படத்திலேயே தன்னைக் கலாய்க்க அனுமதியளித்திருப்பார். இந்தப் படத்திலும், அது தொடர்கிறது. 'நேரத்துக்கு ஷூட்டிங் போவது' முதல், சிம்பு மீதான பொதுவான விமர்சனங்கள் எல்லாம் கலாய்க்கப் பயன்படுத்தியுள்ளனர். அவரோடு திரையில் யார் வந்தாலும், அவர்கள் அனைவரையும் மீறி தனது இருப்பைத் தக்க வ...
பேரன்பு விமர்சனம்

பேரன்பு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பனிமூட்டம் நிறைந்த அந்தப் பரிசல் பயணத்தில் மம்மூட்டி தன் கனத்த குரலில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்கள் என்று சொல்லி தனது கதையைச் சொல்லத் துவங்கி இயற்கை பேரன்பாலானது என்று முடிக்கும் போது உண்மையில் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று புலனாகிறது. மூளை முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பதின்ம வயது பெண்ணை தனி ஆளாக தகப்பனாக நின்று தாங்குகின்ற ஒரு மனிதனின் பெருங்கதை தான் பேரன்பு. ஒரு பதின்ம வயதுப் பெண்ணிற்கு அவளது மாதவிலக்கின்போது 'பேட்' மாற்றுவதிலிருந்து, மூளை முடக்குவாதமே வந்தாலும் உடல் தினவுகள் அவர்களையும் விட்டு விடுவதில்லை என்றறிந்து தன் மகளின் உடல்பசியைத் தீர்க்க எவரேனும் கிடைப்பார்களா என்று ஒரு தகப்பனாக யாசிப்பதென்று பேசாப்பொருளைப் பேசும் படம் உலுக்கி விடுகிறது ஆன்மாவை. 'மூளை முடக்கு வாதம் வந்த அல்லது உடல் குறைபாடுள்ள மனிதர்களிடம் இனியாவது பேரன்போடு நடந்து கொள்ளுங்கள் பதர்கள...
கண்ணே கலைமானே  – மனித உறவுகளைப் பற்றிய படம்

கண்ணே கலைமானே – மனித உறவுகளைப் பற்றிய படம்

சினிமா, திரைத் துளி
'கண்ணே கலைமானே' படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகிறது. நடிகரும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, "இந்தப் படத்தின் எல்லா கிரெடிட்டும் இயக்குனர் சீனு ராமசாமியைத்தான் சாரும். நாம் கிராமப்புறத்தை, மக்களை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ நேட்டிவிட்டி திரைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். என்றாலும், சீனு ராமசாமி சார் தனது தனித்துவமான கதைக்களத்தால் வேறுபடுத்திக் காட்டியுள்ளார். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் மோதல்கள் உண்மையான வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. எதிர்காலத்தில் சீனு சார் படங்களில் நடிக்கிறேனோ இல்லையோ, ஆனால் அவரது ஸ்கிரிப்டை முதல் ஆளாக கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் அதுவே ஒரு அழகான செயல்முறை. அவர் மெதுவாக அவரது உலகிற்குள் நம்மைக் கடத்தி விடுகிறார். அவரது கதாபாத்திரங்கள் உடன் நாம் பயணித்த அனுபவத்தை அளிக்கிறது" என்றார். மேலும் அவர் கூறும்போது, "ஆரம்பத்தில், சீனு ராமசாம...
அப்பா காண்டம் – குழப்பத்திலிருந்து தெளிவு

அப்பா காண்டம் – குழப்பத்திலிருந்து தெளிவு

சினிமா, திரைத் துளி
யூட்யூப் திரைவிமர்சகர் ஜாக்கிசேகர் நடிப்பில் ஆர்வா இயக்கத்தில் சமீபத்தில் யூட்யூபில் வலையேற்றப்பட்ட அப்பா காண்டம் திரைப்படம் ஐந்து நாட்களில் 5 இலட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இயக்குநர் ஆர்வா-விற்கு இந்தக் குறும்படம் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்வா, இதற்கு முன் நிறைய தொலைகாட்சி தொடர்களில் பணிபுரிந்த அனுபவத்தின் வாயிலாக இந்தத் திரைப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கின்றார். இந்தத் திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் பிரபல திரைப்பட விமர்சகர் ஜாக்கிசேகரும் ஹரிஷ் ரவிச்சந்திரனும் நடித்துள்ளனர். இதில் மகனாக நடித்த ஹரிஷ் ரவிச்சந்திரன் சில குறும்படங்களில் நடித்தவர். அப்பாவாக நடித்த திரைவிமர்சகர் ஜாக்கிசேகர், 'சிகரம் தொடு' திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்து இருந்தாலும் முழு நீள குறும்படத்தில் பக்கம் பக்கமாக வ...
‘ரீல்’ – காதல் படம்

‘ரீல்’ – காதல் படம்

சினிமா, திரைத் துளி
கதையில் இருக்கும் கதாபாத்திரங்களும், அதன் வார்ப்புமே ஒரு ரொமான்டிக் படத்தின் தரத்தைத் தீர்மானிக்கிறது. கதாபாத்திரங்களின் வலிமையை உணர்த்தும் திரைப்படங்களைத் தமிழ் சினிமா நிறையக் கண்டுள்ளது. இத்தகைய காதல் திரைப்படங்களை நிலையாக கொடுத்துவரும் தமிழ் சினிமாவின் வரிசையில் , நம்பிக்கையோடு சேரத் தயாராகயிருக்கிறது "ரீல்". "காதல் திரைப்படங்கள் ரசிகர்களுக்குப் புதியவை இல்லையென்றாலும், அதன் வடிவமைப்பே அவற்றைத் தனித்துக் காட்டுகிறது. இப்படத்தின் தலைப்பான "ரீல்" என்பது எதற்காக என்று கேள்விக்குப் படத்தின் கதையே பதில் கூறும். நடிகர்கள் உதய்ராஜும் அவந்திகாவும் கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். KPY புகழ் சரத் இப்படத்தில் முழு நேர நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், ஒரு குணச்சித்திர நடிகராகவும் தன் திறமையை வெளிபடுத்தியுள்ளார். படத்தின் இறுதியில் வரும் திருப்பங்களும், கூறப்பட்டிருக்கும்...
சிவபக்த அகோரியாக ஜாக்கி ஷெராப்

சிவபக்த அகோரியாக ஜாக்கி ஷெராப்

சினிமா, திரைத் துளி
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப். "இதில் நான் அகோரியாக நடிக்கிறேன். இயக்குநர் கஸ்தூரிராஜா கதையைச் சொன்னவுடன் இது எனக்குப் புது மாதிரியான கேரக்டராக இருக்கும் என்று நினைத்து ஓகே சொன்னேன். ஆரண்ய காண்டம், மாயவன் மாதிரி இது வேறு ஒரு கதைக்களம். என் உருவத்தை மட்டும் அல்ல என் நடை உடை பாவனை எல்லாவற்றையுமே இது மாற்றும் படமாக இருக்கும். இயக்குநர் என்ன சொன்னாரோ அதை அப்படியே நான் பிரதிபலிக்கிறேன். நானாவது இந்தக் கதையில் ஆறு மாதங்கள் தான் ஊறி இருக்கிறேன். ஆனால் இயக்குனர் ஆறு ஆண்டுகளாக இதை ட்ரீம் சப்ஜெக்டாக சுமந்து கொண்டிருக்கிறார். சிவபக்த அகோரியாக நடிக்கிறேன். நல்லது செய்யும் முனீஸ்வரன் என்ற அகோரிக்கும், எல்லோரையும் அழிக்க நி...
லண்டனில் நடந்த ஸ்ருதிஹாசனின் இசை நிகழ்ச்சி

லண்டனில் நடந்த ஸ்ருதிஹாசனின் இசை நிகழ்ச்சி

சினிமா, திரைத் துளி
தன்னுடைய 6 வயதில் தொடங்கிய இசைப் பயணத்தின் மீது கவனத்தைத் திருப்பியுள்ளார் நடிகையும் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான ஸ்ருதி ஹாசன். இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களைக் கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் (Troubadour) எனும் இசைக்கட்சேரி இடத்தலும் சமீபத்தில் பாடினார். இந்த வருடம் வெளிவர இருக்கும் அவரது சில சிங்கில் டிராக் பாடல்களை அவர் இந்நிகழ்ச்சியில் பாடினார். உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் சிலராகக் கருதப்படும் பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றார் "The Troubadour " எனும் இவ்விடத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புகழ்பெற்ற அரங்கு1954இல் ஒரு Coffee House-ஆக தொடங்கப்பட்டது. தி நெட் (The Ned ) என்ற பெயரில் லண்டனில் உள்ள இடத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் நடந்த ஸ்ருதி ஹாசனி...
சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓர் இக்கட்டில் மாட்டிக் கொண்டு, அதிலிருந்து தப்பிக்க ஹாலிவுட் சார்லி சாப்ளின் மிகச் சீரியசாக முயலும் அனைத்தும் பார்வையாளர்களுக்கு நகைச்சுவை விருந்தாக அமையும். அதன் அடிப்படையில், 2002இல் வெளிவந்த வெற்றிப்படமான சார்லி சாப்ளினின் மைய இழை அமைந்திருக்கும். 17 வருடங்களுக்குப் பின், சார்லி சாப்ளின் 2 வருகிறது. ஆனால், இது முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை. ஓர் இக்கட்டில் சிக்கி, அதிலிருந்து மீளப் பார்ப்பதுதான் இப்படத்தின் கருவும். முதல் பாகத்தில் அமர்க்களம் புரிந்த பிரபு, பிரபுதேவா, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் மட்டுமே இரண்டு படத்திற்குமான இணைக்கும் கண்ணி. முதற்பாகத்தைப் போலவே பிரபு பாத்திரத்தின் பெயர் ராமகிருஷ்ணன், பிரபுதேவா பாத்திரத்தின் பெயர் பிரபு. இப்படத்தில் என்ன மாறுதலென்றால், 2002இல் இரண்டு நாயகர்களில் ஒருவரான பிரபு இப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக ப்ரோமோட் ஆகியுள்ளார். பிரபுதேவா இன்னும் அதே ...
“ஒங்கள போடணும் சார்” – 5 கதாநாயகிகள்

“ஒங்கள போடணும் சார்” – 5 கதாநாயகிகள்

சினிமா, திரைத் துளி
ஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் 'ஜித்தன்' ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் “ஒங்கள போடணும் சார்”. ஜித்தன் ரமேஷுடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், “நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாகத் தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்கும். சவாலாக அந்த வேலையை எடுத்துச் செய்யும் இந்த வாலிபர்களும் இளம்பெண்களும் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொள்கின்றனர். அது என்ன பிரச்சினை? அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதைக் கலகலப்பான த்ரில்லராக உருவாக்கி இருக்கிறோம். வழக்கமாக படங்களில் ஆண்கள் தான் பெண்களைக் கிண்டல் கேலி செய்...
பிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2

பிரபு, பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் – 2

சினிமா, திரைத் துளி
அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் "சார்லி சாப்ளின் 2”. இந்தப் படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது. முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ்,விவேக் பிரசன்னா, ரவிமரியா, T.சிவா ,கிரேன் மனோகர், சாம்ஸ், காவ்யா, பார்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ் கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தைப் பற்றி, “என் படங்களில் காமெடியும் கமர்ஷியலும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். சார்லி சாப்ளின்...
1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா

1983 வேர்ல்ட் கப் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்கிறார் ஜீவா

சினிமா, திரைத் துளி
எண்ணிக்கையை விட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் ஜீவா. “சங்கிலி புங்கிலி படமும், கலகலப்பு-2 படமும் வெற்றி பெற்று எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அதற்குப் பிறகு நிறைய கதைகள் கேட்டேன். அதில் சிறந்ததாக கொரில்லா, ஜிப்ஸி என இரண்டை மட்டும் தேர்வு செய்தேன். இந்த இரண்டு படங்களும் ரொம்பச் சிறப்பாக வந்திருக்கு. தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போ சூப்பர்குட் பிலிம்ஸ் 90வது படமாக SGF 90 படத்தில் நானும், அருள்நிதியும் சேர்ந்து நடிக்க, படப்பிடிப்பு விறுவிறுப்பா போயிட்டிருக்கு. படத்தின் தலைப்பு கூடிய சீக்கிரம் சொல்வோம். ஜாலியான படமா இருக்கும்” என்றார் ஜீவா. மல்டி-ஸ்டார் படங்களை எப்படி செலக்ட் செய்றீங்க? “முதல்ல கதை. அதற்கப்புறம் கேரக்டர். இரண்டும் பிடிச்சிருந்தா ஓ.கே சொல்வேன். நல்ல டீம் அமைஞ்சா நடிக்கத் தயாராயிடுவேன். அப்படி நடிச்சி ஹிட்டான படம் தா...
பேட்ட விமர்சனம்

பேட்ட விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ட்ரெய்லரில் பார்த்த அதே இளமையான துள்ளலான ஸ்டைலான ரஜினியைத் திரையில் கொண்டு வந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். எதற்கும் காத்திருக்காமல் படம் நேரடியாக ஒரு மாஸ் ஃபைட் சீனில் இருந்து தொடங்குகிறது. ரஜினிஃபை பண்ணப்பட்ட படத்தில் ரஜினி எது செய்தாலும் அழகாக உள்ளது. திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில் படத்தின் முதற்பாதி ஒரு வண்ணக்கவிதையாய்க் கண்ணைக் கவர்கிறது. திணிக்கப்படாமல், அதே சமயம் வசனங்களில் அரசியலையும் கொண்டு வந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஹாஸ்டலில் ரேகிங் நடக்கும்பொழுது, அதை நிறுத்தும் ரஜினி, 'புதுசா வர்றவங்களை வர விடாமல் இப்படித்தான் ஓரம் கட்டி வைப்பீங்களா?' என சீனியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்பது போல் வரும் வசனம் ஓர் உதாரணம். அனைவரும் பார்க்க விரும்பிய ரஜினியைத் திரையில் கொண்டு வந்த கார்த்திக் சுப்புராஜ், கதையில் அதிகம் மெனக்கெடவில்லை. ஒரு பழி வாங்கும் கதையை எந்தப் பெரிய திருப்பமும் இல்ல...
விஸ்வாசம் விமர்சனம்

விஸ்வாசம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எவருக்கு எவர் மீது விசுவாசம் எனத் தெரியவில்லை. நான்காவது முறையாகத் தொடர்ந்து இணைகின்றனர் இயக்குநர் சிவாவும், அஜித்குமாரும். தனது மனைவி நிரஞ்சனா சொன்ன ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, 10 வருடங்களாக தன் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து வாழ்கிறார் தூக்குதுரை. மகளின் உயிருக்கு ஆபத்தெனத் தெரிந்து, அதிலிருந்து மகள் ஸ்வேதாவைப் பாதுகாக்க களமிறங்குகிறார் தூக்குதுரை. ஸ்வேதாவிற்கு யாரால் ஏன் ஆபத்து என்பதும், அதிலிருந்து எப்படி தன் மகளை மீட்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. வீரம் படத்தின் 2.0 என்றே சொல்லவேண்டும். வேஷ்டி சட்டையும், வெண் தாடி முடியும், இரண்டு படத்தின் அஜித்தின் உருவ அமைப்பிற்குப் பொருந்துவது மட்டுமல்லாமல், சொந்த ஊரில் அலப்பறையைக் கூட்டும் முதல் பாதி, நாயகியின் ஊரில் வில்லனிடமிருந்து மகளைக் காப்பாற்றும் இரண்டாம் பாதி என கதையிலும் பெரிய மாற்றமில்லை. ஆனால், வீரம் படத்தில் சந்தானத்துடன்...