Shadow

சினிமா

புது மெட்ரோ ரயிலு – கீர்த்தி சுரேஷ்

புது மெட்ரோ ரயிலு – கீர்த்தி சுரேஷ்

சினிமா, திரைச் செய்தி
‘சாமி ஸ்கொயர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “இந்தப் படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நான் நடித்திருக்கிறேன். சாமி படத்தில் அவரின் நடிப்பில் ஏற்படுத்திய பிரமிப்பு என்னால் ஏற்படுத்த முடியுமா என்றால் முடியாது. ஆனால் என்னுடைய ஸ்டைலில் முயற்சித்திருக்கிறேன். முதலில் நான் இதனை ஏற்கத் தயங்கினேன். ஆனால் இயக்குநர் தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதனால் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தைப் பார்த்து வியந்து அவரின் ரசிகையாகிவிட்டேன். இந்தப் படத்தில் நடைபெற்ற பல சுவராசியமான சம்பவங்களை படத்தின் வெற்றிவிழாவில் பகிர்ந்துகொள்கிறேன்” என்றார். படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இயக்குநர் ஹரியுடன் பணியாற்றும் போது நேரம் குறித்த திட்டமிடல் பற்றி எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பாக இ...
சிவாஜி: கமல்: விக்ரம் – பிரபு

சிவாஜி: கமல்: விக்ரம் – பிரபு

சினிமா, திரைச் செய்தி
சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தேறியது. விழாவில் பேசிய நடிகர் பிரபு, “அப்பாவுடன் சிறிய வயதில் இருந்தே நான் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசமாக நடிக்கவேண்டும் என்ற தேடல் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். உடலை ஏற்றுவார்; இறக்குவார்; குரலை மாற்றுவார். அதே போல் கமல்ஹாசனிடத்திலும் அந்த ஆர்வம் இருப்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். அந்தப் பாதையில் என்னுடைய அருமைத்தம்பி சீயான் விக்ரமும் பயணிக்கிறார். அவருடன் ராவணா, கந்தசாமி அதைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் நடிக்கும் போது நான் உணர்ந்த ஒரு விசயம் என்னவெனில், அவர் நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்” என்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் பேசுகையில், “வெற்றிப் பெற்ற ஒரு படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்குவது கடினமான பணி. அதிலும் கமர்ஷியல் வெற்றி பெற்ற சாமி படத்தைப் ப...
ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
225 மாடிகளைக் கொண்ட விண்ணைத் தொடும், ‘பேர்ள் (Pearl)’ எனும் கோபுர நகரமொன்றை ஹாங்காங்கில் நிர்மாணிக்கிறார் தொழிலதிபர் சாவ் லாங் ஜி. 3500 அடி உயரமான அந்தக் கோபுரத்தின் 96வது தளத்தில், ராக்கின் குடும்பம் மட்டும் தனியாக வசிக்கிறது. ராக், அந்தக் கோபுரத்தின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் காவலர் பொறுப்பை ஏற்கிறார். சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளுக்குப் பணி புரியும் கோரெஸ் போத்தா எனும் வில்லன், கோபுரத்திற்குள் புகுந்து, 96வது தளத்தில் தீ வைத்து, கோபுரத்தின் தானியங்கி தீயணைக்கும் பாதுகாப்பு வசதியையும் நிறுத்திவிடுகிறான். பிரம்மாண்டமான பேர்ள் நகரத்திற்குள் சிக்கிக் கொள்ளும் தன் குடும்பத்தை ராக் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை. ட்வெயின் ஜான்சன் எனும் ராக்-கோடு, இயக்குநர் ராசன் மார்ஷல் தர்பர் இணையும் இரண்டாவது படமிது. சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் படத்தில், ஸ்டேண்ட்-அப...
தமிழ்ப்படம் 2 விமர்சனம்

தமிழ்ப்படம் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2010 இல் வந்த தமிழ்படம், தமிழ்ப்படம் 2 ஆகப் புத்தும்புது பொலிவுடன் வந்துள்ளது. இந்த முறை, இயக்குநர் C.S.அமுதன் தமிழ்ப் படங்களின் பொதுத்தன்மையை மட்டும் பட்டும்படாமல் ஓட்டாமல், ஹாலிவுட் படங்கள், சம கால அரசியலின் அவலங்கள், மாஸ் ஹீரோ படங்களின் காட்சிகள், இயக்குநர்களின் படமெடுக்கும் பாணிகள், ரியாலிட்டி ஷோ அலப்பறைகள் எனத் தனது களத்தைப் பெரிதாக்கியுள்ளார். இந்தப் படத்தின் திரைக்கதையும் எங்கெங்கோ, எப்படியெப்படியோ பயணித்தாலும், ‘போலீஸ் அத்தியாயம்’ என்ற உப தலைப்பிற்கு ஏற்றவாறு திரைக்கதை ஊர்ந்து செல்கிறது. தேவர் மகன் கமல் ஹாசன் கெட்டப்பில் அறிமுகமாகும் ஷிவா, படத்தின் முடிவில் மீண்டும் தேவர் மகன் க்ளைமேக்ஸ்க்கே வந்துவிடுகின்றனர். இடையில், வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, பிசாசு, ஸ்பீடு, டெர்மினேட்டர் என இஷ்டத்திற்கு வலம் வருகிறது. எவ்வளவு யோசித்தாலும், முதல் பாகத்தின் காட்சிகள் எதுவும்...
மலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி

மலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி

சினிமா, திரைத் துளி
மதன் கார்க்கி பாகுபலியின் இரண்டு பாகங்களுக்கும், சமீபத்திய கிளாசிக்கல் ஹிட்டான 'நடிகையர் திலகம்' படத்துக்கும் வசனம் எழுதி, வசனகர்த்தாவாகவும் தன் முத்திரையை ஆழப் பதித்துள்ளார். இதன் மூலம், மதன் கார்க்கி மற்ற பிராந்திய மொழிகளில் உருவாகும் சரித்திர படங்களுக்கு, அதன் சாரம் மாறாமல் தமிழுக்கு வசனம் எழுதும் ஒரு 'நுழைவாயில்' ஆகியுள்ளார் என்றே சொல்லவேண்டும். தற்போது, நிவின் பாலியின் பிரம்மாண்டமான மலையாளத் திரைப்படமான 'காயம்குளம் கொச்சூன்னி' படத்திற்கு வசனம் எழுதி வருகிறார் மதன் கார்க்கி. 1800 ஆம் ஆண்டுகளின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்தப் படம், ராபின்ஹூட் போன்ற கதாபாத்திரத்தைச் சுற்றி அமைந்துள்ளது. படத்தைச் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, "இந்தப் படம் பண்டைக்கால பின்னணியில் அமைந்திருந்தாலும் மையக்கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதன். எனவே தனித்துவமாக இதைக் கையாள முடிவு செய்தோம். இது மிகவும...
காசு மேலே காசு விமர்சனம்

காசு மேலே காசு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிகச் சுலபமாய்க் கோடீஸ்வரராகப் பார்க்கிறார் மயில்சாமி. அதற்காக தன் மகனை, ஒரு பணக்கார பெண்ணாகத் தேர்ந்தெடுத்துக் காதலிக்க ஊக்குவிக்கிறார். ஆனால் நாயகியோ, ஒரு பிச்சைக்காரரின் மகள். பணக்கார வீட்டில் வேலை செய்பவரைப் பணக்காரி என நினைத்துக் கொள்கிறான் நாயகன். அந்தக் காதல் என்னானது என்பதும், மயில்சாமியின் பேராசை என்னானது என்பதுமே படத்தின் கதை. குறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் மிக ஜாலியான படம். மன்னார் வளைகுடா, இன்னுமா நம்மள நம்புறாங்க, கண்டேன் காதல் கொண்டேன் ஆகிய படங்களின் வசனகர்த்தா கே.எஸ்.பழனி முதல் முறையாக இயக்கியுள்ள படமிது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதோடு அன்றி கதாநாயகியின் தந்தையாகவும் நடித்துள்ளார் பழனி. படத்தின் பலம் அதன் கலகலப்பான வசனங்கள். உதாரணத்திற்கு, மயில்சாமியின் மனைவி, “ஏன் குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துட்டிருக்கீங்க?” எனக் கேட்பார். அதற்கு, “நீ குட்டி போட்ட ப...
அசுரவதம் விமர்சனம்

அசுரவதம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிலேயே கதை சொல்லிவிட்டார் இயக்குநர். நாயகன் அசுரனை வதம் செய்கிறார். அசுரனுக்கு ஓர் அழைப்பு வருகிறது. அதில் பேசும் குரல், ‘இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு சாவு’ என்கிறது. அடுத்து நடக்கும் சில நிகழ்வுகளில் அசுரன் அரண்டு போயிருக்கும் நிலையில் நாயகன் அறிமுகமாகிறார். அதன் பின் நடக்கும் ஆடு புலியாட்டமே படம். முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் வந்து, அபத்தமான நகைச்சுவை, பாடல்கள், பஞ்ச் டயலாக்குகள் போன்றவை எதுவுமின்றி, திசை மாறாமல் ஒரே நேர்க்கோட்டில் படத்தை நகர்த்தியமைக்கு இயக்குநருக்குப் பாராட்டுகள். சுருக்கமான பின் கதையில் கூறப்படும் பழி வாங்குவதற்கான வலுவான காரணத்தை யூகிக்க முடியாமல் திரைக்கதையைக் கொண்டு சென்றிருப்பது சிறப்பு. படத்திற்கு ௭ஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு மிகப் பெரிய பலம். படத்தின் பலவீனங்களில் ஒன்று பின்ணனி இசை. காட்சிக்கு ‘டெம்போ’ ஏற்ற வேண்டுமானால் காது கிழியும் சத்தத்துடன்தான் பின்ணன...
அனுமனும் மயில்ராவணனும் விமர்சனம்

அனுமனும் மயில்ராவணனும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முதல்முறையாக இந்தியாவில் தயாராகியுள்ள இதிகாசக் கதையம்சம் உள்ள 3D அனிமேஷன் முழுநீளத் திரைப்படம், ‘அனுமனும் மயில்ராவணனும்’ ஆகும். இராமாயண போரின் கடைசி நாளுக்கு முந்தைய நாளில், தரையில் வீழ்ந்து கிடக்கும் ராவணனைப் பார்த்த ராமன், "நிராயுதபாணிகளைத் தாக்குவது தர்மம் ஆகாது. நீ இன்று போய் நாளை வா" என்கிறார். அன்றிரவு அவமானத்தில் பொறுமிக் கொண்டிருக்கும் ராவணனுக்கு, அவன் தலைகளில் ஒன்று, மாயாவி மயில்ராவணனைக் கொண்டு ராமனைக் கொல்வதற்கான யோசனையைச் சொல்கிறது. அதற்கேற்ப மாயாவியான மயில்ராவணன், விபீஷ்ணனின் பலமான தற்காப்பை மீறி ராமனையும் லக்ஷ்மனனையும் கடத்தி விடுகிறான். தனியனாக அனுமன் எப்படி தன் பிரபுக்கள் இருவரையும் மீட்டார் என்பதே படத்தின் கதை. இப்படத்தின் இயக்குநர் டாக்டர் எழில்வேந்தன் ஒரு பல் மருத்துவர், அனிமேஷன் துறையில் உள்ள ஆர்வத்தால் அதைப் பயின்று, பின் இங்கிலாந்து சென்று வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட ...
மிஸ்டர் சந்திரமெளலி விமர்சனம்

மிஸ்டர் சந்திரமெளலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கார்த்திக்கும், கெளதம் கார்த்திக்கும் தந்தை மகனாகவே நடித்துள்ளதால் விசேட முக்கியத்துவம் பெற்றுள்ள படம். படத்தின் முதற்பாதி முழுவதுமே நவரச நாயகனுக்காக என்று பிரத்தியேகமாக எடுத்துள்ளனர். ஆனால், கதையோடு இயைந்து அதைக் கொடுக்காமல், இந்தக் காட்சியில் கார்த்திக் நடக்கிறார், கார்த்திக் காமெடி பண்ணுகிறார், இந்தக் காட்சியில் அவரது பிரத்தியேகமான மேனரிசம் வெளிப்படுகிறது எனக் கதையோடு ஒட்டாத காட்சிகளாக வைத்துள்ளனர். "நவரச நாயகன் கார்த்திக்கே, கெளதம் கார்த்திக்கிற்கு அப்பாவாக நடித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்" என்ற ரேஞ்சிற்கு உள்ளது திரைக்கதை. மெளன ராகத்தில், ரேவதியின் தந்தையாக வரும் ரா.சங்கரன், சந்திரமெளலி என்ற கதாப்பாத்திரமாக நினைவில் என்றும் நிற்பார். ஆனால், இந்தப் படத்தில், சந்திரமெளலி என்ற பாத்திரம் தெரிந்து விடவே கூடாது; கார்த்திக், கார்த்திக்காகவே தெரியவேண்டும் என்றே மெனக்க...
“அசுரவதம்: வதம் உண்டு வன்முறை இல்லை” – சசிகுமார்

“அசுரவதம்: வதம் உண்டு வன்முறை இல்லை” – சசிகுமார்

சினிமா, திரைச் செய்தி
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் "அசுரவதம்". "சசிகுமார் சாருக்கு இது மிக முக்கியமான ஒரு படம். இதுவரை அவர் செய்யாத ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் செய்திருக்கிறார். சசிகுமாருடன் இது எனக்கு 7 வது படம், எல்லாமே தனித்துவமான படங்கள். வெறும் 49 நாட்களில் மிக வேகமாக எடுத்து முடிக்கப்பட்ட படம். எழுத்தாளராக ஒரு இடத்தில் உட்கார்ந்து எழுதிக் கொண்டு இருந்தவரை இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் புரட்டி எடுத்திருக்கிறோம். கிடாரி படத்தில் அவருடன் பழகியிருக்கிறேன். அதனால் அவரும் சொன்ன விஷயங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்தார்" என்றார் ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன். "நான் இந்தப் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ், பிரேம், கதிர், சசிகுமார் என நிறைய பேர் காரணம். அவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. படத்தில் நிறைய ...
ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 – இறுதிச்சுற்று குறும்படங்கள்

ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 – இறுதிச்சுற்று குறும்படங்கள்

சினிமா
மூவி பஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மென்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும்படப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதற்கான விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், கியூப் சினிமா நிறுவன தலைமை செயலதிகாரி அரவிந்த் ரங்கநாதன், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்களை இயக்கிய இயக்குநர்கள் மற்றும் அந்த ஐந்து குறும்படங்களில் பணியாற்றிய கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூவி பஃப் ஃபர்ஸ்ட் கிளாப் சீஸன் -2 வின் போட்டிகள் ஜனவரி மாதம் இருபதாம் தேதியன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் சீஸனை விட மும்மடங்கு அளவில், அதாவது 750க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் போட்டியாளர்களாகப் பங்குபெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்துக...
டிக்: டிக்: டிக் விமர்சனம்

டிக்: டிக்: டிக் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வங்காள விரிகுடாவில் விழவிருக்கும் விண்கல்லைப் பூமிக்கு வெளியேவே அணு குண்டை ஏவிப் பிளக்கவேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு, ஆந்திரம், இலங்கை ஆகிய பகுதிகளில் சுனாமி ஏற்பட்டு, சுமார் 4 கோடி மக்கள் அழிந்துவிடுவர். இந்தியத் தற்காப்புப் படை, எப்படி நான்கு கோடி மக்களைக் காப்பாற்றுகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் மூவி என்ற வகையில் அசத்தியுள்ளனர் என்றே சொல்லவேண்டும். கன்னி முயற்சியில், நடை தளருவது இயற்கை எனினும் விழாமல் இலக்கை அடைவது சாதனையே! அந்தச் சாதனையை மெனக்கெடலில்லாத் திரைக்கதையால் பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை. 1998 இல் வெளிவந்த, 'ஆர்மகெடான்' ஹாலிவுட் படத்தில் இருந்து மையக்கருவை எடுத்துள்ளனர். உள்ளபடிக்குச் சொன்னால், அது ரசிக்கும்படியே உள்ளது. #னாவின் (அதாவது ஏதோ ஒரு நாட்டின்) அணு ஆயுதத்தைத் திருடும் அத்தியாயம் தான் படத்தின் ஸ்பீட் பிரேக்கர். விண்வெளி ஆராய்ச்சி நிலை...
ஆந்திரா மெஸ் விமர்சனம்

ஆந்திரா மெஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யானையிடம் இருந்து நான்கு எறும்புகள் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு வயதான ஜமீன்தாரிடம் அடைக்கலம் கோருகின்றன. யானை எறும்புகளைத் தேடி வருகின்றது. அந்தப் பணத்தால் யானை வாழ்ந்ததா அல்லது நான்கு எறும்புகள் வாழ்ந்தனவா என்பதே படத்தின் கதை. கதாப்பாத்திரங்களைக் காமிக்கலாக அறிமுகம் செய்கின்றனர். ஆனால், அந்த ஃப்ளோ படம் முழுவதும் தொடர்வதில்லை. இடையில் இயக்குநர், "நதி ஒரே திசையில் தான் நகரமுடியும். நதியில் இருக்கிற படகு இரண்டு திசையில் நகரும். நதியில் இருக்கிற மீன் நாலு திசையில் நகர முடியும். அதைக் கொத்திட்டுப் போற பறவை அஞ்சு திசையில நகரலாம். ஆனா கரையோரம் உட்கார்ந்து இதையெல்லாம் பார்த்துட்டிருக்கிற ஒருத்தனோட மனசு, எல்லாத் திசையிலும் நகரும்" என்று சீரியசான குரலில் வாய்ஸ்-ஓவர் தருகிறார். நதி, படகு, மீன், வேடிக்கை பார்ப்பவனின் மனது போன்றவை எதைக் குறிக்கிறது என்ற தெளிவில்லை. மனதில் எதையும் பதிய விடாமல் கலைத்த...
என்ன தவம் செய்தேனோ விமர்சனம்

என்ன தவம் செய்தேனோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மகளை, மாப்பிள்ளையை, அவர்களது கைக்குழந்தையைக் கொல்லத் தேடி அலையும் சாதிச் செருக்குள்ள தந்தை, ஒரு கட்டத்தில் தன் மகளைப் பெற்றதற்கு, 'என்ன தவம் செய்தேனோ!' என உணருவதுதான் படத்தின் ஒரு வரிக் கதை. இயக்குநர் பேரரசின் உதவியாளரான முரபாசெலன் இப்படத்தை இயக்கியுள்ளார். 'மாயிலைத் தோரணம்' எனப் பெயர் சூட்டப்பட்டு சென்சார் செர்ட்டிஃபிகேட் வாங்கியுள்ளனர். சுப நிகழ்வுகளுக்குக் கட்டப்படுபவை மாயிலைத் தோரணங்கள். அப்படியொரு சுப நிகழ்வை நோக்கித்தான் படத்தின் க்ளைமேக்ஸ் நெருங்குகிறது. ஆனால், படத்தில் தொடர் 'ட்விஸ்ட்'களைத் தொடக்கம் முதலே அளித்துக் கொண்டு வருகிறார் இயக்குநர். க்ளைமேக்ஸிலும் அதைத் தொடர்கிறார். "பாக்கியம்மாஆ" எனத் தன் மகளை அன்போடு வாரி அணைக்கும் ஒரு தந்தையால் எப்படித் தன் மகளைக் கொல்ல வெறியோடு அலைய முடிகிறது? சாதிப் பெருமிதம் என்ற முட்டாள்த்தனம் ரத்தப்பாசத்தையும் விடக் கனமானதா என்ன? ஆனால், ஏனோ படம்...