32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 8 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 8)
கர விமர்சனம் | Kara review சினிமா

கர விமர்சனம் | Kara review

போர் தொழில் இயக்குநரின் இரண்டாவது படமென்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கூடுதலாக இருந்தது. 1990 காலகட்டத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளனர் எழுத்தாளர் ஆல்ஃப்ரெட் பிரகாஷும், இயக்குநர் விக்னேஷ் ராஜாவும். அதற்கு ஒரு வலுவான காரணமும் இருக்கிறது. அது கதை சார்ந்த காரணமல்ல, லாஜிக் சார்ந்த காரணம். கதை, படத்தில் நேர்கோட்டில் இருந்தாலும், அதை இன்னும் நேர்க்கோட்டில் சொல்ல வேண்டிய பொறுப்புடன், கதையைச் சிம்பிளாகச் சொல்ல முயற்சி செய்கிறோம். தனுஷ் தனது 16-ஆவது வயதில் […]

01/05/2026 Dinesh R
Brand New Day: மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஸ்பைடர்-மேன் படம் அயல் சினிமா

Brand New Day: மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஸ்பைடர்-மேன் படம்

‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ பிரத்தியேக போஸ்டர்கள், சினிமாகான் 2026 நிகழ்வில் வெளியிடப்பட்டன. இப்போஸ்டர்களினால் அனைவரது விருப்பமான வலை வீசும் நாயகனைப் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.  இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி சில வாரங்களுக்குப் பிறகு, சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த சூப்பர் ஹீரோவின் அடுத்த அத்தியாயத்தின் புதிய காட்சிகளை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. சோனி நிறுவனத்தின் தலைவர் டாம் ரோத்மன், படத்தின் இரண்டு போஸ்டர்களை முதலில் வெளியிட்டார். “அந்த சூப்பர் ஹீரோவைப் பற்றி கடந்த காலத்தில் […]

25/04/2026 Dinesh R
Breakfast விமர்சனம் சினிமா

Breakfast விமர்சனம்

காதலித்துக் கல்யாணம் செய்து, மூன்று மாதத்திற்குள் வேகமாகப் பிரிகின்றனர் என்பதை உணர்த்தும் விதமாகத் தலைப்பினை வைத்துள்ளார் இயக்குநர் காந்தி கிருஷ்ணா. இவர், செல்லமே, ஆனந்த தாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர். சங்க காலக் காதல், ஆண்டாள் காலக் காதல், 80களின் காதல் ஆகியவற்றைச் சொல்லிவிட்டு, இந்தக் காலக் காதல் கதைக்குள் வருகிறார். ரிஷபும் லக்‌ஷ்மியும் இணையத்தில் அறிமுகமாகி, வாரயிறுதியில் மலேஷியாவிற்குச் சென்று, காதலாகித் திருமணம் செய்து கொள்கின்றனர். மூன்றாவது மாதத்தில், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றனர். அவரை கங்கா தேவி […]

24/04/2026 Dinesh R
Battle விமர்சனம் சினிமா

Battle விமர்சனம்

மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை ஃபிக்ஸ் செய்து மைக்கேலாருக்கு ட்ரிப்யூட் செய்ய நினைத்துள்ளது இப்படக்குழு. படத்தில் நாயகன் ராப் பாடகர் என்பதே அதற்குக் காரணம்! மேலும் பாடல்கள் சமூக மாற்றத்திற்கும் பங்களிக்கும் என்றும் இயக்குநர் நாராயணன் பா நம்பியிருக்கிறார். படத்தின் கதை, நாயகனின் ராப் பாடல் மோகத்தில் தான் துவங்கிறது. ராப் பாடல் போட்டியில் எதிராளியைச் சுலபமாக வெல்கிறார் நாயகன் அர்ஜுன் பிரபாகரன். உடனே அவரை ஒரு இசை நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்குப் […]

24/04/2026 Dinesh R
பீட்சா பாய்ஸ் – இளம் தலைமுறையின் கனவுகளும் முயற்சியும் வெற்றியும் சினிமா

பீட்சா பாய்ஸ் – இளம் தலைமுறையின் கனவுகளும் முயற்சியும் வெற்றியும்

செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷங்கர் KN மற்றும் சஹானா ஷங்கர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான “பீட்சா பாய்ஸ்”, இன்று எளிமையான மற்றும் கோலாகலமான பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தை இயக்குநர் சேகர் கேஷவ் சிர்ரின் இயக்குகிறார். இவர் இப்படத்திற்கு இசையையும் அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாக சிவம் சங்கர், கதாநாயகியாக நேகா நடிக்கின்றனர். பீட்சா ரெஸ்டாரன்டில் பணிபுரியும் ஐந்து இளைஞர்கள், புதிய பீட்சா ஐடியாவை உருவாக்கி அதில் வெற்றி பெறப் போராடுவது […]

19/04/2026 Dinesh R
பரசுராம் ஜெயந்தியில் “மகா அவதார் பரசுராம்” அறிவிப்பு அயல் சினிமா

பரசுராம் ஜெயந்தியில் “மகா அவதார் பரசுராம்” அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், தொடர்ந்து சினிமா அளவு மற்றும் கதைசொல்லலை மறுபரிமாணம் செய்து வருகிறது. ராஜகுமாரா, கே.ஜி.எஃப்., காந்தாரா, சலார் மற்றும் சமீபத்தில் மகா அவதார் நரசிம்மா போன்ற பெரிய வெற்றிப் படங்களின் மூலம் தனது புகழை நிலைநாட்டியுள்ள இந்த நிறுவனம், பரசுராம் ஜெயந்தான இன்று, “மகா அவதார் பரசுராம்” எனும் பிரம்மாண்டமான மேலும் ஒரு புதிய அத்தியாயத்தை அறிவித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் அஷ்வின் குமார் இயக்குகிறார். இந்தப் படம் க்ளீம் […]

19/04/2026 Dinesh R
நாங்க இருக்கோம் – தேர்தல் விழிப்புணர்வுக் குறும்படம் Short Film

நாங்க இருக்கோம் – தேர்தல் விழிப்புணர்வுக் குறும்படம்

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்குத் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘நாங்க இருக்கோம்’ என்கிற குறும்படம் தற்போது வெளியாகி உள்ளது. லைட்ஸ் ஆன் மீடியா சார்பில் அதன் பங்குதாரர்களில் ஒருவரான வெங்கி சந்திரசேகர் இதன் கதையை எழுதி இயக்கியிருக்கிறார்.  தமிழ் சினிமாவில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை மேற்கொள்ளும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான லைட்ஸ் ஆன் மீடியா நிறுவனம் ஏற்கெனவே ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ என்கிற படத்தைத் தயாரித்துள்ளது. […]

19/04/2026 Dinesh R
Spider-Man: Beyond the Spider-Verse | காலவெளிக்கு அப்பால் ஒரு போராட்டம் அயல் சினிமா

Spider-Man: Beyond the Spider-Verse | காலவெளிக்கு அப்பால் ஒரு போராட்டம்

‘ஸ்பைடர்-மேன்: பியாண்ட் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ திரைப்படத்தின் புதிய தோற்றம் வெளியிடப்பட்டுள்ளதால், ஸ்பைடர்-வெர்ஸ் தொடரின் அடுத்த அத்தியாயத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சினிமா கான் 2026 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சோனி பிக்சர்ஸ் ஸ்பைடர்-வெர்ஸின் நான்கு புதிய போஸ்டர்களைப் பகிர்ந்துள்ளது. மைல்ஸ் மொரேல்ஸ் தனது பயணத்தின் அடுத்த கட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் போஸ்டரின் தலைப்பில், “ஸ்பைடர்-மேன்: பியாண்ட் தி #ஸ்பைடர்வெர்ஸ் இன் ஒரு புதிய தோற்றம். விரைவில் வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.             […]

19/04/2026 Dinesh R
LIK விமர்சனம் | லவ் இன்சூரன்ஸ் கொம்பெனி review சினிமா

LIK விமர்சனம் | லவ் இன்சூரன்ஸ் கொம்பெனி review

காதலை ஒரு AI செயலியைக் கொண்டு அளக்க முடியும் என்கிறார் LIK எனும் நிறுவனத்தின் தலைவரான சூரியன். காதலெனும் இதயத்தின் அழகான உணர்ச்சியை அப்படியெல்லாம் அளந்து விட முடியாது என சவால் விடுகிறான் வைப் வாசி (Vaibhav Vasudevan). வெற்றி யாருக்கு என்பதே படத்தின் முடிவு. கதை 2040 இல் நடக்கிறது. திரையில் அதைக் கொண்டு வர மிகவும் சிறப்பாக உழைத்துள்ளனர். ஆனால் இதே கதை 2025 இல் நடப்பதாகக் காட்டினாலும், பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. […]

11/04/2026 Dinesh R
TN 2026 விமர்சனம் | தங்க நட்சத்திரம் 2026 review இது புதிது

TN 2026 விமர்சனம் | தங்க நட்சத்திரம் 2026 review

சினிமாவில் இருந்து ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால் என்னென்னவெல்லாம் நிகழும் என்பதைக் கொஞ்சம் உண்மைச் சம்பவங்களை நிறையக் கற்பனையுடன் புனைவாகக் கலந்து கட்டி அற்புதமானதொரு அரசியல் பகடிப்படத்தைத் தந்துள்ளனர் தந்தை மகனுமான தம்பி இராமையாவும், உமாபதி S.இராமையாவும். ‘தலைவர் தம்பி தலைமையில்’ போலவே ஒரு கொண்டாட்டமான படத்தைக் கண்ணன் ரவி குழுமம் (KRG) சார்பில் மறுபடியும் அளித்துள்ளனர் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவியும், தீபக் ரவியும். அடுத்த எம்.ஜி.ஆராகக் குல்கந்த் குமார் எனும் நடிகர் பரிணமிப்பார் என்பதை அனுமானித்து, […]

11/04/2026 Dinesh R
“கனவுகளை நிஜமாக்கும் வரம்” – விக்னேஷ் சிவன் | LIK சினிமா

“கனவுகளை நிஜமாக்கும் வரம்” – விக்னேஷ் சிவன் | LIK

பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK)’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு தனியார் கல்லூரி அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் ராம், “நான் விக்கியின் பெரிய ரசிகன். விக்கியை, 2012 பிப்ரவரி மாதத்திலிருந்து அறிவேன். விக்கிக்கு எதுவும் எளிதாக நடந்ததில்லை. அவர் அடையும் ஒவ்வொரு நிலையும் கடின உழைப்பின் மூலம் தான் கிடைத்தது. அவர் […]

09/04/2026 Dinesh R
TN 2026 – அரசியல் கலந்த சமூக அக்கறை கொண்ட படம் சினிமா

TN 2026 – அரசியல் கலந்த சமூக அக்கறை கொண்ட படம்

கண்ணன் ரவி குழுமம் (KRG) சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்கப் பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026 – தங்க நட்சத்திரம்” ஆகும். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் பத்திரிகையாளர் […]

05/04/2026 Dinesh R
பைக்கர் விமர்சனம் | Biker review அயல் சினிமா

பைக்கர் விமர்சனம் | Biker review

இஷான் நாராயண் எனும் சிறுவன், பைக் ரேசர்களான தன் தந்தைக்கும் தாத்தாக்கும் வாழ்க்கையை உணர்த்துவதுதான் பைக்கர் படத்தின் கதை. நமது தந்தையை ஒருவன் அவமானப்படுத்தினால் அதைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என விகாஸ் நாராயணுக்கும், குடும்ப உறவுகளும் பிணைப்பும் லட்சியத்திற்கான உத்வேகத்தை அளிக்குமேயன்றி கவனச்சிதறலாக மாறாது என புல்லட் சுனில்க்கும் உணர்த்துகிறான் இஷான். மனைவி அனன்யா கேட்டுக் கொண்டதற்காக பைக் ரேஸிங்கை விட்டு விலகும் சேம்பியனான விகாஸ், தந்தைக்கு நேரும் அவமானத்தைத் துடைக்க மீண்டும் ரேசிங்கிற்கு வருகிறான். […]

04/04/2026 Dinesh R
கார்மேனி செல்வம் விமர்சனம் | Carmeni Selvam review சினிமா

கார்மேனி செல்வம் விமர்சனம் | Carmeni Selvam review

ஒரு பணக்காருக்குக் கார் ஓட்டுநராகப் பணி புரியும் செல்வம், அவரது வாழ்வில் எதிர்கொள்ளும் எதிர்பாரா நெருக்கடியும், அதைச் சமாளிக்க அவர் தேர்ந்தெடுக்கும் பாதையும், அப்பாதையில் எழும் விளைவுகளே இப்படத்தின் மையச்சரடு. பணக்கார முதலாளி சம்பத்தாக வரும் கெளதம் வாசுதேவ் மேனன், அப்பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரது மனைவி தேவியாக நடித்துள்ள அபிநயா மிகச் சில காட்சிகள் வந்தாலும், படத்தில் அவரது பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார். இந்தப் படத்தில் வரும் செல்வம் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன். அதனால்தான் சம்பத் போலும், […]

04/04/2026 Dinesh R
லீடர் விமர்சனம் | Leader review சினிமா

லீடர் விமர்சனம் | Leader review

தனது மகளுக்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கும் ஒரு பாசமிகு தந்தையின் அதிரடி ஆக்‌ஷன் தான் லீடர். தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள சால்ட் எனும் ரெளடியைக் கண்காணிக்கிறார் காவல்துறை அதிகாரி இந்திரா. உண்மையைக் கண்டறிய சக்திவேல் எனும் மெக்கானிக்கின் மகளைக் கடத்தி துறைமுகத்திலுள்ள சந்தேகத்துக்குரிய கன்டெயினரைச் சாதுரியமாக மடக்குகிறார். அதனால் பெரும்சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சக்திவேல், சால்டிடம் இருந்து எப்படித் தப்பிக்கிறார், அவரால் எப்படித் தப்பிக்க முடிந்தது, உண்மையில் சக்திவேல் யாரென்பதற்கெல்லாம் பதில்தான் லீடர் படத்தின் […]

03/04/2026 Dinesh R