32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 95 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 95)
அஸ்வின்ஸ் விமர்சனம் இது புதிது

அஸ்வின்ஸ் விமர்சனம்

‘ஒரு உலகில் கண் மூடினால் மறு உலகில் கண் திறக்கலாம்’ என்று படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. இந்த உலகில் வரக்கூடிய ஒரு பிரச்சனையை வேறு ஒரு உலகில் சென்று தீர்க்க வேண்டும். அதற்கு இந்த உலகில் உயிர்விடவேண்டும். அப்போது தான் அந்த உலகில் உயிர்பெற முடியும். இப்படியான ஒரு சூழல் நாயகன் வசந்த் ரவிக்கு வருகிறது. இது படத்தின் பின்பாதியில் வரக்கூடிய கதை. அப்போ முன்பாதி கதை? […]

23/06/2023 Dinesh R
தலைநகரம் 2 விமர்சனம் இது புதிது

தலைநகரம் 2 விமர்சனம்

தலைநகரம் சென்னையை மூன்று ரெளடிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். மூவருக்குமே தான் மட்டுமே ஒட்டுமொத்த சென்னையை ஆள வேண்டும் என்பது ஆசை. இதனால் ஒருவரையொருவர் போட்டுத் தள்ளத் துடிக்கின்றனர். அதே நேரம் பழைய ரெளடியான ‘ரைட்டு’, ‘இந்தக் கத்தி, இரத்தம் இதெல்லாம் வேண்டாம்’ என்று ஒதுங்கி, மாலிக் பாய் (தம்பி இராமையா) உடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். ஆனால் காலமும் சூழலும் ரைட்டைத் தன் கையில் மீண்டும் கத்தி தூக்க வைக்க, ஒட்டு […]

22/06/2023 Dinesh R
அழகிய கண்ணே விமர்சனம் இது புதிது

அழகிய கண்ணே விமர்சனம்

ஒரு படம் எதைப் பற்றி பேச வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் சுவாரசியமான சவாலைப் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது இந்த ‘அழகிய கண்ணே’ திரைப்படம். படத்தின் ஆரம்பக் காட்சியில் நாயகனை ஏரி அருகே இருக்கும் ஒரு இடத்தில் வைத்து எரிக்கப் பார்க்கும் போது, இது ஓர் அதிரடி திரைப்படம் போல என்று தோன்றியது. முதல் பாடல் கருத்தாக ஒலிக்கும் போது, சரி இது சமூக கருத்துள்ள படம் போல என்று தோன்றியது. எதிர் வீட்டு அய்யர் பொண்ணுக்கு டிராமாவிற்கு கதை […]

21/06/2023 Dinesh R
மஞ்சு வாரியார் இன் Mr. X சினிமா

மஞ்சு வாரியார் இன் Mr. X

பரபரப்பான படமாக உருவாகவுள்ள Mr. X படத்தில் எவர் க்ரீன் நாயகி மஞ்சு வாரியார் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிக்கும் மிகப் பிரம்மாண்ட படமான ‘Mr. X’ படத்தில் மஞ்சு வாரியார் இணைந்துள்ளார். முதல் படத்திலேயே கோலிவுட்டைத் தனது திரைக்கதை இயக்கத்தால் திரும்பிப் பார்க்க வைத்த எஃப்.ஐ.ஆர் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். Mr X படத்தின் […]

21/06/2023 Dinesh R
ரஞ்சனா நாச்சியார் – ஒரே நேரத்தில் 2 படங்களைத் தயாரிக்கும் நடிகை சினிமா

ரஞ்சனா நாச்சியார் – ஒரே நேரத்தில் 2 படங்களைத் தயாரிக்கும் நடிகை

‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரஞ்சனா நாச்சியார். ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா பாஸ்கர சேதுபதியின் பேத்தியான இவர் இயக்குனநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகள் ஆவார். பொறியியலில் எம்.எஸ்.சி, எம்.டெக். மற்றும் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) என மிகப் பெரிய படிப்புகளைப் படித்துவிட்டு, சினிமா மீதுள்ள ஆர்வத்தால் தமிழ்த் திரையுலகில் நுழைந்தவர் தான் ரஞ்சனா நாச்சியார். ‘துப்பறிவாளன்’ படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு நல்ல […]

21/06/2023 Dinesh R
தண்டட்டி விமர்சனம் இது புதிது

தண்டட்டி விமர்சனம்

தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி பகுதியில் வசித்து வரும் 57 வயதான தங்கப் பொண்ணு என்னும் மூதாட்டி காணாமல் போகிறார். அவரைத் தேடும் புள்ளியில் தொடங்கும் கதை, அவரது இறப்பிற்குப் பின்னர் காணாமல் போகும் அவரது தண்டட்டியைத் தேடிக் கண்டடையும் புள்ளியில் நிறைவு பெறுகிறது. தங்கப் பொண்ணு ஏன் காணாமல் போகிறார், அவர் எப்படி இறந்து போகிறார், அவரது அடையாளங்களில் ஒன்றான தண்டட்டி எப்படித் திருடு போகிறது, அதைத் திருடியவர் யார், கண்டுபிடிப்பவர் யார் என்று பயணிக்கிறது திரைக்கதை. […]

20/06/2023 Dinesh R
ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ஏன் போர்ஸ்சி 911 கார்? அயல் சினிமா

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ஏன் போர்ஸ்சி 911 கார்?

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் பட இயக்குநர் ஸ்டீவன் கேப்பல் ஜூனியரைப் பெரு நாட்டில் படப்பிடிப்பின் போது சந்தித்து, ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தொடரின் முந்தைய இயக்குநரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான மைக்கேல் பே, ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளார். “ரோபோட்களின் எண்ணிக்கையை அதிகமாக்காதே! ஏனெனில் ரோபாட்களின் எண்ணிக்கை அதிகமானால் சமாளிக்க முடியாது. ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ரோபோட்களின் மீது கவனம் செலுத்துமாறு சொன்னார் மைக்கேல் பே” என்றார் இயக்குநர் ஸ்டீவன் கேப்பல் ஜூனியர். அப்படியும், புலி வடிவில் […]

19/06/2023 Dinesh R
தி பிளாஷ் விமர்சனம் அயல் சினிமா

தி பிளாஷ் விமர்சனம்

டிசி (DC) என்றால் டார்க் காமிக்ஸ் என்றொரு பொதுவான அபிப்ராயம் உலகளாவில் நிலவியது. வொண்டர் வுமன் (2017), அக்வா மேன் (2018), ஷசாம் (2018) முதலிய படங்களின் மூலம் தங்களுக்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் போல் கலகலப்பான கொண்டாட்டத்தை அளிக்கக்கூடிய படம் எடுக்க முடியும் என நிரூபித்தனர். ‘தி பிளாஷ்’ படமும் அத்தகைய கொண்டாட்டத்திற்கு உறுதியளிக்கிறது. பேரி ஆலன், ஒளியின் வேகத்தில் பயணிக்கும் தனது சக்தியைப் பயன்படுத்தி கடந்த காலத்திற்குள் செல்லமுடியுமென தற்செயலாகக் கண்டுபிடிக்கிறார். கடந்த காலத்திற்குள் […]

19/06/2023 Dinesh R
பொம்மை விமர்சனம் இது புதிது

பொம்மை விமர்சனம்

Mannequin (1987) என்ற ஆங்கிலப்படத்தின் அதிகாரபூர்வமற்ற தழுவலே ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான பொம்மை. ஒரு நிறுவனத்தில் பொம்மை செய்யும் கலைஞராக வேலை செய்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அவர் வடித்தெடுக்கும் பொம்மையில் தன் காதலி பிரியா பவானி சங்கரைப் பார்க்கிறார். அந்தப் பொம்மை உயிர் பெற்று வந்து எஸ்.ஜே. சூர்யாவிடம் பேசுகிறது. தன்னை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்கிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பொம்மைக்காகக் கொலையும் செய்கிறார். அந்தக் கொலைக்கான விசாரணை ஒருபுறம் நடக்க, […]

17/06/2023 Dinesh R
ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் விமர்சனம் அயல் சினிமா

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் விமர்சனம்

தங்கள் உருவத்தை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்ட அதிநவீன ரோபாட்ஸ்க்கு ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் (உருமாறிகள்) எனப் பெயர். வாகனங்களாக உருவெடுக்கும் உருமாறிகளுக்குப் பெயர் ஆட்டோபாட்ஸ். இந்தப் படத்தொடரின், நாயகர்கள் இந்த ஆட்டோபாட்ஸே! இந்தப் பாகத்தில், உலகைக் காக்க ஆட்டோபாட்ஸ்களுடன் இணையும் புது உருமாறிகளாக மேக்ஸிமல்ஸ் அறிமுகமாகின்றனர். கொரில்லா, புலி, பறவை போன்ற மிருகங்களாக மாறும் ரோபாட்கள் அவை. கிரகங்களை உண்டு கொழிக்கும் இருள் கடவுளான யுனிக்ரான், மேக்ஸிமல்ஸின் கிரகத்தை அழித்து உண்கிறது. யுனிக்ரான் கையில், ‘ட்ரான்ஸ்வார்ப்’ எனும் நவீன […]

13/06/2023 Dinesh R
விஜய் சேதுபதியைச் சூழும் சுற்றுலாப் பயணிகள் சினிமா

விஜய் சேதுபதியைச் சூழும் சுற்றுலாப் பயணிகள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் தளத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியைச் சந்திக்க மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாப் […]

09/06/2023 Dinesh R
தோனி வெளியிட்ட ‘எல் ஜி எம்’ – பட டீசர் Teaser

தோனி வெளியிட்ட ‘எல் ஜி எம்’ – பட டீசர்

தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் டீசரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனி, அவருடைய முகநூலில் வெளியிட்டார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இப்படத்தின் டீசருக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தமிழ்த் தயாரிப்பு ‘எல் ஜி எம் ( Lets Get Married)’. இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, […]

09/06/2023 Dinesh R
போர் தொழில் விமர்சனம் இது புதிது

போர் தொழில் விமர்சனம்

யூகித்தறிய முடியாத கொலைக் குற்றங்களைத் துப்பறியும் இரு காவலர்களின் கதை. காவலர் வேலை என்பது போர்த் தொழிலுக்கு நிகரானது. வேலைக்கான அவார்டும் ரிவார்டும் நம் எதிரிலேயே அடுத்தவங்களுக்குச் செல்லும் சூழலும் காவல்துறை பணியில் உண்டு. இவற்றை எல்லாம் உள்வாங்கியும், ‘தன் கடன் பணி செய்து கிடப்பதே’ எனப் பணியாற்றும் கம்பீர அதிகாரி சரத்குமார். அவருடன் வேலை பழகும் வேட்கையுடன் வந்து இணைகிறார் அசோக் செல்வன். இந்நிலையில் திருச்சியில் அடுத்தடுத்து இரு இளம் பெண்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். அந்தக் […]

08/06/2023 Dinesh R
திருப்பதியில் ‘ஆதி புருஷ்’ படக்குழு சினிமா

திருப்பதியில் ‘ஆதி புருஷ்’ படக்குழு

நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்தியேக முன்னோட்டம் ஆன்மீக தலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் பிரத்தியேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், […]

08/06/2023 Dinesh R
தண்டட்டி – பாட்டிகளின் அட்டகாசம் சினிமா

தண்டட்டி – பாட்டிகளின் அட்டகாசம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’. ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு […]

07/06/2023 Dinesh R