சினிமா

மின்மினி: விஷ்ணு விஷால் – அமலா பால்
'முண்டாசுப்பட்டி' படத்திற்குப் பிறகு இயக்குநர் ராமும், விஷ்ணு விஷாலும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அமலா பால் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்குத் தற்போது 'மின்மினி' என்று தலைப்பு வைத்துள்ளனர். 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி.டில்லிபாபு தயாரிக்கும் 'மின்மினி' படம், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ஏ.கோபி ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி, ஆடை வடிவமைப்பாளர் ஏ.கீர்த்தி வாசன் என பல திறமையான தொழில் நுட்பக்கலைஞர்களை உள்ளடக்கியுள்ளது. 'மின்மினி' படத்தின் தயாரிப்பில் 'ஸ்கைலார்க் மீடியா' ஸ்ரீதர் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
மின்மினியின் படப்பிடிப்பு 80% நிறைவடைந்துவிட்டது. படத்தின் கதைக்கரு, மாணவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டதாம். மின்மினி தலைப்பைப் படத்தின் கதையோடு ஒரு வகையில் பொருத்தி...

மே 12 முதல் ‘உள்குத்து’
'அட்டக்கத்தி' திரைப்படத்திற்குப் பிறகு தினேஷும் நந்திதாவும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 'உள்குத்து'.
அதிரடியான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் 'உள்குத்து' திரைப்படத்தைக் கார்த்திக் ராஜு இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டிருக்கும் உள்குத்து திரைப்படம் மூலம், ரசிகர்கள் இதுவரை கண்டிராத தினேஷைக் காண இருக்கிறார்கள் என்பதை உறுதியாகவே சொல்லலாம். 'பி கே பிலிம் பேக்டரி' ஜி.விட்டல் குமாரின் தயாரிப்பில், வலுவான கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'உள்குத்து' திரைப்படம் வருகின்ற மே 12 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.
"தரமான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் வெற்றி கண்டு வருவது எங்களை அதிகளவில் ஊக்குவிக்கின்றது. இப்போதெல்லாம், 'நல்ல தரமான கதையம்சம் நிறைந்த படங்களை அதிகளவில் திரையிடுங்கள்' என்று தான் திரையரங்கு உரிமையாளர்களிடம் ரசிகர்கள் ...

நாளை நமதே – 3 வேடங்களில் விஷால்
தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து நடிகர் விஷால் மூன்று பரிமாணங்களில் முதன் முறையாகத் தோன்றும் "நாளை நமதே" படத்தை, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். இயக்குநர் பொன்ராம் அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நடிகர் சதீஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது....

வனமகன் – இசை வெளியீட்டு விழா படங்கள்
" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]

கேத்தரின் தெரசா – ஆல்பம்
" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]

ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ் விமர்சனம்
அனிமேஷன் படங்கள் குழந்தைகளுக்கானது எனத் தவறான கற்பிதம் உள்ளது. ஆனால், 'ஸ்மர்ஃப்ஸ்: தி லாஸ்ட் வில்லேஜ்', முற்றிலுமே குழந்தைகளுக்கான ஒரு படம். ஏனென்றால் ஸ்மர்ஃப்ஸ் 1 & 2 போல், இது லைவ் ஆக்ஷனுடன் கலந்த அனிமேஷன் படமன்று. முதல் இரண்டு பாகங்களுக்குச் சம்பந்தமில்லாத தனி படம் என்பதோடு, வண்ணஜாலம் நிகழ்த்தும் முழு அனிமேஷன் படம்.
ஒரு தொலைந்த கிராமத்தைச் சாகசப் பயணமொன்றில் கண்டுபிடிக்கிறார்கள் ஸ்மர்ஃபெட்டும் அவளது மூன்று நண்பர்களும். கதையாக, ஒரு வரியில் சொல்லும் பொழுது இருக்கும் சுவாரசியம் கூட திரைக்கதையில் இல்லை. அதனால் என்ன? 90 நிமிடங்கள் குழந்தைகளைக் குழந்தைகளாக வைத்திருப்பதோடு, அவர்களை மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது படம். ‘பெட் டைம் மூவி (Bed time movie)’ என்று கூட இப்படத்தை வகைப்படுத்தலாம்.
ஆண்களால் நிறைந்த ஸ்மர்ஃப்ஸ் உலகில், களி மண்ணில் இருந்து தயாரிக்கப்பட்ட ஸ்மர்ஃபெட்டுக்கு...

யாத்ரீகா மியூசிக் வீடியோ – ப்ரோமோ
கூடைப்பந்து வீராங்கனையான வைஷாலி கெம்கர் தோன்றும் இந்த மியூசிக் வீடியோவை, நிகிதா கணேசன் இயக்குகிறார். காதல் பிரிவைத் தைரியமாக எதிர்கொள்ளும் பெண் பற்றிய வீடியோ அது. சிக்மகளூர் மலைப்பாதையில், ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ரைடர் ஓட்டிச் செல்கிறார். சோகமாகத் தொடங்கும் பாடல், பெண்ணின் தைரியத்தையும் நம்பிக்கையின் அளவையும் பறைசாற்றும் விதமாக வீடியோவை எடுத்துள்ளார் நிகிதா கணேசன்.
ஸ்ரீராம் ராகவன் ஒளிப்பதிவில், அல்-ருஃபீயான் இசையில், "யாத்ரீகா" வீடியோ உருவாகிறது. சியா ஸ்ரீ உடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த வீடியோ வெளியாகவுள்ளது.
தேசிய அளவு போட்டியாளரான வைஷாலி, கூடைப்பந்து விளையாட்டில் நிலவும் சகிக்க முடியாத பாலிடிக்ஸை (ஊழலால்) வெறுத்து, மாடலிங் பக்கம் தன் கவனத்தைத் திசை திருப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
...

துபாயில் உருவாகும் முதல் தமிழ்ப்படம்
'அரபு தாக்கு' படத்தைப் பற்றி இயக்குநர் பிரான்ஸிஸ் பேசும் போது, “துபாயைக் கதைக்களமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படமிது. தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமானவர்கள் வேலை தேடித் துபாய்க்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் படும் பாட்டையும், கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை எப்படிச் சாதனையாக்குகிறார்கள் என்பதைப் பற்றியும் அழகாகச் சொல்லவிருக்கிறோம். அதே போல் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளைப் பின்னணியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுவரை ஏராளமான படங்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால், அரபு நாடான துபாயில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவிருக்கும் முதல் படம் இது தான்.
இயக்குநர் பரதன் இயக்கிய அதிதி என்ற படத்தில் அறிமுகமான நிகேஷ் ராம் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். தமிழில் முதன்முதலாக தமிழே தெரியாத பெர்குஸார் கொரல் (Bergu...

ஸ்மர்ஃப்ஸ் – மர்ம கிராமம்
ஸ்மர்ஃப்ஸ் படம் 2011இலும், அதன் இரண்டாம் பாகம் 2013இலும் வெளிவந்து ரசிகர்களை ஈர்த்தது. அந்த சின்னஞ்சிறு நீள நிற கதாபாத்திரங்கள், குழந்தைகளைப் பெரிதாகக் கவர்ந்தார்கள் என்பதே ஸ்மர்ஃப்ஸின் வெற்றிக்குக் காரணம். பெல்ஜியன் காமிக்ஸ் ஆர்டிஸ்ட்டான பெயோ (Peyo) உருவாக்கிய கதாபாத்திரங்களே ஸ்மர்ஃப்ஸ். காமிக்ஸை அடிப்படையாகக் கொண்டு தான் இரண்டு படங்களும் உருவாக்கப்பட்டன.
ஏப்ரல் 21 அன்று வெளியாகும் இப்படத்தின் மூன்றாம் பாகம், ஒரு சாகச ஃபேன்டசி வகைமையைச் சேர்ந்தபடம். ஸ்மர்ஃபெட்டி, ப்ரெய்னி, க்ளம்ஸி, ஹெஃப்டி ஆகிய நண்பர்களுக்கு ஒரு ரகசிய வரைப்படம் கிடைக்கிறது. விசித்திர உயிரினங்கள் நிலவும் தடைசெய்யப்பட்ட மந்திர உலகத்திற்குச் சென்று விடுகின்றனர். அந்தச் சாகசம், ஸ்மர்ஃப்ஸின் வரலாற்றில் இஉந்து தொலைந்து போன ஒரு மர்ம கிராமத்தைக் கண்டுபிடிக்க உதவுகிறது.
90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படத்தை 60 மில்லியன் அமெரிக்க ...

“படங்கள் பார்த்தேன்; இயக்குநர் ஆனேன்” – திரி இயக்குநர்
திரி கல்வியை மையப்படுத்திய யதார்த்தமான ஒரு கமர்ஷியல் படம்.
“தியேட்டரில் நான் 465 படங்களை பார்த்து விட்டு தான் படம் இயக்கவே வந்தேன். ஒரு ரசிகனாய் நான் பல படங்களை விமர்சித்திருக்கிறேன். அதனால் என்ன பண்ணலாம் பண்ணக்கூடாதுன்னு தெரிந்து கொண்டேன். நிச்சயம் என் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும். திரி என்றால் இளைஞர்களைத் தூண்டி விடுதல் என்ற பொருளில் தலைப்பு வச்சிருக்கேன். சினிமாவால் தான் சமுதாயம் கெட்டுப் போகுது. நல்ல கருத்துகளையே அவைச் சொல்வதில்லை என்றொரு கம்ப்ளெயின்ட் இருக்கு. நான் நல்ல கருத்துகளைச் சொல்லியுள்ளேன். ‘துருவங்கள் 16, மாநகரம் போல படங்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் யதார்த்தமான கமர்ஷியல் படமா?’ என்று நினைக்க வேண்டாம். என் நண்பர்கள் தான் எனக்கு உறுதுணையாய் இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்றார் இயக்குநர் அசோக் அமிர்தராஜ்.
சீ ஷோர் கோல்டு புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆ....







