சினிமா

பேய்ப்பசியில் பாடும் விஜய் சேதுபதி
ஸ்ரீநிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் 'பேய் பசி'. இந்தப் படத்தை 'ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின் மென்ட் ப்ரைவேட் லிமிடெட் (Rise East Entertainment Private Limited)' நிறுவனம் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்தின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் படத்தின் ஒரு கிளப் பாடலிற்கு அனைவரையும் உடனே கவரும் ஒரு வித்தியாசமான குரல் தேவைப்பட்டது. இதற்கு நடிகர் விஜய் சேதுபதி தான் மிகப் பொருத்தமானவர் என எல்லோரும் உடனே முடிவு செய்தனர்.
நல்ல படங்களுக்கு என்றுமே தனது ஆதரவைத் தரும் விஜய் சேதுபதி 'பேய் பசி' படத்தின் இந்தப் பாடலிற்காக பாடகராக மாறியுள்ளார். வசனம் பேசுவதில் தனக்கென ஒரு பாணியைக் கடைபிடித்து மிகப்பெரிய வெற்றியைப் பிடித்திருக்கும் விஜய் சேதுபதி இந்தக் கிளப் பாடலைத் தனது அதே வசீகர பணியில் பாடி அசத...

கல்கி – கிஷோரின் குறும்படம்
சிறப்பாக எடுக்கப்படும் உணர்வுப்பூர்வமான குறும்படங்கள் மக்கள் மனதில் என்றுமே தனக்கென ஒரு இடம் பிடிக்கும். திலீப் குமார் இயக்கத்தில் கிஷோர், யாஸ்மின் பொன்னப்பா ஆகியோர் நடிப்பில் உருவாகிய 45 நிமிட குறும்படம் 'கல்கி' உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஒரு இயற்பியலாளருக்கும், தனது வயதில் பாதி வயதே இருக்கும் தனது காதலிக்கும் இடையே நடக்கும் உணர்வுப்பூர்வமான குறும்படம் தான் 'கல்கி'.
இந்தக் குறும்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் உலகமெங்கும் கிடைத்து வருகிறது. தற்பொழுது இந்தக் குறும்படத்தை டிஜிட்டல் உலகின் முன்னோடி 'Netflix' நிறுவனம் வாங்கியுள்ளது. இது இந்தக் குறும்படத்தின் பலத்தையும் மதிப்பையும் மேலும் பல மடங்கு கூட்டியுள்ளது. 'கல்கி' யின் வெற்றி அதன் இயக்குநர் திலீப் குமாருக்கு ஒரு பட வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தச் செய்தி மேலும் பலரைக் குறும்படங்கள் மூலம் வெற்றி பெற...

ஜாக்கி சானின் ப்ளீடிங் ஸ்டீல்
ஜாக்கி சான் நடிப்பில் உருவான “ப்ளீடிங் ஸ்டீல்” ஒரு சயின்ஸ்-ஃபிக்ஷன் த்ரில்லர் படம்.
இயந்திர இதயத்தோடு வாழும் ஒரு முன்னாள் கடற்படை வீரனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுகிறார் ஓர் எழுத்தாளர். அந்தக் கதையை அவர் எங்கிருந்து எடுத்தார் எனக் கேட்டு ஒரு கும்பலும், ஜாக்கி சானும் அவரைத் தேடி வருகின்றனர். அந்த எழுத்தாளர் இறந்து விட, இயந்திர இதயம் கொண்டவனின் கும்பலிடம் இருந்து ஜாக்கி சான் எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
ஏஜென்ட் லின் டாங்காக ஆக்ஷனிலும், ஒரு பெண் குழந்தையின் தந்தையாகச் சென்ட்டிமென்டிலும் கலக்கியுள்ளார் ஜாக்கி சான். சீனாவில் போன வருடம் வெளியான இப்படத்தினை, விரைவில் ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடவுள்ளனர்....

கேணி விமர்சனம்
எல்லையைத் தீர்மானிக்கும் பொழுது, புளியன் மலையில் உள்ள வீடும் நிலமும் தமிழ்நாட்டின் பக்கமும், அந்த வீட்டுக்குப் பாத்தியப்பட்ட கிணறு கேரள பக்கமுமாகப் போய்விடுகிறது. அந்தக் கிணறு, அதன் உரிமையாளரான இந்திராம்மாவிற்கு மட்டுமல்லாமல் வறட்சியின் காரணமாக அந்த ஊரிற்கே அவசியமாகிறது. அந்தக் கிணறை மையப்படுத்திய அரசியல் தான் படத்தின் கதை.
தண்ணீர் இல்லாத ஒரு பொழுதை யோசிக்கவே குலை நடுங்குகிறது. படம் தண்ணீரின் தேவையை, அதைப் பகிர்த்து கொள்வதில் எல்லைகளுக்கு இடையேயான சிக்கல் என மிக ஆழமானதொரு கருவைத் தொட்டுள்ளது. எனினும் படம் அந்த மையப் புள்ளியில் இருந்து விலகி, 'இந்திராம்மாடா! ப்பாஆஆ, என்ன ஒரு போராளி' எனத் தொடர்ந்து பதிகிறது. அதுவும் காட்சிகளாக இல்லாமல் வசனங்களாக. புளியன் மலையின் தலைவர் பார்த்திபன், சமூக அக்கறையுள்ள வக்கீல் நாசர், தமிழக எல்லையின் கலெக்டரான ரேவதி, புளியன் மலை ஊர்வாசியான அனுஹாசன், நீதிபதி ரேகா...

6 அத்தியாயம் விமர்சனம்
ஆறு இயக்குநர்களின் குறும்படங்களை தொகுத்து '6 அத்தியாயம்' என்று ஒரே படமாக இணைத்துள்ளனர். அமானுஷ்யம் தான் இந்த ஆறு படங்களையும் இணைக்கும் கண்ணி. பொதுவாக இப்படி இணைக்கப்படும் படங்கள், ஒரு குறும்படம் முடிந்த பின் இன்னொன்று எனத் தொடங்கும். ஆனால், எல்லாப் படத்தின் க்ளைமேக்ஸையும் கடைசி அரை மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டியுள்ளனர். இந்தப் பரீட்சார்த்த பாணி உலக அளவில் இதுவே முதல் முறை என்பது படத்தின் தலையாய சிறப்பு.
1. சூப்பர் ஹீரோ
இயக்கம் - கேபிள் சங்கர்
தன்னை சூப்பர் ஹீரோவாக ஒருவன் கருதுகிறான். அவனது வீட்டினரோ அவனுக்கு மனநலக் கோளாறு உள்ளதாக நினைக்கின்றனர். அதனால் அவனை மனநல மருத்துவரிடம் அழைத்து வந்து விடுகின்றனர். அவருக்கும் மனநல மருத்துவருக்கும் நடக்கும் உரையாடலே படத்தின் கதை.
2. இது தொடரும்
இயக்கம் - சங்கர் தியாகராஜன்
சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த ஒருவனைப் பேய்கள் எப்படிப...

ஏண்டா தலையில எண்ண வெக்கல விமர்சனம்
தலையில் எண்ணெய் வைக்காதவர்களின் லிஸ்ட்டை எடுத்து, அதிலிருந்து ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து யமதர்மராஜன் ஒரு மரண விளையாட்டை விளையாடுகிறார். நான்கு டாஸ்க்-களை நாயகன் முடிக்காவிட்டால் அவன் மரணித்துவிடுவான். அந்த நான்கு டாஸ்க்-கள் என்ன, அவற்றில் நாயகன் வென்றானா இல்லையா என்பதே படத்தின் கதை.
நாயகனாக அஸார் அறிமுகமாகியுள்ளார். புதுமுகம் என்றாலும், அடுத்த வீட்டுப் பையனைப் போன்ற பரீச்சயத்தைத் தோற்றுவித்துவிடுகிறார். வேலையில்லாததால் அவர் வீட்டினரால் கலாய்க்கப்படும் பொழுதும், ஆங்கிலம் தெரியாமல் இன்டர்வியூவில் சொதப்பும் பொழுதும், யமதர்மராஜாவால் சொதப்பப்படும் பொழுதும் அஸார் தன் முகபாவனைகளில் அழகாக வித்தியாசம் காட்டியுள்ளார்.
ஷர்மிளா, சுமதி, யோகி பாபு, அர்ச்சனா ஆகியோர் வரும் அத்தியாயம் கலகலப்பூட்டினாலும், தேவையில்லாத இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். நாயகனின் நண்பராக வரும் சிங்கப்பூர் தீபனும் ஆங...

மெர்லின் விமர்சனம்
இயக்குநராகும் கனவில் இருக்கும் வெற்றிக்கு ஓர் அரிய வாய்ப்புக் கிடைக்கிறது. அதற்குத் திரைக்கதையை எழுதி முடிக்கக் குறைவான கால அளவே உள்ள காலத்தில், அவரது அறை நண்பர்களால் நிரம்பி ஆராவாரமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் உள்ளது. அறையில் உள்ளவர்களின் ஆராவாரத்தைக் குறைக்க, 'மெர்லின்' எனும் பேய் இரவுகளில் அச்சுறுத்துவதாகப் பீதியை ஏற்படுத்துகிறார். விளையாட்டு விபரீதம் ஆகி, அக்கற்பனைப் பேய் உண்மையிலேயே வெற்றியை ஆட்கொண்டு விடுகிறது. மெர்லினிடம் இருந்து வெற்றி எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் தொடக்கமே மிரட்டலாய் உள்ளது. நீர் இறைக்கும் விவசாயியை மோகினி பிடித்துக் கொள்கிறது. கிராமப்புறங்களில் மோகினி பற்றிய செவி வழி கதைகள் மிகப் பிரசித்தம். இயக்குநர் கீரா அதை மிக அழகாகக் காட்சிப்படுத்தி அசத்தியுள்ளார்.
மனிதனின் குற்றவுணர்வு தான் அவனைப் பீடிக்குமென இயக்குநர் கோடிட்டுக் காட்டியிருந்தாலும், மோகி...

கூட்டாளி விமர்சனம்
ஜீவா, அறிவு, தண்டு, விக்கி ஆகிய நால்வரும் நண்பர்கள். சேட் பிபி (BB)-யிடம், வட்டி கட்டாத வண்டிகளைத் தூக்கும் வேலை செய்து வருகின்றனர். அறிவு, ஜீவாவை வளர்த்த பீட்டர், சேட் பிபி என ஜீவாவைச் சுற்றி அனைவருமே கொல்லப்படுகின்றனர். யார், ஏன் அனைவரையும் கொல்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை.
ஜீவாவாக நடித்துள்ள சதீஷின் முகம் மிகச் சுலபமாக மனதில் பதிகிறது. நாயகனாக தோன்றாமல் நமக்கு நன்கு தெரிந்த ஒரு பையன் என்ற உணர்வைத் தரும் முகம் அவருடையது. எந்த வாகனமாக இருந்தாலும், யாருடையது என்றாலும் தூக்கி விடுவார். நண்பர்களை எக்காரணம் கொண்டும் கைவிடாதவர். தன்னுடைய நண்பர்களில் ஒருவனின் மரணத்துக்குத் தனது காதலி தான் காரணமென அறிந்து, அவளைக் கொல்ல நாயகன் சபதமேற்பதில் இருந்தே படம் தொடங்குகிறது.
திவ்யாவாக க்ரிஷா குரூப் நடித்துள்ளார். தனது தாயின் ஞாபகமார்த்தமாக வைத்திருக்கும் செயினை, வழிபறித் திருடனிடம் இருந்து மீட்பதா...

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் விமர்சனம்
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் என்பது திருமாலைப் போற்றும் திருநாமங்களில் ஒன்று. பக்தியைச் சிலாகிக்கும் படமிது.
திருப்பதி பெருமாளான பாலாஜிக்கும், அவரது பரம பக்தனான ஹாத்திராம் பாபாக்குமான பிணைப்பே படத்தின் கதை.
'கடவுளைக் காணும் வழி யாது?' என அழகு சிறுவனான ராமன் வினவுவதில் இருந்து படம் தொடங்குகிறது. 'ஓம்' என்ற ராமனின் கடுந்தவம் வைகுண்டத்தை அடைய, பெருமாள் ராமனைக் காண பாலகனாக வருகிறார். சிறுவனைக் கடவுளென உணராமல் துரத்தி விடுகிறார் இளைஞனான ராமன். பின் மீண்டும் எப்படி இறையை உணர்ந்து ஆத்ம பக்தனாகப் பெருமாளுக்கு மிகப் பிரியமானவராகப் பரிணமிக்கிறார் என நெகிழ்ச்சியாகப் பயணிக்கிறது படம்.
பக்தர் ஹாத்திராமாக நாகார்ஜுனா அசத்தியுள்ளார். அன்னம்மாச்சார்யாவாக முன்பே பக்திப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்த முன் அனுபவம் இதில் அநாயாசமாய் மிளிர்கிறது. பெருமாளுக்கு நித்ய கல்யாண பூஜ்சி செய்வதாகட்டும், அவருடன் பக...

6 அத்தியாயம் எப்படியிருக்கு?
இயக்குநர் பாரதிராஜா: தெளிவான சிந்தனை. சரியான திட்டமிடல், புதிய வகை கதை சொல்லல் என தமிழ்சினிமாவைப் புது தளத்திற்கு அழைத்துச் செல்லும் இந்த 6 அத்தியாயம்.
இயக்குநர் ஏ.வெங்கடேஷ்: ரொம்பவே வித்தியாசமான முயற்சி. 6 கதைகளின் முடிவும் ஆச்சரியபடுத்துகின்றன. நிச்சயம் வெற்றி பெறும். 6 இயக்குநர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் அறிவழகன்: இந்தப் படத்தில் கையாளப்பட்ட திரைக்கதை யுக்தி பார்வையாளர்களின் துடிப்பை இறுதிவரை பரபரப்பாகவே வைத்திருக்கும். அதுவே இதன் வெற்றி!
இயக்குநர் ரவிகுமார்: இந்த ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு திறமையான 6 இயக்குநர்கள் மற்றும் நிறைய இளம் டெக்னிசியன்களை அறிமுகவாவதே இதன் சிறப்பு.
இயக்குநர் தாமிரா: ஒரே படத்தில் பலவித வண்ணங்கள் பலவித சுவைகள் உங்களைச் சுவாரசப்படுத்தும்.
இயக்குநர் மீராகதிரவன்: ஆறு இயக்குநர்களின் பார்வையில் ஆறுவிதமான பேய்கள் பற்றிய அலசல் தமிழ்சினிமா கண்டிராத...

கஜினிகாந்த் – ஸ்டில்ஸ்
" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]

கலகலப்பு – 2 விமர்சனம்
2012 இல் வெளிவந்து நகைச்சுவையில் கலக்கிய கலகலப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே ஒன்-லைனைக் கையிலெடுத்து உள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.
பணக்கஷ்டத்தில் இருக்கும் ஜெய், தங்களுக்குச் சொந்தமாகக் காசியில் ஒரு மேன்ஷன் இருப்பதை அறிந்து அதை விற்கச் செல்கிறார். லீசுக்கு எடுத்த முருகா மேன்ஷனைச் சிரமத்தில் நடத்தி வருகிறார் ஜீவா. தங்கள் இருவரையுமே ஏமாற்றிய சிவாவைத் தேடிச் செல்கின்றனர் ஜெய்யும் ஜீவாவும். அவர்கள் ஏமாறிய பணம் அவங்களுக்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
பிரதான ஜோடிகளான ஜீவா - கேத்தரீன் தெரசா, ஜெய் - நிக்கி கல்ராணி அறிமுகப் படலம் முடிந்து, காதல் அத்தியாயம் தொடங்கும் வரை வழக்கமான ஜோரில் போகும் படம், சிவாவின் அறிமுகத்திற்குப் பின் வயிற்றைப் பதம் பார்க்கிறது. சதீஷ், ரோபோ சங்கர், மனோ பாலா, சந்தான பாரதி, விடிவி கணேஷ், ஜார்ஜ், சிங்கமுத்து, யோகி பாபு, முனீஷ்காந்த் என நடிகர...




