Shadow

சினிமா

லைகா புரொடக்ஷன்ஸின் 9வது படம்

லைகா புரொடக்ஷன்ஸின் 9வது படம்

சினிமா, திரைத் துளி
படத்திற்குப் படம் வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்தெடுத்து இயக்கும் இயக்குநர் கௌரவ் நாராயணன் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் மஞ்சிமா மோகன் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். தொடர் வெற்றி படங்களைத் தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் டப்பிங் சமீபத்தில் தொடங்கியது. இறுதி கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. படத்தில் இடம்பெறும் பாடலின் படப்பிடிப்பிற்காக ஓமன் நாட்டிற்குப் படக்குழுவினர் சென்றது குறிப்பிடத்தக்கது....
காஷ்மீரில் “ரங்கா”

காஷ்மீரில் “ரங்கா”

சினிமா, திரைத் துளி
பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே.செல்லையா தயாரிக்கும் "ரங்கா" படத்தின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க் என்ற இடங்களில் நடந்தது. சிபிராஜ் - நிகிலா விமல் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. "இயக்குநர் வினோத் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த வேண்டும் என்று என்னைக் கேட்ட போது அங்கு அதற்கான சூழ்நிலை அரசியல் ரீதியாகவும் இல்லை, பாதுகாப்பு ரீதியாகவும் இல்லை, இயற்கையும் ஆதரவாக இல்லை எனப் பலர் எங்களை அச்சமுறுத்தினர். ஆயினும் படத்தின் தரத்துக்காகவும், காட்சிகளின் உயிரோட்டதுக்காகவும் அந்த ரிஸ்க் எடுப்பதில் தவறு இல்லை எனத் தோன்றவே, உடனடியாக காஷ்மீர் சென்று விட்டோம்.ஒ ரு தயாரிப்பாளராக படத்தின் தரத்தை உயர்த்த,, இதைச் செய்வது தான் நல்லது என எனக்குத் தோன்றியது. முக்கியமான காட்சிகளைக் காஷ்மீரில் யாரும் கண்டிராத இடங்களில் ...
மீண்டும் ஏலியன்கள்

மீண்டும் ஏலியன்கள்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் ரிட்லீ ஸ்காட், 1979இல் தனது ஏலியன் படம் மூலம் முதல் விதையைப் போட்டார். ஏலியன்ஸ் (1986), ஏலியன் 3 (1992), ஏலியன்: ரெசரக்ஷன் (1997), ப்ரொமீத்தியஸ் (2012) என ஐந்து படங்களைத் தொடர்ந்து, ஏலியன் தொடர் படங்களில் ஆறாவதாக வரவிருக்கிறது ‘ஏலியன்: காவெனன்ட்’. Covenant என்றால் உடன்படிக்கை எனப் பொருளாகும்; ஆனால், படத்தில் அது ஒரு விண்கப்பலின் பெயர். முதல் படத்திற்குப் பிறகு, மீண்டும் அத்தொடரின் நான்காவது படமான ப்ரோமோத்தியஸை 33 வருடங்கள் கழித்து 2012இல் இயக்கினார் ரிட்லீ ஸ்காட். ஏலியன் சீரிஸில் அவர் இயக்கும் மூன்றாவது படம் காவெனன்ட்டாகும். இத்தொடரில் வரவுள்ள அடுத்த படமான ‘ஏலியன்: அவெக்கனிங்’கையும் அவரே இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரொமீத்தியஸ், காவெனன்ட், அவெக்கனிங் ஆகிய கடைசி மூன்று படங்களும், முதல் மூன்று படங்களின் ப்ரீக்வெல் (prequel) ஆகும். கதிர்வீச்சுப் புயலால் செயலிழுக்கும் க...
பாகுபலி – 1000 கோடி நாயகன்

பாகுபலி – 1000 கோடி நாயகன்

சினிமா, திரைச் செய்தி
பாகுபலி 2-இன் நட்சத்திர நாயகன் பிரபாஸ், வசூலில் ஆயிரம் கோடிகளைக் கடந்த முதல் இந்தியத் திரைப்பட நாயகன் என்ற பெருமையை ஈட்டியுள்ளார். திரையிட்டு பத்து நாட்களுக்குள் அந்த வசூல் சாதனையைப் படைத்திருப்பது ஒரு மாபெரும் சரித்திரமாகும். பாகுபலி 2 திரையிடப்பட்ட ஒன்பது நாட்களில் இந்தியாவில் ரூ. 800 கோடியையும், அயல் நாடுகளில் ரூ. 200 கோடியையும் வசூலித்து இச்சாதனையை படைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 121 கோடியில் துவங்கிப் பின், வெகு வேகமாய் தொடர்ச்சியாய் அடுத்தடுத்த நாட்களில் பல நூறு கோடிகளைக் கடந்து ஒன்பதாவது நாளில் ரூ. 1000 கோடியைத் தொட்டிருக்கிறது. இந்தக் காவிய படைப்பில், அமரேந்திர பாகுபலியாய்த் தன்னுடைய அசாத்தியமான, அப்பழுக்கற்ற நடிப்பை வெளிப்படுத்திய பிரபாஸ், உலகளாவிய அளவில் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தேசங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, பாகுபலி 2 க்கு கிடைத்திருக்ககூடிய இந்த இமாலய வெற்ற...
வாள் பயிற்சியில் சங்கமித்ரா ஸ்ருதி

வாள் பயிற்சியில் சங்கமித்ரா ஸ்ருதி

சினிமா, திரைத் துளி
பெரும் பொருட்செலவில் மூன்று மொழிகளில் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா திரைப்படத்திற்காக வாள்வீச்சில் பயிற்சி பெற்று வருகிறார் ஸ்ருதிஹாசன். போரில் வல்லமை படைத்த இளவரசியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், அதற்காகவே வாள்வீச்சு கலையை லண்டனில் கற்று வருகிறார். இதைப் பற்றி படக்குழுவினர் கூறியதாவது, "வீரம் நிறைந்த இளவரசி கதாபாத்திரத்திற்காக ஸ்ருதிஹாசன் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்கிறார். அதற்காக வாள்வீச்சில் நிபுணத்துவம் பெற்ற சண்டைபயிற்சி கலைஞரிடம் லண்டனில் கற்று வருகிறார்" என்றனர். பயிற்சியின் முதல் கட்டமாக வாள்வீச்சின் அடிப்படை நுணுக்கங்களையும் பின்னர் அடுத்தடுத்த கட்டங்களையும் கற்று வருகிறார். இந்த பயிற்சியின் மூலம் திரையில் ஸ்ருதிஹாசன் சண்டையிடும் காட்சிகள், தத்ரூபமாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்கின்றனர் படக்குழுவினர். அழகுடன் வீரமும் மிளிர, சங்கமித்ராவில் ஸ்ருதியின் பாத்திரம் ரசிகர்...
பாகுபலி 2 விமர்சனம்

பாகுபலி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாகுபலி - தொடக்கம் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் எவ்வளவு உழைப்பினைச் செலுத்தியுள்ளனர் என்ற பிரமிப்பு, டைட்டில் கார்டிலிருந்தே தொடங்கி விடுகிறது. நல்ல திரையரங்கில் இப்படத்தினைப் பார்த்தால், அதன் பிரம்மாண்டத்தில் இருந்தும், விஷூவல் மேஜிக்கில் இருந்தும் மீளக் குறைந்தது ஓரிரு நாட்களாவது ஆகும். நேரடியாக ஃப்ளாஷ்-பேக்கிற்குள் நுழைந்து விடுகின்றனர். இயக்குநர் ராஜமெளலி சொன்னது போல், கதாபாத்திரங்களை முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளார். உண்மையில், கதை இந்த முடிவில் தான் தொடங்குகிறது. படத்தின் முதல் பாதி மிக அற்புதமானதொரு கலைப் படைப்பு. அமரேந்திர பாகுபலியின் அசத்தலான அறிமுகம், பிங்கலதேவனின் வில்லத்தனம், தேவசேனையின் அறிமுகம், கள்வர்களுடனான சண்டை, இயற்கைச் செறிவாய்ப் பூத்துக் குலுங்கும் குந்தல தேசம், தேவசேனை மீதான பாகுபலியின் காதல், கட்டப்பாவின் நகைச்சுவை, பல்வாழ்தேவனின்...