Shadow

சினிமா

இது ரசிகர்களின் பேட்ட

இது ரசிகர்களின் பேட்ட

சினிமா, திரை விமர்சனம்
தீபாவளி பொங்கலுக்கான காத்திருப்புகள் மறைந்து போயிருந்த போதிலும், பட்டாசுகளும் பொங்கப்பொடியும் நினைவுகளின் தூசிக்கு அடியில் உறங்கிப் போயிருந்தாலும் எப்போதுமே குறையாமல் இருப்பது ரஜினி பட ரிலீஸ் மட்டுமே. லிங்கா, கோச்சடையான் மழுங்கி, கபாலி நல்லா இருக்கா இல்லையா என்று மழுப்பி காலா நல்லா இல்லன்னு சொன்னா இந்துத்துவா ஆகிருமோன்னு குழம்பி, 2.0 தலைவா 'உன்னால டயலாக்க ஒழுங்கா பேச முடியல தலைவா, இனி நடிப்பு வேணாம்' எனப் பரிதாபம் கொள்ளச்செய்த நிலையிலும், "பேட்ட பேட்ட" என்ற பரபரப்பு உச்சத்திற்குச் சென்றிருந்தது என்றால் அதற்கு ஒரே காரணம் ரஜினி. எப்போதுமே ஜெயிக்கிற குதிரை அது. அந்தக் குதிரையை சரியான களத்தில் விட்டால் எப்படியிருக்கும் என்பதை செய்து காட்டி இருக்கிறது பேட்ட. படம் ஆரம்பித்ததில் இருந்தே ரஜினியிசம் தான். 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!' என்ற முதல் வசனத்தில் இருந்து, 'இந்த ஆட்டம் போதுமா கொழந்த?' என...
சிகை விமர்சனம்

சிகை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ZEE5 எனும் செயலியில் படம் நேரடியாக வெளியாகிறது. திரையரங்கு வெளியீட்டுக்கு வெளியே மாற்று வழிகளை நோக்கி தமிழ் சினிமா நகர்வது ஆரோக்கியமான விஷயம். நெட்ஃப்ளிக்ஸில் பிரகாஷ்ராஜ் நடித்த 'சில சமயங்களில்' படம் வெளியானதும் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்று. பிரசாத் ஒரு பிம்ப் (Pimp). சந்தோஷ் எனும் இளைஞனுக்கு நிம்மி எனும் பெண்ணை அனுப்பி வைக்கிறான். போன நிம்மி விடிந்த பிறகும் திரும்பி வராததோடு, அவளைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என பதற்றம் ஆகிறான் பிரசாத். சந்தோஷின் வீட்டில் சந்தோஷ் இறந்து கிடக்க, நிம்மிக்கு என்ன ஆனது என விறுவிறுப்பாகப் பயணிக்கிறது படம். சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக, விறுவிறுப்பாகவும் அழுத்தமாகவும் பயணிக்கிறது கதை. இரண்டாம் பாதியின் கனமான கதையோ, முற்றிலும் வேறு ஜானருக்குப் படத்தை அழைத்துச் செல்கிறது. ஆனால் முதற்பாதி போல் கோர்வையாக இல்லாமல், இன்ன உணர்வினைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்திய...
தமிழில் தெலுங்கு ‘உஷாரு’

தமிழில் தெலுங்கு ‘உஷாரு’

சினிமா, திரைத் துளி
திரையுலகிற்கு எப்பொழுதுமே பிராணவாயுவாக இருப்பது புது முகங்களை வைத்து எடுக்கப்படும் படங்களே! ஜிக் ஜாக் இல்லாமல் யதார்த்த படைப்புகளே சினிமாவின் சக்சஸ் பார்முலா. அந்த வகையில் தெலுங்கில் புதுமுகங்கள் நடித்து சமீபத்தில் வெளியான படம் "உஷாரு". உஷாரு என்றால் தமிழில் புத்துணர்வு என்று பொருள்படும். சமீபத்தில் வெளியான இந்தப் படம் ஆந்திராவில் கொண்டாடப்படுகிறது. சுமார் 3.50 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் சுமார் 20 கோடி வசூலை எட்டும் என்பது தெலுங்குத் திரையுலகின் வசூல் கணக்கு. இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர். இந்தப் படத்தை, ஜீவா நடித்து வெற்றி பெற்ற தெனாவட்டு படத்தை இயக்கிய V.V.கதிர் தமிழில் ரீமேக் செய்ய உள்ளார். பலத்த போட்டிக்குப் பிறகு படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் J.பணீந்திரகுமார் தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே பிரபுசாலமன் இயக்கத்தில் லாடம் என்ற படத்தைத் ...
அடங்க மறு விமர்சனம்

அடங்க மறு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நேர்மையான அதிகாரியாகப் பணி புரிய நினைக்கும் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷ், தன் உயரதிகாரிகளால் பணிந்து போகச் சொல்லி அடக்கப்படுகிறார். அதையும் மீறி, அவர் நேர்மையாக இருக்க முயல்வதால் அவரது குடும்பத்தையே இழக்கிறார். அதன் பிறகாவது சுபாஷ் அடங்குவான் என நினைத்தவர்களுக்கு, சுபாஷ் கொடுக்கும் பதிலடி தான் படம். பழிவாங்கும் கதை என ஒரு வரியில் சுருக்கலாம். எனினும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்யப் பயப்படவேண்டும் என்பதுதான் படத்தின் தீம். சகல வித்தைகளையும் கரைத்துக் குடித்த ஒரு ஹை-டெக் காப்பாக சுபாஷ் எனும் பாத்திரத்தில் ஜெயம் ரவி கலக்கியுள்ளார். அவருக்கும் இன்னும் தனி ஒருவன் ஹேங் ஓவர் போகவில்லை என்றே சொல்லவேண்டும். சுபாஷின் அழகான காதலி அனிதாவாக ராஷி கண்ணா நடித்துள்ளார். படத்தில் மொத்தம் நான்கு வில்லன்கள். கோடீஸ்வர தந்தை நால்வர், அவர்களது நான்கு உருப்படாத அயோக்கிய மகன்கள். இவர்களின் கதாபாத்திர வார்ப்பி...
சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு ஜாலியான படம், அதைத் தொடர்ந்து ஒரு சீரியசான படமென்று தனக்கொரு பாணியை உருவாக்கி வருகிறார் விஷ்ணு விஷால். ராட்சசன் எனும் த்ரில்லர் படத்தைத் தொடர்ந்து, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஸ்டைலில் முழு நீள நகைச்சுவை படமாக, அவரது நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளிவந்துள்ளது. எந்த வம்புதும்புக்கும் போகாத மாaணிக்கமாக வாழ்பவர் கான்ஸ்டபிள் சத்யமூர்த்தி. தான் பிறவி எடுத்ததே, காவல்நிலையத்தில் உள்ள சக காவலதிகாரிகளுக்கு உணவு வாங்கிவரத்தான் என்று கடமையில் கண்ணுமாய்க் கருத்துமாய் இருப்பார். அவர் ஹாஃப்-பாயிலை வாயில் வைக்கக் கொண்டு போகும் பொழுது யாராவது தட்டி விட்டால் மட்டும் பாட்ஷாவாக ருத்ர தாண்டவம் ஆடிடுவார். இந்த ஹாஃப்-பாயில் பலவீனம் சத்யமூர்த்தியை எங்குக் கொண்டு போய் நிறுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை. தொடக்கம் முதலே படம் நகைச்சுவையாகப் பயணித்தாலும், பெரும் தாதாவான சைக்கிள் ஷங்கரின் கைத...
கனா விமர்சனம்

கனா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மகளிர் மட்டைப்பந்து (கிரிக்கெட்) பற்றிய முதற்படம். பாடலாசிரியராகவும் பாடகராகவும் பேர் பெற்ற அருண்ராஜா காமராஜா இயக்கிய முதற்படம். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதற்படம். இப்படி பல முதல் 'கனா'க்கள் திரை கண்டுள்ளது. "விளையாட்டைச் சீரியஸா பார்க்கிற நம்ம ஊர்ல, விவாசயத்தை விளையாட்டா கூடப் பார்க்க மாட்டேங்கிறாங்க" என்றொரு வசனம் உண்டு படத்தில். அதுதான் படத்தின் கதை. விவாசயமும், கிரிக்கெட்டும் முருகேசனின் இரு கண்கள். தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட முருகேசனின் மகள் கெளசல்யா, தந்தையை மகிழ்விக்கும் பொருட்டு இந்திய அணிக்காக விளையாடி உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என கனவு காண்கிறாள். அந்தக் கனா எத்தனை சவால்களுக்கும், சோதனைகளுக்கும் பின் நிறைவேறியது என்பதே படத்தின் கதை. கெளசல்யாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இது நிச்சயம் ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதா, அதுவும் ஆண...
சீதக்காதி விமர்சனம்

சீதக்காதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரங்கு நிறைந்த பார்வையாளர்களின் கைத்தட்டலில் பரிணமிக்கும் மேடை நாடகக் கலைஞன், சுமார் 25 ஆண்டுகளில், விரல் விட்டு எண்ணக் கூடிய பார்வையாளர்கள் முன் சுருங்கி விடுகிறான். அரங்கத்திற்கு வாடகை தருவதே சிரமமாகிவிட்ட நிலையிலும், நடிப்பின் மேலுள்ள காதல் காரணமாகத் தொடர்ந்து நாடகம் நடத்துகிறார் ஐயா ஆதிமூலம். தனது பேரனுக்கான மருத்துவச் செலவினைப் பற்றிய பரிதவிப்போடு, சுஜாதாவின் 'ஊஞ்சல்' நாடகத்தில் உணர்ச்சிகரமாக நடித்துக் கொண்டிருக்கும்பொழுதே அமரராகிறார் ஐயா ஆதிமூலம். ஐம்பது ஆண்டு காலம் நடிப்பிற்காக மட்டும் வாழ்ந்த ஐயா, அவரது மறைவிற்குப் பின்னும் நடிப்பின் மேலுள்ள காதலால், யார் மூலமாகவாது நடித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் அவரது பேரனின் மருத்துவச் செலவுக்கும், அவரது நாடகக் குழுவுக்கும் பணம் கிடைக்கிறது. ஆக, ஐயா ஆதிமூலம் செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதி போல், தன் குடும்பத்தினருக்கும் நாடகக் குழுவிற்கும...
‘பேட்ட’ திரைப்படத்தின் சர்வதேச உரிமை

‘பேட்ட’ திரைப்படத்தின் சர்வதேச உரிமை

சினிமா, திரைத் துளி
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது பேட்ட. இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையைப் பிரபல நிறுவனமான ‘மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ பெற்றுள்ளது. இதற்கு முன் இந்நிறுவனம், ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு பிடிச்சவன்’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ’வி ஐ பி 2’, ’துப்பாக்கிமுனை’ உள்ளிட்ட படங்களை இந்நிறுவனம் உலக நாடுகளில் வெளியிட்டது. மேலும், விரைவில் திரைக்கு வரவுள்ள ’அடங்கமறு’ படத்தினையும் இந்நிறுவனமே வெளியிடவுள்ளது. வெளிநாடு வெளியீடு உரிமையைப் பெற்ற ‘மலேசிய மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’ நிறுவனம் வரும் 2019 ஜனவரி பொங்கல் திருநாளில் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்தின் உரிமையைப் (இந்தியா தவிர்த்து) பெற்றுள்ளதாக அந்நிறுவன உரிமையாளர் ’டத்தோ’ மாலிக் தெரிவித்துள்ளார்....
பயங்கரமான ஆளு விமர்சனம்

பயங்கரமான ஆளு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இரட்டை வேடங்களில் நடித்துப் படத்தையும் இயக்கியுள்ளார் அரசர் ராஜா. சிவா ஒரு பத்திரிகையாளன், எசக்கி ஒரு குடிகாரன். பார்ப்பதற்கு இருவரும் ஒன்று போல் இருப்பார்கள். திடீரென சிவா காணாமல் போகிறான்; எசக்கியோ இறந்துவிடுகிறான். காணாமல் போன சிவா வேறொரு ஆளாக மீண்டு வருகிறான். சிவா எப்படி ஏன் பயங்கரமான ஆளாக மாறுகிறான் என்பதும், அவனை எப்படிக் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர் என்பதும்தான் படத்தின் கதை. படத்தின் படத்தொகுப்பை, சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு ஏற்ற வகையில் இன்னும் க்ரிஸ்ப்பாகக் கொடுத்திருக்கலாம். இப்பொழுது தொலைக்காட்சித் தொடர்களிலேயே போட்டி போட்டுக் கொண்டு மொத்த வித்தையையும் இறக்கும் காலமிது. நாயகனின் முக பாவனைகளில் ஏனோ தானோ எனக் கடமைக்கு உள்ளது. உளமொன்றி அவர் இன்னும் திறம்பட நடித்திருக்கலாம். நகைச்சுவைக்காக கஞ்சா கருப்புவும், போண்டா மணியும் திணிக்கப்பட்டுள்ளதால் கதையோட...
இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ

இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
‘கோகோ மாக்கோ’ திரைப்படத்தை இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் வகையில், காதல், நகைச்சுவை மற்றும் இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் காதலர் தினத்தை ஒட்டிய ஒரு பயண அனுபவத்தைத் தரும் படமாக Crazy Musical Romantic Road Trip Comedy இருக்கும் என்கிறார் இயக்குநர் அருண்காந்த். இவர் யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கவில்லை என்கிற போதிலும், எழுத்து - இயக்கத்துடன் இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச்சேர்ப்பு ஆகிய பணிகளையும் செய்திருக்கிறார். நாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடிக்கிறார். இவர் துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாயகியாகப் புதுமுகம் தனுஷாவுடன் தரமணி படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடி...
பிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்

பிங்க்: அமிதாப் பாத்திரத்தில் அஜித்

சினிமா, திரைத் துளி
Bayview Projects LLP நிறுவனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைக்கிறார் போனி கபூர். விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், பாக்ஸ் ஆபிஸிஸ் வசூலையும் அள்ளிய “பிங்க்” எனும் ஹிந்திப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் இது. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மூலம் பாராட்டுக்களைக் குவித்த H. வினோத் இந்தப் படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதி செய்யப்பட்ட பின் விரைவில் அறிவிக்கபடுவார்கள். இந்தப் படம் இன்று அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. “ 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு நாள் அஜித் பிங்க் படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தைத் தெரிவித்தார். ...