Shadow

சினிமா

தேஜா சஜ்ஜாவின் ஹனுமான் படப்பிடிப்பு முடிந்தது

தேஜா சஜ்ஜாவின் ஹனுமான் படப்பிடிப்பு முடிந்தது

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி வரும் 'ஹனுமான்' படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று பிரம்மாண்டமான படப்பிடிப்புத் தளத்தின் காணொளியைப் படக்குழுவினர் வெளியிட்டனர். படத்தின் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்ய 130 நாட்களாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்காகவும், படத்தின் தரத்திற்காகவும் கடுமையாக உழைத்து வருகிறார். இப்படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பையும் பெற்றது. அனுமன் ஜெயந்தி தினத்தன்று வெளியிடப்பட்ட அன...
சரத்குமார், அசோக் செல்வன் இணையும் ‘போர் தொழில்’

சரத்குமார், அசோக் செல்வன் இணையும் ‘போர் தொழில்’

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஆர். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் 'போர் தொழில்' எனும் திரைப்படத்தினைத் தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ்த் திரையுலகில் நேரடியாகக் களமிறங்கியிருக்கிறது. வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்புகளைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வு த்ரில்லர் ஜானரிலான 'போர் தொழில்' எனும் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் இப்படத்தின் தலைப்பை ஏப்ரல் 18 அன்று வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக பிரத்திய...
ரிப்பப்பரி விமர்சனம்

ரிப்பப்பரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
RIP Up Bury எனும் ஆங்கிலச் சொற்களைத் தலைப்பாக்கியுள்ளனர். சமையல் சேனல் வைத்திருக்கும் யூட்யூபர் சத்யராஜிற்கு, நண்பர்கள் இருவருடன் ஊர் சுற்றி வருவதைப் பிரதானமாகக் கொண்டுள்ளார். அவரது வீடியோவில் கமென்ட் போடும் கோல்டன் ஃபிஷ் எனும் பெண்ணைக் காதலிக்கத் தொடங்குகிறார் சத்யராஜ். அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து காதலில் வெற்றி பெறலாம் எனப் பார்த்தால், மாற்று ஜாதியில் காதலிக்கும் ஆண்களின் கழுத்தை அறுக்கும் சாதிவெறி பிடித்த பேய் ஒன்று அச்சுறுத்தலாக முளைக்கிறது. சத்யராஜ், அந்த சாதிவெறி பிடித்த சைக்கோ பேயை மீறிக் காதலில் வென்றாரா இல்லையா என்பதே படத்தின் கதை. படத்தின் தொடக்கமே மிரட்டலாக உள்ளது. ஊரை விட்டுக் காதலியுடன் ஓடத் துடிக்கும் காதலனின் தலையைக் கொய்து போஸ்ட் பாக்ஸில் போடுகிறது பேய். பால் கேனுக்குள், டூ-வீலர் பெட்ரோல் டேன்க்கில் எனக் கொல்பவர்களின் தலையைச் சாத்தியமே இல்லாத இடத்தில் எல்லாம் வைத்துவிட்...
சொப்பன சுந்தரி விமர்சனம்

சொப்பன சுந்தரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். பிறரது பொருளுக்கு ஆசைப்பட்டால் துன்பம் வந்து சேரும் என்பதுதான் படத்தின் ஒரு வரிக்கதை. அதை டார்க் காமெடியாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் SG சார்லஸ். சிவப்பு நிறக் கார் என்றால் சொப்பன சுந்தரியும், சொப்பன சுந்தரி என்றால் சிவப்பு நிறக் காரும் ஞாபகத்திற்கு வருமளவு, கரகாட்டக்காரனில் வரும் அந்த நகைச்சுவைக் காட்சி அவ்வளவு பிரபலம். இப்படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே, 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள சிவப்பு நிறக் கார் வருவதால், படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ எனப் பெயரிட்டுள்ளார் இயக்குநர் SG சார்லஸ். இவர், இயக்குநர் மோகன் ராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது முதற்படமான ‘லாக்கப்’பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகைமையில் இப்படத்தை எடுத்துள்ளார். வறுமையில் தவிக்கும் அகல்யாவிற்கு ஒரு சிவப்பு நிறக் கார் ஒன...
யாத்திசை என்றால் என்ன?

யாத்திசை என்றால் என்ன?

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
யாத்திசை என்றால் தென் திசை என்று பொருள். ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென்திசையான பாண்டிய நாட்டிற்கெதிராகப் போராடிய எயிணர் எனும் தொல்குடியைப் பற்றிய கதைதான் 'யாத்திசை'. 'யாத்திசை' ட்ரெய்லர் வெளியான 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளைக் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், திரைப்படத்தை ஏப்ரல் 21 அன்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடுகிறது. வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனல் பெற்றுள்ளது. வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'யாத்திசை'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பானது, ஏப்ரல் 10 அன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் தரணி ராசேந்திரன், “தயாரிப்பாளரிடம் கதை சொன்ன போது, ‘உன்னிடம் உள்ள தவிப்பு பிடித்துள்ளது. உன் டீம் பற...
சாய் ரோஹிணி – சோலை மலை இளவரசி

சாய் ரோஹிணி – சோலை மலை இளவரசி

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
சினிமா தனக்கான ஆட்களைத் தேடிக்கொள்ளும் என்பார்கள். அதேபோல் சினிமா பற்றிய கனவு ஒருவருக்கு இருந்தால் அது கைப்பிடித்து அழைத்து வந்து அத்துறையில் அமர வைத்து விடும் என்றும் கூறலாம். அப்படிப்பட்ட ஒருவர்தான் நடிகை சாய் ரோஹிணி. வேலூரில் பிறந்து வளர்ந்தவர். சினிமா பின்புலம் எதுவும் இல்லாத சூழலில் இருந்து வந்து, கண்ட கனவைத் துரத்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் சாய் ரோஹிணி. வேலைவாய்ப்பு எண்ணத்தில் செவிலியர் படிப்பைச் சென்னையில் வந்து முடித்தவர், வேலைக்குச் செல்லாமல் திரை வாய்ப்புகளைத் தேடி ஓடியிருக்கிறார். எங்கெங்கே புதுப் படங்களில் நடிப்பதற்குப் புது முகங்கள் தேவை என்கிற விளம்பரம் கண்டாலும் நேரில் சென்று ஒவ்வொரு தேர்விலும் கலந்து கொண்டுள்ளார். அப்படி வாய்ப்புக் கிடைத்து முதலில் நடித்த படம் தான் 'நாட் ரீச்சபிள்'. அப்படிக் கடும் முயற்சிக்குப் பின் கிடைத்த இன்னொரு வாய்ப்பு தான் 'மிடில் ...
பெல்ஃபாஸ்ட் டூ ஐஸ்லாந்து – இயற்கையின் பேரழகு

பெல்ஃபாஸ்ட் டூ ஐஸ்லாந்து – இயற்கையின் பேரழகு

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ஒரு வசீகரமான திருடன் எட்கினும், அவனது சகாக்களும், தொலைந்து போன நினைவுச்சின்னத்தை மீட்டெடுக்க ஒரு திருட்டை மேற்கொள்கின்றனர். நண்பரகளாக இருந்தவரின் துரோகத்தால், அந்தத் திருட்டின் பொழுது சிக்கிக் கொள்கின்றனர் எட்கினும், அவனது பலசாலியான தோழியான கோல்காவும். மேசையில் விளையாடப்படும் ‘டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ்’ எனும் உள்ளரங்க விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது படத்தின் திரைக்கதை. பகடை உருட்டி விளையாடப்படும் விளையாட்டுகளின் அப்பாடக்கர் என ‘டன்ஜன்ஸ் & ட்ராகன்ஸ்’ விளையாட்டைச் சொல்லலாம். இந்த விளையாட்டைத் திரைக்குக் கொண்டு வருவது என்பது மிகவும் சவாலான விஷயம். சாகசமும் ஆக்ஷனும் நகைச்சுவையும் பின்னிப் பிணைந்த திரைக்கதையாக அமைக்க வேண்டுமென்பது தயாரிப்பாளர் ஜெரெமி லாட்சம் அவர்களின் விருப்பம். ஐம்பது வருட பாரம்பரியம் கொண்ட மரபுக்கதைகளைச் சாகசம் குறையாமல் திரைக்கதையாக்க, இரட்டை இயக்க...
இந்தியத் தெருவிலிருந்து ஒரு ஸ்பைடர்-மேன்

இந்தியத் தெருவிலிருந்து ஒரு ஸ்பைடர்-மேன்

Trailer, அயல் சினிமா, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்’ படத்தின் ட்ரெய்லர், 9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகின்றன. இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் பிரபலமான ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம், 10 வெவ்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஸ்பைடர் மேன் வரிசை படங்கள், இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் மகத்தான வெற்றியைக் கண்டது. ஸ்பைடர் மேனுக்கு நாடு முழுவதும் உள்ள தீவிரமான ரசிகர்களைக் கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்கள் அவரை அனைத்து இந்தியர்களுடனும் நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான ஒரு தனித்துவமான வழியைக் கையாண்டு, இதை ஒரு பான்-இந்தியா திரைப்படமாக விளம்பரப்படுத்தி வ...
Dungeons & Dragons: Honor Among Thieves விமர்சனம்

Dungeons & Dragons: Honor Among Thieves விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ்’ எனும் டேபிள் டாப் விளையாட்டின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட படமிது. டன்ஜியன் என்றால் பாதாளச் சிறை என்று பொருள் கொள்ளலாம். ஆனால் பதினான்காம் நூற்றாண்டில் வழக்கத்திற்கு வந்த இந்த ஆங்கிலச் சொல், ஃப்ரெஞ்சு சொல்லின் மூலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘அரண்மனையின் கோபுரம்’ என்ற பொருளிலேயே உபயோகப்படுத்தியுள்ளனர். காலப்போக்கில், பாதாளச் சிறையைக் குறிக்கும் சொல்லாக டன்ஜியன் மாறியுள்ளது. டிராகன் என்பது ஐரோப்பியத் தொன்மவியலில் வரும் நெருப்பைக் கக்கும் அமானுஷ்ய விலங்காகும். இறந்துவிடும் தன் மனைவியின் உயிரை மீட்பதற்காகத் தேவைப்படும் ஒரு மந்திரப்பதக்கத்தைத் திருட முற்படுகிறான் எட்கின் டார்விஸ். தோழி ஹோல்கா கில்கோர், இளம் மந்திரவாதி சைமன் ஒளமர், ஃபோர்ஜ் எனும் ஏமாற்றுக்காரக் கலைஞர், சிவப்புச் சூனியக்காரி சோஃபினா ஆகியோருடன் குழுவாகச் சென்று, மந்திரப்பதக்கத்தைத் திருடிவிட்டாலும்...
ஜான் விக் 4 விமர்சனம்

ஜான் விக் 4 விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ரஷ்யத் தொன்மவியலின்படி, பாபா யாகா என்பவர் யாராலும் கொல்லப்பட முடியாத மிகவும் ஆபத்தான மனிதர். அவரது பூர்வீகமும் எவருக்கும் தெரியாது, அவரைப் புதைத்தாலும் அவர் மீண்டும் வருவார் என்பது தொன்மவியலின் நம்பிக்கை. அத்தகைய புதிரான குணாதிசயங்களை ஜான் விக்கும் பெற்றிருப்பதால், பாபா யாகா என குற்றவியல் உலகால் அச்சத்துடன் அடையாளப்படுத்தப்பட்டிருப்பார். அப்படிப்பட்ட அதி பயங்கரமான ஜான் விக்கின் தலைக்கு, 20 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 40 மில்லியன் டாலர் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. முதல் பாகத்தில், ஜான் விக்கின் தலைக்கு விலை 2 மில்லியன் அமெரிக்க டாலர்தான். இப்படத்தில், அவரது உயிருக்கான விலைமதிப்பு 200 மடங்காகக் கூடுகிறது. அந்தப் பணத்திற்கு ஆசைப்பட்டு, உலகின் மூலை முடுக்கிலுள்ள வெகுமதி வேட்டையர்கள் பெரும்பாலானோர், ஜான் விக்கைக் கொல்ல சாரை சாரையாகக் கிளம்புகிறார்கள். ஜான் விக் எப்படி இந்தச் சிக்...
செப்டம்பர் 1 முதல் இந்தி ‘சூரரைப் போற்று’

செப்டம்பர் 1 முதல் இந்தி ‘சூரரைப் போற்று’

சினிமா, திரைத் துளி
தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்திப் பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. தமிழில் வெளியான இந்தத் திரைப்படம் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில், இந்தியில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ராதிகா மதன், பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்திய விமானப் படையில் பணியாற்றிய அதிகாரி கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்...
பான் இந்தியா நடிகையாகும் ஐஸ்வர்யா மேனன்

பான் இந்தியா நடிகையாகும் ஐஸ்வர்யா மேனன்

சினிமா, திரைத் துளி
தமிழ்ப்படம் 2 எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து 'நான் சிரித்தால்', 'வேழம்', ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ்ப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். தற்போது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் தயாராகும் திரைப்படத்திலும் நடித்து வரும் இவர், பான் இந்திய திரைப்படமாக மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ‘ஸ்பை’ எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கடந்தாண்டில் தெலுங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம் 'கார்த்திகேயா 2' . இப்படத்தின் நாயகனான நிகில் சித்தார்த், கதையின் நாயகனாக நடித்து வரும் 'ஸ்பை' எனப் பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். பான் இந்தியப் படைப்பாக தயாராகி வருவதால் இந்தப் படம் தமிழிலும் வெளிய...
ஷுட் த குருவி விமர்சனம்

ஷுட் த குருவி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மார்ச் 18 ஆம் தேதி அன்று ஷார்ட்ஃப்ளிக்ஸ் எனும் செயலியில் வெளியாகியுள்ளது இக்குறும்படம். குருவிராஜன் எனும் பிரசித்த பெற்ற கொலைகாரனை விளையாட்டாக அறைந்து விடுகிறார் ஷெரிப். குருவி ராஜன் யார், ஷெரிப் யார், குருவி ராஜனிடம் ஷெரிப் சிக்கினானா இல்லையா என்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் மதிவாணன். கேஜிஎஃப் பாணியில், கதையை ப்ரொஃபசர் மித்ரன் சொல்வதாகத் தொடங்குகிறது. மித்ரனாக, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, மிரள் முதலிய படங்களில் நடித்திருந்த ராஜ்குமார்.G நடித்துள்ளார். சஸ்பென்ஸைக் கூட்ட அவர் அடிக்குரலில் பேசும் சில வசன்ங்களைக் கவனிக்கச் சிரம்மாம இருந்தாலும், 2டி அனிமேஷனில் விரியும் குருவிராஜனின் கதை நல்லதொரு அடித்தளத்தைப் படத்திற்கு ஏற்படுத்தித் தந்துள்ளது. குருவிராஜனாக அர்ஜெய் நடித்துள்ளார். ‘நான் கேங்ஸ்டர் இல்லை கில்லர்’ என அவர் சொன்னாலும், அவரது பின் கதையும், அவரது தோற்றமு...
Shazam! Fury of the Gods விமர்சனம்

Shazam! Fury of the Gods விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
டிசி காமிக்ஸின் ஷசாம் எனும் படம், 2019 இல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பில்லி பேட்ஸன் எனும் பதின்ம வயது சிறுவனுக்கு எதிர்பாராதவிதமாக, சூப்பர் ஹீரோவாகும் மந்திர சக்தி கிடைக்கிறது. பதின்ம வயது மனத்துடன் ஒரு சூப்பர் ஹீரோ உலகத்தைக் காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்பதே படத்தின் மையக்கரு. முதற்பாகத்தில், தத்தெடுக்கப்படும் புதிய குடும்பத்தில் தன்னை ஓர் அங்கமகாக இணைத்துக் கொள்ளாமல், தன் பெற்றோரைத் தேடியவண்ணமே இருப்பான் பில்லி. இப்படத்தில், ‘குடும்பம்தான் எல்லாம்’ என தத்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மீது அதீத பாசத்தோடு இருக்கிறான் பில்லி. விரைவில் பதினெட்டு வயது எட்டப் போகும் தன்னைக் குடும்பத்தை விட்டு அனுப்பிவிடுவார்களோ, மீண்டும் குடும்பத்தைப் பிரியவேண்டுமோ என கவலையிலே உள்ளான் பில்லி. ஷசாம் படத்தின் அழகே, சிறுவன் பில்லி தனக்குக் கிடைக்கும் சக்திகளைத் தன் சகோதர சகோதரிகளுக்குப் பகிர்...
65 விமர்சனம்

65 விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆறரை கோடி வருடங்களுக்கு முன், சோமாரிஸ் எனும் கிரகத்தில் இருந்து, ஒரு விண்கப்பல் கிளம்புகிறது. பயணத்தின் போது சிறுகோளின் (Asteroid) துகள் மோதி, மனித இனம் தோன்றியிராத பூமியில் வந்து விழுகிறது அக்கப்பல். கப்பலைச் செலுத்தி வந்த மில்ஸும், கடுங்குளிரியல் உறக்கத்தில் (Cryogenics sleep) இருக்கும் கோவா எனும் சிறுமி மட்டும் உயிர் பிழைக்கின்றனர். கடுங்குளிரியல் உறக்கத்தில் இருக்கும் மற்ற பயணிகள் அனைவரும் இறந்து விடுகின்றனர். மில்ஸும் கோவாவும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள். அவர்கள் இருவரும் அந்தக் கோர விபத்தில் இருந்து மீண்டு எப்படி டைனோசர் போன்ற கொடிய மிருகங்களிடம் இருந்து உயிர்பிழைத்துத் தப்பிக்கின்றனர் என்பதே படத்தின் கதை. ஹாலிவுட் படங்களில் ஒரு டெம்ப்ளேட்டைப் பயன்படுத்துவார்கள். இயற்கைப் பேரழிவு என்றாலும், உயிர்பிழைக்கும் சர்வைவல் த்ரில்லர் என்றாலும் சரி, பிரதான பாத்திரங்களுக்கிடையேயான பாசத்தைம் பிண...