Shadow

சினிமா

கிழிந்த வேட்டியைப் பறிக்கும் மத்திய அரசு – கவிஞர் வைரமுத்து கண்டனம்

கிழிந்த வேட்டியைப் பறிக்கும் மத்திய அரசு – கவிஞர் வைரமுத்து கண்டனம்

சமூகம், சினிமா
வரலாற்றுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நெற்களஞ்சியம் என்று கொண்டாடப்படும் தஞ்சைப் பாசனப்பரப்பு பாலைவனமாகிவிடுமோ என்ற அச்சம் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறது. “விளைந்தால் விலையில்லை; விலையிருந்தால் விளைச்சலில்லை” என்ற சந்தைக் கலாசாரத்தால் விவசாயி ஏற்கெனவே வீழ்ந்து கிடக்கிறான். இப்போது காவிரியில் தண்ணீரும் கண்களில் கண்ணீரும் வற்றிப்போன பிறகு என்ன செய்வான் பாவம் ஏழைத் தமிழ் உழவன்? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கான உரிமைத் தண்ணீரைக் குறைத்துக்கொடுத்தது. அந்தக் குறைந்த தண்ணீரையாவது காவிரி மேலாண்மை வாரியம் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையின்மீது இப்போது நம்பிக்கை இல்லாமல் செய்வது நியாயமா? உச்சநீதிமன்றத் தீர்ப்பு ‘ஸ்கீம்’என்ற சொல்லைச் சுட்டியிருக்கிறது. கிளி என்றாலும் கிள்ளை என்றாலும் ஒன்றுதான். ‘ஸ்கீம்’ என்றாலும் காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் ஒன்றுதான் என்று உச்ச நீதிமன்றத்த...
ப்ரித்வியின் தொட்ரா

ப்ரித்வியின் தொட்ரா

சினிமா, திரைத் துளி
தொட்ரா படத்தின் படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் மீதமிருந்தது. அதற்கான ஐந்து நாட்கள் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வந்தது. பிருத்வி ராஜன், வீணா, எம்.எஸ்.குமார், மைனா சூசன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏ. வெங்கடேஷ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் உத்தமராஜா இசையில் சிம்பு ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பதினைந்தாம் தேதி நிறைவு பெற்ற படப்பிடிப்பில் கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் வரை கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் இரவு விருந்தாக கிடா வெட்டி உணவு வழங்க ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார். மகிழ்வான இவ்விருந்தோடு படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதோடு இருபத்தை...
பசிஃபிக் ரிம்: அப்ரைசிங் விமர்சனம்

பசிஃபிக் ரிம்: அப்ரைசிங் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பசிஃபிக் ரிம் என்றால் பசிஃபிக் கடற்கரையின் ஓரத்தில் இருக்கும் ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (US) மேற்கு கரை மாகாணங்களை அடங்கிய பகுதியைக் குறிக்கும் சொல்லாகும். பசிஃபிக் பெருங்கடலின் விளிம்பிலுள்ள நாடுகள் என எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். பசிஃபிக் கடலுக்கடியில் இருந்து வெளிவரும் கைஜு (Kaiju) எனும் வேற்றுக் கிரக ஜந்துக்களை அழிப்பது தான் முதற்பாகமாகிய பசிஃபிக் ரிம் படத்தின் கதை. இரண்டாம் பாகத்தின் கதையும் அதன் தொடர்ச்சியே! கைஜு பூமிக்குள் நுழைய முடியாதபடி, அது வந்து செல்லும் வழியைப் பாதுகாத்து வைத்திருப்பார்கள் பான்-பசிஃபிக் டெஃபன்ஸ் கார்ப்ஸ் (PPDC - Pan Pacific Defence Corps). ஜேகர்கள் எனும் பெரும் ரோபோக்களைக் கொண்டு பி.பி.டி.சி., கைஜுக்களை எதிர்க்கும். ஆனால், கைஜுவின் மூளையை ஜேகர்களில் இணைத்து பி.பி.டி.சி.யையே நிர்மூலம் செய்து விடுவார் நியூட் கெய்ஸ்லர் எனும் விஞ்ஞானி (அவ...
மிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை

மிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை

சினிமா, திரைத் துளி
எந்தத் தொழில் நமக்குச் சோர்வே தராததோ, அதுவே நமக்கான தொழிலாகும். அப்படியாக சினிமா தொழிலைக் கருதும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரியும் படம் தான் 'Mr.சந்திரமௌலி'. சரியான திட்டமிடுதல் படத்தின் பாதி வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை உறுதியாக நம்பும் அணி இது. திரு இயக்கத்தில், கார்த்திக், கெளதம் கார்த்திக், வரலட்சுமி சரத்குமார், ரெஜினா கசண்டரா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'Mr.சந்திரமௌலி' முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதலோடு செயல்பட்டு வருகிறது. இந்தப் படத்தை BOFTA Media works India Private Limited சார்பில் 'Creative Entertainers and Distributors' நிறுவனம் தயாரிக்கின்றது. இது குறித்து இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , ''படத்தின் எல்லாக் கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்...
சோனி பிக்சர்ஸுடன் இணையும் பிரித்விராஜ்

சோனி பிக்சர்ஸுடன் இணையும் பிரித்விராஜ்

சினிமா, திரைத் துளி
பேட்மேன் (PadMan) படத்தினைத் தொடர்ந்து, 'சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷ்னல் ப்ரொடெக்ஷன்ஸ் (Sony Pictures International Productions)' நிறுவனம், ஜிந்தியில் ‘102 நாட் அவுட்’ எனும் படத்தைத் தயாரித்து வருகிறது. 27 வருடங்களுக்குப் பிறகு, 102 நாட் அவுட் படத்தில் அமிதாப் பச்சனும், ரிஷி கபூரும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக ஹிந்தி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த, சோனி பிக்சர்ஸ் முதன்முறையாக ஒரு தென்னிந்தியா சினிமாவைத் தயாரிக்கவுள்ளது. மலையாள நடிகர் பிரித்விராஜ், தனது மனைவியுடன் இணைந்து தொடங்கியுள்ள “பிரித்விராஜ் ப்ரொடக்ஷன்ஸ்” நிறுவனத்துடன் சோனி பிக்சர்ஸ் கைகோர்க்கவுள்ளது. ஏப்ரல் மத்தியில் தொடங்கவுள்ள இப்படமே, பிரித்விராஜ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதற்படம் என்பது குறிப்பிடத்தக்கது. “வேகமாய் வளர்ந்து வரும் பிராந்தியச் சந்தையில் நுழைய நல்லதொரு தருணத்தை எதிர்பார்த்துக் க...
சிவசக்தி – சென்னையின் ‘பாடி’யில் அதிநவீன திரையரங்கம்

சிவசக்தி – சென்னையின் ‘பாடி’யில் அதிநவீன திரையரங்கம்

சினிமா, திரைத் துளி
சென்னையின் அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக, நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணைக் கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் எனக் காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்தத் திரையரங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் இளைஞர் அணி தலைவர் கோ.ப.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்துத் திறந்து வைத்தார். "அண்ணா நகருக்கும், பாடிக்கும் இடையில் சிறப்பான இடத்தில் அமைந்திருக்கிறது எங்களின் சிவசக்தி திரையரங்கம். அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான, தரமான, நிறைவான பொழுதுபோக்கினை நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் வகையில் இந்தத் திரையரங்கை – இரண்டு திரைகள் கொண்டதாக உருவாக்கியிருக்கிறோம். இளம் ரசிகர்கள் விரும்பும் வகையில் அனைத்து மொழி படங்கள...
நம்மை நோக்கி வரும் பேராபத்து

நம்மை நோக்கி வரும் பேராபத்து

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
2013 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பசிஃபிக் ரிம்’ என்கிற திரைப்படம் பற்றி நினைவிருக்கலாம். அதன் தொடர்ச்சியாக, ‘பசிஃபிக் ரிம்: அப்ரைசிங் (Pacific Rim: Uprising)’ எனும் படம் வருகிறது. ஸ்டீவென் டிநைட் என்பவர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். முதல் பாகத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில், கடல் பரப்பிலிரிந்து ராட்சச உருவில் முன் பின் கண்டிராத தோற்றத்தோடு சில உயிரினங்கள் மனிதக் குலத்தைத் தாக்க வர, மனித இனம ஒற்றுமையாக நின்று, அத்தாக்குதலுக்கு எதிர் தாக்குதலை நிகழ்த்தி, பேரழிவிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும்.. இந்த இரண்டாம் பாகத்தில் மீண்டுமொரு முறை அத்தகையதோர் அபாயம் தோன்றிட, மனித இனத்திற்கு மீண்டும் பேராபத்து எழுகிறது. ஜான் என்கிற ஒரு விமானியின் தந்தைதான் முன்னர், ஆபத்து ஏற்பட்ட சமயம், அனைவரையும் ஒன்று திரட்டி, எதிர் தாக்குதல் நிகழ்த்தி அபாயத்தை அகற்றியவர். வேறு பாதையில் பய...
அபியும் அனுவும் – 22 வருடங்களுக்குப் பின்

அபியும் அனுவும் – 22 வருடங்களுக்குப் பின்

சினிமா, திரைச் செய்தி
அபியும் அனுவும் எனும் படத்தை தமிழிலும் மலையாளத்திலும் ஒரே சமயத்தில் இயக்கியுள்ளார் பி.ஆர்.விஜயலக்ஷ்மி. இவர் இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் மகளென்பது குறிப்பிடத்தக்கது. 1995இல், “பாட்டு பாடவா” எனும் படத்தை இயக்கியுள்ள பி.ஆர். விஜயலக்ஷ்மி இயக்கும் இரண்டாவது படம் ‘அபியும் அனுவும்’. ஆனால் விஜயலக்ஷ்மி, 1985 இல் வெளியான பாக்கியராஜின் ‘சின்னவீடு’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகவே திரையுலகில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. “விஜயலக்ஷ்மி அவர்களின் படத்தில் வேலை செய்தது எனக்குப் பெருமையாக இருந்தது. ரொம்பவே வெளிப்படையாக பேசக்கூடிய இயக்குநர். படத்தில் இரண்டு பாடல்கள் தான். கதையைச் சொல்லும் அந்த இரண்டு பாடல்களையும் திரைக்கதையில் சிறப்பாகப் பொருத்தியிருக்கிறார். டோவினோ, தமிழ் சினிமாவில் இளம் பெண்களின் கனவு நாயகனாக வருவார்” என்றார் இசையமைப்பாளர் தரண். “விஜயலக்ஷ்மியுடன் எனக்கு நீண்ட கால நட்பு இருந்து ...
நீலம் புரொடக்சன்ஸின் ‘பரியேறும் பெருமாள்’

நீலம் புரொடக்சன்ஸின் ‘பரியேறும் பெருமாள்’

சினிமா, திரைத் துளி
இயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் பரியேறும் பெருமாள். இயக்குநர் ராம்-இன் இணை இயக்குநரான மாரி செல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 'தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலமாகவும், 'மறக்கவே நினைக்கிறேன்' தொடரின் மூலமாகவும் இலக்கிய உலகத்திலும் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரான மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தென் தமிழகக் கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாகப் பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும் அது உருவாக்கும் பெரும் தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காதல...
அமலா பாலின் தொண்டு நிறுவனம்

அமலா பாலின் தொண்டு நிறுவனம்

சமூகம், சினிமா
பெரும்பாலான இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு நடிப்பது மட்டுமில்லாமல் இந்த இளைஞர்களை வழிப்படுத்தும் பொறுப்பும் உள்ளது. திரையைத் தாண்டி அவர்களது பொறுப்பு நீள்கிறது என்பதை நடிகை அமலா பால் தற்பொழுது நிரூபித்துள்ளார். கஷ்டப்படும் மக்களுக்குச் சேவை செய்வதற்காக, அமலா ஹோம் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் அமலா பால். இந்த நிறுவனம் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியைத் திரட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடவுள்ளது. தனது தொண்டு நிறுவனம் குறித்து, ''அகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடைப்பேச்சுக்குத் தயார் செய்து கொண்டிருந்த பொழுது தான் சில முக்கியமான புள்ளிவிவரங்களை நான் கவனித்தேன். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் இதில் 70...
சாம் CS – ஒரு சிறந்த இசையமைப்பாளர்

சாம் CS – ஒரு சிறந்த இசையமைப்பாளர்

சினிமா, திரைத் துளி
விக்ரம் வேதாவில் கலக்கிய இசையமைப்பாளர் சாம் CS தான் ‘லைக்காவின் கரு’ படத்திற்கு இசையமைத்துள்ளார். தனது படத்தின் இசையில் அதிக கவனம் செலுத்தும் இயக்குநர் விஜய் பேசுகையில், '' சமீப காலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் CS தான். கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாகப் புரிந்து கொண்டு அசத்துபவர் அவர். இந்தப் படத்தின் அவரது பாடல்கள், எனது எல்லாப் படங்களையும் விட மிகச் சிறந்த பாடல்களைக் கொண்டதாக நிச்சயம் அமையும். 'லைகாவின் கரு' படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் தந்திருக்கும் வரவேற்பு எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை. ஏனென்றால் நான் அதை எதிர்பார்த்ததுதான். இந்தப் பாடல்களைப் போலவே 'லைக்காவின் கரு' படமும் ஜீவனுடன் அழகாக இருக்கும் என உறுதியாகக் கூறுவேன்'' என்றார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில், ஆண்டனியின் படத்தொகுப்பில் 'லைகாவின் கரு' அருமையானதொரு படமாக உருவாகியுள்ளது....