Shadow

சினிமா

ஒரே நேரத்தில் 12 படங்கள் – செம ஜீ.வி.

ஒரே நேரத்தில் 12 படங்கள் – செம ஜீ.வி.

சினிமா, திரைச் செய்தி
பசங்க புரொடக்சன்ஸ் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் குமார், அர்த்தனா நடிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் 'செம'. படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்துள்ளார். “இயக்குநர் வள்ளிகாந்த் ஒரு காட்சிக்கு 40 டேக் வரை பொறுமையாக எடுப்பார். டப்பிங்கிலும் சரி, ஷூட்டிங்கிலும் சரி அவரைத் திருப்திப்படுத்தவே முடியாது. பாண்டிராஜ் பட்டறையில் இருந்து நிறைய இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள். அப்படி இந்த வள்ளிகாந்தும் நல்ல இயக்குநராக வருவார்” என்றார் நடிகர் மன்சூர் அலிகான். “வள்ளிகாந்த் எந்த ஒரு விஷயத்தையும் முகத்துக்கு நேரே சொல்லுபவன், அது தான் அவனை என் உதவியாளராக நான் சேர்த்துக் கொள்ள முக்கிய காரணம். என்னிடம் நிறைய திட்டு வாங்கிய உதவி இயக்குநரும் அவன் தான். அவனுக்கு என்ன செய்வது என யோசித்துத்தான் இந்தப் படத்தை தயாரித்தேன். ஒரு படம் ...
டாம் க்ரூஸின் ‘தி மம்மி’

டாம் க்ரூஸின் ‘தி மம்மி’

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
1999ஆம் ஆண்டு, இதே தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய படம்தான், ‘தி மம்மி’. 2001இல், ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ் (The Mummy Returns)’ என்கிற இரண்டாம் பாகமும் வெளியாகி உலகெங்கிலும் பெரியதொரு பரபரப்பை உருவாக்கியது. அவ்விரு படங்களுமே உலக அளவில் மிகப் பெரிய வசூலை வாரிக் கொட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு படங்களையுமே ஸ்டீஃபன் சோமோர்ஸ் இயக்கியிருந்தார். சற்று இடைவெளிக்குப் பிறகு 2008இல், ‘தி மம்மி: டூம்ப் ஆஃப் தி ட்ராகன் எம்பரர்’ வெளியாகி, அப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. ராப் கோஹன் அம்மூன்றாம் பாகத்தை இயக்கியிருந்தார். இம்மூன்று தொடர் படங்களைத் தவிர கிளைத் திரைப்படங்களாக ‘தி ஸ்கார்பியான் கிங் (The Scorpion King)’ போன்றவையும் வெளியாகின. இரண்டு காமிக் கதைப் புத்தகங்களும் கூட ‘மம்மி’ கதைக்கருவை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்டன. கிட்டதிட்ட பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், அலெக்ஸ் கர்ஸ்மெனின் நேர...
பில்லா பாண்டி – ஃபர்ஸ்ட் லுக்

பில்லா பாண்டி – ஃபர்ஸ்ட் லுக்

Movie Posters, கேலரி, சினிமா
தாரை தப்பட்டை படத்து வில்லனான R.K.சுரேஷ் நாயகனாக நடிக்கும் பில்லா பாண்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்.
ஒரு இயக்குநரின் காதல் டைரி விமர்சனம்

ஒரு இயக்குநரின் காதல் டைரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வேலுபிரபாகரனின் காதல் கதையையே கொஞ்சம் மாற்றங்களுடன் ஒரு இயக்குநரின் காதல் டைரியாக மாற்றிவிட்டார். பெண் ஆணின் உடைமை அல்ல; அப்படி ஆண்கள் நினைப்பதால் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மிகுந்து காணப்படுவதோடு, கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கையும் இங்கே அதிகமாக உள்ளது. "காதல்" என்பது பெண்களை அனுபவிக்கவும், அவர்களின் உடலைத் தெரிந்து கொள்ளவும், முதிரா இளம் ஆணின் மனம் கற்பித்துக் கொள்ளும் கற்பனை. அக்கற்பனையில் இருந்து ஆண்கள் மீள (பெண்கள் மேலாடை அணியாமல் இருந்தால் தேவலை என முந்தைய படத்தில் சொன்னவர்), சிற்பங்களில் ஓவியங்களில் திரைப்படங்களில் எனக் கலைகளில் பெண்ணின் நிர்வான உடம்பைப் பரவலாக பதின் பருவத்தினர்க்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்கிறார் இயக்குநர் வேலுபிரபாகரன். அப்படிச் செய்வதன் மூலம், பெண்களின் உடல்கள் அறிமுகமாகி விடுவதால் அதன் பின் ஆராய ஆண்களுக்குத் தோன்றாது; பாலியல் கொடுமைகள...
போங்கு விமர்சனம்

போங்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோ ரூமில் வேலை செய்கிறார் 'ரேர் பீஸ்' நட்டி. ஒரு கார் ஒன்றினை டெலிவரி செய்யப் போகும் பொழுது, அக்காரை எவரோ துப்பாக்கி முனையில் நட்டியை நிறுத்தி லவட்டிக் கொண்டு போய் விடுகின்றனர். இதனால் நட்டியின் வேலை போகிறது; கூடவே 'பிளாக்-லிஸ்ட்' செய்யப்படுவதால் நட்டி மற்றும் அவரது நண்பர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட, நட்டி தன் வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொள்கிறார். அது அவரை எங்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் படத்தின் கதை. பேச்சில், நடிப்பில் எனக் கொஞ்சம் கூட தன் முந்தைய படங்களில் இருந்து மாறிடாத நடராஜன். அவருக்கு ஜோடியாக ருஹி சிங் நடித்துள்ளார். ஹேக்கிங் செய்வதில் கில்லாடியான பாத்திரத்தில் நடித்துள்ளார். சி.சி.டி.வி. கேமிராக்களை முடக்குகிறார்; BMW காரின் கதவை அன்லாக் செய்கிறார். அவரது உதட்டசைவு வசனங்களோடு ஒத்துப் போவதால், சங்கடமின்றி அவரது அழகு மனதில...
ஒரு கிடாயின் கருணை மனு விமர்சனம்

ஒரு கிடாயின் கருணை மனு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முதல் ஃப்ரேம் முதல் கடைசி ஃப்ரேம் வரை நேட்டிவிட்டி மாறாமல் நகைச்சுவையாக அதகளப்படுத்தியுள்ளனர். 35 வயதில் தன் பேரனுக்குத் திருமணமானதற்காக முனியாண்டிக்குக் கிடாய் ஒன்றை நேர்த்திக் கடனாகப் பலி கொடுக்க வேண்டிக் கொள்கிறார் ஒரு கிராமத்துப் பாட்டி. உற்றார் உறவினர் புடை சூழ, புது மணத் தம்பதியருடன் தடபுடலாகக் கிராமத்திலிருந்து கிடாய், சேவல்களுடன் லாரி புறப்படுகிறது. வழியில், எதிர்பாராத விதமாய் நேரும் விபத்தால் ஒரு உயிர் பலி நேர்ந்து விடுகிறது. அதிலிருந்து கிடாய் வெட்டச் சென்றவர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதுதான் படத்தின் அட்டகாசமான கதை. படத்தின் தலைப்பே அட்டகாசமான தற்குறிப்பேற்ற அணியாக வைத்துக் கலக்கியுள்ளார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. அதாவது இயல்பாய் நடக்கும் ஒரு விஷயத்திற்கு, கவிஞர் தன் கற்பனையை ஏற்றுவது ‘தன் குறிப்பு ஏற்றம்’ ஆகும். அதே போல், கிடாயை வெட்டச் சென்றவர்கள் கோயிலுக்கே போய்ச் சேராத கத...
“அடுத்த சிம்ரன்!” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

“அடுத்த சிம்ரன்!” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

சினிமா, திரைச் செய்தி
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸும், ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ள படம் ரங்கூன். கௌதம் கார்த்திக், சனா நடிக்க முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் R.H.விக்ரமும், விஷால் சந்திரசேகரும் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார். “இரட்டையர்கள் என்றாலே ஒரு மேஜிக் மாதிரி தான். அவர்களுடன் இந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு புது அனுபவம். குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதுக்கு எனக்கு எப்பவுமே பயம். ஆனால் இந்தப் படத்தில், என்னைப் போலவே இருக்கும் ரொம்ப கூலான சதீஷ் மாஸ்டர் தயவால் குத்துப் பாட்டுக்கும் ஆடியிருக்கிறேன். இயக்குநர் ராஜ்குமார் சில முக்கிய தருணங்களில் நான் தான் நடிக்கணும் என எனக்காக நின்றார். ரொம்ப அன்பானவர். தெளிவான இயக்குநர்” என்ற...
பிருந்தாவனம் விமர்சனம்

பிருந்தாவனம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் ராதாமோகனிடமிருந்து மீண்டுமொரு ஃபீல் குட் படம். கேட்க முடியாததாலும், பேச முடியாததாலும், தனிமையைக் குறித்த இருப்பியல் சார்ந்த அகப் பிரச்சனையில் உழல்கிறார் அருள்நிதி. அதிலிருந்து அவரது ஆதர்சமான நகைச்சுவை நடிகர் விவேக், அருள்நிதியை எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் கதை. படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக்காகவே தோன்றிக் குணச்சித்திர நடிப்பில் கலக்கியுள்ளது சிறப்பு. சுருக்கமாகச் சொன்னால், பிருந்தாவனம் – ‘விவேக் மயம்’ என்றே கூறவேண்டும். மரண நாளை எண்ணிக் கொண்டிருப்பவர், நான்கு வயது மகனைத் தொலைத்து வாழ்க்கையை இழந்தவர், தனிமையைக் கண்டு மிரண்டு அனுதாபத்தை எதிர்பார்க்கும் இளைஞர், மகனை இழந்து விட்ட துக்கத்தை மறைக்கும் கலைஞர் என படத்தில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உப கதை உள்ளது சிறப்பு. படத்தின் பலமும் பலவீனமும் கூட அதுவே! கதாபாத்திரங்களுக்கென ஒரு கதை இருப்பது பலம் என்றால், படம் ஒ...
டியூப்லைட் விமர்சனம்

டியூப்லைட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு விபத்தில் அடிபட்டு, நாயகனுக்குக் கேட்டல் குறைப்பாடு ஏற்படுகிறது. அதாவது, சத்தத்தை அவரது மூளை உள்வாங்கிக் கொள்ள சுமார் 5 நிமிடங்கள் ஆகும். இந்த நொடி நீங்க நாயகனிடம் ஹலோ சொன்னால், அவருக்கு ஐந்து நிமிடங்கள் கழித்தே கேட்கும். ‘சாவு செய்தி சொன்னால் கருமாதி அன்று தான் அவருக்குக் கேட்கும்’ என்பதால், அவருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் “டியூப்லைட்” என நாயகனுக்குப் பட்டப்பெயர் சூட்டுகிறார். அத்தகைய நாயகன், ஒரு பெண் மீது, கண்டதும் காதல் வயப்படுகிறார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. நாயகனைச் சுற்றியே கதை நகர்கிறது. அவரது அறிமுகமும், அப்பொழுது அவரது ஆட்டமும், படம் நெடுகே அவருக்கு ஏற்படும் இக்கட்டினை அவர் முகத்தில் பிரதிபலிக்கும் விதத்திலும் அசத்தியுள்ளார். ராம் எனும் டியூப்லைட் பாத்திரத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் இந்த்ரா. கார்பொரேட் கம்பெனிகளில் பணி புரியும் ஊழியர்களின் ஆ...
புதுமுக இயக்குநரின் மனக் குமுறல்

புதுமுக இயக்குநரின் மனக் குமுறல்

சினிமா, திரைச் செய்தி
ஸ்வஸ்திக் சினிவிஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் சோஹன் அகர்வால் வழங்கும் படம் "முன்னோடி". இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.பி.டி.ஏ. குமார் இயக்கியுள்ளார். விழாவில் படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் பி. மதன் பேசும் போது, "பொதுவான நண்பர் ஒருவர் இந்தப் படம் பற்றிப் பேசினார். அப்போது எனக்கு ஆர்வமே இல்லை. ‘ஏற்கெனவே மூன்று படங்கள் போய்க் கொண்டிருக்கிறது வேண்டாம்’ என்றேன். ‘வேற யாரிடமாவது பேசிப் பாருங்கள். விட்டு விடுங்கள்’ என்றேன். ‘பாடல்கள் , ட்ரெய்லரையாவது பாருங்கள்’ என்றார்கள். வேண்டா வெறுப்பாக விருப்பம் இல்லாமல்தான் பார்த்தேன். முதலில் 'அக்கம் பக்கம் 'பாடல் பார்த்தேன். பிடித்திருந்தது. ‘யாரிடம் வேலை பார்த்தீர்கள்?’ என்றேன். ‘எவரிடமும் இல்லை’ என்றார். அவரிடம் பேசியபோது, பொதுவான விஷயங்கள் பேசினோம். தன் குடும்பம் சம்பாதித்த பணத்தில் எடுத்ததாகக் கூறினார். எனக்கு நம்பிக்கை வந்தது. அவரது ...
குறும்பட இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த சூர்யாவின் 2டி நிறுவனம்

குறும்பட இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த சூர்யாவின் 2டி நிறுவனம்

சினிமா, திரைச் செய்தி
முதல் கைதட்டல் – குறும்படப் போட்டி மூவி பஃப் நடத்திய ஃபர்ஸ்ட் கிளாப் எனும் குறும்படப் போட்டியின் முடிவுகள் கோலாகலமாக சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் எழில், இயக்குநர் வெற்றிமாறன், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி, இயக்குநர் S.U.அருண் குமார், 2டி எண்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரப்பாண்டியன், திரை விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, படத்தொகுப்பாளர் K.L.பிரவீன், ஒலிப்பதிவாளர் உதயகுமார், இயக்குநர் ஹரி விஸ்வநாத், சென்னை சர்வதேச குறும்பட விழா இயக்குநர் ஸ்ரீனிவாச சந்தானம், காமன் மேன் மீடியா சந்தோஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இவர்கள், இறுதிச் சுற்றுக்குக் குறும்படங்களைத் தேர்ந்தெடுந்தெடுத்த தேர்வுக் குழு உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. “பார்வையாளர்களைத் திரையரங்கை நோக்கி ஈர்க்க வல்ல புது திறமை...
சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்

சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாளிகை போன்ற வீட்டுக்குள் இருக்கும் பாசக்கார ஆவி, 'இது என்னோட வீடு' என அவ்வீட்டினை விலைக்கு வாங்கும் ஜீவாவையும் அவரது குடும்பத்தினரையும் உள்ளே விட மாட்டேங்கிறது. எப்படி ஆவியை ஜீவா விரட்டுகிறார் என்பதுதான் படத்தின் கதை. வழக்கமான பேய்க் கதை என்ற பொழுதிலும், இயக்குநர் ஐக் அழகாகச் சுவாரசியப்படுத்தியுள்ளார். உதாரணத்திற்கு, படம் தொடங்குவதற்கு முன், குடிப்பழக்கும் புகை பழக்கமும் உடம்பிற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற வாசகத்தை 'நான் கடவுள்' ராஜேந்திரன் குரலில் கேட்கும் பொழுதே, படத்திற்கான மூடை செட் செய்து விடுகிறார். வாடகை வீட்டில் குடியிருப்போரின் வலியை அழகாகப் பதிவு செய்துள்ளனர். "வாடகை வீட்டில் இருப்பது ஜெயில் போல" என ராதிகா வலியுடன் சொல்வதில் இருந்து தான் படமே தொடங்குகிறது. நாயகனான ஜீவாவின் பெயர் போடுவதர்கு முன்பே 'டத்தோ' ராதாரவியின் பெயர் திரையில் தோன்றுகிறது. குடும்பம் என்றால் ஒற்றுமையாக இ...
இணையதளம் விமர்சனம்

இணையதளம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கொலையை நேரடியாக ஒளிபரப்புகிறது 'வெல்லலாம் வாங்க' என்ற இணையதளம். அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடக் கூட கொலை செய்யப்படும் நேரம் துரிதமாகும். அதாவது அதன் பார்வையாளர்களே கொலையாளர்கள். நடத்துவது யார், ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பதே படத்தின் கதை. இரட்டை இயக்குநர்களான ஷங்கரும் சுரேஷும் மிக அழகான கதையை உருவாக்கியுள்ளார்கள். ஆனால், அதன் திரைக்கதையும் தொழில்நுட்ப நேர்த்தியும் கதைக் கரு அளவுக்கு ஷார்ப்பாக இல்லை. நியாயமாகப் படம், பார்வையாளர்களைப் பதற்றத்திலும் குற்றவுணர்விலும் ஆழ்த்தியிருக்க வேண்டும். ஆனால், காட்சிக் கோணங்களும் படத்தொகுப்பும் அவ்வேலையைச் செய்யத் தவறிவிடுகிறது. நம்மால் ஓர் உயிர் போகப் போகிறதெனத் தெரிந்தும், எவ்வித லஜ்ஜையும் கிலேசமுமின்றி மக்கள் அந்தக் கொலை புரியும் இணையதளத்தைப் பார்வையிட்டுக் கொண்டே, கொலைக்குத் துணை புரிகிறார்கள். 'நான் மட்டுமா பார்க்கிறேன்? அவனை முதலில் பா...