Shadow

சினிமா

சித்திரம் பேசுதடி 2 விமர்சனம்

சித்திரம் பேசுதடி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2006 ஆம் ஆண்டு, மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான ‘சித்திரம் பேசுதடி’ படத்தினைத் தயாரித்தவர்கள் “உலா” எனும் படத்தை ஆறு வருடங்களுக்கு முன் தொடங்கினார்கள். 2013 இல், படத்தின் தயாரிப்பாளரான ஸ்ரீகாந்த் லக்ஷ்மன், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’க்காக விளையாடிய ட்வெயின் பிராவோவை, ஒரு பாடல் காட்சிக்காக ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. சாஜன் மாதவின் இசையில் ‘டல்மேனி டல்மேனி டகுல் காட்டுது’ என்ற பாடலிற்கு, வேட்டி கட்டிக் கொண்டு ட்வெயின் பிராவோ ஆடும் நடனம் நன்றாக இருக்கிறது. திரையில் உலா வர வாய்ப்புக் கிடைக்காமல் இத்தனை காலம் கிடப்பில் இருந்த படம், ‘சித்திரம் பேசுதடி 2’ ஆகப் பெயர் மாற்றம் பெற்றுத் திரையேறுகிறது. விதார்த், அஜ்மல், அஷோக், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன் என ஐந்து பிரதான பாத்திரங்கள். 48 மணி நேரத்தில், இந்த ஐந்து பேருக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் மையக்கரு. பிரதான பாத்திரங்கள் மட்டும...
வில்லியாக சோனாவின் புது அவதாரம்

வில்லியாக சோனாவின் புது அவதாரம்

சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளின் காலம் சில வருடங்கள் மட்டும் தான். எவ்வளவு தான் கவர்ச்சி காட்டினாலும் ஒரு சில கவர்ச்சி நடிகைகளைத் தவிர மற்ற அனைவரும் காலப்போக்கில் மறைந்து போய்விட்டனர். ஆனால், நடிகை சோனாவோ சற்று வித்தியாசமானவர். குசேலன், பத்துக்கு பத்து உள்ளிட்ட பல படங்களில் படு கவர்ச்சியாக நடித்திருப்பார். சில படங்களில் நடிகர் வடிவேலு மற்றும் விவேக்குடன் ஜோடியாக நடித்து நகைச்சுவையும் செய்திருப்பார். சில காலமாக கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் ஒதுங்கி நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த அவருக்கு மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் வரவே 'ஒப்பம்' போன்ற மலையாளப் படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் ஏற்று மலையாளத் திரையுலகில் நல்ல வரவேற்பைப் பெற்றார். மேலும் தமிழில் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த பொழுது ஸ்டார் குஞ்சுமோன் தயாரிப்பில் வி.விநாயக் நடிப்பில் அவதாரவேட்டை படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக...
தில்லுக்கு துட்டு 2 விமர்சனம்

தில்லுக்கு துட்டு 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாயாவிடம் யாராவது காதலைச் சொன்னால், அவர்களை அவளது தந்தை துர்மந்திரவாதியான கருடராஜா பட்டதாரி ஏவி விட்ட துஷ்ட சக்தி உண்டு இல்லை எனச் செய்துவிடுகிறது. சந்தானம் மாயாவிடம் காதலைச் சொல்ல, அந்தப் பேய் அவரையும் போட்டுப் புரட்டியெடுக்கிறது. சந்தானம் காதலில் எப்படி வெல்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஜில்.. ஜங்.. ஜக் படத்தில் பை எனும் பைந்தமிழாகக் காமெடியில் கலக்கியிருக்கும் பிபின், இப்படத்தில் துர்மந்திரவாதி கருடராஜ பட்டாதரியாக வருகிறார். அவர் முதலில் டெரராக அறிமுகமாகி, சந்தானம் அவரைச் சந்தித்த பின் நகைச்சுவைக்கு  மாறுகிறார். தில்லுக்கு துட்டு படத்தில், இரண்டாம் பாதி நகைச்சுவைக்குப் பொறுப்பேற்றிருந்த நான் கடவுள்’ ராஜேந்திரன், இப்படத்தின் சந்தானத்தின் மாமாவாக படம் முழுவதும் வந்தாலும், முதற்பாகம் அளவிற்கு நகைச்சுவைக்கு உதவவில்லை. நாயகியாக, மாயா பாத்திரத்தில் ஸ்ரீதா சிவதாஸ் அறிமுகமாகியுள்ள...
டிராகன் காதல்

டிராகன் காதல்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
யூனிவர்சல் பிக்சர்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டிரீம்வொர்க்ஸ் அனிமேஷன், “ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: தி ஹிட்டேன் வேர்ல்ட் (How to train your Dragon: The Hidden World) படத்தினை மார்ச் 22 அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது. ஹிக்கப், டூத்லெஸ் மற்றும் அவர்களது வழக்கத்திற்கு மாறான நட்பின் புதிய அவதாரமான – இந்த வரிசையின் மூன்றாவது பாகமான இது. உலகம் முழுவதும், பல்வேறு வயதினரின் இதயத்தைக் கொள்ளை கொண்டதாகும். இந்தியாவில், இத்திரைப்படம் மார்ச் 22 அன்று, 2டி, 3டி மற்றும் ஐமேக்ஸ் (IMAX) வடிவங்களில் வெளியாகவுள்ளது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. எதிர்பாராத ஆபத்தை எதிர்கொள்ளும் தைரியத்தைக் கண்டறிதல் தான் படத்தின் ஆச்சரியமூட்டும் மையக்கரு. இத்திரைப்படம், வளரிளம் பருவத்திலுள்ள வைக்கிங் ஹிக்கப் மற்றும் அவனது நைட் ஃபியூரி டிராகன் இடையிலான நட்பில் தொடங்கி, அவர்களது சாகசங்...
பொதுநலன் கருதி விமர்சனம்

பொதுநலன் கருதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மக்களின் பொதுநலனில் அக்கறை உள்ளதால், கம்மியான வட்டிக்குப் பணம் தருகிறோம் எனத் தனக்குத் தொழில் கற்றுக் கொடுத்தவரைக் கொன்றுவிட்டுத் தொழிலுக்கு வருகிறார்கள் உத்திரமூர்த்தியும், பாபு சேட்டும். இருவரும் தங்களுக்கென ஓர் எல்லையை வகுத்துக் கொண்டாலும், வளரத் தொடங்கியதும் இருவரில் யார் பெரியவரென்ற போட்டியும் பொறாமையும் முளைவிடுகிறது. அவர்கள் தொழிலாலும், அவர்களுக்கிடையேயான போட்டியாலும், யார் யார் பாதிப்படைகிறார்கள் என்பதே படத்தின் கதை. உத்திரமூர்த்தியிடம் வேலை செய்யும் நெப்போலியனாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகன் என்று சொல்லக்கூடிய கதாபாத்திர அம்சங்கள் அனைத்தையும் பெற்று ஒரு ரவுடியாக அனைவரையும் போட்டுப் பிளக்கிறார். அவரது உயரத்திற்கு ஏற்ற ரஃப்பான ஒரு பாத்திரத்தில் முதன்முறையாகத் தோன்றியுள்ளார். உத்திரமூர்த்தியாக யோக் ஜபீ. அவரை இது போல் பாத்திரத்தில் பலமுறை பார்த்திருந்தாலும், அவரது...
கலை சினிமாஸ் – இயக்குநர் விஜய் ஸ்ரீ

கலை சினிமாஸ் – இயக்குநர் விஜய் ஸ்ரீ

சினிமா, திரைத் துளி
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி நடிப்பில் "தாதா 87" படத்தை கலை சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. "தாதா 87" படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது, கலை சினிமாஸ் நிறுவனத்தின் இரண்டாம் படத்தின் பூஜை, பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று நடைபெற்றது. வல்லக்கோட்டை முருகன் கோவிலில் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது. இப்படத்தை "தாதா 87" படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இயக்குகிறார். இவர் கலை சினிமாஸ் நிறுவனத்துடன் இணையும் இரண்டாவது படம் இது. பல புதிய பரிமாணங்களுடன் உருவாகும் இப்படம், திரையரங்கில் வெளியாகும் போது இடைவேளையின்றி திரையிடப்படும் என்றும், படத்தின் முதல் காட்சி நடுஇரவு 12 மணிக்கு திரையிடப்படும் என்றும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இப்படத்தின் நடி...
கண்ணை நம்பாதே – க்ரைம் த்ரில்லர்

கண்ணை நம்பாதே – க்ரைம் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
பிப்ரவரி 22ஆம் தேதி, சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகும் 'கண்ணே கலைமானே' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் புதிய படமான 'கண்ணை நம்பாதே' பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று சம்பிரதாய எளிய சடங்குகளுடன் துவங்கியது. சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமான இந்தப் படத்தை "இரவுக்கு ஆயிரம் கண்கள்" படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். V.N. ரஞ்சித் குமார் படத்தைத் தயாரிக்கிறார். இயக்குநர் மு.மாறன் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையில் தனது முதல் படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்திலேயே தனது திறமைகளைக் காட்டியிருந்தார். தற்போது அதே வகையில், இந்தப் படத்தில் தற்போது க்ரைம் விஷயங்களையும் சேர்த்திருக்கிறார். "என் முதல் படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ஆரம்பித்த போது பார்வையாளர்கள் நல்ல கதைகளை ஆதரிப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் கதையை எழுதினேன். இருப்பினும், என் எதிர்பார்ப்புகளை மீறி ரசிகர்க...
போதை ஏறினால் புத்தி மாறும்

போதை ஏறினால் புத்தி மாறும்

சினிமா, திரைத் துளி
சில மனிதர்களின் வாழ்வில், போதை மயக்கம் முக்கிய பங்கினை வகிக்கிறது. அது அம்மனிதர்களின் நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் திசை திருப்புகிறது. இந்த மாதிரி விஷயங்களை தீவிரமாகப் பேசும் ஒரு படம் தான் 'போதை ஏறி புத்தி மாறி'. 'ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ்' சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குநர் கே.ஆர்.சந்துரு இயக்குகிறார். பிரபலமான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே பி இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும் பணிபுரிகிறார்கள். படத்தின் தலைப்பே மொத்த படத்தைப் பற்றியும் சொல்லும். சீட்டின் நுனிக்கே வர வைக்கும் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட ஒரு த்ரில்லர் படமாக இது இருக்கும். குறும்படங்களில் நாயகனாகக் கலக்கிய தீரஜ் இந்தப் படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார். "தீரஜ் என்னுடைய நல்ல நண்பர். நாங்கள் குறும்படங்களில் ஒன்றாகப் பணியாற்றினோ...
சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’

சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’

சினிமா, திரைத் துளி
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம் "மிஸ்டர் லோக்கல்". "இந்தப் படத்துக்காக பல்வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் படத்தின் கதைக்கு "மிஸ்டர் லோக்கல்" என்கிற தலைப்பு தான் பொருத்தும் என்பது எங்கள் அனைவரின் ஏகோபித்தக் கருத்தாகும். எங்கள் கதாநாயகன் சிவகார்த்திகேயன் திரையில்தரும் சக்தி மிகவும் பாசிடிவ் ஆனது. அவரது எனர்ஜியைப் பார்க்கும் போது, அவருடன் போட்டிப் போடவேண்டும் என்கிற ஆசை ஒரு இயக்குநராக எழுந்தது. கதாநாயகி நயன்தாரா ஒரு அதிசயம். திரையில் அவர் அற்புதங்கள் செய்கிறார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எங்களுக்கு ஒரு மிகப் பெரிய தூண். அவரது செயல் திறனும், ஒரு கடை நிலை தொழில்நுட்பக் கலைஞரிடம் கூட அவர் வைத்து இருக்கும் தொழில் ரீதியான உறவு அவரது வெற்றிக்கு விதை என்றால் மிகை ஆகாது. 'மிஸ்டர் லோக்கல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் ...
இளையராஜா 75இல் எல்.கே.ஜி. ட்ரெய்லர்

இளையராஜா 75இல் எல்.கே.ஜி. ட்ரெய்லர்

சினிமா, திரைத் துளி
நகைச்சுவை யாரும் செய்து விட முடியும், ஆனால் அரசியல் நையாண்டிப் படங்களை எடுக்க நல்ல கதை தேவைப்படும். அப்போது தான் பெரிய அளவு பார்வையாளர்களைச் சென்றடையும். ஆர்.ஜே. பாலாஜியின் LKG படத்தின் சிங்கிள் பாடலான "எத்தனை காலம் தான்" பாடல் நம்பமுடியாத வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இது யூ-ட்யூப் பார்வைகள், சமூக ஊடகங்கள் தாண்டி ரேடியோ ஸ்டேஷன்களிலும் வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. நையாண்டியான விஷயங்களைக் கொண்டிருந்த இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. வெளியான சில மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்திருப்பது என்பது மிகவும் சுவாரசியமான தகவல்.  இது குறித்து இயக்குநர் கே.ஆர்.பிரபு கூறும்போது, "ட்ரைலருக்கு எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். உண்மையில், ட்ரெய்லரில் பார்த்தது கொஞ்சம் தான், படத்த...
மேரி க்வீன் ஆஃப் ஸ்காட்ஸ் விமர்சனம்

மேரி க்வீன் ஆஃப் ஸ்காட்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'Queen of Scots: The True Life of Mary Stuart' என்ற ஜான் கை-யின் (John Guy) புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வரலாற்றுப்படம் இது. 15 வது வயதில் கல்யாணமாகி, 16 வது வயதில் தாய்நாடான ஃபிராண்ஸின் மகாராணியாகி, 18 வயதில் விதவையாகி, மறுமணம் செய்து கொள்ள விரும்பாமல் தனது தந்தை நாட்டிற்குத் திரும்பி, ஸ்காட்லாந்தின் ராணியாகப் பதவியேற்கிறார் மேரி ஸ்டூவர்ட். அவரது சகோதரி முறையுடைய மணமாகாத எலிசபெத் I, இங்கிலாந்தின் ராணியாக உள்ளார். மேரியின் வரவால், எலிசபெத்தின் அரியணைக்கு ஆபத்து வரலாமென எச்சரிக்கப்படுகிறார். ஏனெனில் மேரிக்கும் அதற்கான உரிமையுண்டு. கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த மேரியை, ஸ்காட்லாந்து ப்ரொடஸ்டன்ட்ஸ் ராணியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மேலும், ஒரு பெண் ஆள்வதா என்றும் உள்ளுக்குள் புகைச்சலோடு உள்ளனர் ஆண்கள். எனவே மேரிக்கு எதிராக உள்நாட்டில் தொடர்ந்து கலகங்களை உருவாக்கி வருகிறார...
எஸ்கேப் ரூம் விமர்சனம்

எஸ்கேப் ரூம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தலைப்பைக் கொண்டே படத்தின் கதையைச் சுலபமாக யூகித்துவிடலாம். ஜோ, பென், அமாண்டா, மைக், ஜேசன், டேனி ஆகிய ஆறு பேரையும் ஒரு வீட்டில் அடைத்து வைக்கின்றனர். அங்கு ஒரு க்ளூ கிடைக்கும். அதை உபயோகித்துத் தப்பித்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் மரணம் உறுதி. அதிலிருந்து எத்தனை பேர் எப்படித் தப்பித்தார்கள் என்பதுதான் படத்தின் கதை. நெருப்பைக் கக்கும் ஓவனாக மாறும் அறை, உறைய வைக்கும் பனியைக் கொண்ட அறை, நழுவும் தரைத்தளத்தைக் கொண்ட அறை, விஷ வாயு பரவும் அறை, புத்தியைப் பேதலிக்க வைக்கும் அறை, ஆளை நசுக்கும் சுவர்கள் கொண்ட அறை எனப் படத்தில் வரும் ஒவ்வொரு அறையும் மரண பயத்தைக் காட்டுவன. குறிப்பாக நழுவும் தரைத்தளத்தைக் கொண்ட அறையின் கலை வேலைப்பாடு பிரமிக்க வைக்கும் நேர்த்தியும் அழகும் கொண்டது. அங்கு அனைத்துமே தலைகீழாக இருக்கும். மின்விசிறி தரையிலும், மேஜை நாற்காலிகள் அந்தரத்தில் தொங்கியவண்ணமும் இருக்கும். பனிவெள...
நெஞ்சில் ஒரு ஓவியம் – காதல் கலந்த ஹாரர் படம்

நெஞ்சில் ஒரு ஓவியம் – காதல் கலந்த ஹாரர் படம்

சினிமா, திரைத் துளி
ஸ்ரீ விஷ்ணு பாதம் மூவி மேக்கர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் K.ஜோதிபிள்ளை, சுகுணா கந்தசாமி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் "நெஞ்சில் ஒரு ஓவியம்". கதாநாயகனாகத் தங்கரதம் படத்தில் நடித்த வெற்றி நடிக்கிறார். கதாநாயகியாக அக்ரிஷா நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக K.ஜோதிபிள்ளை நடித்துள்ளார். மற்றும் போண்டாமணி,ஜெயமணி, யூசுப், தளபதி தினேஷ், பாப்சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் K.ஜோதிபிள்ளை, "இது ஒரு காதல், செண்டிமெண்ட், காமெடி கலந்த ஹாரர் திரைப்படம். மூன்று கோணங்களில் பயணிக்கும் திரைக்கதையை உள்ளடக்கிய கதை இது. இந்தப் படத்தில் கதாநாயகி அக்ரிஷாவிற்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் அவரைச் சுற்றித்தான் இந்த மூன்று திரைக்கதையும் பயணிக்கும். ஓவியராக இருக்கும் நாயகன் வெற்றி, பெயின்ட்டிங் துறையில் மிகப்பெரிய சாதனை புரிவதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண...
அதே விஜய் தேவரகொண்டா; ஆனால் வேற அர்ஜுன் ரெட்டி

அதே விஜய் தேவரகொண்டா; ஆனால் வேற அர்ஜுன் ரெட்டி

சினிமா, திரைத் துளி
ஜி.ஆர் வெங்கடேஷின் பாக்யா ஹோம்ஸ் வழங்க, பிஸினஸ்மேன், ஹலோ மற்றும் தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் படங்களைத் தயாரித்த ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி தயாரிக்கும் புதிய படம் “அர்ஜுன் ரெட்டி". தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, தமிழில் நோட்டா படத்தின் மூலம் பிரபலமான விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.படத்தைப் பற்றி தயாரிப்பாளர் A.N.பாலாஜி, "தெலுங்கில் 'துவாரகா' என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற படத்தைத்தான் தமிழில் 'அர்ஜுன்ரெட்டி' என்ற பெயரில் தயாரித்துள்ளோம். அர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் தெலுங்கில் வெளியான விஜய்தேவர் கொண்டாவின் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே! நோட்டா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின்...